இடுகைகள்

காமெடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிர வைக்கும் ரொமான்ஸ் காமெடி - பீஷ்மா படம் எப்படி?

படம்
பீஷ்மா  - தெலுங்கு இயக்கம்  வெங்கி குடுமுலா இசை மகதி சாகர் ஒளிப்பதிவு  ஆஹா... சலோ என்ற நாக சௌரியா படம் பார்த்திருப்பீர்கள் என்றால் இந்த படத்தை நம்பி பார்க்கலாம். சீரியசான கையில் வைத்திருக்கும் பாப்கார்ன் சிதறும்படி எந்த ஆபத்தும் நடந்துவிடாத கதை. நிதின் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பின்னியிருக்கிறார். வாட் எ பியூட்டி பாட்டில் அசத்தலாக டான்ஸ் ஆடியிருக்கிறார். நடித்திருக்கிறார். காமெடி செய்திருக்கிறார். இவருக்கு இணையாக படத்தில் நாயகிக்கான இடத்தையும் ராஷ்மிகா செய்திருக்கிறார். வெண்ணிலா கிஷோர் காமெடி நன்றாக இருக்கிறது. நிதினின் அப்பாவாக வரும் நரேஷ், மாமாவான பிரம்மாஜி காம்போ ரசிக்க வைக்கிறது. ஐயையோ படத்தில் ஆபத்தான சீரியசான எந்த விஷயமும் நடக்கவில்லை. நாயகனுக்கு ஒரே பிரச்னை. வேலை கிடையாது. காதலி கிடைக்கவில்லை என்பதுதான். இதனால் நாம் கவலைப்பட்டு படத்தில் என்ன மாறப்போகிறது, எனவே படத்தை காவிரி ஆறு போல அதன் போக்கிலே போகட்டும் என விட்டுவிடுகிறோம்.  ஃபீல்டு சயின்ஸ் கம்பெனி இயக்குநரும் வீக்கான வில்லன் என்பதால் எதிர்பார்க்க ஏதுமில்லை. மகதியின் பின்னணி இசை, பாடல்க

பாமா படிக்கலாமா - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! பாமா.... படிக்கலாமா? நம் ஊரைப் பொறுத்தவரையில் பாவம் என்று சொல்வது எல்லாம் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான். சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொண்டால் அதற்குப்பிறகு பாவம், புண்ணியங்களை எளிதாக கைவிட்டுவிடுவீர்கள். அல்பன்லீபே சாக்லெட்டை சப்பி சாப்பிட்டு, தமன்னா சாப்பிடச்சொன்ன குச்சி மிட்டாய்க்கு நகர்ந்து இப்போது கோபிகோக்கு நகர்ந்து வருகிறார்களே அப்படித்தான். சினிமா பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள். கேன்சர் வந்தால் எப்பாடு பட்டாலும் ரத்தம் கக்கித்தான் சாகவேண்டும். ஏன்? பின்னே புற்றுநோயை எப்படித்தான் பார்வையாளர்களுக்கு கடத்துவது? இப்படித்தான் ராமராஜன் படத்தில் ஒரு காட்சி. அனேகமாக மேதை எனும் படம் என்று நினைக்கிறேன். நாயகனின் திருமண முதலிரவு. ஆனால் அவர் கடமையே நான் கல்யாணம் செய்த பொண்டாட்டி என கர்ம சிரத்தையாக வேலைகளை செய்கிறார். முதலிரவில் வைத்திருக்கும் பால் தயிராக மாறியிருக்கிறது என காட்சி வைத்து மிரட்டியிருப்பார் இயக்குநர். அப்படிப்பட்ட சினிமாவிலும்  அனைவரும் பார்த்து வியந்தது என்னாச்சு என்று கேட்ட சமாச்சாரம் ஒன்று உண்டு. அதுதான்

எனக்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல்தான் முக்கியம்! - அக்சய் குமார் அதிரடி!

