இடுகைகள்

திருமணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடும்ப வாழ்க்கையைக் காப்பாற்ற கணவன் செய்யும் திடுக் கொலைகள்! - டீப் வாட்டர்

படம்
  டீப் வாட்டர் 2022 டீப் வாட்டர் பென் அஃப்ளிக், அனா டி அர்மாஸ்  மனைவியின் செக்ஸ் விருப்பங்களை கணவன் பொதுவெளியில் அங்கீகரிப்பது போல நடித்து, அந்தரங்கத்தில் பொறாமை கொண்டால் என்னாகும் என்பதுதான் கதை.  நவீன கால குடும்பத்தைக் காக்கும் கதை போல தோன்றலாம். திருமணமான பல்வேறு தம்பதிகள் சந்திக்கும் பிரச்னை இது. காதல் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் புறக்கணித்துவிட்டு பிற விஷயங்களை அடையாளம் கண்டு செய்யப்படுவதுதான் திருமணம் என எழுத்தாளர் பிரபஞ்சன் கூறியுள்ளார்.  திருமண வாழ்க்கையில் கணவன், மனைவி என இருவருக்குமான காதல் குறைந்துபோகிறது. இதை சரிசெய்யாமல், மனைவியை குடும்ப வாழ்க்கையில் தக்க வைத்துக்கொள்ள கணவன் செய்யும் முயற்சி நினைத்துப் பார்க்க முடியாத பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இறுதிக்காட்சியில் இதை உணரும் மனைவி, அந்த திருமண வாழ்க்கையை அப்படியே தொடருவதுதான் கதை.  gone girl 2014  படத்தில் நடித்த பென் அஃபிக்தான் நாயகன். விக் ஆலன் என்ற பாத்திரத்தில் தனது உணர்வுகளை உள்ளடக்கி நடித்திருக்கிறார்.  திருமண வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறார். மனைவி மெலிண்டா, திருமண வாழ்வில் கிடைக்காத மகி

பதற்றம் ஏற்படுத்திய இளம்பெண்ணின் ஷார்ட்ஸ்! - வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

படம்
  அன்புக்குரிய வினோத் அண்ணாவுக்கு,  வணக்கம்.  நலமா?  இன்று ராயப்பேட்டை முழுக்க ரத்தத்தின் ரத்தங்கள் நிறைந்துவிட்டனர். மழையிலும் கூட இந்த ஆட்களின் கூச்சலும் ரவுசும் குறையவில்லை. கரைவேட்டிக்காரர்கள் கொட்டும் மழையிலும் ஜபர்தஸ்தாக ஆர்பிஎல் வங்கி கீழ்த்தளத்தில் நின்று சில நொடிக்கு ஒருமுறை சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.  இன்று ஆச்சரியமாக பள்ளி கால தோழர் ராஜ்குமார் போனில் அழைத்தார். இவர் மேட்ரை சின்னியம்பாளையம் எனும் ஊரில் வாழ்ந்து வந்தவர். எங்கள் அம்மாயி ஊருக்கு போகும் வழியில் உள்ள பாறைநிலம் அது. துணி வெளுப்பாளர்கள் வகுப்பைச் சேர்ந்தவர். குடும்பஸ்தரான இவர் எதற்கு திடீரென என்னை அழைத்தார் என்று எனக்கு புரியவில்லை.  தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள அழைத்திருக்கிறார். பேசினார். பேச்சு எப்படி சென்றது என்றால் மயிலாப்பூரிலுள்ள குறுகலான தெருக்களிலிருந்து விரிந்த தெருக்களுக்கு போவதுபோலத்தான்.  மனைவி, மாதவிலக்கு, தம்பியின் வேலை, திருமணம், அவர் பெற்ற அரசு வேலை, குடும்ப கலாசாரம், சென்னைப் பெண்களின் டீஷர்ட் ஷார்ட் கலாசாரம் என சென்றது. இவர் பேசும்போது மழை பெய்துகொண்டு இருந்தது. 45 நி

ஹிஜாப்பை விட பெண்களுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன! - நூர்ஜெகான் சஃபியா நியாஸ்

