இடுகைகள்

பெண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாத்திமா ராணியின் திகைப்பூட்டும் அஞ்சல் பயணம்!

படம்
  பாத்திமா ராணி, தினசரி தபால்களை கொண்டு சேர்க்க காட்டு வழியே சென்று கொண்டிருக்கிறார். இவர் கோதையூர் மேல்திங்கள் பகுதி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிகிறார். அங்குள்ள புனல் மின்சார நிலையத்திலுள்ளவர்களுக்கு வரும் தபால்களை காட்டைத் தாண்டி சென்று கொடுத்து வருகிறார். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் இவர் கடந்து செல்லும் காட்டில் உள்ளது.  இவர் தனது பணியை செய்யும்போது எதிரில் சிறுத்தை, காட்டெருமை, யானை, காட்டுப்பன்றி ஆகியவை எதிர்ப்படுவது சகஜமானது. மழைப்பொழிவு அதிகம் என்பதால், பனி சூழ்ந்த சூழலில் வழியே தெரியாதபோது அங்குள்ள விலங்குகளை எப்படி அடையாளம் காண்பது என பலருக்கும் திகைப்பாக இருக்கும். அதையும் புனல் நிலைய மக்களே உதவி செய்து வழிகாட்டி வருகின்றனர். அவர்களது அறிவுரை மூலம் யானை ஒரு இடத்தில் இருக்கிறதா என அடையாளம் கண்டு கொண்டுகொள்கிறார் ராணி.  ஒருசமயம் இப்படி செல்லும்போது, புலிக்குட்டி ஒன்று வழியில் விளையாடிக்கொண்டிருக்க, அருகில் தாய்ப்புலி இருப்பதை ராணி உணர்ந்தார். எனவே, மரத்தின் அருகில் சென்று அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு பிறகே தனது வேலையை தொடர்ந்திருக்கிறார். இல்லையெனில் தாய்ப்புலியின் தாக

பொதுவாழ்வில் பெண்களை பங்கெடுக்க கற்றுத்தரும் முன்னோடிப் பெண்கள்!

படம்
  ஏஞ்சலிகா அரிபம், அரசியல் செயல்பாட்டாளர் உ.பி. தேர்தலில் பாஜக கட்சி வெல்வதற்கு பெண்கள் தான் முக்கியமான காரணம் என தலைமை மக்கள் சேவகர் திரு. மோடி கூறினார். இப்படி ஆண்கள் சொன்னாலும் உண்மையில் பெண்களுக்கான அரசியல் பங்கேற்பை அதிகளவில் அனுமதிப்பதில்லை. ஆனால் பெண்கள் அதற்காகவெல்லாம் விட்டுக்கொடுக்கவில்லை. அவர்கள் இதற்கென தனி அமைப்பை தொடங்கி பெண்களுக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்கள். இதைப்பற்றியதுதான் இக்கட்டுரை.  ஏஞ்செலிகா அரிபம், தேசிய கட்சி ஒன்றில் பெண்கள் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் தேர்தலில் போட்டியிட இடம் கேட்டுள்ளார். ஆனால் கட்சி அவருக்கு இடம் தராமல் மனதில் மட்டும் இடம் தந்துள்ளது. அதற்காக முதலில் வருத்தப்பட்டாலும், இனி இப்படியே இருந்தால் வேலைக்காகாது என முடிவெடுத்து, பெண்களை அரசியலுக்கு பயிற்றுவிக்கும் ஃபெம்மே ஃபர்ஸ்ட் Femme first என்ற அமைப்பைத் தொடங்கினார். இத்தனைக்கும் அரிபம் பலருக்கும் அறிமுகமாக பெண் என்று கூட யாரும் சொல்லமுடியாது. அவருக்கு தேர்தலில் போட்டியிட கட்சி இடம் மறுத்தபோதுதான் போர்ப்ஸ் இதழில் 30 அண்டர் 30 என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.  கங

ஹிஜாப்பை விட பெண்களுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன! - நூர்ஜெகான் சஃபியா நியாஸ்

