இடுகைகள்

மொழிபெயர்ப்பு நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உலகத்தலைவர் யோகாவின் மூலம்தான் உருவாக முடியும்! - ஹெச்.ஆர். நாகேந்திரா

படம்
மருத்துவர் ஹெச்.ஆர். நாகேந்திரா சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தானா சம்ஸ்தானா , பெங்களூரு யோகாவால் உடல்நலம் மேம்பட அறிவியல்பூர்வமாக என்ன ஆதாரங்கள் இருக்கின்றன? யோகா என்பது உடல், உயிர், மனம், புத்தி என அனைத்து விஷயங்களும் மேம்பட உதவுகிறது. இதனை அன்னமய கோஷா, பிராணமய கோஷா, மனோமய கோஷா, விஜினாமய கோஷா இவற்றைக் குறிப்பிடலாம். தொற்றுநோய்களை அனாஜிதா வியாதி என்று குறிப்பிடலாம். யோகா, நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. யோகா நமது உடல், மனத்தின் மீது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவை வாழ்க்கையில் அன்பு மற்றும் திருப்தியை ஏற்படுத்துகிறது. கோவிட் -19க்கு எதிராக யோகா சிறந்த தீர்வினைத் தரும் என நினைக்கிறீர்களா? நாம் இன்னும் பெருந்தொற்று பாதிப்பை தடுக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கவில்லை. யோகா செய்வது ஒட்டுமொத்த நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒருவரை யோகா ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பது என்ன நிச்சயம்? ஆயுர்வேதத்தில் ஆகார, விகார, விச்சார, ஆச்சார என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். உணவு, மகிழ்ச்சி, சிந்தனை, உடல்நலம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்துதா

பொதுமுடக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை - ராஜீவ் பஜாஜ் இயக்குநர் பஜாஜ் நிறுவனம்

படம்
                                     swarajya நேர்காணல் ராஜீவ் பஜாஜ், பஜாஜ் நிறுவன இயக்குநர் தொழிற்சாலையில் இரண்டு தொழிலாளிகள் இறந்துள்ளனர். விதிகள் மீறல்தான் இறப்புக்கு காரணமா? இந்தியாவில் 30 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை எப்படி வீட்டிலேயே வைத்திருக்க முடியும்.? இறந்தவர்களில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், மற்றொருவருக்கு நீரிழிவுநோய் ஆகிய பிரச்னையும் இருந்துள்ளது. அறிகுறிகள் மெல்லியதாக இருக்கிறது என ஒருவரை மருத்துவர்கள் சோதிக்கவில்லை. மற்றொருவருக்கு ஆக்சிஜன் வசதி கொடுக்கப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக கோவிட் -19 தொற்று வேகமாக பரவி வருகிறது ஆபத்தானது. பொதுமுடக்கம் பற்றிய உங்களது கருத்துகள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே? நான் சமூக வலைத்தளத்தில் செயல்படவில்லை. எனவே இந்த கருத்துகள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. நான் கூறிய கருத்து பொதுமுடக்கம் பற்றியல்ல. அந்நேரத்தில் அதிகமான நோய்த்தொற்று மற்றும் மரணித்த மக்கள் பற்றித்தான். நீங்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கணக்கை எடுத்துப் பாருங்கள். ஜப்பான், வியட்நாம், தாய்லாந்த

டிஜிட்டலுக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்வதும் சரியானது! - இயக்குநர் சூஜித் சிர்கார்

படம்
ஆனந்த்பஜார் இயக்குநர் சூஜித் சிர்கார், இந்தி திரைப்பட இயக்குநர் குலாப் சித்தாபோ படம் அதன் வகை அடிப்படையில் வித்தியாசமாக இருக்கிறது. எப்படி இந்த கதையைப் பிடித்தீர்கள். நான் படத்தின் எழுத்தாளர் ஜூகி சதுர்வேதியோடு அமர்ந்து யோசித்தபோது இந்த கதை பிடிபட்டது. நான் இந்த நையாண்டி வகை சினிமாவை எடுத்தது இல்லை என்பதால் உங்களுக்கு படத்தின் தன்மை புதிதாக இருக்கிறது. லக்னோவில் உள்ள நில உரிமையாளர், அவரது கட்டடத்தில் குடியிருப்பவர்கள், அவர்களது பிரச்னைகள், அவர்களது சிந்தனை என பல்வேறு விஷயங்கள் படத்தில் பேசப்படுகிறது. பிகு படத்திற்கு பிறகு அமிதாப் இந்த படத்தில் நடிக்கிறார் அல்லவா? நாங்கள் இந்தப்படத்தின் கதையை உருவாக்கும்போது அவரை அணுகிவிட்டோம். கதையைக் கேட்டதும் அவர் நடிக்க சம்மதித்துவிட்டார். அவர் இயக்குநரின் கதை, அவரது பார்வையை மதிப்பவர். மேலும் பிற நடிகர்களோடு இணைந்து நடிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை. கதாபாத்திரம், அதன் தோற்றம், உடல்மொழி என அனைத்திற்கும் மெனக்கெடும் தன்மை என்னை பிரமிக்க வைக்கிறது. டிஜிட்டல் வெளியீடு பற்றி எப்படி முடிவெடுத்தீர்கள்? ஏப்ரல் 17ஆம் தேதி படத்தை தியேட்டரில்

ஆரம்பநிலை சுகாதாரத்திலேயே நாம் நின்றுகொண்டிருக்க முடியாது! - இந்து பூஷன் - ஆயுஷ்மான் பாரத்

