இடுகைகள்

குளோகல்(Glocal) செய்திகள்! - ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூனைகளை பாதுகாக்கும் இஸ்‌ரேல் சகோதரிகள்!

படம்
பூனைச் சகோதரிகள்! இஸ்‌ரேலின் தாக்குதல்களால் சிதைந்த காசா எல்லைப்புற பகுதியில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த 35 பூனைகளை மரியம், ரயிஷா, எல்ஹம் அல்பர் ஆகிய மூன்று சகோதரிகள் பாதுகாத்துள்ளனர். மூன்று சகோதரிகளும் அல்ஷாதி அகதிகள் முகாமில் சுற்றித்திரிந்த 35 க்கும் மேற்பட்ட பூனைகளை காப்பகம் அமைத்து உணவு, சிகிச்சை கொடுத்து பராமரித்து வருகின்றனர். “பூனைகள் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர்களாகவே மாறிவிட்டன. பூனைகளை பராமரிப்பதில் எங்களுடைய குடும்பமும் ஆதரவளித்து உதவுகிறது” என்கிறார் மூன்று சகோதரிகளில் இளையவரான மரியம். காசாவிலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழக பட்டதாரியான மரியம், ஆசிரியர் வேலைக்கான தேடுதலில் இருந்தார். சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையைக் கடந்த பூனை காரில் அடிபட்டு குற்றுயிராக விழுந்ததைப் பார்த்து காப்பாற்றினார். அன்றிலிருந்து அப்பகுதியில் காயம்பட்ட ஆதரவற்ற பூனைகளை பாதுகாக்க தொடங்கினார் மரியம். இவரின் ஆர்வத்தை மூத்த சகோதரிகளான ரயிஷா, எல்ஹம் அல்பர் ஆகியோரும் அவர்களின் பிள்ளைகளும் பின்பற்ற பூனைகளின் காப்பகம் மெல்ல உயிர்பெற்றிருக்கிறது. தற்போது பராமரித்து வரும் பூனைகளை

வேலை+ கரன்சி ஆசையால் வீழ்ந்த இளைஞர்!

படம்
சூழ்ச்சியால் சரிந்த அறிவியலாளர்!  நாக்பூரில் பிரம்மோஸ் ஏவுகணை ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய நிஷாந்த் அகர்வால், பாகிஸ்தானுக்கு ஏவுகணை ரகசியங்களை கொடுத்த விவகாரத்தில் கைதாகியுள்ளார். ஃபேஸ்புக்கில் துறுதுறுப்பாக சுற்றித்திரிந்த நிஷாந்த் அகர்வால், பெண்களின் பெயர்களிலான மூன்று போலி ஐடிகளின் காதல் வார்த்தைகளை நம்பி தேசியபாதுகாப்பு ரகசியங்களை அவர்களுக்கு கூறியதாக போலீஸ் அவரை கைதுசெய்து சிறையிலடைத்துள்ளது. இதே பெண்களின் ஐடி டிரிக் மூலம்தான் சில மாதங்களுக்கு முன்னர் பிஎஸ்எஃப் படைவீரர் அச்சுதானந்த் மிஸ்‌ராவை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மயக்கி, ராணுவ ரகசியங்களை பெற்றது வெளியிட்டது அரசுக்கு தெரியவர, உடனே நொய்டாவிலிருந்த அச்சுதானந்தை காவல்துறை கைது செய்தது. “பாகிஸ்தானிலிருந்து இயக்கப்பட்ட பெண்களின் பெயரிலான ஐடிகளில், நிஷாந்துக்கு அமெரிக்காவில் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு வலை விரித்து அவரை வீழ்த்தியுள்ளனர்” என்கிறார் காவல்துறை அதிகாரியொருவர். ஐஐடி ரூர்க்கியில் கல்வி கற்ற நிஷாந்த் அகர்வால், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால்(DRDO) 2017-18

அசத்தலான கார் திருடி!