படம்
  நூர்ஜெகான் சஃபியா நியாஸ், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன் நூர்ஜெகான் சஃபியா நியாஸ்  நிறுவனர், பாரதிய முஸ்லீம் மகிலா அந்தோலன்  நூர்ஜெகான், டாடா சமூக அறிவியல் இன்ஸ்டிடியூட்டில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  யுவா எனும் தன்னார்வ தொண்டுநிறுவனத்தில் சேர்ந்து முஸ்லீம் சமூக பெண்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.  1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு, மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கான வாழிடங்களைப் பெற்றுத்தர உழைத்து வருகிறார். பிஎம்எம்ஏ எனும் அமைப்பை 2007இல் தொடங்கினார். இதன்மூலம் பெண்களின் குரல்களை பல்வேறு தளங்களில் ஒலிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.  கர்நாடகத்தில் உருவாகிய ஹிஜாப் பிரச்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அங்கு நடைபெறுவது முஸ்லீம் மக்களுக்கு எதிரான வலதுசாரி இந்துத்துவ தாக்குதல்தான். அங்கு இதுபோல நிறைய பிரச்னைகளை அவர்கள் ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இது கொரோனா ஜிகாத் முதல் குழு படுகொலை வரை நடைபெற்று வருகிறது. முஸ்லீம் சமூகத்தை மெல்ல சுவர் நோக்கி தள்ளிக்கொண்டே வருகிறார்கள். மாணவர்கள் கல்வி கற்பதை எதற்கு தடுக்கிறார்கள்? கல்வி கற்பது அவர்கள

தாத்தாவின் சொத்தை மீட்க நினைக்கும் பேத்தி, அவளுக்கு உதவும் காதலன்! - கல்யாணி - தேவன்

படம்
  கல்யாணி - தேவன் கல்யாணி தேவன் அல்லயன்ஸ் 220 தேவன் எழுதிய ஹாஸ்யரசமிக்க நாவல் இது. சென்னை முதல் கும்பகோணம் வரை வந்து பிறகு மீண்டும் சென்னைக்கு சென்று நிறைவு பெறுகிறது. இப்படி சொன்னால் ஏதோ ரயில் பயணத்தைப் பற்றிய சொல்லுவது போல உங்களுக்குத் தோன்றும். உண்மை அப்படித்தான் என்றாலும் கதையில் நெருக்கமான உணர்ச்சிகள் மிக குறைவு.  கல்யாணி சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது அவளுக்கு அவளுடைய தாத்தாவிடமிருந்து கடிதம் வருகிறது. அதாவது அவளது தாத்தா இறந்து 15 நாட்கள் ஆகிவிட்டது. எனவே, நீ உடனே கிளம்பி வா என்று. கல்யாணிக்கு பயங்கரமான அதிர்ச்சி. சமீப நாட்களில் அவளை தாத்தா வீட்டுக்கு அழைக்கவில்லை. ஏனென்ற காரணம் தெரியாமல் தவித்து வருகிறாள். திடீரென இறப்புச் செய்தி வர தடுமாறிப் போகிறாள். இவளது ஆப்த தோழி உமாவிடம் என்னவென்று பார்க்கப் போகிறேன் என்று சொல்லி கிளம்புகிறாள்.  ரயில் கிளம்பும்போது அவளுக்கு கிடைக்கும் டிக்கெட்டை சுந்தரம் என்பவன் எடுத்து தருகிறான். இத்தனைக்கும் அவனும் கும்பகோணம் போகவேண்டியிருக்கிறது. கிடைத்த கடைசி டிக்கெட்டையும் அவனது நண்பன் நீலுவின் தங்கை உமாவுக்காக, அவளின் தோழி கல்யாணிக்கு

திருமண ஏற்பாடுகளை செய்வதற்கான ஆப்கள்!