படம்
  நூர்ஜெகான் சஃபியா நியாஸ், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன் நூர்ஜெகான் சஃபியா நியாஸ்  நிறுவனர், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன்  நூர்ஜெகான், டாடா சமூக அறிவியல் இன்ஸ்டிடியூட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  யுவா எனும் தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் சேர்ந்து முஸ்லீம் சமூக பெண்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.  1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு, மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான வாழிடங்களைப் பெற்றுத்தர உழைத்து வருகிறார். பிஎம்எம்ஏ எனும் அமைப்பை 2007இல் தொடங்கினார். இதன்மூலம் பெண்களின் குரல்களை பல்வேறு தளங்களில் ஒலிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.  கர்நாடகத்தில் உருவாகிய ஹிஜாப் பிரச்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அங்கு நடைபெறுவது முஸ்லீம் மக்களுக்கு எதிரான வலதுசாரி இந்துத்துவ தாக்குதல்தான். அங்கு இதுபோல நிறைய பிரச்னைகளை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது கொரோனா ஜிகாத் முதல் குழு படுகொலை வரை நடைபெற்று வருகிறது. முஸ்லீம் சமூகத்தை மெல்ல சுவர் நோக்கி தள்ளிக்கொண்டே வருகிறார்கள். மாணவர்கள் கல்வி கற்பதை எதற்கு தடுக்கிறார்கள்? கல்வி கற்பது அவர்கள

ஓடிடியில் பெண்களுக்கான நிகழ்ச்சிகள்!

படம்
  தி ஃபேம் கேம் நெட்பிளிக்ஸ் இந்தி திரைப்பட உலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் மாதுரி திடீரென காணாமல் போகிறார். இதைத்தொடர்ந்து நமக்கு அவரைப் பற்றிய நிறைய ரகசியங்கள் தெரிய வருகின்றன. இதனை இயக்குநர் கரண் ஜோகர் சிக்கலான குடும்ப நிகழ்ச்சி என கூறியுள்ளார். இந்த  இந்த நிகழ்ச்சி இப்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி விட்டது.  பாரார், ஜீ 5 இது பெண்களைப் பற்றிய கதை. இப்போது பெண்களைப் பற்றிய கதைகள் ஓடிடியில் நிறைய வருகின்றன. அந்த வகையில் அதிக பார்வையாளர்களை இந்த நிகழ்ச்சி பெற வாய்ப்புள்ளது.  மாய் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவின் தயாரிப்பு. ஆனால் அதற்காக நீங்கள் இதனை பார்க்க வேண்டியதில்லை. 47 வயதான பெண், வாழ்க்கையோட்டத்தின் இடையே ஒரு குற்றத்தில் சிக்கிக்கொண்டு எப்படி மீள்கிறார் என்பதே கதை. வாமிகா காபி, ரைமான் சென் என நம்பிக்கைக்குரிய நடிகையர் நடித்துள்ளனர்.  ஃபோர் மோர் ஷாட்ஸ் ஃப்ளீஸ் அமேசான் பிரைம் பெண்களுக்கு இடையிலான பல்வேறு முரண்பாடான உணர்ச்சிகளின் தொகுப்புதான் கதை. தாராள மனது கொண்டவர்கள் மட்டும் பார்ப்பது இதயத்திற்கு நல்லது.  ஹஸ் ஹஸ் அமேசான் பிரைம் தொண்ணூறுகளில் நமது கனவுக்கன்னியாக இருந்த ஜூகி சாவ்லா, ஆயிஷ

இஸ்லாமிய நாடுகளில் முகத்திரை அணியும் சட்டங்கள்!

படம்
  சௌதி அரேபியா  பொதுவாக இங்கு ஹிஜாப், நிகாப், பர்கா என்ற உடைகள் சாதாரணமானவை. இங்கு பெண்கள் இந்த  உடைகளில் எது தங்களுக்கு பிடித்ததோ அதை அணிகிறார்கள். 2018ஆம் ஆண்டு, சௌதி இளவரசர் முகமது பின் சல்மான், நாகரிகமாக பொறுப்புடன் உடை அணிந்தால் போதுமானது என கூறிவிட்டார்.  ஈரான் 1979ஆம் ஆண்டு நாட்டில் ஈரான் புரட்சி நடைபெற்றபிறகு, ஹிஜாப்பை பெண்கள் அணியவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. 1995ஆம் ஆண்டு ஒரு சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பொதுஇடத்தில் முகத்திற்கு மறைப்பின்றி ஒரு பெண் வந்தால், அவர்களை அறுபது நாட்கள் சிறையில் அடைக்க முடியும்.  பாகிஸ்தான்  2019ஆம் ஆண்டு  பெஷாவர், ஹமீர்புர் ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு சுற்றறிக்கை  வந்தது. அதில், அனைத்து பெண் மாணவிகளும் அபயா எனும் உடையை அணிய வேண்டும் என கூறியிருந்தது. ஆனால் இதற்கு எதிராக போராட்டம் நடைபெற்றதால் சட்டம் திரும்ப பெறப்பட்டது.  இந்தோனேஷியா 2021ஆம் ஆண்டு பள்ளிகளில் மத ரீதியான உடைக்கட்டுப்பாடு இருக்காது என கூறப்பட்டு, முந்தைய சட்டங்கள் மாற்றப்பட்டன.  இந்தியா டுடே  பின்டிரெஸ்ட் 

