இடுகைகள்

பெண்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னம்பிக்கை இல்லாதவர்களை தாக்கும் சைக்கோபாத்கள்!

படம்
  அசுரகுலம்   5 மனமென்னும் இருட்குகை 1.0   சைக்கோபாத்களுக்கு சொற்கள், வாக்கியங்கள் தெரியுமே ஒழிய அதன் அர்த்தம் தெரியாது. அவர்கள் முன் மரணம் என்று எழுதி வைத்தாலும் அதன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தெரியாது. நாம் கண் மருத்துவமனையில் பல்வேறு வேறுபட்ட எழுத்துகளை பார்த்து ஒவ்வொன்றாக சொல்லுகிறோம்.   அதன் அடிப்படையில் கண் பார்வை மங்கலை அறிகிறார்கள். ஆனால் சொல்லும் வார்த்தையில் ஒருவருக்கு அதன் பொருளே தெரியாது என்றால் என்ன செய்வது? இப்படி குற்றங்களைச் செய்துவிட்டு அது ஒன்றும் குற்றமல்ல என்று சொல்லும் ஆட்களை எப்படி பெண்கள் காதலிக்கிறார்கள், நிறையப் பேர் காதல் கடிதங்களை எழுதுகிறார்கள். பொதுவாக உலகமெங்கும் தீவிரவாத செயல்கள், கொலைகளைச் செய்பவர்களை   அந்த காரணங்களுக்காக நிறையப் பேர் விரும்புகிறார்கள். அதாவது, அதன் மூலம் தங்களை வேறுபடுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். இல்லாதபோது நிஜத்தை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். சிலர், தங்கள் மனதில் ஆண் என்றால் இப்படித்தான் எதற்கும் பயப்படாமல் இருக்கவேண்டும். அவன்தான் ஆண்மகன் என் நினைக்கிறார்கள். அதாவது, முத்துவீரன் நண்பர்களைக் காப்பாற்ற துப்பாக

மகப்பேறு மருத்துவத்தின் மூலம் தன்னைச்சுற்றியுள்ள பெண்களை புரிந்துகொள்ளும் மருத்துவர்! டாக்டர் ஜி

படம்
  டாக்டர் ஜி ஆயுஷ்மான் குரானா, ரகுல் ப்ரீத் சிங், ஷெபாலி ஷா இசை அமித் திரிவேதி   பொதுமருத்துவம் படித்த உதய் குப்தா, சிறப்பு மருத்துவராக மாற எலும்புகள் பற்றி படிக்க நினைக்கிறார். ஆனால் அதை படிப்பதற்கான சீட், அவருக்கு அருகில் கிடைப்பதில்லை. எனவே மகப்பேறு மருத்துவத்தை அவர் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அதை முழு மனதாக செய்யவில்லை. ஆண் என்றால் மகப்பேறு மருத்துவம் எதற்கு செய்யவேண்டும் என நினைக்கிறார். பெண்களுக்குத்தான் அது சரியானது என நினைக்கிறார். இந்த மனநிலையை அவர் மாற்றிக்கொண்டு நல்ல மகப்பேறு மருத்துவராக அவர் மாறுவதுதான் கதை. உதய் குப்தா, ஆணாதிக்க கருத்துகள் கொண்டவர். அவருக்கு அவரது நெருங்கிய உறவினரான எலும்பு மருத்துவர்தான் ரோல்மாடல். அதுபோல மருத்துவராகி சந்தோஷமாக வாழவேண்டும். வெற்றிகரமான மருத்துவராக செயல்டுவதே கனவு. ஆனால் நிலைமை அப்படி எளிதாக செல்லவில்லை. அவருக்கு மகப்பேறு மருத்துவம்தான் படிக்க கிடைக்கிறது.   மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை என இரண்டு இடங்களிலும் அவர் தன்னை மிகவும் அந்நியமாக உணர்கிறார். வகுப்பில் அவர் மட்டும்தான் ஒரே ஆண். வேலையின்போது, ஆசிரியரும் துறை தலைவருமான நந்த

உடலை நேர்த்தியாக்கிக்கொள்ள முயலும் இளைஞர்கள்! பாடி டிஸ்மார்பிக் டிஸார்டர் அதிகரிக்கிறதா?