படம்
  பல்வேறு ஆப்களை எழுதியிருக்கிறோம். ஆனால் இப்போது கல்யாணம் செய்வதற்கான அமைப்புகள், சேவைகளைப் பற்றியும் எழுதுகிறோம் என்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? இதை ஆங்கில இதழ்கள் எழுதிவிட்டன என்பதல்ல. கல்யாண வேலைகளை கூட செய்வதற்கான ஆட்கள் கிடைப்பதில்லை. உறவுகள் நெருக்கமில்லாமல் தூரமாகிவிட்டன என்பதை நாம் மறைமுகமாக புரிந்துகொள்ளவேண்டியதுதான். சீரியசாக பேசிவிட்டோமே... ஒகே சில்லுகா உண்டன்டி.. ஆப்களை சூஸ்தம்..... வெட்மீகுட் 2014ஆம் ஆண்டு தொடங்கிய ஆப் இது. இதில் கல்யாண கார்ட் வடிவமைப்பு முதல் எந்த பொருட்களுக்கு எந்த வியாபாரிகளை அணுக வேண்டும் என்பது வரையிலான தகவல்கள் கிடைக்கின்றன. மாதத்திற்கு ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவது போல ஆப்பை தரவிறக்கி வருகிறார்கள். 75 ஆயிரத்திற்கும் மேலான முறை தரவிறக்கி 30 லட்சத்திற்கு மேல் பயன்படுத்தி வருகிறார்கள்.  அப்பி கப்புள் 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேவை. இதைப் பயன்படுத்தி திருமணமாகும் தம்பதிகள் தங்களுக்கென தனி ஆப் , வலைத்தளத்தை தொடங்கலாம். அப்புறம் என்ன செய்வது என்கிறீர்களா? கல்யாணம் செய்யவேண்டியதுதான். விருந்து சோறு சாப்பிட வேண்டியது தான்.  ஆர்எஸ்விபி மேனேஜர் 2

ஆத்மாவை பற்றி படரும் குரல்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
3.12.2021  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு , வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்போதுதான் வெயில் காய்கிறது. அறையின் சுவரின் பூஞ்சை வேகமாக பரவிவருகிறது. நான் வைத்திருந்த சமையல் பொருட்கள் ஈரத்தால் பூஞ்சை உருவாகி வீணாகிவிட்டன. இதனால் பொருட்களை வைக்க பிளாஸ்டிக் டப்பாக்களைத்தான் சேட்டா கடையில் வாங்கி வர வேண்டும். இப்போதுள்ள பாட்டில்களும் டீக்கடையில் விலையின்றி பெற்று வந்தவைதான்.  டெல் மீ வொய் என்ற குழந்தைகள் நூலை வாங்கினேன். இதுவும் முன்னர் நான் வேலை செய்த முத்தாரம் போன்ற இதழ்தான். மலையாள மனோரமா குழுமத்தின் தரமான தயாரிப்பு. பொது அறிவுத்தகவல்களைக் கொண்டது. இந்த மாத இதழ் பெண் சாதனையாளர்களை மையமாக கொண்டுள்ளது. ரூ.40க்கு வாங்கினேன்.  நாளிதழ் ஆசிரியருக்கு மகள் வயிற்றுப் பேரன் பிறந்துள்ளான். மனம் கொள்ளாத மகிழ்ச்சியும், முகத்தில் இதுவரை பார்த்திராத சிரிப்புமாக இனிப்பைக் கொண்டு வந்து கொடுத்தார். உடனே சக உதவி ஆசிரியரும் ஒன்றிய அரசின் விருது பெற்ற எழுத்தாளருமான பி.பி சார் பிரியாணி என அடிபோட்டு இருக்கிறார்.  அன்பரசு 3.12.2021 ------------------------------------------------------

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2021- சாதனை படைக்கும் உத்தரப் பிரதேசம்

