இடுகைகள்

காமிக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய கலாசார இயல்பில் சமூக அவலங்களைத் தட்டிக்கேட்கும் காமிக்ஸ் நாயகிகள்!

படம்
  சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கும் காமிக்ஸ் நாயகிகள்! டில்லியைச் சேர்ந்த சௌரப் அகர்வால், அரசுப் பள்ளியில் வாழ்க்கைத் திறன் வகுப்புகளை நடத்தி வந்தார். வகுப்பில் ஒருமுறை, "உங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ யார் ?" என  பள்ளி மாணவர்களிடம் கேட்டார். அப்போது மாணவர்கள் உடனே ஸ்பைடர் பேன், சோட்டா பீம் என பதில் சொன்னார்கள். ஆனால் மாணவிகள் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தனர். 2019ஆம் ஆண்டு மாணவிகளுக்கான பதிலாகவே, பெண் நாயகிகளைக் கொண்ட காமிக்ஸ் நூல்களை சௌரப் உருவாக்கினார். இவர், அமெரிக்காவின் ஹார்வர்ட், ஐஐடி (காரக்பூர்)  ஆகிய கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றவர். கேல் பிளானட்(Khel planet) பௌண்டேஷன் தன்னார்வ அமைப்பு மூலம் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு  திறன்களைக் கற்றுத்தந்து வருகிறார்.  தபங் கேர்ள், சூப்பர்கேர்ள் அவ்னி, பர்பிள் ஃபிளேம் ஆகிய காமிக்ஸ் நாயகிகள், அனைவருமே சமூக பிரச்னைகளைப் பேசுபவர்கள் என்பதே முக்கியமானது.    தபங் கேர்ள் (தாரா), பள்ளி மாணவர்களுக்கு உதவும் பாத்திரம். சூப்பர்கேர்ள் அவ்னி (மாயா), டிஜிட்டல் குற்றங்களைத் தடுப்பவர். இதில் மாறுபட்டது, பர்பிள் ஃபிளேம்தான். இந்த பாத்திரம், டி

மாதவிடாய் பற்றிய தயக்கத்தை களைய உதவிய அதிதி குப்தா! - மென்ஸ்ட்ரூபீடியா

படம்
  அதிதி குப்தா, மென்ஸ்ட்ரூபீடியா அதிதி குப்தா எழுத்தாளர், துணை நிறுவனர் - மென்ஸ்ட்ரூபீடியா பெண்களுக்கு ஏற்படும் அந்த மூன்று நாட்கள் அவதி தான் அதிதி குப்தாவை நிறுவனம் தொடங்க வைத்திருக்கிறது. மாத விலக்கு, மாத விடாய் பற்றிய பல்வேறு புனைகதைகளை தவறு என்று தனது மென்ஸ்ட்ரூபீடியா நிறுவனம் மூலம் நிரூபணம் செய்து வருகிறார். அனைத்து மக்களுக்கும் மாதவிடாய் பற்றிய உணமைகளை எளிமையான விதத்தில் விளக்கி வருகிறார்.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா எனும் இடத்தில் பிறந்தவர் அதிதி. இவர் பிறந்த இடத்தில் மாதவிடாய் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை. அதிதிக்கு முதன்முறையாக 12 வயதில் மாதவிடாய் வந்தபோது அவருக்கு ஏதும் புரியவில்லை. அடிவயிற்றில் பெருகிய ரத்தத்தைப் பார்த்தவர், உடனே அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அவர் அம்மா உடனே அதிதியை குளிக்கச்சொல்லியிருக்கிறார். இப்படி ரத்தப்போக்கு வருவதும் நிற்பதுமாக இரண்டரை நாட்கள் சென்றிருக்கிறது.  மாதவிடாய் வந்த தினம் தொட்டு அதிதி தனி அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். அது அசுத்தமான இடம். கூடவே ரத்தப்போக்கை துடைக்க கொடுத்த துணியும் சுத்தமாக இல்லை

நவீன குழந்தைகளுக்கு ஏற்றபடி கதைகளை மாற்றும் காமிக்ஸ் நிறுவனங்கள்! - மாற்றங்கள் ஏன்?