படம்
  கண் இமை திருத்த சிகிச்சை வஜினா மறுகட்டமைப்பு சிகிச்சை ஹைமெனோ பிளாஸ்டி  காஸ்மெட்டிக் மேக் ஓவர்- உடலை அறுவை சிகிச்சை மூலம் திருத்திக்கொள்ள அலைபாயும் இளைஞர்கள்.   இன்று ஒருவர் வேலைக்கு சேர வேண்டுமெனில் நிறுவனங்களில் சில அவர்களின் சமூக வலைத்தள கணக்குகளையும் கேட்கிறார்கள். இந்த வகையில், தங்களின் புகைப்படத்தை பிறர் பார்க்கும்போது கண் புருவம் சரியாக இருக்கவேண்டும். டிஷர்ட் அணிந்தால் மார்பகங்கள் நல்ல பருத்த வடிவத்தில் தெரியவேண்டும். எந்த போஸிலும் மூக்கு அழகாக இருக்கவேண்டும். பேண்ட் அணிந்தால் பெண்குறி புடைப்பாக அதன் வடிவம் வெளியே தெரிவது போல இருக்க கூடாது என பெண்களும், ஆண்கள் தங்கள் வயிற்றை பாளம் பாளமாக வெடித்த வயல்போல கட்டாக இருக்கவேண்டுமென மெனக்கெடுகிறார்கள். தங்களது உடல், மனம் பற்றி நிறுவனத்தினர் தவறாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்ன இன்று அதிகம் கவலைப்படுகிறவர்கள் உருவாகிவிட்டனர். மூக்கின் வளர்ச்சி பெண்களுக்கு பதினாறு வயதிலும் ஆண்களுக்கு பதினெட்டு வயதிலும் முழுமை பெறுகிறது. இந்த வயதிற்குள் மூக்கின் அமைப்பை மாற்றி அமைத்தால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும். இதைப்பற்றி மருத்துவர்கள் எடுத

பெண்கள் அழகுக்காக மட்டும்தான்-

படம்
  பெண்கள் அழகுக்காக மட்டும்தான்- திட்டமிட்டு பொதுபுத்தியை உருவாக்கும் ஜப்பான் பல்கலைக்கழகங்கள்   கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் பின்னாளில் மாநில அரசியல் கட்சியில் ஏதாவதொரு பதவியில் உயர்வார். அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்வார். இது பொதுவான காட்சி. ஆனால் ஜப்பானைப் பொறுத்தவரை அங்கு பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை படிக்கும்போதே மனதில் உறுதிபடுத்திவிடுகிறார்கள். ஜப்பான் வளர்ச்சி பெற்ற நாடு. பொருளாதார அளவில் இதைக் கூறுகிறேன். அதேசமயம் கலாசாரம் சார்ந்தும் அந்த நாடு உலகிற்கு கொடுத்த கொடைகள் அதிகம். ஆனால் பெண்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. இளம்பெண்ணின் வனப்பு, ஆனால் சிறுமியின் உடல் என்பது ஃபேஷன் உலகில் எதிர்பார்க்கப்படும் உடல் தகுதி. இதனால் நிறைய பெண்கள் வாழ்க்கை ஊட்டச்சத்து பற்றாக்குறையாகி நோய்வாய்ப்படுவதையெல்லாம் கட்டுரைகளில் வாசித்திருப்பீர்கள். ஆனால் இப்படி பெண்கள் இருப்பதை ஒரு சமூகமே விரும்பினால், அப்படித்தான் இருக்கவேண்டுமென சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை தெரிவித்தால் எப்படியிருக்கும்? இதுபோ

ஆண்களே பிடிக்காத காதலியின் தாயாரின் மனதை மாற்றும் காதலனின் மெகா குடும்பம்! - ஆடவாலு மீக்கு ஜோகார்லு - சர்வானந்த், ராஷ்மிகா

படம்
  ஆடவாலு மீக்கு ஜோகார்லு இயக்கம் கிஷோர் திருமலா  இசை டிஎஸ்பி  சர்வானந்த், ராஷ்மிகா மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள்  கணவரால் ஏமாற்றப்பட்டு ஆண்களே ஏமாற்றுக்கார ர்கள் என  தள்ளிப்போகும் காதலியின் தாயின் மனதை மாற்றும் காதலனின் கதை.. சிரஞ்சீவியின் குடும்பம் கூட்டு குடும்பமாக வாழ்கிறது. தாய் ஆதி லட்சுமியின் தங்கைகள் அனைவருமே ஒன்றாக கூடி வாழ்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே ஆண் வாரிசு என்றால் அது சிரஞ்சீவிதான். இதில் பத்மாவதி என்ற சித்திக்கு மட்டும் குழந்தைகள் கிடையாது.  அவளுக்கு சிரஞ்சீவி தான் எல்லாமே. ஏனென்றால் அனைவருமே தங்கள் குடும்பத்தின் ஆண் வாரிசான சிரஞ்சீவி மேல் அன்பை பொழிகிறார்கள். இப்படி வளருபவனுக்கு திருமணம் என்று வரும்போது இந்த பெண்களே அதை பல்வேறு குறைகள் சொல்லி தட்டிக்கழிக்கிறார்கள். முதலில் பரவாயில்லை என நினைக்கும் சிரஞ்சீவி பிறகு வருத்தப்பட ஆரம்பிக்கிறான். பிறகு இவர்கள் பெண்களை வேண்டாம்  என்று சொன்ன நிலை மாறி அவர்கள் சிரஞ்சீவியை மறுக்கும் நிலை உருவாகிறது. கூடுதலாக சிரஞ்சீவி சில பெண்களைச் சென்று பார்த்தால்  அவர்களுக்கு நல்ல வரன்கள் குதிர்கிறது என பேச்சும்  ஊருக்குள் க