படம்
கடந்தாண்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தேசிய பெண்கள் கமிஷன் உறுதிபடுத்தியுள்ளது. இப்படி நடக்கும் குற்றங்களில் பாதிக்கும் மேல் இந்தியாவின் முன்மாதிரி வளர்ச்சி பெற்ற மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. 2021இல் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 30,864 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றங்களுக்குப்(33,906) பிறகு 2021 ஆம் ஆண்டில்தான் அதிக குற்றங்கள் பதிவாகியுள்ளன. வாழும் உரிமை மறுக்கப்பட்டதாக உணர்ச்சிகளை பயன்படுத்தி ஏமாற்றியதாக பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 11,013 2020ஆம் ஆண்டை விட 2021இல் 30 சதவீதம் புகார்கள் அதிகரித்துள்ளன. திருமண உறவு சார்ந்த குற்றங்கள் 6,633, வரதட்சணை கொடுமை 4,589 இணையம் சார்ந்த புகார்கள் 858 வல்லுறவு, வல்லுறவுக்கான முயற்சி 1,675 பாலியல் ரீதியான பிரச்னை, மானபங்கம் 1,819 காவல்துறை ரீதியான பிரச்னைகள் 1,537 அதிக புகார்களைக் கொடுத்துள்ள மாநிலங்கள் 15,828 புகார்களை கொடுத்து இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக பிரகாசிப்பது உத்தரப் பிரதேசம். இங்கு பாஜக ஆட்சியில் உள்ளது. வீரத்துறவி யோகி முதல்வராக உ

தமிழ் பிராமணர்களுக்கு வட இந்தியாவின் மணப்பெண்! - என்ன பிரச்னை?

படம்
  தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் சங்கத்தினர், தமிழ்நாட்டில்  பெண்கள் கிடைக்காததால், பீகார். உ.பியில் பெண்களை தேடிவருகின்றனர். இந்த வகையில் 40 ஆயிரம் ஆண்களுக்கு பெண்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த தகவல்கள் சங்கம் வெளியிடும் இதழ் கூறியுள்ளது. இந்த நிலை இப்போது செய்தியானாலும் கூட பத்தாண்டுகளாக நிலை இப்படித்தான் போகிறதாம்.  முப்பது முதல் நாற்பது வரையிலான மாப்பிள்ளைகள் தங்களுக்கு ஏற்ற பிராமண பெண் கிடைக்காமல் திருமணம் நடக்காமல் உள்ளனர் என்று பிராமணர் சங்க தலைவர் நாராயணன் கூறியுள்ளார்.  இதற்கு என்ன காரணம் , பெண், ஆண்களின் பாலின விகிதம்தான் காரணம் என அறியவந்துள்ளது. பத்து பிராமண ஆண்களுக்கு, ஆறு பெண்கள்தான் உள்ளனர்.  குடும்பக்கட்டுப்பாட்டை பிராமணர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டு கடைபிடித்துள்ளனர். இதனை அவர்களின் ஆச்சாரியர்கள் எதிர்த்தாலும் கூட அவர்கள் கேட்கவில்லை. இதனால்தான் பெண்கள், ஆண்களின் விகிதம் மாற்றம் பெற்றுள்ளது.வட இந்திய மாநிலங்களில் இந்தி பேச தெரிந்த ஒருங்கிணைப்பாளர்களை பிராமண சங்கங்கள் உருவாக்கியுள்ளன. இப்படி நிலைமை மாறுவதற்கு ஆண்மைய கருத்தாக்கம் பிராமணர்களின் ஜாதியில் இருப்பதுதான் கார

இளைஞர்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்பதை சொல்லும் நூல்! - மொழிபெயர்ப்பு நேர்காணல்