படம்
  அமர்சித்ரகதா மாற்றம் பெறும் காமிக்ஸ் மற்றும் குழந்தைகளின் நூல்கள்! உலகமெங்கும் உள்ள காமிக்ஸ் நூல்களின் மையப் பொருள் மாறுதல் பெறத் தொடங்கியுள்ளன. மாற்றுப்பாலினத்தவர், கருப்பினத்தவர்களையும் மெல்ல முக்கியமான பாத்திரங்களாக மாற்றுவதற்கு கதை எழுத்தாளர்கள் முன்வந்துள்ளனர். இதனை பதிப்பிக்கும் நிறுவனத்தினரும் இதனை ஏற்றுள்ளனர். ஒருவகையில் மாறும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் வணிகத்திற்கு அவசியம் என்பது உண்மை.  கூடுதலாக வாசகர்களும் தொன்மையான நீதிகளை, விதிகளை பேசும் நூல்களை வேண்டாம் மாற்றம் வேண்டும் என கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியாவில் உள்ள அமர்சித்ர கதா, டிங்கிள் காமிக்ஸ், ஃபிளேவே பே போன்ற இதழ்களும் கூட மாற்றங்களுக்கு ஏற்ப கதைகளை எழுதி வெளியிடத் தொடங்கியுள்ளன. இயற்கை சார்ந்த விஷயங்கள் மெல்ல காமிக்ஸ் வடிவத்தை பெற்று வருகின்றன. ரோகன் சக்ரவர்த்தி க்ரீன் ஹியூமர் என்ற பெயரில் தனி வலைத்தளத்தில் தனது இயற்கை சார்ந்த விஷயங்களை எழுதி  வரைந்து வெளியிட்டு வருகிறார். இந்து ஆங்கிலம் தேசிய நாளிதழிலும் இவரது கார்ட்டூன்கள் வெளியிடப்பட்டு வருகிறது.  டிங்கிள் காமிக்ஸ்  விலங்குகள் பேசுவது போல இவரது காமிக்ஸ்க

காமிக்ஸ் மூலம் அறிவியலைப் புரிந்துகொள்ளலாம்! - ஆச்சரியப்படுத்தும் அறிவியல் காமிக்ஸ்கள்

படம்
  sample image காமிக்ஸ் மூலம் அறிவியலைப் புரிஞ்சுக்கலாம்!  உலகம் முழுக்க வெளியாகும் காமிக்ஸ் நூல்களின் மூலம் மாணவர்களுக்கு எளிதாக அறிவியலைப் புரிய வைக்க முடியும் என கல்வி வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.  மார்வெல், டிசி, லயன் முத்து காமிக்ஸ் உள்ளிட்ட காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பது  பொழுதுபோக்கிற்காக என்று தான் பலரும் நினைப்பார்கள். ஆனாலும் இதில் உருவாக்கப்படும் பல்வேறு கதாபாத்திரங்கள், வசனங்கள், கதையின் மையம் என பலவும் அறிவியல் மீதான ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் உருவாக்கப்பட்டு வருகி்ன்றன.  படக்கதைகளில் வரும் ஸ்பைடர்மேன், ஆன்ட்மேன், பாய்சன் ஐவி ஆகிய பாத்திரங்கள் உயிரியல், தாவரவியல் சார்ந்த பல்வேறு சமாச்சாரங்களை நமக்கு சுவாரசியமான வழியில் கற்றுக்கொடுக்கின்றன. அறிவியலில் ஈர்ப்பில்லாத மாணவர்களையும் காமிக்ஸ் புத்தகங்கள் உள்ளே இழுத்து வருகின்றன.  காமிக்ஸ்களை படிப்பதால் ஆழமான அறிவியலை கற்க முடியும் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் மொழியறிவு, எழுத்துகள், கணிதம் ஆகியவற்றை கற்பதற்கான தூண்டுகளை உருவாக்குவதோடு, புதுமைத்திறனும் கூடுதலாக

மாமியார் காமிக்ஸ் கதை சொதப்பல்கள்!