முகத்தை, தலையை மறைப்பதில் இத்தனை வகைகளா?

படம்
  கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம் பெண்களை சமூக ரீதியாக தனிமைப்படுத்தும் வேலைகளை மதவாத கும்பல்கள் ஒன்றிய அரசின் ஆசியுடன் செய்து வருகின்றன. இதுநாள் வரை கல்விநிலையங்களில் சிறுபான்மையினர் எப்படி உடை அணிந்து வரவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இப்போது, உடை ஒழுக்கம் என்பதை பள்ளி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். பெண்களின் கல்வி கெட்டாலும் பரவாயில்லை ஆட்சி அதிகாரம்தான் முக்கியம் என லோட்டஸ் குழுவினர் உறுதியாக நம்பி வன்முறை, கலவரம் ஆகியவற்றை ஏற்படுத்தி வருகின்றனர்.  இப்போது நாம் பெண்கள் அணியும் பல்வேறு உடல், முகத்தை மறைக்கும் வகைகளைப் பார்ப்போம்.  ஹிஜாப் நீளமான துணியை எடுத்து கழுத்து, தலையைச் சுற்றியிருப்பார்கள். இது இந்து மதத்தில் பெண்கள் சேலை தலைப்பை எடுத்து தலைமீது போட்டுக்கொள்வார்களே அதுபோன்றதுதான். இதனை இந்து மதத்தில் கூன்காட் என்று அழைக்கிறார்கள்.  நிகாப் இதில் முகத்தில் கண்கள் மட்டும்தான் அடையாளம் தெரியும். பிற பகுதிகளை கருப்பு உடையால் மறைத்து இருப்பார்கள்.  பர்கா இது முகம், உடல் என முழுக்க உடையால் மூடியிருப்பார்கள். கண்கள் உள்ள பகுதியில் மட்டும் வெளியே பார்க்கும்படி உடையில் இழைகளில் நெகிழ்வுத்தன

இந்தியர்களின் உயரம் மெல்ல குறைந்து வருகிறது!

படம்
  இந்தியர்களின் உயரம் குறைந்து வருவதாக இந்திய அரசின் தேசிய குடும்பநல ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவித்துள்ளன.  இந்தியர்கள் பொதுவாக உயரத்தை விட நிறத்தைப் பற்றிய கவனத்தை அதிகம் கொண்டுள்ளனர். ஆனால் ஒருவரின் உயரம், எடை என்பது உடல்நலத்தைப் பொறுத்தவரை முக்கியமானது. தற்போது தேசிய குடும்பநல ஆய்வுகளில் தெரிய வந்துள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவை. 1992 முதல் 2020 வரையிலான ஆய்வுகளில் இந்தியர்களின் உயரம் குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.  இரண்டாவது மற்றும் நான்காவது ஆய்வுகளில் உயர மாறுதல் தெரியவந்துள்ளது. இதில் பதினைந்து முதல் இருபத்துநான்கு வயது வரையில் உள்ள பெண்கள் 0.12 செ.மீ. உயரம் குறைவாகவும், இருபத்தாறு முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களின் உயரம் 0.13 செ.மீ. உயரமாக உள்ளனர். இந்த வகையில் ஆண்களின் உயரம் முதல் பிரிவில் 1.1 செ.மீ, இரண்டாவது பிரிவில் 0.86 செ.மீ. என குறைந்துள்ளது. இதில் நாம் கவலைப்படும் விஷயமாக உள்ளது, பட்டியலினப் பெண்களின் உயரம் 0.42 செ.மீ., ஏழைப்பெண்களின் உயரம் 0.57 செ.மீ. என குறைந்துள்ளதுதான்.  ஆண்களைப் பொறுத்தவரை ஏழையான ஆண்கள், வசதியான ஆண்கள் பிரிவு என இரண்டிலுமே அவர்களின் உயரக்க

நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள்! - மனுபிள்ளை, கனிஸ்க் தரூர், சம்ஹிதா அர்னி

படம்
  (இடது)எழுத்தாளர் சம்ஹிதா அர்னி சம்ஹிதா அர்னி எழுத்தாளர், பெங்களூரு சம்ஹிதாவுக்கு அப்போது நான்கு வயது. அவரது அப்பாவுக்கு வெளியுறவுத்துறையில் வேலை. அவரை கராச்சியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு பணிமாற்றம் செய்தனர். அங்கு சென்றபோது, சம்ஹிதாவுக்கு நூலகத்தில் நூல்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.  அங்குதான் பல்வேறு புனைவு வடிவங்களில் மகாபாரத புராணக்கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நூல்களை பலவிதமாக படித்தார். பிறகுதான், அதனை படமாக வரைய முடிவெடுத்தார். இதன் அடிப்படையில் வியாசரின் மகாபாரத த்தை எழுதினார். அதாவது வரைந்தார். இப்படி தனது பனிரெண்டு வயதில் நூலை வரைந்து உருவாக்கினார். தி மகாபாரதா  எ சைல்ட்ஸ் வியூ என்ற நூலை  வெளியிட்டுவிட்டார். அந்த நூல் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் தனது ஆர்வத்தை அவர் விடவில்லை. இதனால்தான் 2012இல் சீதாவின் ராமாயணத்தை அவரால் நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் ஏற்ற முடிந்தது.   இந்த நூலுக்கான படங்களை மொய்னா சித்ரகார் என்பவர் செய்தார்.  இதைத்தொடர்ந்து   தி மிஸ்ஸிங் குயின் நூலை 2013இலும், தி பிரின்ஸ் என்ற பீரியட் நாவலை 2019இலும் எழுதினார்.  கனிஸ்க் தரூர் கனிஸ்க் தரூர் எ

காந்திய அணுகுமுறையில் சமூகத்தை மாற்றியமைத்த மூன்று அமைப்புகள்! - தன்னார்வ செயல்பாடும், காந்திய அணுகுமுறைகளும்! டி.கே. ஓசா

படம்
தன்னார்வச் செயல்பாடும் காந்திய அணுகுமுறைகளும்! டி.கே. ஓசா நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா புது டில்லி ரூ.22 பக்கம் 89 இன்று காந்திய அணுகுமுறை என்பது குறைந்துவிட்டது. காந்தி என்றாலே கோழைத்தனமானவர், தந்திரமானவர் என்று எண்ணும்படி செய்திகளை மதவாத கூட்டம் வெளியிடுகிறது. எளிமையாகவும், உண்மையாகவும் இருப்பது தவறு என எண்ணும் சமூக கலாசாரம் வளர்ந்த பிறகு சொல்லுவதற்கு என்ன இருக்கிறது என பலரும் நினைக்கலாம்.  அண்மையில் நடந்த விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் காந்திய வழிமுறையைப் பின்பற்றி நடந்து வெற்றிபெற்றது. ஆங்கில ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் என பாகுபாடின்றி விவசாயிகளை வசைபாடினர். இதற்கு அவர்கள் தங்கள் மனசாட்சியை விற்று பெற்ற பணம்தான் காரணம். யார் கொடுத்தார்கள் என்று கேட்காதீர்கள். ஊபா சட்டம் உடனே பாயும். தேச வளர்ச்சிக்காக என்று சொல்லி சுயநலத்திற்காக இந்தியாவை விற்க  பாடுபடுபவர்கள்தான் இதற்கு காரணம்.  இந்த காலகட்டத்தில்தான் டி.கே. ஓசா எழுதிய   இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. தொண்ணூறுகளில் வெளியான நூல் இது. அப்போதே மறுசுழற்சிக்கான காகிதத்தில் அச்சிட்டிருக்கிறார்கள். நூலில் பேசப்படும் விஷயமும் அந்தள

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021- சாதனை படைக்கும் உத்தரப் பிரதேசம்