படம்
  இளைஞர்களின் எண்ணம், சிந்தனை பற்றிய நூல் விவான் மார்வாகா எழுத்தாளர் மில்லினிய இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களின் சிந்தனை அரசியல், திருமணம், சமூக வலைத்தளம் ஆகியவற்றில் எப்படி இருக்கிறது என விவான் ஆய்வு செய்திருக்கிறார். அவரது நூல் வாட் மில்லினியல் வான்ட். இதைப்பற்றி பேசினோம். சமூக வலைத்தளங்கள் இளைஞர்களை மாற்றியுள்ளது என்கிறீர்களா? சமூக வலைத்தளங்கள் இளைஞர்கள் அவர்களுக்கு ஏற்றபடி தங்களை வெளிக்காட்டுவதற்கான கருவிகளை வழங்கியுள்ளது. இதன் விளைவாக இணையத்தில் அவர்கள் எப்படி வெளிப்பட வேண்டும், எழுத்துகள் எப்படி இருக்கவேண்டும், கருத்தியல் என கவனமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்தை எந்த விதமான அலங்காரமும் இல்லாமல் பேசுகிறார்கள். ஆனால் இதுபோன்ற வாய்ப்பு, சிறுபான்மையினருக்கும் பெண்களுக்கும் கிடைப்பதில்லை.  விவான் மார்வாகா இந்த இளைஞர்கள் எந்த முறையில்  வாக்குகளை அளிக்கிறார்கள்? உலகம் மிக சிக்கலான நிலையில் உள்ளபோது  பிறந்தவர்கள் மில்லினிய தலைமுறை. அவர்கள் பிறக்கும்போது உலக மயமாக்கல் நடந்திருந்தது. நிறைய வேலைவாய்ப்புகள் இருந்தாலும் கூட தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது கடினமாக இருந்தது. மி

திருமண வல்லுறவு பற்றி விவாதித்துத்தான் தீர்வு காண முடியும்! - டாக்டர் உபேந்திர பக்ஷி

படம்
நேர்காணல் உபேந்திர பக்ஷி வார்விக் பல்கலைக்கழக சட்டத்துறை பேராசிரியர் மதுரா வல்லுறவு வழக்கு ஒன்றில் வல்லுறவு தொடர்பான சட்டத்தை உருவாக்க உச்ச நீதிமன்றத்திற்கு  பகிரங்க கடிதம் எழுதியவர்களில் உபேந்திராவும் ஒருவர்.  அண்மையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் திருமண உறவில் கணவர் வற்புறுத்தி உறவு கொண்டால், அது சட்டத்திற்கு புறம்பானது அல்ல. வல்லுறவு கிடையாது என கூறியுள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன? அந்த நீதிபதி அப்படி கூறியுள்ளதற்கு சட்டம் முக்கியமான காரணம். ஏனென்றால் கணவர் மனைவியை உறவுக்கு கட்டாயப்படுத்தினால் அதனை குற்றமாக பார்க்க சட்டப்பிரிவுகள், ஏன் சட்டமே கிடையாது. அவர் அப்படி கூறியதில் தவறு ஏதும் கிடையாது. இதற்காக காவல்துறை வழக்குப்பதிவு செய்யவேண்டியதில்லை. மக்களின் குடியுரிமை பற்றியது. திருமணமான பிறகு நடக்கும் வன்முறை, வல்லுறவு பற்றி நம்மிடையே சட்டம் இல்லாத து நீதிபதியின்  குற்றம் அல்ல.  நீதிமன்றங்கள் இதில் மாறுபட்ட கருத்துகளை கொண்டுள்ளது ஏன்? உச்சநீதிமன்ற சட்டப்படி பதினெட்டு வயதிற்கு கீழுள்ள பெண்களோடு உறவு கொள்வது, வல்லுறவு என்றே புரிந்துகொள்ளப்படுகிறது. வழக்குரைஞர் செய்ய முடியாததை நீதிமன

வசியம் வைத்து பெண்ணை மயக்கலாம்! - கடிதங்கள்

படம்
        6 வசியம் வைப்போமா? வடக்குப்புதுப்பாளையம் 16.1.2021 அன்புள்ள தோழர் சபாபதிக்கு வணக்கம் . எப்படி இருக்கிறீர்கள் ? எங்கள் ஊரில் ஒருவழியாக மேகமூட்டம் விலகி இப்போதுதான் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது . அண்மையில் எங்கள் சின்ன மாமாவைப் பார்க்க போயிருந்தோம் . சிவகிரியில் டூவீலர் மெக்கானிக்காக உள்ளார் . அவர் கொடுத்த டீ , காபி காக்டெயில் பானத்தை விட கசப்பாக இருந்தது அவர் அறிமுகப்படுத்திய விஷயங்கள்தான் . எனது ஜாதகத்தை தாந்த்ரீகர் ஒருவரிடம் கொடுத்து பேச சொன்னார் . அவர் லூனாவில் வந்திறங்கி மாமாவின் வீட்டுக்கு வந்தது முதல் வினோதமாக இருந்தது . வம்சாவளியாக பில்லி , சூனியம் , வசியம் வைக்கிற ஆள் என்று அவராகவே சொல்லிக்கொண்டார் . எனக்கு அவர் சொல்ல சொல்ல வயிற்றுக்குள் ஏதோ உருண்டு புரள்கிற அவஸ்தை தொடங்கியது . அம்மா எப்போதும் இக்கட்டான சந்தர்ப்பத்தில் எப்போதும் பேசுபவர் அமைதியாகிவிடுவார் . பெண்ணைப் பிடித்திருந்தால் சொல்லுங்ளள் வசியம் செய்து கல்யாணம் செய்துவிடலாம் என்றார் . எனக்கு இதுபோன்ற விஷயங்களை கோட்டயம் புஷ்பநாத் நாவலில் படிக்க ப