படம்
  image- sadhguru.org எழுதுவதற்கான முயற்சிதான். வேறொன்றுமில்லை. 1 சற்றே பாழடைந்து கருமை பூக்கத் தொடங்கிய மாடிவீடு. மெல்லிய ஒளி ஜன்னலில் தெரிகிறது. படுக்கை அறை. அதில்தான் மேசை விளக்கு மஞ்சள் நிறத்தில் எரிகிறது.  அதன் அருகில் புகைப்படம், அலார கடிகாரம், ஸ்மார்ட் போன் வைகப்பட்டுள்ளது. அருகில் படுக்கையில் இருவர் படுத்திருக்கின்றனர். கணவரிடமிருந்து மெல்லிய குறட்டை ஒலி கேட்டுக்கொண்டிருக்கிறது. கவிதா, குறட்டை ஒலியால் தூக்கம் தடைபட்டு அவரின் இடது புறத்தில்  புரண்டுகொண்டிருக்கிறாள்.  இன்னும் நீ  எந்திரிக்கலையா?  நேரமே எந்திரிச்சாத்தானே புருஷனை வேலைக்கு அனுப்பிவிட்டு குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்ப முடியும்? கனவா நிஜமா என குழப்பமாகும் கவிதா எழும்போது அது கனவல்ல என்று தெளிவாகிறாள். இது அதே குரல்தான்.  2 சமையல் அறை, குக்கரில் விசில் அடித்துக்கொண்டிருக்க, கவிதா வேகமாக வேலை செய்துகொண்டிருக்கிறாள். காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருக்கிறாள். சிங்கில் குழாயிலிருந்து இருந்து நீர் கொட்டிக்கொண்டிருக்கிறது. அப்போது, திறந்த ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் அறைக்குள் வந்து கவிதாவின் முகம் மீது படுகிறது.  சூரிய ஒளியை நோக்

கதைகளுக்கு ஏற்றபடி டோனை மாற்றி வரைவதுதான் எனக்கு பிடிக்கும்!- விருது பெற்ற காமிக்ஸ் ஓவியர்

படம்
  ஆனந்த் ராதாகிருஷ்ணன் என்ற காமிக்ஸ் இல்லஸ்டிரேட்டர் காமிக்ஸ் நூல்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதான வில் ஐஸ்னர் விருதை வென்றுள்ளார். ராம் வி என்பவரின் ப்ளூ இன் க்ரீன் என்ற கிராபிக் நாவலுக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இவருடன் கலரிஸ்ட்டான ஜான் பியர்சனும் இந்த விருதைப் பகிர்ந்துகொள்கிறார்.  விருதை வென்றது எப்படியிருக்கிறது ஆனந்த்? விருது அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்தான் இதற்கான விண்ணப்பங்களை அனுப்பினோம். எனவே, விருதுக்கான போட்டியில் நாங்கள் இருக்கிறோம் என்று உறுதியாக தெரியும். எனவே, விருது பெற்றதில் பெரிய அதிர்ச்சி கிடையாது. நாங்கள் விருதை வென்றது நன்றாக இருக்கிறது.  நீங்கள் விருது வென்ற பிரிவு பற்றி சொல்லுங்கள்? சிறந்த ஓவியர், மல்டிமீடியா கலைஞருக்கான விருது. இந்த பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. பென்சில், இங்க், கலரிஸ்ட் ஆகியவற்றில் சிறந்தவர்களுக்கான பரிசு இது. 1980 மற்றும் 1990களில் காமிக்ஸை ஓவியமாக வரைவது என்பது பெரிய விஷயம். ஜான் பியர்சன் ஓவியங்களுக்கான வண்ணத்தை டிஜிட்டலில் செய்தார். அதுதான் பரிசுகொடுப்பதற்கான முக்கியமான அம்சமாக இருக்கும் என நினைக்கிறேன்.  முன்னர்

அமெரிக்க மாப்பிள்ளை போல ஆன டேஞ்சர் டயபாலிக்! - துரோகம் ஒரு தொடர்கதை - முத்து காமிக்ஸ்

