இடுகைகள்

நம்பிக்கை மனிதர்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை தரும் ஓவியப்பள்ளி!

படம்
ஆப்பிரிக்காவில் ஓவியக்கலை! ஆப்பிரிக்காவின் கைபெரா நகரிலுள்ள குடிசைப்பகுதியில் இப்படியொரு இடமாக யாருமே ஆச்சரியப்பட்டு போவார்கள். இரண்டே அறைகளைக் கொண்ட உவெஸா(Uweza) கலைப்பள்ளி ஆப்பிரிக்க குழந்தைகளின் கலைத்திறனுக்கு வாசலாக அமைந்துளது. குடிசைகளிலுள்ள குழந்தைகளின் தினசரி பள்ளிவாழ்வுக்கு பிரச்னை இல்லாதபடி ஓவிய வகுப்பு நடைபெறுவது உவெஸா ஸ்பெஷல். 2008 ஆம் ஆண்டு அமெரிக்கா தொழிலதிபர் ஜெனிஃபர் சபிட்ரோ அனைவரும் பார்க்கும்படியான இடத்திலுள்ள இடத்தில் கலைப்பள்ளியை தொடங்கினார். 7-37 வயதுள்ளவர்களை பள்ளியில் இணைத்து ஓவியப்பயிற்சியை தொடங்கினர். இங்குள்ள சுவர்களிலுள்ள அத்தனை ஓவியங்களின் பிரம்மா, மாணவர்கள்தான். இளமையிலேயே வேலைக்கு சென்று சம்பாதிக்கும் நிர்பந்தம் உள்ள நிலையில் ஓவியம் கற்பது நேரம் விரயம் என்பதே இங்குள்ளவர்களின் எண்ணம். ரூ.215- 7,898 விலை ரேஞ்சுகளில் விற்கப்படும் ஓவியங்களில் 60% தொகை கலைஞருக்கும், மீதி பள்ளிக்கும் செலவிடப்படுகிறது. ஆசிரியர் ஓகோத் கூட தந்தையால படிப்பைவிட்டுவிட கேட்டுக்கொள்ளப்பட்டாலும் ஓவியப்பயிற்சியை கைவிடவில்லை. ஓகோத் மட்டுமல்ல இங்குள்ள பிற ஆசிரியர்கள் மாணவர்க

கென்யாவை பிரபலப்படுத்தும் பெண்மணி!

படம்
கென்யாவின் முகவரி! கென்யாவின் பிரபல மக்கள் தொடர்பு நிறுவனமான டின் கரியுகி, பொதுமக்கள் தொடர்பில் முக்கியமான புள்ளி. தனது கினாடின் குரூப்(1997) கென்யாவுக்கு புத்துயிரூட்டி வருகிறார்.”நான் பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர் ஒன்றுக்கும் உதவாதவள் என திட்டினார். இதோ அக்கூற்றை பொய் என்று நிரூபித்துவிட்டேன்” எனும் கரியுகி, செஞ்சிலுவை சங்கங்கள் மூலம் கென்யக் குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறையைப் போக்க 7.9 மில்லியன் டாலர்களை திரட்டி வழங்கியுள்ளார். கென்யாவின் நன்யுகி பகுதியில் பெற்றோர்களுக்கு 4 ஆவது. பெண்ணாக பிறந்தார். இங்கிலாந்தில் பட்டம் பெற்றவருக்கு முதல் கனவு, பத்திரிகையாளர்தான். அதிபர் டேனியல் அராப்மொய் சர்வாதிகாரத்தால் தயங்கி,   பார்க்லேய்ஸ் நிறுவனத்தில் மக்கள் தொடர்பாளராக பணிக்கு சேர்ந்தார்.பின்னர் சொந்த நிறுவனம் தொடங்கினார்.      ஆப்பிரிக்காவின் பேஸ்பால் விளையாட்டு, ஆப்பிரிக்க உள்ளூர் விளையாட்டு வீரர்களை வெளிக்கொண்டுவரவும் பல்வேறு பிரசாரங்களை செய்துவருகிறார். “கேம்பிரிட்ஸ் அனாலிடிகா நிறுவனத்தில் பல்வேறு செயல்பாடுகளை சட்டத்திற்கு புறம்பானவை என முதல் சந்திப்பிலேயே தெரிந்த

கல்வி வேலை வழிகாட்டி மனிதர்!