சமூக மாற்றம் ஏற்படுத்திய படங்கள் - கிங் ரிச்சர்ட், சக்தே இந்தியா, இறுதிச்சுற்று, ராட்சசி, தங்கல்

படம்
              சமூக மாற்றம் ஏற்படுத்திய திரைப்படங்கள் தாரே ஜமீன் பர் அமோல் குப்தா தனது ஓவிய ஆசிரியரை மனதில் வைத்து படத்தில் வரும் பாத்திரத்தை உருவாக்கியிருந்தார். படத்தில் டிஸ்லெக்சியா குறைபாடு கொண்ட சிறுவன் இருப்பான். அவனுக்கு ஓவியத்திறமை இருக்கும். அதை பள்ளியில் உள்ள கலை ஆசிரியர் ராம் சங்கர் நிகும்ப் கண்டறிந்து அவனை ஊக்கப்படுத்துவார். படம், அறிவுசார் குறைபாடு கொண்டவர்கள், மாற்றுத்திறனாளிகளை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை காட்சிபடுத்தி குற்றவுணர்வுக்கு ஆளாக்கியது. ஹிச்கி இதில் ஆசிரியர் பாத்திரத்தை ராணி முகர்ஜி ஏற்றிருந்தார். குறும்பான மாணவர்களின் திறமையை வெளியே கொண்டு வருவதுதான் படத்தின் மையக்கதை. இதில் பிரச்னை என்பது பள்ளியில் உள்ள குறும்பான மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியருகே டூரெட் சிண்ட்ரோம் பாதிப்பு இருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் பேசுவதில் உடல் மொழியில் வினோத செய்கைகள் இருக்கும். இதோடு ராணிக்கு அவரது அப்பாவுடன் உறவு சீராக இருக்காது. இதையெல்லாம் படம் பேசி ரசிகர்களை கவர்ந்தது. சூப்பர் 30 கணித ஆசிரியர்  ஆனந்த் குமார் பற்றிய படம். நாயகன் பாத்திரத்தை ஹிரித்திக

பெண்களின் பாலியல் விழைவை மறுக்கும் சமூகம்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  21.12.2021 மயிலாப்பூர்  அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  நீங்கள் சென்னைக்கு வந்தாலும் கூட உங்களை என்னால் பார்க்க முடியவில்லை. வருத்தம்தான். என்ன செய்வது  நேரம் குறைவு. நல்லபடியாக ஊருக்குச் செல்லுங்கள். இன்னொரு நாள் சந்திப்போம். டிசம்பர் மாத குளிர் இரவிலேயே தொடங்கிவிடுகிறது. நான் காலை எட்டு மணிக்கே எழுந்து குளித்து சவரம் செய்துவிடுகிறேன். அதற்கு பிறகு நேரம் ஆனால், வட இந்திய ஆட்கள் கழிவறை, குளியலறையைக் கைப்பற்றி விடுவார்கள். மூன்றாவது மாடியில், வட இந்தியர்களோடு இப்போது நாங்கள் 9 பேர் தங்கியுள்ளோம்.  திருமண வயது சட்டம் பற்றி படித்துக்கொண்டு இருக்கிறேன். பெற்றோர்கள் 21 வயது வரை பிள்ளைக்கு பாதுகாவலர்களாக இருப்பார்கள். பெண்களின் பாலியல் தேர்வுகளை, விருப்பங்களை மறுத்தே சமூகம் உயிர்பிழைத்து வந்திருக்கிறது. பல்வேறு சட்டங்கள் வழியாக பாஜக அரசு தனது கருத்தியலை சமூகமெங்கும் பதித்து வருகிறது. நன்றி! அன்பரசு  23.12.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  இன்று மடிக்கணினியை அன்வர் என்பவரிடம் பழுது நீக்க கொடுத்தேன். புதிதாக ஓஎஸ் பதிவாகும்போது அதில் உள்ள

பெண்களுக்கு ஆடுகள் தரும் பொருளாதார சுதந்திரம்! - ஆகாகான் பௌண்டேஷனின் உதவி!