படம்
  டேஞ்சர் டயபாலிக்கின்  துரோகம் ஒரு தொடர்கதை லயன் முத்து காமிக்ஸ் ரூ. 50 இக்கதையை டேஞ்சர் டயபாலிக் கலக்கும் என்று கூட சொல்ல முடியாது. கோரா என்ற பெண் மரகத கற்களுக்காக மூன்று ஆண்களை பகடைக்காயாக எப்படி சுழற்றி விளையாடுகிறாள் என்பதுதான் கதை. இதில் டேஞ்சர் டயபாலிக் அமெரிக்க மாப்பிள்ளை போல வந்து போகிறார். அவரையும் அவரது காதலி ஈவா தான் காப்பாற்றும் சூழல் உள்ளது. இந்த லட்சணத்தில் டேஞ்சர் டயபாலிக் இந்த கதைக்கு தேவையா? அட்ரினோ, ரொடால்டோ, குற்றங்களில் தொடர்புடைய கத்திகளை சேகரிக்கும் மனிதர் என மூவரையும் கோரா என்ற பெண் மரகத கற்களை ஆட்டையைப் போட்டு எப்படி ஏமாற்றி சுற்ற விடுகிறாள் என்பதுதான் பாதிக்கதை. காமத்தால் மூன்று ஆண்களையும் கட்டிப்போட்டு சொகுசாக வாழும் நோக்கம் கோராவுக்கு உண்டு.  பெண்கள் தினம் வருவதால் இக்கதையை விஜயன் தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்பு உள்ளது. ஈவாவும், கோராவும்தான் கதையில் முக்கியமான ட்விஸ்டுகளை செய்கிறார்கள். கதையை நடத்துகிறார்கள். வீட்டிற்குள் புகும் டேஞ்சர் டயபாலிக் சில மணி நேரத்திலேயே காவல்துறையால் பிடிக்கப்படுவது கதையை தொய்வடையச் செய்கிறது.  கதையை நடத்திச்செல்வது முழுக்க கோரா என்

வாரிசுரிமையை நிரூபிக்க லார்கோ வின்ச் நடத்தும் போர்! - என்பெயர் லார்கோ, யாதும் ஊரே யாவரும் எதிரிகள்

படம்
சென்னை புத்தகத்திருவிழா 2021 நந்தனம் ஒய்எம்சிஏ  என்பெயர் லார்கோ, யாதும் ஊரே யாவரும் எதிரிகள் லயன் முத்து காமிக்ஸ் கதை, ஓவியங்கள்  பிலிப் பிரான்க், ஜீன் வான் ஹாமே லார்கோ வின்ச் - லயன் முத்து காமிக்ஸ் லார்கோ வின்ச் கதை தொகுதியில் இது முதலாவது புத்தகம். நெரியோ என்ற பணக்காரர், தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் ஊழலைக் கண்டுபிடிக்கிறார். அதேசமயம் இப்படி நேர்ந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் அவர் முன்னமே யோசித்து வைத்துள்ளார். அந்த முதல் காட்சியில் அவர் பேசுவதே முழுக் கதையையும் படிக்க வைப்பதற்கான உத்வேகத்தையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்துகிறது.  நெரியோ திருமணம் செய்துகொள்ளாத ஆள். ஆனால் அவருக்கு ஒரு வாரிசு உண்டு. இதனை டபிள்யூ குழும ஆட்கள் ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது. அதேநேரம் இளைஞனை தொழிலில் மூத்த ஆட்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? அதேதான் அவரை எப்படியாவது முடித்துவிட்டு நிறுவனத்தை தங்கள் கையில் கொண்டு துடிக்கிறார்கள். சொத்துக்காக நடைபெறும் பெரும் போரே...என் பெயர் லார்கோ, யாதும் ஊரே யாவரும் எதிரிகள் என்ற இரு  கதைகளும்.  முதல்கதையில் நாயகனின் அறிமுகமும், அவனது இளமைக்காலமும் இயல்பாக கா

பழங்குடி மக்களின் வாழ்க்கையை சூறையாடிய தங்கவேட்டை! - பனியில் உறைந்த தங்கம்

படம்
      Map     பனியில் உறைந்த தங்கம் காமிக்ஸ் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்தில் நடைபெறும் கதை. அங்கு நடைபெறும் தங்கவேட்டைக்காக வெளியூர்களிலிருந்து அங்கு வந்து குடியேறும் மக்கள், அந்த மாகாணத்திற்கு இழைக்கும் கொடுமைகள் சீர்கேடுகளைப் பற்றிய காமிக்ஸ் இது. அப்படித்தான் பாட் போவர்ஸ் என்பவர் அங்கு வருகிறார். கையில் நூறு டாலர் மட்டுமே இருக்கிறது. உணவுக்கு போக மீதி உள்ள பணத்தை கொண்டு ஸ்வர்ணா என்ற ஸ்லெட் இழுக்கும் கர்ப்பிணி நாயை வாங்குகிறார். பிறகு பயணத்தை தொடங்குகிறார். மேரி என்ற பெண்ணை சந்திக்கிறார். காதல் எல்லாம் கிடையாது காரியம் மட்டுமே. செய்துவிட்டு பிரிகிறார்கள். தங்கம் தேடி கண்டுபிடிப்பதுதான் லட்சியம். பாட் போவர்ஸ்க்கு எந்த இடமும் சொந்தம் கிடையாது. குறிப்பிட இடத்தை என்று தேடாமல் அப்படியே தேடி அலைகிறான். அவனை அங்கிருந்து கிளப்ப பழங்குடி தலைவர் மோர்ஸ் முயல்கிறார். ஆனால் பாட் அதற்கு பயப்படுவதில்லை. அந்த பழங்குடி தலைவர் பாட் போவர்ஸ் எச்சரிக்கிறார் ஒருகட்டத்தில் அவனைக்கொல்லவும் முயல்கிறார். ஏன் அப்படி செய்கிறார் என்பதுதான் கதையின் முக்கியமான பகுதி. மனிதர்களின் பேராசை, இயற்கையின் வளங்கள், பழங்

