போதை அடிமைகளை மீட்கும் வெப் சீரிஸ்!











போதையிலிருந்து மீண்ட ஸ்வீட்!





கலிஃபோர்னியாவைச் சேர்ந்த டெஸ் ஸ்வீட் இருபதில் நடந்த வல்லுறவினால் நம்பிக்கை இழந்து போதைப்பழக்கத்தில் வீழ்ந்து தற்கொலை செய்துகொள்ள நினைத்தார். ஆனால் அம்முயற்சி தோல்வியுற்றது. அதன் நற்பேறாக, நாற்பத்தாறு வயதில் இன்று போதைப்பழக்கத்தில் தடுமாறும் இளைஞர்களை நல்வழிப்படுத்த அவர்களையே நடிகர்களாக்கி திரைப்படங்களை எடுத்துவருகிறார் இயக்குநர் ஸ்வீட்.

வெப் சீரிஸ் வடிவில் தனது லட்சிய திட்டமாக Cleaner Daze என்ற அவல நகைச்சுவை தொடரை படமாக்கி வருகிறார். போதையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஆடிஷன் வைத்து தேர்ந்தெடுத்து தொடரில் நடிக்க வைத்து அவர்களை திருத்துகிறார் இயக்குநர் ஸ்வீட். ஆஸ்டின் திரைப்பட விழாவில் பங்குபெற்று ஜூரி விருது வென்றும், சிறந்த கதைக்கான விருதையும் வென்றுள்ளது. நடிகர்களுக்கான திரைப்பட ஷெட்யூல்களை மாற்றி படமெடுத்தது ஆவணப்பட அலுப்பை சில இடங்களில் தந்தாலும் அசல் நோக்கம் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2001 ஆம் ஆண்டு போதைப்பழக்கத்திலிருந்து மீண்டவர், தன் வலியை அனுபவிக்கும் பிறரையும் அதிலிருந்து காப்பாற்ற நினைத்தது அவரது வாழ்வையே மாற்றியமைத்திருக்கிறது.