படம்
நேர்காணல் அக்சய் குமார், திரைப்பட நடிகர். நீங்கள் பதினோராவது வெற்றிப்படத்தை கொடுத்துள்ளீர்கள். உங்கள் ரசிகர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்.  நான் அடுத்து நான்கு படங்களில் நடிக்க உள்ளேன். என்னுடைய அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்துகிறேனா என்பது பற்றி தெளிவாக கூறமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் செயல்படுகிறேனா என்பதைப் பற்றியே கவலைப்படுகிறேன். நான் சிறப்பாக பணியாற்றி வருகிறேன்.  உங்களுடைய படங்கள் விமர்சகர்களின் விமர்சனங்களையும் மீறி வெற்றியடைந்து வருகிறதே? நான் விமர்சகர்களின் நேர்மையான விமர்சனங்களை ஏற்கிறேன். காமெடி பற்றிய விமர்சனங்களும் முக்கியம்தான். அவை உங்களை ஆக்கப்பூர்வமாக மேம்படுத்தவேண்டும் அவ்வளவுதான். எனக்குப்பிடித்த நான் நடிக்கும் காமெடி என் மனைவிக்கு பிடிக்காது. அவர் வேறுவிதமான காமெடியை ரசிக்கிறார். இதுபோலவே விமர்சகர்களுக்கும் காமெடி மீதான ஈடுபாடு, விமர்சனங்கள் மாறுபடும்.  உங்களுடைய படங்கள் பற்றி நிறைய எதிர்மறையாக விமர்சனங்கள் வருகிறதே? நான் மக்கள் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்குப் பிடித்தால் அதனை பாக்ஸ்

கலாமந்திரை விலைக்கு வாங்குவாரா நரேஷ் - கேவு கேகா காமெடி!

படம்
கேவு கேகா  -2013 அலரி நரேஷ் இயக்கம்  தேவி பிரசாத் ஒளிப்பதிவு அடுசுமிலி விஜயகுமார் இசை பீம்ஸ் சிசரில்லோ சின்னி சரண் காதல்தான் பிரச்னைக்கு காரணம். புச்சி முதல் காட்சியில் தற்கொலைக்கு முயல்கிறார். காரணம், லஷ்மியைக் காதலித்ததுதான். லஷ்மியின் அப்பாவுக்கு மருமகன் பணக்காரனாக இருக்கவேண்டும் என்று ஆசை. இதற்காக கந்துவட்டிக்கு பணம் வாங்கிக்கூட அதை மருமகன் கட்டவேண்டும் என நினைக்கிறார். இந்த லட்சணத்தில் கலா மந்திரில் விற்பனையாளராக இருக்கும் புச்சி எப்படி இந்த சவாலை சமாளித்து லஷ்மியை மணம் செய்து அவரை அம்மா ஆக்குகிறார் என்பதே கதை. ஐயையோ சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இது அலரி நரேஷ் படம் என்பதால் அதனை கூறவில்லை. ஜாலியாக சிரிப்பதற்கான படம். அதனால்தான் நரேஷ் இருக்கிறார். அவரின் மேஜிசியன் மாமா கிருஷண பகவான் இருக்கிறார். புச்சி என்னென்னவோ முயற்சி செய்தும் காசு கிடைக்கவில்லை. அப்போது அவரது மாமா சொல்லும் ஃபிளாஷ்பேக்கில் அவரது தந்தை ஏமாற்றப்பட்டு சொத்து இழந்தது தெரிய வருகிறது. அதனால் அந்த பணத்தை ஏமாற்றியவர்களை பழிவாங்க பாங்காக்  செல்கிறார்கள். அங்கு ஆசிஷ் வித்யார்த்

மருத்துவமனைக்குள் பேய்! - நந்தினி நர்சிங் ஹோம் படம் எப்படி?