படம்
அசத்தல் திருடி! ஜார்க்கண்டைச் சேர்ந்த பெண், டாக்ஸி ஒன்றை தன் நண்பர்கள் குழு உதவியுடன் துப்பாக்கி முனையில் அதிரடியாக கடத்தினார். அப்புறம் என்னாச்சு? டெல்லியின் லஜ்பத் நகர் போலீசுக்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி காரை இரண்டு பெண்களும், ஒரு ஆணும் கடத்தியதாக புகார் வந்தது. டெல்லியின் பாலம் – டேராடூன் ரூட்டில் பயணிக்கும்போது கார் கடத்தப்பட்டதை அறிந்த போலீசார், அசத்தல் திருடியான கஜாலாவை அரஸ்ட் செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து ஆண்நண்பர் வான்ஸ் சர்மாவுடன் வாழும் சப்னாவுக்கு அதிரடி சாகசங்கள், ஆச்சரியங்கள் அதிகம் பிடிக்கும். “என் குடும்பத்தினர் என்னை பார்த்து ஆச்சரியப்படவேண்டும் என்பதற்காகவே காரை திருடினேன்” என்று விநோத பதில் சொல்லி போலீசை அயர வைத்துள்ளார். கடத்தல் சம்பவ தினத்தன்று கஜாலாவின் சகோதரர் திருமணம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள காரில் சென்று இறங்கி ஊராரை ஆச்சரியப்படுத்தவேண்டுமென நினைத்த கஜாலாவின் பேராசை அவரையும் அவரது தோழி காஜல் மற்றும் வான்ஸ் சர்மாவையும் சிறையில் தள்ளியுள்ளது. அபேஸ் செய்யப்பட்ட கார், மற்றும் வான்ஸ் சர்மா பயன்படுத்திய பைக், பிஸ்டல் ஆகியவற்றையும் ப

வசுந்த்ரா ராஜே மீது சிறுநீர் கழித்த அமைச்சர்!

படம்
சிறுநீர் கழிப்பது நமது உரிமை!  ராஜஸ்தானைச் சேர்ந்த அமைச்சர் சாம்புசிங் கடேசர், திறந்தவெளியில் உச்சா போய் உலகளவில் வைரலாகியுள்ளார். ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்றதேர்தல் வரவிருக்கும் நிலையில் அங்கு நடந்த பாஜக தேர்தல் பேரணியில் பங்கேற்றார் அமைச்சர் சாம்புசிங். இரண்டரை லட்சம் பேர் பங்கேற்ற பேரணியில் ஒரு கழிவறை கூட அங்கு அமைக்கப்படவில்லை.   விழா நிகழ்வில் சிறுநீர் சுனாமியாக பெருக தடுமாறிய சாம்புசிங், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பேனர் அருகிலேயே சிறுநீர் கழித்து ஆசுவாசமானார். இந்திய அரசு ஸ்வச் பாரத் திட்டத்தை பிரசாரம் செய்து வருகையில் நீங்களே இப்படி செய்யலாமா? பத்திரிகையாளர்கள் கேட்க, அறச்சீற்றம் கொண்ட சாம்புசிங், “திறந்தவெளியில் மலம் கழித்தால்தான் பிரச்னை. சிறுநீர் கழித்தால் நோய்கள் பரவாது. இப்பழக்கம் நம் கலாசாரத்தில் தொன்று தொட்டு வருவதுதான்” என டிபிக்கல் விளக்கம் கொடுத்து அலற வைத்தார். சாம்புசிங்கின் உச்சா மேட்டரை, ஸ்வச் பாரத் திட்டத்தையும் இணைத்து இணையத்தில் மீம்ஸ் சுனாமியே தொடங்கிவிட்டது. மீம்ஸ் நாயகன் சாம்பு!

பத்துலட்சம் ரசிகர்களை பெற்ற யூட்யூப் ஸ்டார்!