மதிய உணவுத்திட்டம் பெண் குழந்தைகளை வலுவாக்கியுள்ளது! - புதிய ஆராய்ச்சி அறிக்கை

படம்
  தமிழ்நாட்டில் மதிய உணவுத்திட்டம் முன்னாள் முதல்வர் காமராஜரால் அமலாகி, பின்னர் எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா, கருணாநிதி என அடுத்தடுத்து வந்த முதல்வர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 1993 முதல் 2016ஆம் ஆண்டு வரை வெளியான தகவல்களை வைத்து நேச்சர் கம்யூனிகேஷன் என்ற இதழில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.  அரசின் மதிய உணவுத்திட்டம் மூலம் குழந்தைகளும், தாய்மார்களும் வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி பெற்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 23 ஆண்டுகளாக நடைபெற்ற மதிய உணவுத்திட்டம் பற்றிய ஆராய்ச்சிகள் இதை வெளிக்காட்டியுள்ளன. 2005ஆம் ஆண்டு மதிய உணவுத்திட்டம் நிறைய மாற்றங்களைப் பெற்றன. இதன் விளைவாக பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதிப்பு குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி பேசும் உணவுத்துறை வல்லுநர்கள், குழந்தை கருவாக தாயின் வயிற்றில் இருக்கும்போது, ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரிசெய்வதற்கான முயற்சிகளை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். 13-32 சதவீதம் வரையில் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சீராக இருக்க மதிய உண

நளபாக ருசியில் எழுதப்பட்ட கட்டுரைகள்! - பாட்டையாவின் பழங்கதைகள் - பாரதி மணி

படம்
                  பாட்டையாவின் பழங்கதை பாரதி மணி வாசகசாலை உயிர்மையில் பாரதிமணி தொடராக எழுதிய கட்டுரைகளை வாசித்தவர்கள் யாரும் சுவாரசியமான கட்டுரைகளை தவறவிட மாட்டார்கள் . இந்த நூலில் மொத்தம் பதினான்கு கட்டுரைகள் உள்ளன . இவைதவிர பேஸ்புக்கில் எழுதிய சிறு பத்திகளும் உள்ளன . பாரதிமணி எழுதிய கட்டுரைகள் பேஸ்புக் பதிவுகளை சிறப்பானவையாக வந்துள்ளன என்பதை வாசகர்கள் உணர முடியும் . க . நா . சுவின் மகளான ஜமுனாவை திருமணம் செய்த சம்பவங்களை விளக்கும் கட்டுரை பிரமாதமாக உள்ளது . ஒருவர் எந்த சூழ்நிலையிலு்ம் தனது நேர்மையையும் நாணயத்தையும் கைவிடாமல் இருந்தால் அவருக்கு எந்த ஆபத்தான நிலையிலும் துணைநிற்கும் நண்பர்கள் கிடைப்பார்கள் என்பதற்கு வழக்குரைஞர் அகுஜாவே சான்று . தி . ஜானகிராமன் பற்றிய கருத்துகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன . எது அவருடைய சிறந்த நாவல் என்ற சர்ச்சை இன்றைய வரைக்கும் உள்ளது . விமர்சனங்களையும் அதை எப்படி அவர் எடுத்துக்கொண்டார் என்பதையும் வாசிப்பின் சுவாரசியம் குறையாதபடி பாட்டையா எழுதியுள்ளார் . பிரண்டையை வயிற்றில் கட்டு