அஸ்கார்ட் எனும் சபிக்கப்பட்ட வேட்டைக்காரன், கடவுளுடன் நடத்தும் போராட்டம்! - அசுரவேட்டை!

படம்
  cc/ அசுரவேட்டை - காமிக் பிடிஎஃப் டைம்ஸ்   ஜானியின் அசுரவேட்டை காமிக் பிடிஎப் டைம்ஸ் தமிழில் ஜானி வைக்கிங் போராளிகளில் ஒருவராக போரிட்டவர் அஸ்கார்ட். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அங்கிருந்து விலகி, காசுக்காக விலங்குகளை வேட்டையாடி பிழைத்து வருகிறார். அவரிடம் யார்முன்காண்டர் என்ற வித்தியாசமான விலங்கை (க்ராக்கன்) வேட்டையாடும் பணி வருகிறது. அதனை எப்படி நிறைவேற்றினார், அதில் இழந்த து என்ன, பெற்றது என்ன என்பதுதான் காமிக்ஸின் கதை. 18 பிளஸ் காமிக்ஸ் என்பதால் நிர்வாண, உடலுறவு காட்சிகள்  நூலில் உண்டு. கதையில் அவை துறுத்தலாக தெரியவில்லை. கதை முழுக்க சபிக்கப்பட்ட குழந்தையாக ஒற்றைக்காலுடன் பிறந்து கஷ்டப்படும் அஸ்கார்டின் வாழ்க்கையைப் பேசுகிறது. இதில் கார்லின் உள்ளிட்ட பலரும் பலவீனமான இனம் என்று பேசுவது அவர் தாழ்ந்த சாதியைச் சொல்லுகிறார்களா, ஒற்றைக் காலை இழந்த காரணத்தாலா என்று தெரியவில்லை. காமிக்ஸின் ஒவியங்கள் பல்வேறு பருவ காலங்களையும் சண்டைக்காட்சிகளையும் துல்லியமாகவும் விவரங்கள் நிறைந்தவையாகவும் மாற்றிக்காட்டுகிறது. புராணக்கதையை மையமாக கொண்ட காமிக்ஸ் கதை. எனவே, ஆத்திக நாத்திக பேச்சுகள் காமிக்ஸ் நூல்

அதிபர் தேர்தல் வேட்பாளரை ஜெயிக்க வைக்க நூதன சதிகள் - கத்தியில்லாத யுத்தம்!

படம்
லயன் முத்து காமிக்ஸ் டிடெக்டிவ் காரிகன் தோன்றும் கத்தியில்லாத யுத்தம் காரிகன் மிகத்திறமையானவர்தான். ஒவ்வொரு முறையும் அவருக்கு சவாலான விஷயங்களை உளவுத்துறையும்தான் எப்படித் தரும்? இப்படி நினைத்து கதையை சுமாராக கொடுத்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓமர் என்ற அரசியல் தலைவர் நிற்கிறார். ஆனால் அவருக்கு தான் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில்லை. நேர்மையானவர்தான், அதனால்தான் அவர் வெல்ல வாய்ப்பில்லை என்று அவருக்கு புரிந்துவிடுகிறது. அவருக்கு கொலை மிரட்டல் கடிதம் உளவுத்துறைக்கு சில சமூகவிரோதிகள் அனுப்பி வைக்கின்றனர். உடனே உளவுத்துறை தலைவர் காரிகனை அழைத்து ஓமரைப் பாதுகாக்கும் வேலையைக் கொடுக்கிறார். காரிகனுக்கு இதுபோல ஏப்பை சாப்பையான வேலைகளில் இஷ்டம் கிடையாது. இருந்தாலும் மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது என்பதால் கொட்டாவியை அடக்கியபடி வேலைக்குப் போகிறார்., அங்கு பார்த்தால் ஓமரின் மகள், ஓமரை பாதுகாக்கும் பிரிக்ஸ் என்ற மெய்க்காப்பாளன் ஆகியோர் காரிகனை கண்டபடி பேசி மனத்தை குலைக்க பார்க்கிறார்கள். காரிகன் அங்கு நடைபெறும் கைகலப்பில் பிரிக்ஸை தூக்கி வீசி விடுகிறார். பின் அனைவரிடமும் மன்னிப்பு கேட