படம்
பத்து லட்சம் ரசிகர்களைத் தொட்ட இந்தியர்! –  யூட்யூபில் பத்து லட்சம் ரசிகர்களை ஈர்த்த இந்தியராக வெற்றிவாகை சூடியுள்ளார் டெல்லியைச் சேர்ந்த புவன் பாம்.   BB ki Vines  சேனலைச் சேர்ந்தவரான புவன், 2015 ஆம் ஆண்டிலிருந்து வீடியோக்களை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து வருகிறார். டிட்டு மாமா என்ற கேரக்டரை பிரபலப்படுத்தியவர் இந்தி மொழி வீடியோக்களை ஸ்மார்ட்போன் மூலம் தன் வீட்டிலேயே தயாரிக்கிறார். குடும்பத்திலுள்ள உறுப்பினர்களை மையப்படுத்திய இவரின் அசகாய கிண்டல் வீடியோக்களை உலகெங்கும் 1.3 பில்லியன் பேர் பார்த்துள்ளனர். கான்செப்ட் யோசித்து ஷூட்டிங் எடுக்க 4 மணிநேரம், எடிட்டிங்குக்கு 3 மணிநேரம் என ஷெட்யூல் போட்டு உழைக்கும் புவன், யூட்யூப் மூலம் மாதம் 3 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார். இவர் முதலில் யூட்யூபில் போட்ட வீடியோவுக்கு பதினைந்து லைக்குகள்தான் விழுந்தன. சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக மூளையை சுழற்றி கான்செப்ட் பிடித்த புவன் இன்று யூட்யூப்   டாப் ஸ்டாராக மாறியுள்ளார். “மக்களுக்கு தினசரி புதுமைகள் தேவை. அதைப்புரிந்துகொண்டால் நீங்களும் ஹீரோதான்” என புன்னகைக்கிறார் புவ

குஜராத்தில் விரட்டப்படும் பீகார் தொழிலாளர்கள்!

படம்
உள்நாட்டு அகதிகள்! குஜராத்தில் பணிபுரிந்து வந்த பீகார் தொழிலாளி , பதினான்கு மாத குழந்தையை வல்லுறவு செய்து போலீசில் பிடிபட்டார். உடனே அம்மாநிலமெங்கும் வசிக்கும் பீகார், உ.பி உள்ளிட்ட பிறமாநில தொழிலாளர் மீது தீவிர தாக்குதல் தொடங்கியது. பிரிவினை சக்திகளின் வன்முறையை காவல்துறையும் மறைமுகமாக ஆதரிக்கும் விதமாக, பிற மாநில தொழிலாளர்களை வெளியேற வற்புறுத்தி வருகின்றனர். குஜராத்தின் பலபுறங்களிலும் அதிகரிக்கும் வன்முறை நிகழ்வுகளால் மேசனா, காந்திநகர், சபர்கந்தா, ஆரவள்ளி மாவட்டங்களில் பணிபுரிந்துவரும் 1,500 க்கும் மேற்பட்ட பீகார், உ.பி மாநில தொழிலாளர்கள் சம்பள பாக்கியைக்கூட வாங்காமல் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.”தாக்கூர் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் எங்கள் தொழிற்சாலை பகுதியிலுள்ள தொழிலாளர்களை அடித்து விரட்டினர். என்னுடைய மொழி, மாநிலத்தை மிரட்டி கேட்டவர்கள் விரைவில் அங்கிருந்து வெளியேற அச்சுறுத்தினர்” என்கிறார் முகமது கரீம். பிறமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியை குறிவைத்து கல்லெறிவது, கத்திக்குத்து, கொலைமிரட்டல் ஆகியவற்றை செய்யும் சமூகவிரோத இயக

இந்திய கிராமங்களை வாழவைக்கும் சீனா!

இந்திய கிராமங்களுக்கு உதவும் சீனா! உத்தர்காண்டின் மாநிலத்திலுள்ள ஏழு மாநிலங்கள் சீனாவில் விளையும் பொருட்களால் உயிர்வாழ்ந்து வருகின்றன. உத்தர்காண்டின் தார்சுலா பகுதியிலுள்ள நானூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சீனாவிலிருந்து நேபாளம் வழியாக வரும் அரிசி, எண்ணெய், உப்பு, கோதுமை ஆகியவற்றை நம்பியே வாழ்கின்றனர். இங்கு அரசின் ரேஷன் கடைகளில் தேவையான அளவு உணவுப்பொருட்கள் வழங்கப்படாததுதான் மக்களின் அவலநிலைக்கு காரணம். புண்டி, கன்ஜி, குடி, நபால்சு, நபி, ரோன்காங், கார்பியாங் உள்ளிட்ட ஏழு கிராமங்களும் பற்றாக்குறையான ரேஷன் முறையால் சீனாவின் உணவுப்பொருட்களை நம்பியே காலந்தள்ளி வருகின்றன. “மாதம்தோறும் அரசு, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை வழங்குகிறது. இப்பொருட்களும் எங்கள் கிராமத்திற்கு வந்துசேர சாலை வசதிகள் இல்லாததால் அதிக காலதாமதம் ஆகிறது. இதனால் வேறுவழியின்றி நேபாளத்தின் டிங்கர், சாங்குரு ஆகிய இடங்களிலிருந்து உணவுப்பொருட்களை அதிகவிலைக்கு வாங்கும் நிலையில் உள்ளோம்” என்கிறார் நபி கிராமத்தவரான அசோக் நபியல். “அரசிடம் பற்றாக்குறை விளக்கப்பட்டும் ரேஷன் அதிகரிக்க அனுமதி கிடைக்கவ