படம்
 ஆடுகள் தரும் பொருளாதார சுதந்திரம்! இந்தியா, டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தில் உச்சம் தொட்டுள்ளது.  இக்காலத்திலும் கிராமப்புற இந்தியாவை வேளாண்மையும், கால்நடைகளும்தான் தாங்கிப்பிடிக்கின்றன. கிராமங்களில் வீட்டில் வாழும் பெண்கள், கால்நடைகளை வளர்த்தே குடும்பச் செலவுகளைச் சமாளிக்கின்றனர்.   பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கென, தன்னார்வ அமைப்பான  ஆகாகான் பௌண்டேஷன் திட்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த அமைப்பு, ஆடுகளுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் வகையில்,  கிராம பெண்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கிறது. இதன்மூலம் பெண்கள், ஆடுகளுக்குத் தேவையான மருந்துகள், சிகிச்சையை வழங்கி அதற்கென குறிப்பிட்ட தொகையை சேவைக்கட்டணமாகப் பெறுகின்றனர். இது பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்குகிறது.  கிராமத்தில் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுக்கு, பாசு ஷகி (pashu sakhi) என்று பெயர். இதற்கு இந்தி மொழியில், ’விலங்குகளின் நண்பன் ’என்று பொருள். இந்தியாவில் வாழும் கால்நடைகளின் எண்ணிக்கை, 13 கோடியே 50 லட்சம் ஆகும். நோய்க்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை 40 சதவீதமாக உள்

சுயமாக சாதித்து கோடிகளைக் குவித்த அமெரிக்க பெண்கள்!

படம்
  சுயமாக சாதித்த பெண்கள்  டயான் ஹெண்ட்ரிக்ஸ் கட்டுமானப் பொருட்கள் விற்பனை வயது 75 12.2 பில்லியன் பெருந்தொற்று காலத்தில் ஹெண்ட்ரிக்ஸ் உருவாக்கிய நிறுவனம் கட்டுமானத்தில் ஏற்பட்ட விற்பனை உயர்வை சாதகமாக்கிக் கொண்டு சாதித்தார். கடந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலர்கள் சம்பாதித்தார். நிறுவனத்தை தனது கணவருடன் சேர்ந்து தொடங்கி டாலர்களை சம்பாதித்துள்ளார்.  2020ஆம் ஆண்டு 12.1 பில்லியனாக இருந்த வருமானம் இப்போது 15 பில்லியனாக உயர்ந்துள்ளது.  ஜூடி ஃபால்க்னர்  உடல்நலம் தொடர்பான நிறுவனம் வயது 78 6.7 பில்லியன் டாலர்கள் மருத்துவ ஆவண நிறுவனம் எபிக் சிஸ்டம்ஸ், 3.8 பில்லியன் டாலர்களை வருமானமாக பெற்றது. மைசார்ட் எனும் மென்பொருளை நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பயன்படுத்தி வேக்சின் பாஸ்போர்ட் பெறலாம். 1979ஆம் ஆண்டு தனது வீட்டு அடித்தளத்தில் தொடங்கிய நிறுவனம் இது. இதில் ஜூடிக்கு 47 சதவீத பங்கு உள்ளது. வருமானமோ, வம்போ எதைப் பற்றியும் பேசாத நிறுவனம் கடந்த ஆண்டுதான் ட்விட்டரில் இணைந்தது.  ஜூடி லவ்  ரீடெய்ல் கடைகள், கேஸ் நிலையங்கள் வயது 84 5.2 பில்லியன் டாலர்கள் 1964 தொடங்கி ரீடெய்ல் கடைகளை ஜூடியும் அவரது கணவ

100 பசுமை கிராமங்களை உருவாக்குவதே லட்சியம்! - அமண்டா மேக்ஸ்வெல், சூழல் செயல்பாட்டாளர்

படம்
  நேர்காணல் அமண்டா மேக்ஸ்வெல் நிர்வாக தலைவர், இயற்கை ஆதாரங்கள் பாதுகாப்பு கௌன்சில் (NRDC) தற்போதைய சூழலில் தூய ஆற்றல் இயக்கம் முக்கியமானதா? ஐ.நாவின் காலநிலை மாற்ற அமைப்பின் அறிக்கை, தற்போது, சூழல் பாதுகாப்பு சிக்கலை எதிர்கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளது.  அடுத்த சில ஆண்டுகளில் பிரச்னைகளை நாம் எப்படி தீர்க்கப் போகிறோம் என்பது முக்கியம். இதைப்பொறுத்தே, நாம் அடுத்த நூற்றாண்டில் வாழ முடியுமா இல்லையா என்று தெரியவரும். நாம் தூய ஆற்றல் பற்றி பேசினாலும் அதனை செயல்பாடாக மாற்றவில்லை. வாகனப்போக்குவரத்து, மின்சாரம், கட்டடங்கள் என அனைத்துமே ஆற்றல் சார்ந்த கண்ணியில் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் செயல்பாடு வழியாகவே 50 சதவீத பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன.  இதில் பெண்களுக்கான பங்களிப்பு என்ன? காலநிலை மாற்றத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, நிலத்தின் விளைச்சலும் பாதிக்கப்படும். வேளாண்மையில் பெண்கள் பெரும்பாலும் நேரடியாக ஈடுபடுவதால், அவர்கள் இல்லாமல் தூய ஆற்றல் துறையில் வெற்றி காண முடியாது.  நாங்கள் இந்தியாவில் பெண்களை முக்கியமான பங்களிப்பாளர்களாக நினைக்கிறோம்.  இந்தியாவில் உங்களது அமைப்பின் செயல்

