100 பசுமை கிராமங்களை உருவாக்குவதே லட்சியம்! - அமண்டா மேக்ஸ்வெல், சூழல் செயல்பாட்டாளர்

 
















நேர்காணல்
அமண்டா மேக்ஸ்வெல்

நிர்வாக தலைவர், இயற்கை ஆதாரங்கள் பாதுகாப்பு கௌன்சில் (NRDC)

தற்போதைய சூழலில் தூய ஆற்றல் இயக்கம் முக்கியமானதா?

ஐ.நாவின் காலநிலை மாற்ற அமைப்பின் அறிக்கை, தற்போது, சூழல் பாதுகாப்பு சிக்கலை எதிர்கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளது.  அடுத்த சில ஆண்டுகளில் பிரச்னைகளை நாம் எப்படி தீர்க்கப் போகிறோம் என்பது முக்கியம். இதைப்பொறுத்தே, நாம் அடுத்த நூற்றாண்டில் வாழ முடியுமா இல்லையா என்று தெரியவரும். நாம் தூய ஆற்றல் பற்றி பேசினாலும் அதனை செயல்பாடாக மாற்றவில்லை. வாகனப்போக்குவரத்து, மின்சாரம், கட்டடங்கள் என அனைத்துமே ஆற்றல் சார்ந்த கண்ணியில் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் செயல்பாடு வழியாகவே 50 சதவீத பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. 

இதில் பெண்களுக்கான பங்களிப்பு என்ன?

காலநிலை மாற்றத்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, நிலத்தின் விளைச்சலும் பாதிக்கப்படும். வேளாண்மையில் பெண்கள் பெரும்பாலும் நேரடியாக ஈடுபடுவதால், அவர்கள் இல்லாமல் தூய ஆற்றல் துறையில் வெற்றி காண முடியாது.  நாங்கள் இந்தியாவில் பெண்களை முக்கியமான பங்களிப்பாளர்களாக நினைக்கிறோம். 

இந்தியாவில் உங்களது அமைப்பின் செயல்பாடு பற்றி கூறுங்கள்.

வீடுகளை குளிர்விக்கும் தொழில்நுட்பம் கொண்ட கூரைகளை  குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறோம். இதற்காக மகிளா ஹவுசிங் ட்ரஸ்ட், சேவா ஆகிய இரு அமைப்புகளோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள கிராமங்களில் பெண்களுக்காகப் பணியாற்றி வருகிறோம்.  அடுத்த 2 ஆண்டுகளில் பசுமையான 100 கிராமங்களை உருவாக்க முயன்று வருகிறோம். சோலார் பம்புகள், விளக்குகள், நீர்ப்பாசன கருவிகளை குறைந்த விலையில் பெறுவதற்கு நாங்கள் பெண்களுக்கு உதவுகிறோம்.


livemint 12.4.2022 (women more impacted by climate change) swathi uthra

Amanda maxwell

https://www.nrdc.org/experts/amanda-maxwell

கருத்துகள்