ரயில்வே பொருட்களை திருடும் இந்தியர்கள்

படம்
ரயில் திருட்டு! – மேற்கு ரயில்வேயில் ரூ2.76 கோடி(2017-18) மதிப்பிலான களவுபோன பொருட்களை ரயில்வே போலீஸ் மீட்டுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. கழிவறை கோப்பை, மின் விசிறி, படுக்கை விரிப்பு, தலையணை, தலையணை கவர் என பல பொருட்களையும் பயணிகள் அபகரிக்க முயன்றதை போலீஸ் படை தடுத்து மீட்டுள்ளது. 1.95 லட்சம் டவல்கள், 81,736 பெட்ஷீட்கள், 55,573 தலையணை உறைகள், 5,038 தலையணைகள் நெடுந்தூர ரயில்களில் திருடப்பட்டுள்ளன என கணக்கு கூறியுள்ளது மேற்கு ரயில்வே. கழிவறைகளில் திருடப்படும் குழாய்கள், பைப்புகள், குவளைகள் இரும்புக்கடைகளில் நல்ல விலைக்கு விற்கப்படுவது திருட்டு பரவலாக அதிகரிக்க முக்கிய காரணம்.   ரயில்களின் ஏசி கோச்சுகள் உட்பட இப்படி பொருட்கள் கொள்ளை போவதால் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய ரயில்வேக்கு ஏற்பட்ட நஷ்டம் ரூ.4 ஆயிரம் கோடி. இவ்வாண்டில் ஏப்ரல்- செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.62 லட்சம் மதிப்புள்ள பொருட்களை இந்திய ரயில்வே பறிகொடுத்துள்ளது. மும்பை டிவிஷனில் 2016-17 ஆண்டில் 56 ரயில்களிலிருந்து ரூ.71.52 லட்சம் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கிறுகிறுக்கவைக்கும் திருட்ட

Gay ரத்தமா? நோ - அரசின் பகீர் ரத்ததான முடிவு!

படம்
Gay ரத்தம் வேண்டாம்! – சாதி, மதம் மாறினாலும் ரத்தம் மாறாது என்பது உண்மைதான். ரத்தமும் வேறுபடும் என முடிவு செய்த இந்திய அரசு எல்ஜிபிடியினரை ரத்த தானம் தருவதிலிருந்து நீக்கியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரத்ததான விதிகளை மாற்றிய இந்திய ரத்த தான கழகம்(NBTC), எல்ஜிபிடியினரிடம் ரத்தம் பெறக்கூடாது என நாடெங்குமுள்ள ரத்தவங்கிகளை வலியுறுத்தியுள்ளது. ஹெச்ஐவி மற்றும் மஞ்சள்காமாலை கிருமிகள் பரவும் அபாயம்தான் காரணம்.  புற்றுநோய், அலர்ஜி மற்றும் நீண்டநாட்கள் நோய்களால் அவதிப்பட்டவர்களிடமும் ரத்தம் பெறக்கூடாது என்ற விதிகள் முன்பே உள்ளன. குறிப்பிட்ட நோய்களின் லிஸ்ட்டில் இனி செக்ஸ் வாழ்க்கை குறித்தும் கேள்வி கேட்டு பின்னரே ரத்தம் பெறும்படி விதிகள் கறாராகியுள்ளன. “நீதிமன்ற தீர்ப்புக்கும் ரத்ததான விதிகளுக்கும் தொடர்பில்லை. தொற்றுநோய்களைத் தடுக்கவே இவ்விதி” என்கிறார் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இயக்க மருத்துவர் சோபினி ராஜன். “மக்களிடம் எப்படி பொது இடத்தில் செக்ஸ் சம்பந்தமாக கேள்வி கேட்பீர்கள்?” என லாஜிக் கேள்வி கேட்கிறார் ஹம்சஃபர் இயக்கத்தைச் சேர்ந்த அசோக் கவி. ஓரினச்சேர்க்கையாளர்களை ர

அங்கீகாரம் கொடுக்காததால் திருடன்!