படம்
கடந்தாண்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தேசிய பெண்கள் கமிஷன் உறுதிபடுத்தியுள்ளது. இப்படி நடக்கும் குற்றங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவின் முன்மாதிரி வளர்ச்சி பெற்ற மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. 2021இல் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 30,864 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்களுக்குப்(33,906) பிறகு 2021 ஆம் ஆண்டில்தான் அதிக குற்றங்கள் பதிவாகியுள்ளன. வாழும் உரிமை மறுக்கப்பட்டதாக உணர்ச்சிகளை பயன்படுத்தி ஏமாற்றியதாக பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 11,013 2020ஆம் ஆண்டை விட 2021இல் 30 சதவீதம் புகார்கள் அதிகரித்துள்ளன. திருமண உறவு சார்ந்த குற்றங்கள் 6,633, வரதட்சணை கொடுமை 4,589 இணையம் சார்ந்த புகார்கள் 858 வல்லுறவு, வல்லுறவுக்கான முயற்சி 1,675 பாலியல் ரீதியான பிரச்னை, மானபங்கம் 1,819 காவல்துறை ரீதியான பிரச்னைகள் 1,537 அதிக புகார்களைக் கொடுத்துள்ள மாநிலங்கள் 15,828 புகார்களை கொடுத்து இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக பிரகாசிப்பது உத்தரப் பிரதேசம். இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. வீரத்துறவி யோகி முதல்வராக உ

தொழில்நுட்பம் மூலம் பாகுபாட்டை குறைக்க முயலும் பெண்மணி! - அஜாயி

படம்
  அபிசோயே அஜாயி அகின்ஃபோலாரின்  சமூக செயல்பாட்டாளர் இவரது பெயரை சரியாக உச்சரிக்க சொல்லி போட்டியே நடத்தலாம். கட்டுரையில் அஜாயி என்று வைத்துக்கொள்வோம்.  1985ஆம் ஆண்டு  மே 19 அன்று நைஜீரியாவின் அகுரே என்ற நகரில் பிறந்தார். லாகோஸ் பல்கலைக்கழகம், தகவல் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் படித்தார். வணிக நிர்வாகத்தில் பிஎஸ்சி பட்டதாரி.  பியர்ல்ஸ் ஆப்பிரிக்கா யூத் பவுண்டேஷன் என்ற தன்னார்வ அமைப்பின் தலைவர். ஏழை, எளிய மக்களின் கல்விக் கனவுக்கு தோள் கொடுக்கும் அமைப்பு.  இந்த அமைப்பு வழியாக பெண்களுக்கு வருமானத்திற்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார் அஜாயி. இதன்மூலம் பெண்கள் தனியாக இயங்க முடியும். இந்த வகையில் நானூறு பெண்களுக்கு மேல் பயிற்சி கொடுத்துள்ளார்.  நைஜீரியாவில் வாழும் ஏழை, பணக்காரர்களுக்கான இடைவெளி அதிகம். அதைக் குறைக்க அஜாயின் அமைப்பு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.  பெண்கள் என்பவர்கள் உலகிலுள்ள புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்கள் மட்டுமல்ல. அதனை அவர்கள் உருவாக்குவார்கள் என்று அஜாயி கூறுகிறார்.  2018ஆம் ஆண்டு சிஎன்என் தொலைக்காட்சியில் நாயகர்கள் வரிசையில் அஜ

காஷ்மீரில் உருவாகும் தொழில்முனைவோர்கள்!- சுயதொழிலில் ஆர்வம் காட்டும் பெண்கள்!

படம்
  பெண் தொழில்முனைவோர் காஷ்மீரில் தொழிலை நடத்துவது கடினமானது. தீவிரவாதிகள் தொல்லை, அரசின் இணையத்தடை ஆகியவை அங்கு தொழில் நடத்தலாம் என்று நினைத்தவர்களைக் கூட எண்ணத்தை மாற்றும்படி செய்திருக்கிறது. இதில் தப்பி பிழைத்து விடாமுயற்சிய செய்தவர்கள் மட்டுமே இப்போது காஷ்மீரில் வெற்றி பெற்றுள்ளனர்.  சாடியா முஃப்டி அப்படிப்பட்டவர்தான். அறிவியல் பட்டப்படிப்பு படித்தவருக்கு ஸ்ரீநகரில் இரண்டு டிசைனர் பொட்டிக் கடைகள் உள்ளன. இவற்றை உருவாக்குவதற்கு அவர் மிகவும் போராடியிருக்கிறார். இதற்கு ஐந்து ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஜெகாங்கீர் சௌக், ஹஸ்ராத்பால் எனும் இரு இடங்களில் ஹேங்கர்ஸ் தி குளோஸெட் என்ற பெயரில் கடைகள் செயல்பட்டு வருகின்றன.  முஃப்டி தான் வெற்றி பெற்றதே போதும் என்று இருக்காமல், ஏராளமான பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறார். இவரை முன்னுதாரணமாக கொண்டு பல்வேறு பெண்கள் இத்தொழிலை செய்வதற்கு தயாராகி வருகின்றனர். பெண்கள் பெரும்பாலும் அரசு வேலைக்கு போகாதநிலையில் ஆடை வடிவமைப்பு தொழில் அவர்களை ஈர்த்து வருகிறது.  கொரோனா கால பொதுமுடக்கம், வேலைவாய்ப்பின்மை, இணைய முடக்கம், அரசியல் பிரச்னைகள் என அங்குள்ள தொழில்

