நிலவுக்கு டூர் போகலாம் வாங்க!
வீட்டை விற்று சாலை!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்மணி
சொந்தசெலவில் உடைந்துபோன தன் கிராமத்து சாலையை சீரமைத்து பிரமிக்க வைத்திருக்கிறார்.
உ.பியின் தாத்ரியிலுள்ள தாதோபூர்
கடானா பகுதியில் வசிக்கும் ராஜேஷ்தேவி, தினசரி பயணிக்கும் சாலை குண்டும் குழியுமாக
நடந்து சென்றால் கூட இம்சைப்படுத்தியது. அச்சாலையால் ஏற்பட்ட துரதிர்ஷ்ட விபத்தால்
அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட, இனி யாருக்கும் விபத்து ஏற்படக்கூடாது என முடிவெடுத்தார்
தேவி. தன் வீட்டின் ஒருபகுதியை விற்று ஒரு லட்ச ரூபாயை திரட்டி தனியார் கான்ட்ராக்டரை
தன் மகன் சுதீர் மூலம் அழைத்து 250 மீட்டருக்கு சாலையை செப்பனிட்டு திருத்தியுள்ளார்
ராஜேஷ்தேவி. “ஏழைகளையும், பணக்காரர்களையும்
பிரிவினையாக நடத்தும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பேசியும் அலுத்துப்போய்தான் இம்முடிவுக்கு
வந்தேன்.” என்கிறார் ராஜேஷ்தேவி. கடந்தாண்டில் இந்தியாவில் குண்டும் குழியுமான சாலைகளால்
3,597 பேர் மரணித்தும் 25 ஆயிரம் பேர் படுகாயமுற்றும் உள்ளனர்.
199 SHARES
2
மீண்டும் நிலவு!
1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின்
அப்பல்லோ 17 விண்கலத்தில் மனிதர்கள் நிலவுக்கு சென்றதே கடைசி. அதன்பிறகு ஏறத்தாழ
50 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலன்மஸ்க், கோடீஸ்வரர் யுசாகு மெசாவா என்பவரை நிலவுக்கு அனுப்பிவைக்கவிருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த
கோடீஸ்வரர் யுசாகு நிலவைத் தொடவிருக்கிறார். நிலவு சுற்றுலாவை தன் வாழ்நாளின் லட்சியமாக
கொண்ட எலன் மஸ்கின் ஃபால்கன் ராக்கெட் யுசாகுவைச் பூப்போல சுமந்து நிலவுக்கு அனுப்பிவைக்கும்.
அவருடன் உலகின் பல்வேறு துறைசார்ந்த எட்டு கலைஞர்களும் விலையின்றி பயணிக்கவிருப்பதுதான்
ஹாட் நியூஸ். “என்னுடன் பயணிக்கும் எட்டு கலைஞர்களும் நிலவுக்கு சென்று வந்தபின்னர்
அது குறித்து படைப்பை உருவாக்குவார்கள். அது நிலவு குறித்த கனவு காண்பவர்களை நிச்சயம்
ஊக்கப்படுத்தும்” என்கிறார் தொழிலதிபர் யுசாகு. நிலவுக்கு போவது நிச்சயம் காஸ்ட்லிதான்.
ஆனால் இதுவரை நிலவு ட்ரிப்புக்கான கட்டணத்தை மிசாகு கூறவில்லை. ரெய்டுக்கு பயப்படுறாரோ?