படம்
பனிரெண்டு வயதில் வேலை! பதிமூன்று வயதில் வீடியோகேம்களுக்கு புரோகிராமிங் செய்த பிரையன் ராபர்ட்சன், பதினாறு வயது முதலே பள்ளிக்கு செல்வதில் ஆர்வம் காட்டவில்லை. பொறியியலில் சேர முயன்று தோற்றவர் மாத சம்பளத்தில் நொந்துபோகவில்லை.ஹோலாகிரேசி என்ற நிறுவனத்தின் இயக்குநராக கெத்தாக மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கு வழிகாட்டிவருகிறார். “கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படித்து ஒருவர் பெறும் அறிவை வேலை அனுபத்தில் சில மாதங்களிலே நான் பெற்றுவிட்டேன். தியரிக்காகவே பணத்தையும் நேரத்தையும் ஏன் இழக்கவேண்டும்?” என பெருமை பேசுவதோடு, பனிரெண்டு வயதிலேயே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதை விதியாக்குகிறார். இதன்மூலம் அரசின் வரிப்பணம் மிச்சமாவதோடு பதினைந்து வயதிலேயே அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பு சந்தையில் ஜெயிக்க வழிகாட்டுகிறார்.  கல்விமுறையை ஆராய்ச்சி செய்து தனது தீர்வுகளை The Case Against Education எனும் நூலில் எழுதியுள்ளார். அயல்நாட்டு மொழிகள், வரலாறு மட்டுமே வேலைகளுக்கு உதவும் படிப்புகளாகவும், ஹார்வர்டு மற்றும் யேல் பல்கலை ஆகியவை நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்யும் தகுதியாகவும் உள்ளன. வரலாற்

அமெரிக்காவின் நம்பிக்கை முகவர்கள்!

படம்
மாற்றத்தின் முகவர்கள் ! அமெரிக்காவின் தென்மாநிலங்களைச் சேர்ந்த சில நம்பிக்கை மனிதர்கள் மக்களின் வாழ்வில் , பார்வையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் . அவர்களில் சிலர் ... Bryan Stevenson நிறவெறி அடிமை முறை காரணமாக கருப்பின மக்கள் அமெரிக்காவின் தெற்கு புறத்திலிருந்து வடக்கு புறத்திற்கு இடம்பெயர்ந்த துயர வரலாறு பலரும் இன்று அறியாத ஒன்று . அலபாமாவைச் சேர்ந்த வழக்குரைஞரான பிரையன் கருப்பின மக்களின் வரலாற்றை அடுத்த தலைமுறை மக்கள் அறியும்படி இறந்த 4 ஆயிரத்து 400 மக்களின் (1877-1950) பெயர்களை பொறித்த நினைவகத்தை (National Memorial for Peace and Justice) மக்களின் ஆதரவுடன் அமைத்துள்ளார் ." வெள்ளை இனத்தவர் பழிவாங்குவது என் நோக்கமல்ல ; வரலாற்றை சரிவர அறிந்துகொள்ளாததுதான் மக்களின் பயத்திற்கு காரணம் (Just Mercy book)" எனும் பிரையன் நம் வரலாற்றை நாமறிவது அவசியம் என்கிறார் உறுதியான குரலில் . Demario Davis   சினிமா பிரபலங்களை அல்லது தொழிலதிபர்களை தனது ரோல்மாடல்களாக மிசிசிபியைச் சேர்ந்த விளையாட்டு வீரர் டிமரியோ டேவிஸ் நினைக்கவில்லை . &qu

கென்யாவின் பசுமை வீரர்!