படம்
நந்தினி நர்சிங் ஹோம் - தெலுங்கு இயக்கம் - பிவி கிரி இசை- அச்சு, சேகர் சந்திரா சந்து ஊரில் எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடி நகருக்கு வருகிறார். வருகிற இடத்தில் மருத்துவமனையில் வேலை கிடைக்கிறது. அப்போது எம்பிஏக்கு பதில் எம்பிபிஎஸ் ரெஸ்யூமில் எழுத்துகள் மாற பிரச்னைகள் தொடங்குகிறது. ஜூனியர் டாக்டராக அவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். தன் நண்பர் மூலம் எப்படியோ சமாளித்து வேலை செய்கிறார். ஆனால் மருத்துவர் என்றால் அடிப்படையே தெரியாமல் உள்ளவர் எப்படி சமாளிக்கிறார்? அங்கு அவருக்கு மருத்துவமனை நிர்வாகி மீது காதல் வருகிறது. காசுதான் முக்கியம் முதல் காதல் காசுக்காக புட்டுக்கொண்டு விட்டது. இதுவும் அப்படி ஆக கூடாது என சந்து நினைக்கிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் மர்ம நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்குகின்றன. அதனை சந்து உணர்ந்தாரா என்பதுதான் கதை. ஆஹா படத்தில் பெரும்பலம் வெண்ணிலா கிஷோர், சப்தகிரியின் காமெடிக் காட்சிகள்தான். மற்றபடி நாயகி, நாயகன் நடிக்க வாய்ப்பு குறைவு. படத்தின் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்கும். மோசம் படத்தின் நீளம். தக்கனூன்டு கதையை வைத்துக்கொண்டு எவ்வளவு  தூரத்தி

2019 டிரெண்ட்ஸ் தொடருமா? பகுதி 2

படம்
நடப்பு ஆண்டில் தொடரும் விஷயங்கள் அடுத்த ஆண்டும் தொடருமா என்று உறுதி கூற முடியாது. 2019 ஆம் ஆண்டு மக்களை வசீகரித்து கவனித்த வைத்த அவர்கள் பின்பற்றிய பேசிய, ரசித்த விஷயங்கள் இவை. புது மெட்ரோ ரயில் மோகம் டிக்கெட் விற்கிறதோ இல்லையோ, மக்கள் ஏறுகிறார்களோ இல்லையோ, மேம்பாலங்களில் மெட்ரோ தன் பாட்டுக்கு போய்க்கொண்டே இருந்தன. சாதாரண ஐந்து ரூபாய் டிரெயின்களை தடாலென நிறுத்தியதால், மெட்ரோ ரயிலில் மக்கள் பயணிக்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர். எனவே மெட்ரோ ரயில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் வென்றுவிட்டது.  முதலில் இலவசமாகவும் பின்னர் காசு கொடுத்தும் செல்ல தமிழர்கள் பழகினர். சென்னை, கொச்சி, லக்னோ, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ கொடி பறந்தது. மனநலம் முக்கியம் இந்த ஆண்டு மனநலம் பற்றி பேசத்தொடங்கி திரியை பற்ற வைத்தது திருமதி தீபிகா படுகோன்தான். பின் அதனை மற்றவர்களும் பின்பற்றி, பிரஷர் ஜாஸ்திங்க என கமெண்டுகளை அள்ளித் தெளித்து அனுதாப வாக்குகளை அள்ளினர். பிட்காயின் பரிதாபம் ஆர்பிஐ, பிட்காயின் யூஸ் பண்றதைப் பார்த்தேன். பத்து ஆண்டுகள் சிறை தண்டனை என மிரட்டினாலும் அரசின் பிள

அந்த சமாச்சாரத்தைச் சொல்லும் அடல்ட் கரடி! - அம்பு படாத கரடிக்கதை!

படம்
TED 1, TED 2 மார்க் வால்பெர்க் இயக்கம் - சேத் மெக்ஃபார்லென் ஒளிப்பதிவு - மைக்கேல் பாரட் இசை - வால்டர் மர்பி இது வயது வந்தவர்களுக்கான காமெடி படம். அதனை மறக்காதீர்கள். அப்போதுதான் குங்குமம் விமர்சனக்குழு போன்ற லாஜிக் கேள்விகளை எழுப்பாமல் படத்தை ரசிக்க முடியும். அமெரிக்காவில் வாழும் தம்பதி. அவர்களுக்கு தனிமை விரும்பியான சிறுவன். அவனுக்கு பெற்றோர் கொடுக்கும் டெடி பியர் பொம்மை. இவைதான் தொடக்க காட்சிகள். இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? ஆம் மற்ற டெடிகளைப் போல அல்ல இந்த டெடி. இது பேட்டரியால் இயங்கும் என்றாலும், மனிதர்களோடு இயல்பாக பேசக்கூடிய திறன் பெற்றது. இதனால் பத்திரிகை,டிவி என அனைத்திலும் பிரபலம் ஆகிறது. ஆனால் அந்த சிறுவனை மறக்கவே இல்லை. அவனோடுதான் கடைசி வரை இருக்கிறது. எல்லோருக்கும் குறிப்பிட்ட வயது வந்தால் அடுத்த பாலினத்தவரை தேடுவோம். பார்ட்டி பண்ணுவோம். பெற்றோர் வீட்டில் இல்லை என்றால் கும்தலக்கடி குஜாலை நடத்துவோம் அல்லவா? அதேதான் இங்கு மார்க் வால்பெர்க்கு முன்னே டெடி செய்கிறது. டார்ச்சர் ஆகும் மார்க்கின் லிவிங் இன் பெண் தோழி மிலா குனிஸ், டெடியை அடித்