திருமணம் பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய நூல்! புத்தக அறிமுகம்

படம்
                புத்தகம் புதுசு ! பியாண்ட் பேட் கிறிஸ்பே ஹாசெட் ரூ .699 அறம் என்பது நமது வாழ்க்கையில் எந்த விதமான பங்கை வகிக்கிறது , நாம் பேசுவதில் செயல்படுவதில் ஆற்றும் பங்கை இந்த நூல் விவரிக்கிறது . அலுவலக வேலை , தனிப்பட்ட வாழ்க்கை , சமூக வலைத்தளங்களில் எழுதுகிற பதிவுகள் என அனைத்திலும் அறத்தின் பங்கு உண்டு . இது ஒரு வகையில் கண்ணாடி போலத்தான் . நாம் பார்க்கிறதைவிட நம்மை நம்முடைய கருத்துகள் பிறருக்கு அடையாளம் காட்டும் நூலைப் படித்தால் நீங்கள் அதனை உணரலாம் .                  ஃபோர்த் லயன் வேணு மாதவ் , கோவிந்த் ஶ்ரீநாத் ஆலெப் ப .312 ரூ .699 எழுத்தாளர் கோபால கிருஷ்ண காந்தியின் அருமை பெருமைகளை பல்வேறு கட்டுரையாளர்கள் கட்டுரையாக எழுதியிருக்கிறார்கள் . மொத்தம் 26 கட்டுரைகள் உள்ளன . இதன்மூலம் அவரின் ஆளுமையை பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ளமுடியும் . ஏஜ் ஆப் ஆங்க்சைட்டி அம்ரிதா திரிபாதி , காம்னா சிப்பர் சைமன் ஸ்ஹஸ்டர் ரூ 139 கொரோனா காலத்தில் அனைவருக்குள்ளும் வேலை , குடும்பம் , எதிர்கால

காதல் துணைவரால் பகிரப்படும் மோசமான பழக்கவழக்கங்கள்! - தடுக்க முடியுமா?

படம்
              உறவுகளை நூடுல்ஸாக சிக்கவைக்கும் பழக்க வழக்கங்கள் ! யாராவது முக்கியமான விஷயத்தை பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் இன்ஸ்டாவில் துபா புயுகிஸ்துனின் புகைப்படத்தை அல்லது பார்க் சின் ஹையின் குறும்பான போஸை ரசித்துக்கொண்டிருக்கிறீர்களா ? அப்படியென்றால் உங்கள் பெயர்தான் பப்பர் . இப்படி பேசும்போது , ஏதாவது கேள்விகளை பிறர் கேட்கும்போது ஜெல்லி சூயிங்கம்மை அசுவாரசியமாக மென்றபடி கட்டைவிரலால் போனை தேய்த்துக்கொண்டிருக்கிறீர்களா ? இப்படி செய்வது நாளடைவில் ஒருவரின் உறவுகளை பாதிக்கும் என்று ஆராய்ச்சியில் கூறியுள்ளனர் . காதலர்களாக உள்ளவர்களி்ல உள்ளவர்களில் ஒருவர் அழைப்பை ஏற்று பேசியபடியே இருப்பது , அல்லது சமூக வலைத்தளங்களில் உலாவியபடியே இருப்பது அவர்களிடையே உறவின் நெருக்கத்தை குறைக்கிறது என்றார் பேய்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் மெரிடித் . இப்படி போனை விரலால் தேய்ப்பதை ஸ்னப்பிங் என்று சொல்லலாம் . இப்படி போனை தேய்த்துக்கொண்டே இருக்கும் பழக்கம் பப்பிங் என்று கூறுகின்றனர் . இந்த ஆய்வு இரண்டு வகையானது . இதில் ஒருவர் போனை அடிக்கடி சோதிப்பது ஆகிய பழக்கமும் இடம்பெற்றது . ஆய