மரணதேவனை வெளியே கொண்டு வர முயலும் நாஜிப்படை - கருவறையின் மர்மம்

படம்
மாதிரிப்படம் கருவறையின் மர்மம் பாகம் 1 கதை – கிறிஸ்டோப், பிலிப் திரால்ட் ஓவியம் – ஸ்டெபனோ ரஃபேல் தமிழில்: தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ் 1220 ஆம் ஆண்டில் பாதிரியார் புனித சிலுவையோடு வந்து குகையில் உள்ள மரணதேவனை அழிக்க நினைக்கிறார். ஆனால் பாதிரியாரைத் தவிர பிறர் அனைவருமே மரணதேவனால் இறக்கிறார்கள். அவரை வெளி உலகிற்கு அனுப்பி வைத்து அதன் மூலம் வெளியே வர நினைக்கிறது மரணதேவன். அது சாத்தியமானதா இல்லையா என்பதை திக் திக் என்ற படபடப்புடன் முடித்துவைக்கிறது கதை. நாஜிப்படை வீரர்கள் இதில் வருகிறார்கள். அவர்களை தலைவர் காட்ஸ் வழிநடத்துகிறார். அவர்களின் சார்பில் யூதர் கெம்பர் ஆராய்ச்சி செய்ய வருகிறார். அவர்களுக்கு முன்பே பிரான்ஸைச் சேர்ந்த டெலோர்ம் அங்கு வந்துவிடுகிறார். டெலோர்மின் மனைவியை கொன்று விடுவதாக மிரட்டி அவரையும் ஆய்வு பணியில் ஈடுபட வைக்கிறது நாஜிப்படை. அமானுஷ்ய சக்திகளை ஹிட்லர் பெறுவதற்கான இந்த செயல்பாடுகளை செய்கிறார். இதில் பல விபரீத விஷயங்கள் நடக்கின்றன. அது என்ன என்பதுதான் கதை. கதையின் ஓவியங்கள் பிரமாதமாக இருக்கின்றன. இதில் டெலொர்மின் மனைவியின் பாத்திரம் அவ்வளவு நம்பகத்தன்மையோடு

வனக்காவல் படையில் நடைபெறும் துரோகம் - வேதாளர் துப்பறிகிறார்!

படம்
வஞ்சகர் பிடியில் வனக்காவல் படை கதை – மைக்கேல் டெரிஸ் ஓவியம் ஜார்ஜ் ஒலேசென் தமிழில்: தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ் முகமூடி வீரர் அல்லது வேதாளர் வனக்காவல் படையை அமைத்து அதன் மூலம் எப்படி சலீம் பே என்ற சட்டவிரோத பயங்கரவாதியை பிடித்தார் என்பதுதான் கதை. தமிழ் மொழிபெயர்ப்பு சிறப்பாக வந்துள்ளது. வனக்காவலர் படை எப்படி அமைக்கப்பட்டது என்ற வரலாற்றை சிறுவர்களுக்கு வேதாளர் விளக்குகிறார். அதன் வழியே கதை தொடங்குகிறது. ஆறாவது வேதாளர் வனக்காவலர் படையை கடற்கொள்ளையர்கள் மூலம் தொடங்குகிறார். அதாவது இவர்கள் திருந்தி வாழ்பவர்கள். இவர்களுக்கு இடையில் புகும் இரட்டை ஏஜெண்ட் ஒருவன் சலீம் பேயின் ஆள். அவன் மூலம் வனக்காவலர் படையின் நடவடிக்கைகளை சலீம் பே கண்டுபிடித்துவிடுகிறான். அந்த துரோகியை வனக்காவலர் படையில் கர்னல் செந்தாடியாரும், கமாண்டர் வேதாளரும் எப்படி பிடித்தார்கள், சலீம் பேயை எப்படி முறியடித்தார்கள் என்பதும்தான் கதை. கதையில் வேதாளருக்கு பெரியளவு சண்டைகள் கிடையாது. முழுக்க   சலீம் பேயுக்கும் அவருக்கும் நடைபெறும் மூளை யுத்தம்தான் கதை. அதனால் பெரிய எதிர்பார்ப்புகளோடு கதையைப் படிக்கத் தொடங்கினால் ஏமா

சிறைக்கைதியை மீட்க அபாய போராட்டம் - வேய்ன் ஷெல்டன் அதிரடி!