30 பிளஸ் ஆட்களுக்கான அரசில் பகடி அதிரடி - முத்தின கத்திரிக்கா

படம்
முத்தின கத்திரிக்கா இயக்கம் வேங்கட் ராகவன் ஒளிப்பதிவு - பானு முருகன் இசை - சித்தார்த் விபின் மூலப்படம் - வெள்ளி மூங்கா கதை - ஜோஜி தாமஸ் ஆஹா படம் உங்களை சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும் என்பதுதான் கேரண்டி. சுந்தர்.சி, சதீஸ், ரவி மரியா, சிங்கம் புலி என அனைவருமே பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். மலையாளப்படத்தின் அங்கதத்தை அப்படியே கடத்தியிருக்கிறார்கள். அதனால் சிலநேரம் தீவிரமான அரசியல் பகடியோ என்று தோன்றுமளவு படம் செல்கிறது. இது தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவம்தான். காமெடி என்பதால் பாடல்களில் இசையமைப்பாளரும் மெனக்கெடவில்லை. கோவிலூர் நகராட்சியில் நின்று ஜெயிக்கும் லெட்டர்பேடு கட்சித்தலைவர் என்பதுதான் ஒன்லைன். இதில் நாற்பது வயது கடந்த அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது முக்கியமான விஷயம். இதை வைத்தே படம் முழுக்க கலாய்த்து சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஐய்யய்யோ... சிங்கம்புலி சொல்வது போல ஐந்து தெருக்களை கொண்ட ஊர் என்பதால் பானு முருகனின் கேமரா தடுமாறி இருக்கிறது. எனவே இருக்கும் விஷயங்களை வைத்து பட்ஜெட்டிற்குள் பதவிசமாக பிரமாண்டமாக படம் எடுத்திருக்கிறார்கள். பா

வித்தியாசமான போபியாக்கள்! - பயம்தான் பிரதானம்

படம்
பாபாபோபியா இது கத்தோலிக்க மத தலைவரான போப்பை பார்த்தால் வரும் பயம். பெண்களுக்கு வருமா? ஆண்களுக்கு வருமா என்று தெரியவில்லை.  சோசெராபோபியா பெற்றோரைப் பெற்றவர்களைப் பார்த்து வரும் பயம். தாத்தா, பாட்டியைப் பார்த்து வரும் பயம் என்றால் ஈசியாக புரியும் என நினைக்கிறேன்.  சோம்னிபோபியா தூங்கிவிடுவோமோ என நினைத்து பயப்படுவது. அனிமேஷன் படிப்பவர்களுக்கு வரும் வியாதி இதுதான் என இப்போது தெரிகிறது.  சாந்தோபோபியோ நிறங்களைப் பார்த்து மனதில் ஏற்படும் குலை நடுக்கத்தை இப்படி சொல்கிறார்கள்.  ஆம்பலோபோபியா சென்டர் ஆப் தி அட்ராக்சனைப் பார்த்து வருவது. அதுதாங்க, தொப்புளைப் பார்த்து வருவது.  ஹீலியோபோபியா சூரியன், வெளிச்சம், எல்இடி பல்புகளை பார்த்து ஒருவர் ஜகாவாங்கினால் அவருக்கு இந்தப் பிரச்னை என புரிந்துகொள்ளலாம்.  அராய்ச்சி புட்டிரோ போபியா பீநட் பட்டர் சாப்பிடும்போது வாயின் மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ளுமோ என பயப்படும் பழக்கம். நம்மூரில் இதனை பிரெட்டும் ஜாமும் என்று கூட மாட்டிக்கொள்ளலாம். இல்லையெனில் இருக்கவே இருக்கிறது அப்படியே அள்ளித் தின்னும

கலக்கும் காமெடியோடு பழிக்குப்பழி படலம்! - கேங்லீடர் சினிமா!