படம்
அங்கீகார கொள்ளை!  கொள்ளையர்களிடமிருந்து பணத்தை காப்பாற்றிய பணியாளருக்கு வெறும் டீஷர்ட்டை பரிசாக கொடுத்தால் என்னாகும்? யெஸ் பணம் அபேஸ்தான். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தான்சிங் வங்கிக்கு பணத்தை டெபாசிட் செய்யப்போகும்போது கொள்ளையர்களால் தாக்கப்பட்டார்.  உயிரைக்கொடுத்து ரூ.80 லட்சத்தை காப்பாற்றியவருக்கு டீஷர்ட்டை பரிசளித்து சைலண்டானார் தான்சிங்கின் முதலாளி. மூன்று பெண்கள் திருமணத்திற்கு காத்திருக்க, முதலாளி பணப்பரிசு கொடுப்பார் என நினைத்த தான்சிங் விரக்தியாகி வஞ்சகமாக பணத்தை லபக்க உடனே பிளான் போட்டார்.  கஸ்டமரிடம் பணத்தைப் பெற தான்சிங்க்கை முதலாளி நம்பி அனுப்ப, பணத்தை தன் பாக்கெட்டில் போட்ட தான்சிங் உடனே நண்பர் யாகூப்பின் உதவியை நாடினார். பைக்கை டெல்லியில் பார்க் செய்துவிட்டு கார் ஏறி நைனிடாலுக்கு வந்து தான்சிங் தலைமறைவானார். தான்சிங்கின் பைக்கை எடைக்கு போட்டு எவிடென்ஸை அழிக்க டெல்லிக்கு வந்த நண்பர் யாகூப், க்ரைம் பிராஞ்ச் போலீசில் அம்மாஞ்சியாய் மாட்டிக்கொண்டார். பிளானுக்கு கமிஷனாக வாங்கிய மூன்று லட்சம் வங்கிக்கணக்கில் வகையாக சிக்க யாகூப் க்ரைம் கதைய

கஹானியன் லலிதாம்பிகா!

படம்
பாதுகாப்பற்ற மாத்திரைகளுக்கு தடை! – அண்மையில் இந்திய அரசு, பாதுகாப்பற்ற மாத்திரைகள் என அடையாளம் காணப்பட்ட 328 மாத்திரைகளுக்கு (FDC) தடை விதித்துள்ளது(தயாரிக்க, விநியோகிக்க, விற்க). இதில் புகழ்பெற்ற தலைவலி, காய்ச்சல் மாத்திரையான சாரிடானும் அடக்கம். 2016 ஆம் ஆண்டிலிருந்து கூட்டு மருந்துகளை உள்ளடக்கிய FDC மாத்திரைகளை தடை செய்வதற்கான முயற்சிகளை சுகாதார அமைச்சகம் மேற்கொண்டிருந்தது. இத்தடையால் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்துநிறுவனங்கள் பாதிக்கப்படும். அமுலாகிவிட்ட இத்தடையால் குளுகோநார்ம், டாக்சிம் AZ, லூபிடைசல் உள்ளிட்ட மருந்துகளை இனி மருந்தகங்களில் விற்க முடியாது. உடனே டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகிய மருந்து நிறுவனங்களின் வாதங்களை ஏற்று சாரிடான், பிரிடான், டர்ட், ஏஸ் பிராக்‌ஸிவோன் ஆகிய மருந்துகளை விற்க தடையில்லை என ஆர்.எஃப். நாரிமன், இந்து மல்ஹோத்ரா உள்ளிட்ட நீதிபதிகள் உத்தரவு வழங்கியுள்ளனர். ரூ.1.2 லட்சம் கோடி உள்நாட்டு மருந்து வணிகமுள்ள இந்தியாவில் FDC மருந்துகளின் விற்பனை 50 சதவிகிதமாகும். 2 கஹானியன் லலிதாம்பிகா! இஸ்‌ரோவில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய

அதிக சம்பளம் வாங்கும் எம்எல்ஏ யார்?