படம்
கென்யாவின் பசுமை வீரர் ! கென்யாவிலுள்ள சமூக நீதி மையத்தில் கூடியிருக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றிய மொர்டெகாய் ஒகடா , என்ஜிஓக்கள் எப்படி கென்ய மக்களின் நிலத்தை மக்களின் கைகளிலிருந்து விலங்குகளின் பாதுகாப்பு என்று சொல்லி பறித்ததை விளக்க அரங்கு எங்கும் ஆமோதிக்கும் குரல்கள் எழுகின்றன . " வனப்பாதுகாப்பு நேர்மையுடன் நடப்பதில்லை . ஆப்பிரிக்காவில் வனம் அழிகிறது என போலியாக கண்ணீர் விடுபவர்கள் வனத்தை கருப்பின மக்களிடமிருந்து பிரிக்கவே முயல்கின்றனர் " என பளீரென கென்ய அரசியலை பேசுகிறார் ஒகடா . மக்களுக்கு முன்னுரிமை எனும் கோஷத்தை இயற்கை பாதுகாப்பில் முன்வைத்து செயல்படும் ஒகடா , கென்யாட்டா பல்கலையில் சூழலியல் படிப்பில் பிஹெச்டி முடித்துள்ளார் . காண்டாமிருகம் உள்ளிட்ட அரிய விலங்குகளை காப்பாற்றவென பெரும் நிலப்பரப்பை வேலியிடுவதை ஆதரிக்கும் சூழலியலாளர்களை விலைபோனவர்கள் என வசைபாடுகிறார் ஒகடா . இதனால் பிற கால்நடைகளுக்கான உணவு பறிபோகும் என்பது இவரின் கருத்து . " இயற்கை பாதுகாப்பு என்பது மனிதநேயத்துடன் அமையவேண்டும் என்பதே எங்களது விருப்ப

மாற்றத்தின் முகவர்கள்!

மாற்றத்தின் முகவர்கள்! அமெரிக்காவின் தெற்குப்பகுதியைச் சேர்ந்த இம்மனிதர்கள் அப்பகுதிகளில் தம் செயல்பாட்டின் வழியாக மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.  South Fulton Eight அட்லாண்டாவிலிருந்து 12 கி . மீ தொலைவிலுள்ள சவுத் ஃபுல்டன் நகரி லுள்ள கோர்ட்டில் பணிபுரியும்  நீதிமன்ற அதிகாரி லகேஷியா கோஃபீல்டு முதற்கொண்டு நீதிபதி டிஃபானி கார்டர்செல்லர்ஸ் வரையிலான எட்டுப்பேர்களும் கருப்பின பெண்கள்தான் . இந்நகரில் கருப்பினத்தவர்களின் எண்ணிக்கை 90% இருந்தாலும் மாவட்ட நீதிபதிகளா ன பெண்களின் எண்ணிக்கை 8% தான். Nicole Hurd வடக்கு கரோலினாவைச் சேர்ந்த நிக்கோல் ஹர்ட் , வர்ஜீனியா பல்கலைக்கழக டீன் . 2005 ஆம் ஆண்டிலிருந்து 3 லட்சம் மாணவர்களை கல்லூரியில் இணை க்க முயற்சி த்து வென்றார்.2025 ஆம் ஆண்டில் 1 கோடி மாணவர்களை கல்லூரியில் இணை ப்பதே நிக்கோலின் லட்சியம் . 14 மாநிலங்களிலுள்ள 646 பள்ளிகளில் தன் லட்சியத்தை நிறைவேற்றுவதற்கான தன்னார்வலர்களை உருவாக்கி வருகிறார் .  

யானைகளை காப்பாற்றும் மனிதர்!