பெண்களுக்கான எளிமையான இயற்கை இழைகளைக் கொண்ட துணிகளே லட்சியம்! - இந்து ஸ்ரீவஸ்தவா

படம்
  இந்து ஸ்ரீவஸ்தவா ஃபீல்குட் எனும் நிறுவனம் மூலம் கைகளால் நெய்யும் இழைகளைக் கொண்ட துணிகளை தயாரிக்கிறார் இந்து.  பெண்களின் அலமாரியில் 50 சதவீத உடைகளை கைகளால் நெய்த துணிகளாக மாற்றவேண்டும் என்பதே இந்துவின் லட்சியம்.  பிறருக்கு உதவவே தொழிலை தொடங்கினீர்களா என்ன? என்னுடைய மகள் தன்னுடைய உடை பற்றி எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருப்பாள்.  வேலை செய்யும் இடம், குடும்ப நிகழ்ச்சிகள் என அவள் அணியும் ஆடைகள் அனைத்தின் மீதும் இப்படி புகார்களை குவித்தாள். மகள் என்பதால் புகார்களை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாகவே நிறைய பெண்களுக்கு தங்கள் உடைமீது குறைகள், புகார்கள் உண்டு. அப்போது இந்திய ஜவுளித்துறை பற்றிய நூலொன்றை படித்தேன். அப்போதுதான் துணிகளில் பிரச்னை இல்லை. அதை நெய்யும் இழைகள் இயற்கையானவையாக இருக்கவேண்டும் என முடிவு செய்தேன். அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இந்துவை தொடங்கினேன். தொன்மைக்காலத்தில் மக்கள் தங்கள் பகுதியில் என்ன கிடைக்கிறதோ அதைத்தான் வாங்கி உடுத்துவார்கள். நான் தொடக்கத்தில் எனது மகளுக்காகவே உடைகளை வடிவமைத்தேன். அவை எளிமையான அழகுடையவை.  உங்களுடைய ரோல்மாடல் யார்? எனக்கு கோகோ சேனல் என்

பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆராய்ச்சிக்கு நிதியுதவி செய்ய தயங்குகிறார்கள்! - ரேச்சல் இ கிராஸ்

படம்
  ரேச்சல் இ கிராஸ்  பத்திரிகையாளர் எழுத்தாளர் ரேச்சல், ஸ்மித்சோனியன் வலைத்தளத்தில் அறிவியல் பகுதி ஆசிரியராக பணியாற்றுகிறார். அண்மையில் இவருக்கு பிறப்பு உறுப்பில் நோய்த்தொற்று ஏற்பட்டது. அப்போதிலிருந்து அவருக்கு தன்னுடைய உடலை முழுமையாக தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதுபற்றி வஜினா அப்ஸ்குரா - அனாடாமிகல் வாயேஜ் என்ற நூலை எழுதியுள்ளார். பெண் உடல் பற்றிய பல்வேறு தவறான கருத்துகளுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்.  இப்படி ஒரு நூலை எழுத உங்களைத் தூண்டியது எது? அறிவியல் வரலாறு தொடர்பான நான் பல்வேறு விஷயங்களை படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு சில விஷயங்கள் தெரிய வந்தது. அறிவியல் ஆராய்ச்சியைப் பொறுத்தவரை பெண்கள் சில வரம்புகளுக்குள்தான் இருந்திருக்கின்றனர். அதற்குமேல் அவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் பெண்களின் பிறப்புறுப்பு, கருப்பை ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளும் எனக்குள் உருவானது. பெண்களின் செயல்பாட்டிற்கும் அவர்களின் உடல் உறுப்புகளுக்கும் இடையே தொடர்பு இருப்பது எனக்கு தெரிய வந்தது. இதுபற்றிய கேள்விகளை பெண்களிடம் கேட்கலாம். ஆனால் அவர்கள் அதுபோ

காலநிலை மாற்றத்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டுமா? உங்களுக்காகவே இந்த நூல்கள் இதோ!

