பிரபலமாகும் தலித் பிராண்ட்!





Image result for dalit brand


குருத்துவாரா பயோகேஸ்! –

டெல்லியிலுள்ள குருத்துவாரா கமிட்டி, தனது சமையலறையில் தினசரி உருவாகும் பழம், காய்கறிக் கழிவுகள் மூலம் பயோகேஸ் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக டெல்லியிலுள்ள பத்து குருத்துவாராக்களின் சமையலறையில் பயோகேஸ் எந்திரங்கள் பொருத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன. “இந்த ஐடியா மூலம் குருத்துவாராக்களில் எரிபொருள் செலவு மட்டுப்படுவதோடு கார்பன் வெளியீடும் குறையும். மேலும் குப்பைகளின் பெருக்கத்தையும் கட்டுப்படுத்த உதவும்” என்கிறார் டெல்லி குருத்துவாரா கமிட்டி தலைவர் சர்தார் மஞ்சித்சிங். டெல்லி குருத்துவாராக்கள் தினசரி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

2


பிரபலமாகும் தலித் பிராண்ட்!

பாரதியார் வாசகங்கள், திருக்குறள் இவற்றையெல்லாம் அச்சிட்டு கிராஃபிக் டீஷர்ட்டுகளாக பார்த்திருப்பீர்கள். இவ்வகையில் தலித் பெருமை பேசும் புரட்சி டிஷர்ட்டுகள்தான் இப்போது ஹாட் சேல்ஸ்.

இணையத்தில் தலித் பொருட்கள் என டைப் செய்தால் ‘தலித் ரத்தம் எனது உடலில் ஓடுகிறது, ஜெய்பீம் சொல்லு, நான் தலித் என்னை முத்தமிடு’ என புரட்சி வாசகங்கள் அச்சிடப்பட்ட டீஷர்ட்டுகளின் படங்களே கண்களில் தென்படுகின்றன. வட இந்தியாவிலுள்ள மாநிலங்களில் சாதிப் பெயர்களை(ஜாட், ராஜ்புத், குஜ்ஜார்) தம் வாகனங்களில் எழுதுவது தொன்மை கௌரவத்தை தற்போது தலித்துகளும் கையில் எடுத்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த சுதீர் ராஜ்பர், தாராவியிலுள்ள தலித் தொழிலாளர்களை ஒன்றிணைத்து ஷூ, பேக்குகள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் சமர் ஸ்டூடியோவை தொடங்கியுள்ளார். “முதலாளித்துவ பரவலால் தலித்துகளுக்கு பெருமளவு விடுதலை கிடைத்துள்ளது” என்கிறார் தலித் கருத்தியலாளரான சந்திரபன் பிரசாத். “தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பே பறையர் சமூகத்தினர்(ஆங்கில பொருள்: ஆதிஇனம்) தொடங்கிய அடையாளப்படுத்தும் பழக்கத்தின் நீட்சி இது.” என்கிறார் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான டி.ஷியாம்பாபு.     



3



கர்ப்பிணியை தூக்கிய போலீஸ்!

உ.பியைச் சேர்ந்த கர்ப்பிணியை போலீஸ்காரர், கைகளால் தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பாற்றிய சம்பவம் நாடெங்குமுள்ள மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் மதுராவிலுள்ள ரயில்வேநிலையத்தில் போலீஸ்காரர் சோனுகுமார், கோர்ட்டுக்கு செல்லும் அவசரத்திலிருந்தார். அப்போது ரயிலில் பயணித்த நிறைமாத கர்ப்பிணி பாவனாவுக்கு திடீரென பிரசவ வலி எடுக்க, பயத்தில் அலறினார். உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சோனுகுமார், ஸ்ட்ரெட்சர் கிடைக்க தாமதமானதால் கர்ப்பிணிப்பெண்ணின் உயிரைக் காப்பாற்ற அவரை கைகளால் தூக்கிக்கொண்டு மருத்துவமனை வார்டுக்கு ஓடி தாயையும் சேயையும் காப்பாற்றியுள்ளார் சோனு. “பாவனாவுக்கு பிரசவ வலி எடுக்க அவரை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல அவரின் கணவர் மகேஷ் உதவிகேட்டுக்கொண்டிருந்தார். ஆம்புலன்சை அழைத்தும் சரியானநேரத்தில் வரவில்லை என்பதால், அவரை நானே கைகளில் தூக்கிச்செல்லும் சூழல் உருவானது” என்கினார் மனிதநேய போலீஸ்காரர் சோனுகுமார்.

பிரபலமான இடுகைகள்