யானை வீரன் ! மலேசிய கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய டென்சிங் , வண்டி ஓட்டவும் , எந்திரங்களை பழுதுபார்த்து பழகியதோடு ஆங்கில பேச்சையும் நன்கு கிரகித்துக்கொண்டார் . 2006 ஆம் ஆண்டு தாயின் அழைப்பின் பேரில் அசாம் திரும்பிய டென்சிங் , வனவிலங்குகளை பாதிக்காதவகையில்  இன்று 52 ஏக்கரில் தேயிலைத்தோட்டத்தை அமைத்துள்ளார் . அமெரிக்காவின் மோன்டனா பல்கலைக்கழகம் , வனவிலங்கு நட்பு தொழிலக இணைப்பகம் (WFEN) ஆகியவை டென்சிங்கின் இரு டீ தோட்டங்களுக்கு உலகின் முதல் யானைகளுக்கு இசைவான தேயிலைத்தோட்டம் என்று அங்கீகரித்துள்ளன . டென்சிங் தனது தேயிலைத்தோட்டத்திற்கு வேலியிடாமல் யானைகளை தோட்டத்தின் வழியே நடந்து செல்ல அனுமதித்துள்ளார் . செடிகள் இதனால் நசுங்கினாலும் பெரிய இழப்பில்லை . " தேயிலைத்தோட்டம் அமைக்கும் முன்பு யானைகள் இவ்வழியாக இயல்பாக நடந்துவரும் . அதன் வாழிடத்தை அழித்ததற்கு நாம்தான் வெட்கப்படவேண்டும் " என எதார்த்தமாக பேசுகிறார் டென்சிங் . யானைகள் சாப்பிடவென தேயிலைத் தோட்ட ஓரத்தில் மூங்கில்களையும் வளர்க்கிறார் இவர் . அசாமில் கடந்தாண்டு மட்டும் 48 யானைகள் ரயில்விபத்து மற்றும் வி

போதை அடிமைகளை மீட்கும் வெப் சீரிஸ்!

படம்
போதையிலிருந்து மீண்ட ஸ்வீட் ! கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டெஸ் ஸ்வீட் இருபதில் நடந்த வல்லுறவினால் நம்பிக்கை இழந்து போதைப்பழக்கத்தில் வீழ்ந்து தற்கொலை செய்துகொள்ள நினைத்தார் . ஆனால் அம்முயற்சி தோல்வியுற்றது . அதன் நற்பேறாக , நாற்பத்தாறு வயதில் இன்று போதைப்பழக்கத்தில் தடுமாறும் இளைஞர்களை நல்வழிப்படுத்த அவர்களையே நடிகர்களாக்கி திரைப்படங்களை எடுத்துவருகிறார் இயக்குநர் ஸ்வீட் . வெப் சீரிஸ் வடிவில் தனது லட்சிய திட்டமாக Cleaner Daze என்ற அவல நகைச்சுவை தொடரை படமாக்கி வருகிறார் . போதையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஆடிஷன் வைத்து தேர்ந்தெடுத்து தொடரில் நடிக்க வைத்து அவர்களை திருத்துகிறார் இயக்குநர் ஸ்வீட் . ஆஸ்டின் திரைப்பட விழாவில் பங்குபெற்று ஜூரி விருது வென்றும் , சிறந்த கதைக்கான விருதையும் வென்றுள்ளது . நடிகர்களுக்கான திரைப்பட ஷெட்யூல்களை மாற்றி படமெடுத்தது ஆவணப்பட அலுப்பை சில இடங்களில் தந்தாலும் அசல் நோக்கம் வரவேற்பைப் பெற்றுள்ளது . 2001 ஆம் ஆண்டு போதைப்பழக்கத்திலிருந்து மீண்டவர் , தன் வலியை அனுபவிக்கும் பிறரையும் அதிலிருந்து காப்பாற்ற நினைத்தது அவரது வ

உடலின் மின்காந்த அலைகள் என்ன செய்யும்?