படம்
  காலநிலை மாற்றம் பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள் தி நியூ க்ளைமேட் வார் - தி ஃபைட் டு டேக் பேக் அவர் பிளானட் மைக்கேல் இ மன் காலநிலை மாற்ற வல்லுநர் மைக்கேல் இ மன், டோன்ட் லுக் அப் என்ற டிகாப்ரியோவின் பட பாத்திரம் போலவே இருக்கிறார். அதாவது நாயகனாக இருக்கிறார் என சொல்ல வருகிறோம். மைக்கேல், நடப்பு கால காலநிலை மாற்ற செயல்பாடுகள் எதை செய்தன எதை தவறவிட்டன என்பதை தெளிவாக விளக்குகிறார்.  தி அன் இன்ஹேபிட்டபிள் எர்த் டேவிட் வாலஸ் வெல்ஸ்  காலநிலை மாற்றம் பற்றிய பயத்தை ஏற்படுத்துகிற நூல் என இதனை தாராளமாக கூறலாம். இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால் என்னவாகும் என்பதை துல்லியமாக விளக்கியிருக்கிறார் டேவிட். பயம்தானே நம்மை முன்கூட்டியே செயல்படத்தூண்டும். அந்த வகையில் காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு செயல்பட டேவிட்டின் இந்த நூல் ஊக்கமாக அமையலாம்.  தி நட்மெக்ஸ் கர்ஸ் - பாரபிள்ஸ் ஃபார் எ பிளானட் இன் கிரிசிஸ்  அமிதவ் கோஷ் காலனிய காலம் தொடங்கி இன்றுவரை முதலாளித்துவ பொருளாதாரம் எப்படி இயற்கையை அழிக்கிறது என அமிதவ் கோஷ் விலாவாரியாக தகவல்களை சேகரித்து எழுதியிருக்கிறார். இதேபோல அமிதவ் எழுதிய தி

இந்தியாவின் சுயசார்பு தன்மை சாத்தியமா என ஆராயும் நூல்! - புதிய புத்தகங்கள்-

படம்
  ஃப்ரம் டிபன்டென்ஸ் டு செல்ஃப் ரிலையன்ஸ் பிமல் ஜெயின் ரூபா 695 ரூபாய் இறக்குமதியை சார்ந்து அல்லாமல் தானே உருவாக்கி உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்து மிஞ்சுபவற்றை உபரியை விற்கும் திட்டம் சாத்தியமா என்பதை ஏராளமான தகவல்களை வைத்து விளக்கியிருக்கிறார் பிமல் ஜெயின். இவர் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் என்பது முக்கியமான தகவல்.  நோமட்ஸ்  ஆன்டனி சட்டின் ஹாசெட் 799 ரூபாய்  மக்கள் எப்போதும் வரலாற்றின் வெளிப்புறங்களில் வாழ்கிறார்கள். ஆனால் அதன் உட்புறங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிய இந்த நூலை படியுங்கள். உருக், பாபிலோன், ரோம், சங்கன் ஆகிய நகரங்களில் வாழ்ந்த மக்கள் பற்றியும், அவற்றின் உருவாக்கம் பற்றியும் நூலில் பேசப்படுகிறது.  எ நியூ வே டு திங்க் ரோஜர் எல் மார்ட்டின் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  1250 ரூபாய்  உலகிலுள்ள முக்கியமான பல்வேறு பெருநிறுவனங்களின் இயக்குநர்களுக்கு ஆலோசனைகளை ரோஜர் வழங்கி வருகிறார். உலகளவில் உள்ள வணிக சவால்களை எப்படி சமாளிப்பது என நூலில் பேசியுள்ளார் ரோஜர்.  தோஸ் வுமன்ஸ் ஆர் கொரமண்டல் ரங்கா ராவ்  ஆலெப் புக் கம்பெனி 699 ரூபாய்  இதில் மூன்று பெண்களின் வாழ்க்கை, அவர்கள் சார்ந்த ம

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் முதியோர் இல்ல பெண்கள்!

படம்
  கோவையில் ஆர்எஸ் புரத்தில் உள்ளது ஆதரவற்றோர் இல்லம். அந்த இல்லத்தைச் சேர்ந்த முதியோர், தங்களுக்கு அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை உணவுகளை வழங்கி வருகின்றனர்.  கோவை கார்ப்பரேஷன், ஈர நெஞ்சம் என்ற தன்னார்வ அமைப்பு ஆகியவற்றின் ஆதரவு உதவியுடன் ஆதரவற்றோர் இல்லம், மாணவர்களுக்கு டீ, பிஸ்கெட், நீர்மோரை வழங்கிவருகிறது. தினசரி மாலை நான்கு மணிக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் இங்கு வருகின்றனர். இல்லத்தில் வாழ்பவர்கள் அனைவருமே குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்தான். அவர்கள் இன்று தாங்கள் வாழும் சமூகத்தையே குடும்பமாக நினைக்கிறார்கள் என்றார் ஈர நெஞ்சம் அமைப்பின் தலைவரான மகேந்திரன்.  முதியோர் அமைப்பினர் முதலில் பள்ளிக்கே சென்று டீ, பிஸ்கெட், சுண்டல், ஆகியவற்றை வழங்கி வந்திருக்கின்றனர். பிறகுதான் மாணவர்களே முதியோரை தேடி வரத் தொடங்கியிருக்கின்றனர். காலை உணவு கூட நாங்கள் வழங்க நினைத்தோம். ஆனால் அதற்கான நிதி உதவிகளைப் பெற்றால்தான் சாத்தியம் என்கிறார் ஆதரவற்றோர் இல்லத்தில் வாழும் லஷ்மி அம்மாள். அண்மையில் தெருவில் ஆதரவற்று கிடந்த பெண்ணை மீட்டு இல்லத்தில் சேர்த்தனர். பிறகு அந்த பெண்ணின் உறவினர்களைத் தேடியப