கொலைகாரர்கள் மீது வரும் காதல்!

படம்
  கொலையை நிறுத்த முடியுமா? அதற்கு வாய்ப்பு குறைவு. ஒருமுறை கொலைகளை கற்பனை செய்து செய்யத் தொடங்கினால் அதனை நிறுத்துவது கடினம். கொலையாளிகளுக்கு உடல்நலக்குறைவு, சிறைக்கு செல்வது, வாய்ப்பு கிடைக்காத து என சில காரணங்கள் மட்டுமே கொலைகளை தடுத்து நிறுத்த முடியும்.  கொலைகளை செய்வதில் நிறைய பிரச்னைகள் உள்ளன. கொலைகளை திட்டமிட்டு செய்துவிட்டு உடலை மிகச்சரியாக மறைத்து வைக்க வேண்டும். தடயங்களை அழிக்க வேண்டும். வல்லுறவு செய்து பெண்களை உயிரோடு விடுவதிலும் சிக்கல் உள்ளது. அவர் எங்காவது சென்று உண்மையைச் சொன்னால் உப்புக்கண்டம் போட்டுவிடுவார்களே! இதனால்தான் பெரும்பாலும் வல்லுறவு செய்த பெண்களை கொன்றுவிட்டு சென்றுவிடுகிறார்கள். நம்மைப் பற்றி புகார் கொடுத்துவிடுவாளோ என்று எவ்வளவு நேரம் பயத்திலேயே வாழ்வது சொல்லுங்கள். இதனையும் சீரியல் கொலைகார ர்கள் யோசிக்கிறார்கள். இப்படி ஐன்ஸ்டீன் அளவுக்கு யோசிக்கும்போது கொலையின் இடைவெளி கூடலாம்.  கொலைகாரர்கள் மீது வரும் காதல் உலகமே வெறுக்கும் ஆண்களைக் கூட சில பெண்களுக்கு பிடித்துவிடுகிறது. எப்படி என்று பலருக்கும் தெரியாது. ஆனால் எனக்கு அவனைப் பிடித்திருக்கிறது என்று சொல்லி

சீரியல் கொலைகாரர்கள் குழந்தைகளை தேர்ந்தெடுப்பது ஏன்?

படம்
  எப்படி பாதுகாப்பாக இருப்பது? சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை இருட்டான பார்க்கிங், தனியாக நடைப்பயிற்சி செய்பவர்கள் என்று பார்த்துத்தான் பெண்களை தாக்குவார்கள். இதனால் பெரும்பாலான பொது இடங்களில் உடற்பயிற்சிகளை செய்யலாம். முடிந்தவரை தற்காப்பு பயிற்சிகளை கற்றுக்கொள்வதும் நல்லது. முந்தைய கட்டுரையில் சொன்னது போல உடல் வலுவான பெண்களை சீரியல் கொலைகாரர்கள் தேர்ந்தெடுப்பதில்லை. காரணம், அவர்களை கையாள்வது கடினம் என்பதுதான்.  ஆண்களை கொல்லுவது எப்போதுமல்ல பெரும்பாலும் ஆண்களை மட்டுமே கொல்லுவது என்பது அனைத்து சீரியல் கொலைகார ர்களின் விஷயத்திலும் நடைபெறுவதில்லை. ஒரினச்சேர்க்கையாளர்கள் இந்த விவகாரத்தில் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் ஒரினச்சேர்க்கையாளர்கென தனி கிளப்புகள் செயல்படுகின்றன. இங்கு செல்லும் ஒருவர் எளிதாக தனக்கு தேவையான இணையை தேர்ந்தெடுக்க முடியும். மத ரீதியான நாடுகளில் தன்பாலின ஈர்ப்பு சட்டப்படி தவறு என்று கூறலாம். ஆனால் வளர்ந்த உலக நாடுகள் இதனை ஏறத்தாழ ஏற்றுக்கொண்டு விட்டனர்.  தன் பாலின ஈர்ப்பாளர்களை எளிதாக அழைத்துச்சென்று அவர்களின் வீட்டிலேயே கொன்று விட்டு சென்ற சீரியல் கொலைகார