படம்
ஒரு போராளி ஒரு ஜென்டில்மேன் வேய்ன் ஷெல்டன் தோன்றும் ஒரு பயணத்தின் கதை! துரோகத்தின் கதை ! லயன் காமிக்ஸ் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் கலாக்ஜிஸ்தானில் நடைபெறும் விபத்து எப்படி முக்கியமான தொழிலதிபரின்(க்வெய்ல்) வணிக ஒப்பந்தத்திற்கு தடையாகிறது. இதற்கு காரணமான ஓட்டுநரை சிறையிலிருந்து மீட்க தொழிலதிபர் நினைக்கிறார். அதற்கு புகழ்பெற்ற ஷெல்டனை அழைக்கிறார்கள். ஷெல்டன் தன் திட்டங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் செய்யநினைக்கிறார். ஆனால் தொழிலதிபரின் பி.ஏ. (கரினி) ஷெல்டனை ஏமாற்றி டபுள் கிராஸ் ஏஜெண்டாக மாறுகிறார். இதனால் நடக்கும் பிரச்னைகள், வன்முறைகள், துரோகங்களை ஷெல்டன் எப்படி சமாளித்து சிறையிலிருந்து ஓட்டுநரை மீட்கிறார் என்பதுதான் கதை. இக்கதையில் வரும் கதாபாத்திரங்களை தனி புத்தகமாக போட்டு எழுதலாம். திருடர்களுக்கும் ஷெல்டனுக்கும் நடக்கும் சண்டைக்காட்சிகள் சிலிர்க்க வைக்கின்றன. ஷெல்டன் குழுவைத் தீர்த்துக்கட்ட நடக்கும் குறுக்கும் மறுக்குமான துரோக சம்பவங்களை கதையை சுவாரசியப்படுத்துகின்றன. கதையில் ஷெல்டன் தன் வயதை அடிக்கடி நினைவுப்படுத்திக்கொண்டுதான் சண்டையிடுகிறார். இதனால் நேரட

ஐரோப்பாவில் காமிக்ஸ் விழா! - களைகட்டும் காமிக்ஸ் புத்தக நிறுவனங்கள்!

படம்
தெற்கு ஐரோப்பாவில் காமிக்ஸ் திருவிழா தொடங்கியுள்ளது.அங்கு உள்ள இத்தாலி காமிக்ஸ் ஆலன் ஃபோர்டு, செர்பியாவிலுள்ள இதழ் ஸ்ட்ரிபோட்டேகா, யூகோஸ்லேவ் ஆஸ்ட்ரிக்ஸ் டிகன் ஆகிய பதிப்பகங்கள் காமிக்ஸ் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளன. ஆலன் ஃபோர்டு என்ற காமிக்ஸ் 1969ஆம் ஆண்டு உருவானது. இதனை எழுத்தாளர் லூசினோ சாச்சி உருவாக்கினர். இவரின் புனைபெயர் மேக்ஸ் பங்கர். இவரின் எழுத்துக்கு உயிர் கொடுத்தவர் ஓவியர் ராபர்ட் ரவியாலோ. இருவரின் பங்களிப்பில் காமிக்ஸ் இதழ் மே 2019 அன்று நூற்றாண்டு இதழை கொண்டு வந்துவிட்டது. ஆலன் ஃபோர்டு என்பது துப்பறியும் கதையாகும். இந்த வரிசையில் 27 வது கதையில்தான் ஆலனுக்கு சரியான வில்லனாக சூப்பர்யூக் என்ற கதாபாத்திரம் அறிமுகமானது. ராபின்ஹூட் பற்றி உங்களுக்குத் தெரியும். அவருக்கு எதிராக இந்த கதாபாத்திரம் இருக்கும். இந்த காமிக்ஸ்கள் பிரான்ஸ், டென்மார்க், பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி விற்கப்பட்டன. உள்நாட்டிலும் சிறப்பான விற்பனையைக் கொண்டிருந்த காமிக்ஸ் இது. யூகோஸ்லேவியால் உள்ள ஜேஸ்னிக் என்ற நாளிதழில் வெளியாகி புகழ்பெற்றது. இந்த தொடரை நேனாட் பிரிக்சி என்ற ஆசிரியர் மொழ

மார்வெல் மகத்தான மனிதர் ஸ்டான் லீ பிறந்த தினம் இன்று!