படம்
வைப்ரேஷன் முக்கியம் பாஸ் ! ஒருவரை வசீகரிப்பதில் மனிதரின் உடலிலிருந்து வரும் மின்காந்த அலைகளுக்கு முக்கிய பங்கிருக்கிறது என்கிறார் கண்டுபிடிப்பாளர் ஸ்டேன்லி ஜங்லெய்ப் . மனிதர்களின் உடலிலிருந்து வெளிப்படும் ஆராவை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ள ஸ்டேன்லி அதற்கு பேடன்டும் வாங்கிவிட்டார் . " ஒரு இடத்தில் தனியாக ஒருவர் நிற்பதற்கும் கூட்டமாக நிற்பதற்கும் உள்ள வித்தியாசம் , வைப்ரேஷன்தான் " எனும் ஸ்டேன்லி மன அழுத்தத்திற்கு தன்னுடைய கருவி உதவும் என வாதிடுகிறார் . யூத இத்தாலிய பூர்விகம் கொண்ட ஸ்டேன்லி தலைமையிலான குழுவினர் , இன்டெல் நிறுவனத்திற்காக முதன்முதலில் மென்பொருள் மூலம் இயங்கும் ஆடியோ சிந்தஸைசரை உருவாக்கி புகழ்பெற்றனர் . இசையமைப்பாளர் , தத்துவவியலாளராக செயல்படும் ஸ்டேன்லி அருகிலுள்ள மலைக்குன்றை கார்ப்பரேட் சக்திகளிடம் காப்பாற்றவும் தயங்கவில்லை . மனித உடலை ரேடியோவாக கருதும் ஸ்டேன்லி , அதிர்வுகள் மூலம் மன அழுத்த பிரச்னைகளை தீர்க்க முடியும் என தொடர்ச்சியாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் .

உளவியல் மருந்து ஆராய்ச்சியாளர்!

உளவியலுக்கான முன்முயற்சி ! " நான் அமேசான் காடுகளின் மீது பறந்து எனது பதற்றம் மற்றும் கற்பனையை ஜெயிக்கப்போகிறேன் " என தோழி கூறியதை உளவியல் வல்லுநரான ரோஸலிந்த் வாட்ஸ் மறுத்துவிட்டார் . மரபான உளவியல் சிகிச்சைகள் இதற்கு எவ்வித பயனையும் தராது என்பது வாட்ஸ் அறிவார் . இங்கிலாந்திலுள்ள நேஷ்னல் ஹெல்த் சர்வீஸில் பணிபுரியும் வாட்ஸ் நவீன உளவியலாளர்களின் முக்கியமானவர் . மனஅழுத்தப் பிரச்னைகளில் சிக்கிய நோயாளிகளுக்கு நிவாரணி மருந்துகளைப் பெற்றுதர முயற்சித்துவருகிறார் . psilocybin எனும் போதைமருந்தை மனஅழுத்த மருந்தாக பயன்படுத்த முடியுமா ? என்று ஒன்றரை ஆண்டுகளாக ஆராய்ந்து வருகிறார் வாட்ஸ் . " மக்கள் தம் மனங்களை சிறையில் அடைத்து வைத்திருப்பதன் வெளிப்பாடே மாயத்தோற்றங்கள் " என்கிறார் வாட்ஸ் . வழக்குரைஞரின் உதவியாளராக பணியாற்றியவர் அங்கு சந்தித்த மக்களின் உளவியல் பிரச்னைகளால் ஈர்க்கப்பட்டு உளவியல் மருத்துவரானார் . " எதிர்காலத்தில் உளவியல் தெரபி தேவைப்படுபவர்களு சட்டப்பூர்வமாக நிம்மதி கிடைக்கச்செய்யும் மருத்துவமனையை உருவாக்குவதே லட்சியம் " என்று தீர்க்கமாக

காணாமல் போன குழந்தைகளை தேடிவரும் பெண்மணி!

படம்
குழந்தைகளுக்காக போராட்டம் ! இருபதாண்டுகளுக்கு பிறகு தன் சகோதரரனை சந்திப்போம் என மார்க்கரிட்டா கனவிலும் நினைக்கவில்லை . எல் சால்வடோரின்ல பனிரெண்டு ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப்போரில் ஆதரவற்றவர்களாக மாறிய நூற்றுக்கணக்கான குழந்தைகளை குடும்பத்துடன் சேர்க்கும் பணியை 1992 ஆம் ஆண்டிலிருந்து செய்து வருகிறார் மார்க்கரிட்டா . 1981 ஆம் ஆண்டு கொரில்லாக்கள் மற்றும் அரசு ராணுவத்திற்கும் நடந்தபோரில் மார்க்கரிட்டாவின் நான்கு சகோதரர்கள் தொலைந்துபோனார்கள் . " பிறருக்கு உதவுவது விட்டமின் ஊசியை எனக்கு நானே போட்டுக்கொள்வது போல உதவுகிறது " என்கிறார் மார்க்கரிட்டா . 75 ஆயிரம் பேர் இறந்த போரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகம் . இதில் பெற்றோர் இல்லாத குழந்தைகள் அமெரிக்காவுக்கு தத்துகொடுக்கப்பட்டனர் . மார்க்கரிட்டா Pro-Búsqueda அமைப்பு மூலம் சட்டப்போராட்டம் நடத்தி 440 க்கும் மேற்பட்ட சிறுவர்களை அவர்களின் ரத்தசொந்தங்களிடம் சேர்த்திருக்கிறார் . ஊழல் , பொருளாதார சீர்குலைவு , கொலைகள் உள்ளிட்டவற்றால் 6 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . &qu