எனது முயற்சிகள் அனைத்துமே டிரையல் அண்ட் எரர் தான்! - ஃபேஷன் டிசைனர் அஸ்ரா சையத்

படம்
  அஸ்ரா சையத் சிறுவயதில் படிக்கும்போது நான் வக்கீலாக கனவு கண்டேன், பனிரெண்டு வயதில் டாக்டராக நினைத்தேன் என்று பேசுவார்கள். ஆனால் அப்படி எந்த விஷயமும் அஸ்ராவுக்கு இல்லை. சினிமாவுக்குள் நான் விபத்தாக வந்தேன் என மைதா மாவு அழகிகள் கொஞ்சு தமிழில் பேட்டி கொடுப்பதை படித்திருப்பீர்கள். ஃபேஷன் துறைக்குள் அஸ்ரா வந்ததும் அப்படித்தான். ஃபேஷன் டிசைன் டிகிரி படித்து முடித்து தனது தொழிலை சிறப்பாக செய்து வருகிறார். சொகுசு திருமண உடைகளுக்கான பிராண்ட் ஒன்றைத் தொடங்குவதுதான் அஸ்ராவின் கனவு.  2018ஆம் ஆண்டு அஸ்ரா என்ற பிராண்டை அஸ்ரா சையத் தொடங்கினார். வடிவமைப்பும், அதில் எம்பிராய்டரி வேலைப்பாடுகளும் தான் அஸ்ராவின் தனித்துவ பலம்.  உங்களுக்கு ஊக்கம் தந்தவர் யார்? எனக்கு பாட்டி தான் இத்துறை சார்ந்த ஊக்கம் தந்த முதல் நபர். நான் ஃபேஷன் துறையில் வேலை செய்துவிட்டு காலதாமதமாக வீட்டுக்கு போகும்போதெல்லாம் எனக்காக அவர் காத்திருப்பார். அவரது பொறுமை மற்றும் அன்பும், தாராள மனப்பான்மையும்தான் என்னை இந்தளவு ஃபேஷன் துறையில் வளர்த்திருக்கிறது.  நீங்கள் தொழில்சார்ந்து கற்றுக்கொண்ட பாடம் என்ன? வேகமாக ஒன்றைத் தொடங்குவதை விட அத

பெண்களை தொழில்முனைவோராக்கும் அங்கிதி போஸ்!

படம்
  அங்கிதி போஸ் அங்கிதி போஸ் தொழில்முனைவோர், ஸில்லிங்கோ 2015ஆம் ஆண்டு. அங்கிதிக்கு வயது 23. அப்போதுதான் தனது வேலையை விட்டு விலகி தனக்கென தனி வணிக நிறுவனத்தைத் தொடங்கினார்.ஸில்லிங்கோ என்பதுதான் அதன் பெயர்.  வணிக நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனம் இது.  சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் வணிக ரீதியான பிரச்னை ஏற்பட்டு வந்த சமயம். பாங்காக் சென்றிருந்தார் அங்கிதி. அங்கு சிறு, குறு வணிகர்கள் தங்களுக்கென இணையநிறுவனங்களே இல்லாமல் வேலை செய்து வந்தனர். அவர்களின் பொருட்களை இணையத்தில் வாங்க முடிந்தால் இன்னும் எளிதாக வருமானத்தை அவர்கள் பெறலாம் என அங்கிதி நினைத்தார்.  இதற்காக துருவ் கபூருடன் சேர்ந்து ஸில்லிங்கோ நிறுவனத்தைத் தொடங்கினார். அமெரிக்க வணிகர்கள் சீனாவிலிருந்து பொருட்களை வாங்குவதை கைவிட்டு வேறு நிறுவனங்களை தேடி வந்தனர். இந்த நேரத்தில் தெற்காசியாவில் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வந்தன. ஆன்லைனில் இந்த  நிறுவனங்கள் இருந்தால் எளிதாக வணிக வாய்ப்பை பெற்றிருக்க முடியும். இதற்கான பல்வேறு கட்டமைப்புகளை, வசதிகளை அங்கிதி, வாடிக்கையாளர்களுக்கு செய்து கொடுக்க தொடங்கினார்.  இந்தோனேஷி