படம்
கேங்லீடர் - தெலுங்கு இயக்கம் - விக்ரம் கே குமார் எழுத்து - விக்ரம் குமார், வெங்கட் டி பதி கேமரா - மிரோஸ்லா ப்ரோசெக் இசை - அனிருத் ஆஹா ... அசத்தலான கதையும், அம்சமாக நடித்து கொடுத்திருக்கும் லஷ்மி, சரண்யா பொன்வண்ணன், நானி ஆகியோரின் நடிப்புதான். இசையில் அனிருத் நிறைய இடங்களில் உதவுகிறார். சீரியசான இடங்களை படக்கென உடைக்கும் காமெடியும் செமையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பிரியா அருள் மோகனும் செம அழகு என்பதால், பக்கத்திலிருக்கும் காதலி கூட சுமாராக தோன்ற வாய்ப்புள்ளது. அய்யய்யோ .... மனம், 24 முதற்கொண்டு வரும் பின்னோக்கி போகும் உத்தியும், இது நடக்காமல் இருந்தால் என காட்சிகள் மாறும் விதம் ஒருகட்டத்தில் படத்தின் நம்பகத்தன்மையை சிதைக்கிறது. இந்த காட்சி உண்மையா அல்லது பென்சில் சிஸ்டத்தில் டைப் செய்துகொண்டிருக்கிறாரா என்று டவுட் ஆகிறது. வெண்ணிலா கிஷோரை ஓரினச்சேர்க்கையாளராக காட்டி சிரிக்க வைப்பது சங்கடமாக இருக்கிறது.  கார்த்திகேயா கிடைத்த வாய்ப்பில் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார். இது முழுக்க நானியின் சினிமா என்பதால், ஜாலியாக நீங்கள் ரசிக்கலாம். கதை, வங்கி கொள்ளையில் கூட

காமெடி அறிவியல் விருதுகள் - எல்ஜி நோபல் பரிசு!

படம்
எல்ஜி நோபல் பரிசு! விநோதமான வித்தியாசமான யோசனைகள் சிந்தனைகள் அறிவியலுக்கு அவசியம். முன்பு என்ன இது, கிறுக்குத்தனமாக இருக்கிறதே என்று நினைத்த விஷயங்கள்பின்னாளில்  மகத்தான கண்டுபிடிப்புகளாக நிறைவேறியுள்ளன. அவற்றைக் கவனப்படுத்தி பரிசுகளை வழங்குகிறது எல்ஜி நோபல் கமிட்டி. அனாட்டமி விருது! ஆண்களின் விதைப்பையின் இடதுபுறம் ஏன் வலதுபுறத்தை விட சூடாக இருக்கிறது என்பதுதான் ஆராய்ச்சி. ஏண்டா இப்படி என்று கேட்டீர்கள் என்றால் உடனே கட்டுரையைவிட்டு வெளிநடப்பு செய்துவிடுங்கள். இதற்காக ஆய்வாளர் ரோஜர், போரஸ் எத்தனை பேரை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் தெரியுமா? தபால்காரர்களை 20-52 வயது வரை தேர்ந்தெடுத்து ஆராய்ந்திருக்கிறார்கள். சங்கோஜமாக இருக்காதா என்று கேட்காதீர்கள். நமக்கு ஆராய்ச்சிதான் முக்கியம். வேதியியல் விருது ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்பை ஜொள் விட்டு உலகமே பார்த்தது. அப்போது அனைவரின் வாயில் வடித்த தோராய ஜொள்ளின் அளவு என்ன? ஆம். இதைதான் ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடிக்க முயற்சித்துள்ளனர். ஐந்து வயது சிறுவனின் வாயில் சுரக்கும் எச்சிலின் அளவு சதவீதத்தை இதன்மூலம் கணித்துள்ளனர்.