படம்
எகிறும் எம்எல்ஏ சம்பளம்! சாஃப்ட்வேர் எஞ்சினியரிங் படித்து அடித்து பிடித்து வேலையில் சேருபவர்களுக்கு கூட ஆண்டு வருமானம் 10 லட்சத்தை தாண்டுவது கஷ்டம். 12 ஆம் வகுப்பு படித்த விவசாயி எம்எல்ஏக்களின் தோராய ஆண்டு வருமானம் 89.88 லட்சம் என்றால் நம்புவீர்களா?   டாப் சம்பளம் பெறுபவர்களில் முதலிடத்தில் கர்நாடக எம்எல்ஏக்களும், கடைசி இடத்தில் சத்தீஸ்கர் மாநில மக்கள் பிரதிநிதிகளும் உள்ளனர்.   தோராயமாக ஆண்டுக்கு கர்நாடக எம்எல்ஏக்கள் ஒரு கோடியும், சத்தீஸ்கர் எம்எல்ஏக்கள் ஆண்டுக்கு 5.4 லட்சமும் பெற்றுள்ளனர். 3,145 எம்எல்ஏக்களிடம் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வில் பாதிப்பேர் விவசாயமும்(24%), தொழில்களும்(25%) செய்துவருவதாக தெரிவித்தனர். கர்நாடகா, மகாராஷ்டிரா(43.4 லட்சம்), ஜார்க்கண்ட்(7.4 லட்சம்) ஆகிய மாநிலங்களில் எம்எல்ஏக்களின் ஆண்டுவருமானம் இந்திய மாநிலங்களிலேயே அதிகம். இவர்களில் 1,052 எம்எல்ஏக்களின் கல்வித்தகுதி 5 முதல் 12 ஆம் வகுப்பு வரைதான். அரசியல்ல குதிக்கிறது இதுக்குத்தானா?  

நிலவுக்கு டூர் போகலாம் வாங்க!

படம்
வீட்டை விற்று சாலை! உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்மணி சொந்தசெலவில் உடைந்துபோன தன் கிராமத்து சாலையை சீரமைத்து பிரமிக்க வைத்திருக்கிறார். உ.பியின் தாத்ரியிலுள்ள தாதோபூர் கடானா பகுதியில் வசிக்கும் ராஜேஷ்தேவி, தினசரி பயணிக்கும் சாலை குண்டும் குழியுமாக நடந்து சென்றால் கூட இம்சைப்படுத்தியது. அச்சாலையால் ஏற்பட்ட துரதிர்ஷ்ட விபத்தால் அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட, இனி யாருக்கும் விபத்து ஏற்படக்கூடாது என முடிவெடுத்தார் தேவி. தன் வீட்டின் ஒருபகுதியை விற்று ஒரு லட்ச ரூபாயை திரட்டி தனியார் கான்ட்ராக்டரை தன் மகன் சுதீர் மூலம் அழைத்து 250 மீட்டருக்கு சாலையை செப்பனிட்டு திருத்தியுள்ளார் ராஜேஷ்தேவி.   “ஏழைகளையும், பணக்காரர்களையும் பிரிவினையாக நடத்தும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பேசியும் அலுத்துப்போய்தான் இம்முடிவுக்கு வந்தேன்.” என்கிறார் ராஜேஷ்தேவி. கடந்தாண்டில் இந்தியாவில் குண்டும் குழியுமான சாலைகளால் 3,597 பேர் மரணித்தும் 25 ஆயிரம் பேர் படுகாயமுற்றும் உள்ளனர்.       199 SHARES 2 மீண்டும் நிலவு! 1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்பல்லோ 17 விண்கலத்தில் மனிதர்கள் நிலவுக்

பிரபலமாகும் தலித் பிராண்ட்!