மாதவிடாய் பற்றிய தயக்கத்தை களைய உதவிய அதிதி குப்தா! - மென்ஸ்ட்ரூபீடியா

படம்
  அதிதி குப்தா, மென்ஸ்ட்ரூபீடியா அதிதி குப்தா எழுத்தாளர், துணை நிறுவனர் - மென்ஸ்ட்ரூபீடியா பெண்களுக்கு ஏற்படும் அந்த மூன்று நாட்கள் அவதி தான் அதிதி குப்தாவை நிறுவனம் தொடங்க வைத்திருக்கிறது. மாத விலக்கு, மாத விடாய் பற்றிய பல்வேறு புனைகதைகளை தவறு என்று தனது மென்ஸ்ட்ரூபீடியா நிறுவனம் மூலம் நிரூபணம் செய்து வருகிறார். அனைத்து மக்களுக்கும் மாதவிடாய் பற்றிய உணமைகளை எளிமையான விதத்தில் விளக்கி வருகிறார்.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா எனும் இடத்தில் பிறந்தவர் அதிதி. இவர் பிறந்த இடத்தில் மாதவிடாய் பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை. அதிதிக்கு முதன்முறையாக 12 வயதில் மாதவிடாய் வந்தபோது அவருக்கு ஏதும் புரியவில்லை. அடிவயிற்றில் பெருகிய ரத்தத்தைப் பார்த்தவர், உடனே அலறியடித்துக்கொண்டு ஓடிப்போய் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அவர் அம்மா உடனே அதிதியை குளிக்கச்சொல்லியிருக்கிறார். இப்படி ரத்தப்போக்கு வருவதும் நிற்பதுமாக இரண்டரை நாட்கள் சென்றிருக்கிறது.  மாதவிடாய் வந்த தினம் தொட்டு அதிதி தனி அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். அது அசுத்தமான இடம். கூடவே ரத்தப்போக்கை துடைக்க கொடுத்த துணியும் சுத்தமாக இல்லை

கல்வியைக் கற்கும் பெண்களே திருமண வயதைத் தீர்மானிக்கவேண்டும்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா? இன்று நான் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக்கொண்டு நண்பர் சக்திவேலைப் பார்க்க சென்றேன். படம் பார்க்கலாம் என்றார். தினசரி மூன்று படங்களைப் பார்க்கும் சினிமா விரும்பி அவர். நான் உங்களுடன் பேசினாலே போதும் என்றேன். மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசும் மனிதர்.  திறக்கக்கூடாத கதவு - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். பேய்க்கதை. தியாகு என்பவர் கதையை சொல்கிறார். நல்ல ஆவி, அதை முடக்கும் கெட்ட ஆவி என கதை சுவாரசியமாக செல்கிறது. நண்பர் சக்திவேலிடம் சுவிசேஷங்களின் சுருக்கம் - லியோ டால்ஸ்டாய் எழுதிய நூலை படிக்க வாங்கி வந்தேன். நேரம் ஒதுக்கி படிக்கவேண்டும். மனம் முழுக்க வேலை பற்றிய அலுப்பு உள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.  கணினி பழுதாகிவிட்டது. அதுவும் ஒருவகையில் நல்லதுதான். இப்போதுதான் நூல்களை ரிலாக்ஸாக படிக்க முடிகிறது.  நன்றி! அன்பரசு  11.12.2021 ------------------ அன்பு நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமா? வீட்டில் உள்ளோரையும் கேட்டதாக சொல்லுங்கள். சுவிசேஷங்களின் சுருக்கம் நூலை 50 பக்கங்கள் ப

பெண்களே நடத்தும் பூம்புகாரின் டால்பின் உணவகம்!

படம்
  டால்பின் உணவகம் நடத்தும் மீனவப் பெண்கள் பூம்புகாரில் உள்ள கடற்கரையோரமாக அமைந்துள்ளது. டால்பின் உணவகம். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட கூரைகளால் அமைந்து உணவகம் இது. கடற்கரையோரம் இதுபோல கடைகள் அமைவது பெரிய ஆச்சரியம் அல்ல. இதனை முழுக்க பெண்களே கூட்டாக பணம் போட்டு நடத்துவதுதான் ஆச்சரியமானது.  கடற்கரையோரமாக வாழும் பெண்கள், தொழில்முனைவோராக இருப்பது ஆச்சரியமல்ல. ஆனால் இப்படி முறையாக கடை தொடங்கி நடத்துவது வியப்பளிப்பதுதான். தங்களது இனக்குழுவில் உள்ள ஆண்கள், பெண்கள், போட்டி கடைகள் என நிறைய சவால்களைச் சந்தித்துத்தான் பெண்கள் டால்பின் உணவகத்தை நடத்தி வருகிறார்கள்.  பெருந்தொற்றுக்கு முன்னதாக, தினசரி 5 ஆயிரம் வரை வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆர்டர்களுக்கு ஏற்று உணவு தயாரித்தால்,  தொழிலில் உள்ள பெண்களுக்கு தலைக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கூறுகிறார்கள்.  டால்பின் உணவகம் நடத்துவதற்கான ஐடியா, உதவிகளை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்னேகா என்ற அமைப்பின் எல் கிருஷ்ணன் செய்துகொடுத்துள்ளார். இந்த அமைப்பு, சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை கொடுத்து உதவியதோடு, பொருட்களை மதிப்புகூட்டி எப்படி விற்பனை செய்வது என பயிற்சி