இந்திய ஆளுமைகள் 2018!

படம்
Dilip Prasanth இந்திய ஆளுமைகள் 2018! சர்மிளா பட்டாச்சார்யா , அறிவியலாளர் நாசாவின் நட்சத்திர விஞ்ஞானி . ஸ்டான்ஃபோர்டு , பிரின்ஸ்டன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் உயிரியல் முதுகலைப்பட்டங்களைப் பெற்ற சர்மிளாவின் பூர்விகம் கொல்கத்தா . விண்வெளிக்கு பழ ஈக்களை கொண்டு சென்று மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களை அறியும் ஆராய்ச்சி இவருடையது . மனிதர்களின் டிஎன்ஏவில் 75 சதவிகிதம் ஒற்றுமை கொண்ட ஈக்களை கலிஃபோர்னியாவிலுள்ள நாசா ஆய்வகத்தில் புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுத்தார் சர்மிளா . விமானி தந்தைக்கு மகளான சர்மிளாவுக்கு விமானியாவது லட்சியமாக இருந்தது . தற்போது அதனை பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை வடிவமைத்து வருகிறார் . ஷயாரோ பனோ , முத்தலாக் வழக்குதாரர் இஸ்லாம் சமயத்தில் பெண்களை கடுமையாக பாதித்த முத்தலாக்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து தடுத்து நிறுத்திய போராளி . ஷயாரோ பனோவும் கணவரின் தலாக் அறிவிப்பை விரைவுத்தபாலில் பெற்று வாழ்க்கை இழந்தவர்தான் . முதலில் வழக்கு தள்ளுபடியானாலும் விடாமுயற்சியோடு ஷயாரோ பனோ தொடர்ந்த வழக்கு ஆணாதிக்கத்தால் துயருற்ற பல்லாயிரக்கணக்கான ப

ஊழல்களை பேசும் தென்னாப்பிரிக்கா போராளி!

படம்
நிதித்துறையில் போராளி ! தென்னாப்பிரிக்காவுக்கு முதல்முறையாக வந்தபோது வியர்ஸைக்காவுக்கு வயது 13. போலந்தில் மருத்துவர்களாக இருந்த பெற்றோர் அகதியாக அங்கு வந்து சேர்ந்தனர் . கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களில் பள்ளி , கல்லூரி வட்டாரத்தில் வெளுத்துவாங்கிய வியர்ஸைக்கா 2006 ஆம் ஆண்டு நிதி தொடர்பான நிறுவனத்தை அமைக்க முயற்சித்தார் . சைக்னியா நிதிதொடர்பான மென்பொருள்களை தயாரிக்க பிலடெல்பியாவிலிருந்த SEI என்ற கம்பெனியின் வர்த்த ஆர்டர் கிடைத்தது . லாபம் 14.7 பில்லியன் டாலர்கள் . நிதித்துறையில் ஊழல் பற்றி வியர்ஸைக்காவின் பேச்சு அவருக்கு முன்னணி ஊடக நிறுவனத்தின் சகர்மதா டெக்னாலஜிஸ் கசப்பையும் வெறுப்பை பெற்றுத்தந்திருக்கிறது . இனவெறுப்பு , விளம்பரத்திற்காக செய்கிறார் என இவரை விமர்சிக்கின்றனர் . பத்திரிகைகளில் தொடர்ச்சியாக நிதிதொடர்பாக கட்டுரைகளையும் ட்விட்டரிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் தற்போது ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளார் . அதிபர் ஸூமாவுக்கு எதிரான ஊழல்களை மக்களிடம் சொல்லி விழிப்புணர்வு செய்துவருகிறார் வியர்ஸைக்கா .