காதலுக்காக காத்திருக்கும் பேய்!- பீ மாக் ஹாரர் காமெடி

படம்
பீ மாக் - 2013 தாய்லாந்து இயக்குநர் - பன்ஜோங் பிசாந்தனாகுன் கதை - Nontra Khumvong Banjong Pisanthanakun Chantavit Dhanasevi இசை -  Chatchai Pongpraphaphan Hualampong Riddim ஒளிப்பதிவு - Narupon Sohkkanapituk பேய் கதைதான். ஆனால் ட்விஸ்ட் நீங்கள் பயப்பட அவசியமில்லை என்பதுதான்.  போரில் கலந்துகொண்டு குண்டுபட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வீடு திரும்புகிறார்கள் ஐந்து நண்பர்கள். இடையில் நண்பர் ஒருவர், தன் வீட்டில் தங்கிச்செல்லுங்கள் என்கிறார். சரி என அவரின் வீட்டுக்குச் செல்கிறார்கள். அங்கு நடக்கும் பகீர், பகபக சிரிப்பு சம்பவங்கள்தான் படம்.  ஒளிப்பதிவு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். நாயகனுடன் நடிக்கும் நண்பர்கள் கூட்டத்தின் நடிப்பும், ஏடாகூட வசனங்களும் பயத்திலும் சிரிக்க வைக்கின்றன. நாயகி தேவிகா பேரழகி. அந்த நண்பர் கூட்டத்தில் பேய் என்றாலும் கூட அழகிடா என வழிவதைப் போல.. அவ்வளவு அழகு. நடிக்கவும் செய்கிறார். போதாதா----  போர், போரின் பாதிப்பில் இறப்பு, நீர்நிலை மீது கிராமம், கொண்டாட்டம் என பிரேமில் அனைத்து இடங்களிலும் கலை இயக்கு

இதயத்தை எகிறவைக்கும் செக்ஸ்! - கிரான்க் - ஜேசன் ஆடும் ஆட்டம்!

படம்
கற்புக்கரசியான நாயகி! கிரான்க் இயக்குநர் - மார்க் நெவால்டைன், பிரையன் டெய்லர் ஒளிப்பதிவு - ஆடம் பிடில் இசை - பால் ஹஸ்லிங்கர் ஹீரோவின் ஆன்ம நண்பர்! கூலிக்கொலை செய்யறவரு, எதிரிகளோடு சதியால  தன் இதயத்தை இழந்து விட்டு லோலாய் படுவதாம்ப்பா கதை. கதை, ஹீரோவோட பேரு, நாயகி யாருங்கிறதையெல்லாம் ஒத்தி வெச்சிட்டு ஜாலியாக சீனு வைட்லா படம் பாக்குற ஃபீல்ல படம் பார்த்தா படம் ஜாலி அதிர்வேட்டு. ஹீரோவுக்கு சுயநினைவு இல்லாதபோது அவரோட ஹார்ட்டு, கிட்னி, கடைசியாக அந்தரங்க மேட்டர் உட்பட வெட்டி எடுக்க ஜப்பான் கூட்டம் திட்டம் போடுது. அங்கதான் ட்விஸ்ட். அவரை ரிவென்ஞ் எடுக்க பேட்டரி இதயத்தை பொருத்துறாங்க. அது இயங்க அவர் ஓடிக்கிட்டே இருக்கணும். ஆச்சா? அதோட ஒரிஜினல் இதயத்தையும் தேடிப் பிடுங்கணும்னு ஓவர் டைம் வேலை. இதயத்தை ஓடவைக்க செக்ஸூம் ஒரு வழிதான்! ஜேசன் ஆக்சன் அதிர்ச்சி என அத்தனையிலும் ஒரே ரியாக்ஷன் காட்டி பின்னி எடுக்கிறாரு. இதயத்திருடனை தேடி குஜால் கிளப்புக்கு ஜேசன் வர்றாரு. அங்க,  மார்ல எலக்ட்ரிக் டேப் ஒட்டி ஆடுற ஏமி ஸ்மார்ட்டின் டான்ஸ் செம சூடு ஏத்துது. பதறிப்போற