படம்
குருத்துவாரா பயோகேஸ்! – டெல்லியிலுள்ள குருத்துவாரா கமிட்டி, தனது சமையலறையில் தினசரி உருவாகும் பழம், காய்கறிக் கழிவுகள் மூலம் பயோகேஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக டெல்லியிலுள்ள பத்து குருத்துவாராக்களின் சமையலறையில் பயோகேஸ் எந்திரங்கள் பொருத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன. “இந்த ஐடியா மூலம் குருத்துவாராக்களில் எரிபொருள் செலவு மட்டுப்படுவதோடு கார்பன் வெளியீடும் குறையும். மேலும் குப்பைகளின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த உதவும்” என்கிறார் டெல்லி குருத்துவாரா கமிட்டி தலைவர் சர்தார் மஞ்சித்சிங். டெல்லி குருத்துவாராக்கள் தினசரி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. 2 பிரபலமாகும் தலித் பிராண்ட்! பாரதியார் வாசகங்கள், திருக்குறள் இவற்றையெல்லாம் அச்சிட்டு கிராஃபிக் டீஷர்ட்டுகளாக பார்த்திருப்பீர்கள். இவ்வகையில் தலித் பெருமை பேசும் புரட்சி டிஷர்ட்டுகள்தான் இப்போது ஹாட் சேல்ஸ். இணையத்தில் தலித் பொருட்கள் என டைப் செய்தால் ‘தலித் ரத்தம் எனது உடலில் ஓடுகிறது, ஜெய்பீம் சொல்லு, நான்

அலமாரியில் குற்றவாளி- சைகோ ஃபேமிலி அலப்பறை

படம்
அதிபர் படையில் சீக்கியர்! அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு படையில் முதன்முறையாக இணைந்துள்ள இந்திய வம்சாவழி சீக்கியர் வரலாறு படைத்துள்ளார். இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவில் பிறந்தவர் அன்ஷ்தீப்சிங் பாட்டியா. அமெரிக்க பாதுகாப்பு படைக்கான பயிற்சிகளை முடித்து அண்மையில் அதிபரின் பாதுகாப்பு டீமில் இணைந்துள்ளார். டர்பன் அணிவதற்கான கோர்ட் அனுமதியைப் பெற்றுள்ள சீக்கியர் அன்ஷ்தீப், தன் பத்து வயதிலேயே அமெரிக்காவுக்கு வந்துவிட்டார். கான்பூரில் வாழ்ந்த அன்ஷ்தீப்பின் குடும்பம், 1984 ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலை பிரச்னைகளால் லூதியானாவுக்கு இடம்பெயர்ந்து 2000 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு விமானம் பிடித்தனர். கடந்த சில மாதங்களில் மூன்றுக்கு மேலாக தாக்குதல்கள் சீக்கியர்களின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள நிலையில அன்ஷ்தீப்பின் பாதுகாப்பு படை செய்தி ஆசுவாசம் தருகிறது.   2 தங்க டிஃபன்பாக்சில் சோறு!  ஹைதராபாத்திலுள்ள நிஜாம் மியூசியத்தில் திருடுபோன தங்க டிஃபன்பாக்ஸை போலீஸ் அரும்பாடுபட்டு மும்பை வரை சேசிங் செய்து மீட்டுள்ளனர். ஹைதராபாத்திலுள்ள நிஜாம் மியூசியம், தங்கம், வெள்ளி, ம

சாலையா? உசுரா? - ரெண்டில் ஒண்ணைச் சொல்லு!

படம்
நாய்ப்பூங்கா! – இந்தியாவின் முதல் நாய்ப்பூங்கா ஹைதராபாத்திலுள்ள கச்சிபோலியில் திறக்கப்பட்டுள்ளது. 1.3 ஏக்கர் நிலமும் குப்பை கொட்டும் நிலமாக கிடந்து தற்போது நாய்களுக்கான பூங்காவாக அதிரடி மாற்றம் பெற்றுள்ளது. ரூ.1.1 கோடி செலவில் உருவாகியுள்ள பூங்கா, செல்லப்பிராணிகளுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் நோக்கத்துடன் லட்சியமாக கொண்டுள்ளது. வெளிநாடுகளில் நாய்களுக்கான பூங்கா சாதாரணமானது. தற்போது ஹைதராபாத்தில் உருவாகியுள்ள பூங்கா விரைவில் மும்பையிலும் 25 லட்ச ரூபாய் செலவில் தொடங்கப்படவுள்ளது. 2 பார்க்கிங்குக்கும் காசு! இந்திய தலைநகரான டெல்லியில் வீட்டுக்கு வெளியே நிறுத்தும் கார்களுக்கு விரைவில் அரசு பார்க்கிங் சார்ஜ் வசூலிக்கவிருக்கிறது. இதனை டெல்லி கவர்னர் அனில் பைஜ்வால் குளோபல் மூவ் மாநாட்டில் அறிவித்துள்ளார். “சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படாமல் இருப்பதே என் கனவு. டெல்லியில் ஒழுங்குமுறையின்றி நிறுத்தப்படும் வாகனங்கள் நடைபாதை, சைக்கிள்களுக்கான பாதைகளையும் ஆக்கிரமிப்பது தினசரி பிரச்னை” என வருத்தம் தெரிவித்து மாநாட்டில் பேசினார் ஆளுநர்  அனில் பைஜ்வால். இரவில் வசூலிக்கப்ப