டிஜிட்டல் தொழிலதிபர்!

படம்
நேபாளத்தின் டிஜிட்டல் தொழிலதிபர் ! பிஸ்வாஸ் தாகல் இளமையிலேயே தொழில்நுட்ப கிறுக்கு கொண்டவர் . வீட்டில் இன்டர்காம் அமைப்பை வழக்குரைஞர் தந்தைக்கு உருவாக்கி தந்ததே பிஸ்வாஸ்தான் .   பாக்கெட்மணியை மிச்சம் செய்துதான் எலக்ட்ரிக் பொருட்களை வாங்கி உள்ளார் . ரேடியோ மெக்கானிக்காக இருந்தவர் இன்று டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனத்தைதொடங்கி 40 மில்லியனுக்கு அதிபதி . தாகலின் நிறுவனத்தில் 6 லட்சம் பயனர்கள் இணைந்து விமான டிக்கெட் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகின்றனர் . மத்தியவங்கியின் அனுமதியோடு இசேவா நிறுவனம் இன்று 77 மாவட்டத்தில் 3.5 மில்லியன் பரிமாற்றங்களை செய்து சந்தையில் முதலிடம் பெற்றுள்ளது . அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக அப்ளிகேஷன் 2002 ஆம் ஆண்டு மறுக்கப்பட , நேபாளத்தில் மென்பொருள் பொறியியல் படித்தவர் மைக்ரோசாஃப்டின் பொறியியலாளர் சான்றிதழ் பெற்று என்ஜிஓவில் வேலை செய்தார் . வெப் டொமைன்களை விற்கத்தொடங்கியவர் வெளிநாடுகளிலுள்ள வாடிக்கையாளர்களிடம் பணம் பெறுவதிலுள்ள தடுமாற்றத்தை நீக்க 2007 ஆம் ஆண்டு இசேவா நிறுவனத்தை தொடங்கினார் . பின் மத்தியவங்கி வங்கிகள் டிஜிட்

டைம் பத்திரிகையின் நம்பிக்கைக்குரிய நாளைய இளைஞர்கள்!

படம்
நம்பிக்கை மனிதர்கள் ! Kerstin Forsberg(33) பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது தன் ஒன்பது வயதில் இயற்கை சங்கம் தொடங்கியவர் . பெரு நாட்டில் பிளானட்டோ ஓசானோ என்ற என்ஜிஓ மூலம் கடல் மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் . " கணவாய் மீன்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்யும் நிலையில் அதனை வேட்டையாடி உண்பதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை " என்பவர் அதிகாரிகளிடம் 2 ஆண்டுகளாக போராடியதன் பலனாக தற்போது நடவடிக்கை தொடங்கியுள்ளது . Sonita Alizadeh(21) சுதந்திரத்திற்கான குரல் . முதல்முறை திருமண உடையை இராக்கைச் சேர்ந்த சோனிடா அணிந்தது மங்கல நாணை   அணிவதற்காக அல்ல ; இசை வீடியோவுக்காக . பெண்களின் மௌனத்தை உடைக்க நான் அலறுகிறேன் எனும் சோனிடா , தன்னை 9 ஆயிரம் டாலர்களுக்கு பெற்றோர் விற்க முயன்றபோது Daughters for Sale என்ற ராப் பாடலை எழுதி பாடினார் . குழந்தை திருமணத்திற்கு எதிரான தேசியகீதமாக ஒலிக்கிறது அப்பாடல் . அப்பாடல் மூலம் அமெரிக்க இசைப்பள்ளியில் இலவசமாக கல்வி கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது ." குழந்தை திருமணத்தை ஒப்புக