படம்
giphy ஸ்டான் லீ பிறந்த தினம் இன்று.. மார்வெல் யுனிவர்ஸின் தலைவர். ஃபென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ்மேன், அமேசிங் ஸ்பைடர்மேன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை வடிவமைத்தவர். இன்றும் மார்வெல் நிறுவனங்களின் அட்டகாசமான பொழுதுபோக்கு கதாபாத்திரங்களின் அடிப்படையை உருவாக்கியவர் ஸ்டான் லீதான். திரைப்படங்களாக வெளிவந்தபோது அதில் சிறிய காட்சிகளில் நடிப்பது இவரின் வழக்கம். 1922ஆம்ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பிறந்தவர் ஸ்டான் லீ. இவர் வேலை செய்த காமிக்ஸ் புக் நிறுவனம்தான் பின்னாளில் மார்வெல் காமிக்ஸாக மாறியது. ஓவியர் ஜேம்ஸ் கிர்பியுடன் இவர் இணைந்து டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், எக்ஸ்மேன், ஃபென்டாஸ்டிக் ஃபோர் உள்ளிட்ட எண்ணற்ற கதாபாத்திரங்களை உருவாக்கினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செலியா, ஜேக் லெய்பர் தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவர் பிறந்த சமயம், உலகமே போர் பிரச்னையால் பொருளாதார மந்த நிலையில் தடுமாறியது. வறுமையில் இவரது குடும்பம் திகைத்து நின்றது. ஸ்டான் லீயின் முழுப்பெயர் ஸ்டான்லி மார்ட்டின் லெய்பர். இப்பெயரை முழுதாக சொன்னாலே மூச்சு வாங்கும் என்பதை விரைவில் உணர்ந்து, ஸ்டான் லீ என்று பெயர் மாற்றிக்கொ

போதைக்கம்பள கும்பலை அழிக்கும் சிக்பில் அண்ட் கோ! - ஜாலி காமிக்ஸ்

படம்
பிளேட்பீடியா சிக்பில் மற்றும் குள்ளன் கலக்கும்  கம்பளத்தில் கலாட்டா லயன் காமிக்ஸ் - 40ஆவது ஆண்டு மலர்!  சிக்பில் அண்ட் கோ, இம்முறை வித்தியாசமான வழக்கை தீர்க்கின்றர். சீரியசாக அல்ல ஜாலியாகத்தான். போதைப்பொருட்களை விற்பவர்கள் செவ்விந்தியர்களை மதுபானங்களை வாங்கச்செல்லி கெஞ்சுகிறார்கள். பின்னர் மிரட்டுகிறார்கள். ஆனால் சிக்பில் சாம, பேத, தண்ட முறையில் அதனை சமாளிக்கிறான். ஆனால் அவர்கள் அதற்கு அஞ்சாமல் ஊருக்குள் வந்துவிடுகின்றனர். அங்குள்ள சீனா பஜார் போல பொருட்களை விற்கும் முஸ்தபாவை மிரட்டி தங்களின் போர்வையை விற்க வற்புறுத்துகின்றனர். இல்லையெனில் கடையை எரிக்கவும் அவர்கள் தயங்க மாட்டோம் என எச்சரிக்கின்றனர். அந்தப் போர்வையை பயன்படுத்திய ஷெரீப்பின் கையாள், அதிலுள்ள போதைப்பொருளால் மயங்கி புத்தி கலங்குகிறது. இதனைக் கண்டறிய சிக்பில் அண்ட் கோ, கோழையாக ஷெரீப்பின் பின்னால் அணிதிரள நடக்கும் காமெடி சரவெடிகள்தான் கதை.  இதில் அதிரடி சண்டைகளை எதிர்பார்க்க ஒன்றுமில்லை. அனைத்தும் காமெடிதான். இதனால் சீரியசான போதைப்பொருள் சங்கதி கூட அப்படியா என்றுதான் கேட்க வைக்கிறது. ப