பியார் பிரேமா புலி!

படம்
கோடீசுவரி சிந்து! போர்ப்ஸ் பட்டியலில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கிறார் பேட்மின்ட்டன் வேங்கை சிந்து. ஜூன் 2017- ஜூன் 2018 காலகட்டத்தில் தோராயமாக ரூ.85 லட்சம் சம்பாதித்துள்ளார்(போட்டி பரிசு, விளம்பரங்கள்) சிந்து. வருமான ஆதாரம் விளையாட்டுப்போட்டி அல்ல, பல்வேறு விளம்பர ஒப்பந்தங்கள்தான். போர்ப்ஸ் லிஸ்ட்டில் முதலிடத்தில் செரீனா வில்லியம்ஸ் உள்ளார். இவருக்குப் பின் கரோலின் வோஸ்னியாக்கி, ஸ்லோவன் ஸ்டீபன்ஸ், கார்பைன் முகுருசா ஆகியோர் உள்ள லிஸ்ட்டில் செரீனாவின் அக்கா வீனஸூம் உண்டு. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றது முதல் இவ்வாண்டு வரை நோக்கியா, பானசோனிக், பிரிட்ஜ்ஸ்டோன் என ஏராளமான கம்பெனிகளின் விளம்பர தூதராக கோலோச்சி வருகிறார் சிந்து. டாப் 10 பட்டியலில் டென்னிஸ் விளையாடாமல் இடம்பிடித்தவர் அமெரிக்காவின் முன்னாள் ரேசிங் வீரரான டேனிகா பேட்ரிக் மட்டுமே. வின்னர் சிந்து! 2 மோடிக்கு ராக்கி! ரக்‌ஷா பந்தன் தினத்தில் பெண்கள் தம் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ஆயுளுக்கும் தம் சேஃப்டியை உறுதி செய்வது வழக்கம். அந்நாளில் பிரதமர் மோடிக்

கேரளா நாயகர்கள்!

படம்
தங்கமிட்டாய்! எந்த விழாவாக இருந்தால் என்ன? மிட்டாய்கள், இனிப்பு, கார பலகாரங்கள் எடுத்து கொண்டாடாமல் ஸ்பெஷல் தினங்கள் ருசிக்குமா என்ன? குஜராத்தின் சூரத்திலும் அப்படியொரு தங்க இனிப்பு ரெடியாக இருந்தது. குஜராத்தின் சூரத்தில் 24 கேரட் தங்க காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த இனிப்பின் விலை ஒரு கிலோ ரூ.9 ஆயிரம். யாரும் வாங்குவார்களோ இல்லையோ கடைக்காரர் பிரின்ஸ் இதனை வாங்கி வைத்திருக்கிறார். “இனிப்புகளை வெள்ளி காகிதங்களில் வைப்பதை விட தங்க காகிதங்களில் மூடி வைப்பது நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது” என்கிறார் பிரின்ஸ். ராக்கியின் புது ரகமா? என்பவர்கள் கூட விலையைக் கேட்டதும் உடனே அந்த இடத்தை காலி செய்துவிடுகிறார்கள் என்பதே கடைக்காரர்களின் வருத்தம். பர்சை பழுக்க வைத்தால் எப்படி? 2 சீனாவின் ரோபோ டாக்டர்! அண்மையில் சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ரோபோ கண்காட்சி அனைவரையும் வியக்கவைத்துள்ளது. பேட்மின்டன் விளையாடும், நோய்களை கண்டறியும், இசையமைக்கும் என பல்வேறு திறன்களை கொண்ட ரோபோக்கள் இக்கண்காட்சியை அலங்கரித்தன. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில், வயதானவர்கள் எ