கொல்லப்படும் பெண்களுக்கு அழகு முக்கியமா? - சைக்கோ டைரி

படம்
  இனத்தை குறிவைத்து கொலை பொதுவாக சீரியல் கொலைகார ர்களை அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களோ அந்த இனத்தைச் சேர்ந்தவர்களைத்தான் கொலை செய்வார்கள், வல்லுறவு செய்வார்கள் என நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அது உண்மை இல்லை.  ஒருவர் குறிப்பிட்ட இனக்குழுவினர் வாழும் இடத்தில் வசிக்கிறார் என்பதே இதில் முக்கியமானது. அங்கு அவர் பார்ப்பது, பேசுவது என அனைவருமே குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களாக இருப்பது தற்செயலானதுதானே? எனவே அவர்களை எளிதாக பின்தொடர்ந்து கொலை செய்ய முடியும்.  மற்றபடி வெள்ளையர்கள் இனவெறியுடன் கருப்பர்களை அல்லது கருப்பர்கள் வெள்ளையர்களை மட்டுமே என்று கொலை செய்வது கிடையாது. இன்று அது பழிக்குப்பழி விளையாட்டாக இருந்தாலும் கூட சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை கொலை என்பதுதான் விஷயமே ஒழிய அவர்களின் சாதி, மதம், இனம், மொழி எல்லாம் அனாவசியமானவை.  தோற்றம் முக்கியம் சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை தன்னை பாடாய்படுத்திய அம்மாவை நேரடியாக பழிவாங்க முடியாது போகும் வாய்ப்புகள் உண்டு. செய்வதற்கும் மனமில்லாத நிலையில் பிற பெண்களின் மீது கோபத்தை காட்டி கொல்லுவார்கள். இதில் தாடை இப்படி, தலைமுடியின் நிறம்,

உலக நாடுகளை ஆண்ட ராணிகள்! - கிரேட் கேத்தரின், முதலாம் எலிசபெத், டாய்டு பெடுல், சீன ராணி வூ ஸெட்டியான்

படம்
          கிரேட் கேத்தரின் ஜெர்மனியில் அரச குடும்பத்து இளவரசுக்கு மகளாக பிறந்தவர் கேத்தரின் . இவர் ரஷ்யா நாட்டை கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு அழைத்து சென்றவர் என்று கூறுகிறார்கள் . சோபி அகஸ்டே என்ற பெண்மணி ஜெர்மனியில் 1729 ஆம் ஆண்டு பிறந்தவர் . இவரை பதினைந்து வயதில் ரஷ்யாவுக்கு திருமணம் செய்விக்க அழைத்தனர் . மாப்பிள்ளை பீட்டர் . மாப்பிள்ளை பெண் என இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் . மாப்பிள்ளையின் தாய் எலிசபெத்தான் திருமணத்திற்கான தானாவதி . 1745 ஆம் ஆண்டு பீட்டருடன் திருமணம் நடைபெற்றது . அதற்குப் பிறகுதான் சோபிக்கு கேத்தரின் என்ற பெயர் சூட்டப்பட்டது . பீட்டரும் ஜார் மன்னராக மாறினார் . ஜார் என்றால் பேரரசர் என்று பொருள் . ஜார் மன்னருடன் கேத்தரினுக்கு பிரச்னை தொடங்க , அவரை மன்னர் பதவியிலிருந்து விலக்கி கைதுசெய்து சிறையில் தள்ளினார் கேத்தரின் . பிறகு அரியணை ஏறி ராணியானார் . ரஷ்யாவின் ராணி என்றால் அழகாக இருக்கும் . அடுத்த முப்பது ஆண்டுகள் பதவியில் இருந்து ரஷ்யாவை ஆண்டார் . கேத்தரின் நாட்டில் ஏராளமான சீர்திருத்தங்களை தொடங்கினார் . அதில் முக்கியமானது கல்வ