சாலையில் சில கதாபாத்திரங்கள்- இதுதாங்க சென்னை

படம்
சாலையில் சில கதாபாத்திரங்கள்... தினசரி சாலையில் நீங்கள் பயணிக்கும்போது, பல்வேறு மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் சில குறிப்பிட்ட மனிதர்களை மறக்கவே முடியாது. காரணம், அவர்கள் சாலையில் நடந்து கொள்ளும் விதம்தான். வெரைட்டி கதாபாத்திரங்கள் இதோ! ஹெலிகாப்டர் ஆட்டோ! தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு தனி அடையாளம் உண்டு. அது என்ன? ஹெலிகாப்டர் போல எந்த இடத்திலும் லேண்ட் ஆகும் வசதிதான் அது. பின்னே வருபவர்கள் இதனைக் கவனிக்காவிட்டால் புத்தூர் கட்டு நிச்சயம். இடதுபக்கம் இன்டிகேட்டர் போட்டு வலது பக்கம் கைகாட்டி நேரே செல்லும் பாணியை உருவாக்கியது நம்ம ஆட்டோஜிக்கள்தான். இன்று இவர்களையும் லெஃப்டில் ஓவர்டேக் செய்து பறக்கிறது உணவு டெலிவரிப் படை. ஸ்கூட்டி ராணி! ஸ்கூட்டர் கம்பெனியே, காம்போ பிரேக் வைத்து தந்தாலும், நம்பிக்கையின்றி கால்களை  ஊன்றலாமா என்ற கேள்வியுடன் பயணிப்பவர்கள்தான் இவர்கள். இடதா, வலதா என அவர்களுக்குமே புரியாமல் சாலையில் உத்தேசமாக ஒரு திசையில் நிற்பார்கள். ஸ்கூட்டி பெண்கள், பச்சை விழுந்ததும் எஃப் 1 வேகத்தில் பறப்பதைப் பார்த்து இளம் பைக்கர்களுக்கே புரையேறுகிறது. சாலைச்

காதல் காரணங்கள் என்ன?

படம்
pexels.com காதல் என்பது என தத்துவம் என சொல்லி கடிக்கப்போவதில்லை.  அறிவியல் ரீதியில் அதனை பார்ப்போம். பொதுவாக ஒருவருக்கு காதல் வர தலைமீது லைட் எரியவோ, மணி அடிக்கவோ தேவையில்லை. நம்மிடம் இல்லாத விஷயங்கள் ஒருவரிடம் இருந்தால் அவர் மீது ஈர்க்கப்படுவோம். அவர் நண்பராகலாம், பின்னாளில் உறவின் தன்மையைப் பொறுத்து வீட்டில் நுழையுமளவு ரைட்ஸ்களை அவர்களுக்கு நீங்களும் நானும் வழங்கலாம். அண்மையில் செய்த ஆய்வுப்படி காதலுக்கு தூண்டுகோலாக அமையும் சூழல்கள் என்ன என்று ஆராய்ந்திருக்கிறார்கள். 500 பேர்களிடம் அறுபது விஷயங்களை கேள்வி கேட்டு ஆராய்ந்திருக்கிறார்கள். இயற்கைக்கு நெருக்கமாக இருப்பது யாராவது 143 சொன்னால், நாய்கள், பூனைகள் மகிழ்ச்சியாக பார்க்கும்போது குழந்தை சிரிக்கும்போது(யாருடைய குழந்தை?) சிரமத்தில் இருக்கும் போது உதவுவது காதல் கிடைக்காதபோது சரி. கிடைத்துவிட்டால் எப்படி இருக்கும். இப்படி செய் அப்படி செய் என காந்தி சொன்ன செய் அல்லது செத்துமடி கான்செப்டை காதலி அப்ளை செய்வார். ஏன்? நம் டிசைன் அப்படித்தான். பொறாமை பொங்கும். ஈஏ போகிறீர்கள். பெண்கள் செக்சனில் சூப்பர்