படம்
cc மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை ஆயுஷ்மான் பாரத், இயக்குநர் இந்து பூஷன்  திட்டம் தொடங்கி இருபது மாதங்களாகிறது. இயக்குநராக இதுபற்றி உங்கள் கருத்து என்ன? இத்திட்டத்தை தொடங்கி ஓராண்டு எட்டு ஆண்டுகள் ஆகிறது. எங்களது ஐடி குழு, திட்டத்தை நாடு முழுக்க விரிவு செய்ய முயன்று வருகிறது. மேலும் மக்கள் அதிக விலையில் திட்டம் இருந்தால் அதனை நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். குறைவான கட்டணம் இருந்தால் நிறைய விஷயங்களை புறக்கணிக்கின்றனர். எனவே நாங்கள் முக்கியமான சிகிச்சைகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க கவனம் கொண்டுள்ளோம்.  பல்வேறு மருத்துவமனைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை கொண்டு செல்ல முயன்று வருகிறோம். மாநிலங்கள் இத்திட்டத்தை விரிவுபடுத்த வாய்ப்புள்ளது.  மக்களில் 30  சதவீதம் பேரை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. தகவல்சேகரிப்பில் ஏன் இப்படி பிழைகள் நடக்கின்றன? நாங்கள் இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதம் பேரை இத்திட்டத்திற்கு உள்ளே கொண்டு வர நினைத்துள்ளோம். இதற்கு 2011ஆம் ஆண்டு எடுத்த சமூக பொருளாதார கணக்கெடுப்பை இத்திட்டத்திற்கு அடிப்படையாக கொண்டுள்ளோம். இத்திட்டத்தில் சில பிரச்னைகள்

நோயாளிகளை நாங்கள் தேடிச்சொன்று கொண்டிருக்கிறோம்! - சுரேஷ் கஹானி

படம்
cc கூடுதல் கமிஷனர்  சுகாதாரம் - சுரேஷ் கஹானி  நீங்கள் கோவிட் -19 நோயாளிகளிடம் பணியாற்றி வருகிறார்கள். என்ன மாதிரியான பாதுகாப்பு விஷயங்களைக் கடைப்பிடிக்கிறீர்கள்? துளசி, கரும் மிளகு, கிராம்பு ஆகியவற்றை சாப்பிடுகிறேன். ஏழு வாரங்களாக ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்தை சாப்பிட்டுள்ளேன். குறிப்பிட்ட இடைவெளிகளில் கைகளை கழுவி வருகிறேன்.  ஜூலை மாதம் பெருந்தொற்று எப்படி இருக்கும்? பருவகாலம் பெருந்தொற்று விவகாரத்தில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தாது என்று நினைக்கிறோம். மேலும் விரைவில் நாங்கள் பெருந்தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவோம்.  மகராஷ்டிரத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதில் நிறைய குழப்பம் நிலவுகிறதே ஏன்? நாங்கள் முதலில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்தான் கவனம் செலுத்தி வந்தோம். இதன் காரணமாக, இறந்துபோன கோவிட் -19 நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை கணக்கிடவில்லை. பின்னர், நாங்கள் பல்வேறு மருத்துவமனைகளிடம் நோயாளிகளின் இறப்பு பற்றிய எண்ணிக்கை கேட்டுள்ளோம்.  நோயாளிகளின் எண்ணிக்கையை மறைக்கும் எண்ணம் எங்களுக்கு கிடையாது.  ரெம்டெசிவிர் மருந்தை எப்படி பெறப்போகிறீர்கள்? நாங்கள் இம்மருந்தைப்

குறைந்த வாடிக்கையாளர்கள் மூலம் அதிக வருமானம் பெறுவோம்! - நோயல் டாடா

படம்
நோயல் டாடா டிரெண்ட், வோல்டாஸ் நிறுவனத் தலைவர் டிரெண்ட் நிறுவனத்தின் வருவாய் 85 சதவீத வருவாய், வெஸ்ட்சைட் மற்றும் பிற லேபிள்கள் மூலம்தான் கிடைக்கிறது அல்லவா? நாங்கள் எங்களுடைய நிறுவனத்தின் பிராண்டுகளை அதிகம் காட்சிபடுத்தவிருக்கிறோம். இவை பிற நிறுவனங்களின் பொருட்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும். பெருந்தொற்று பாதிப்பு முடிவுற்றபிறகு நிறைய கடைகள் டிரெண்ட் மெ பெயரில் திறக்கவிருக்கிறோம். பெருந்தொற்று பாதிப்பால் விற்பனை மையங்களில் ஏதேனும் மாற்றங்களை செய்யவிருக்கிறீர்களா? பலவீனமான பிராண்டுகளை இனி கடைகளில் விற்கவேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம். பெருந்தொற்று காரணமாக நிறைய கடைகளை அடைக்க நேர்ந்துள்ளது. இந்தியாவில் இவணிக வலைத்தளங்களின் வளர்ச்சி 6 சதவீதம்தான் உள்ளது. எனவே, கோவிட் -19 க்கும்பிறகு கடைகளும், இவணிக நிறுவனங்களும் சேர்ந்து வளர வாய்ப்புள்ளது. கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக வாடிக்கையாளர்கள் செலவு செய்வது குறைந்துள்ளது பற்றி உங்களது கருத்து என்ன? இப்போது ஏற்பட்டுள்ள நிலை தற்காலிகமானதுதான். வேலையிழப்பு, எதிர்காலம் குறித்த கவலை ஆகியவை மக்களை குறைவாக செலவழிக்க வைத்துள்ளது. ந

தற்சார்புக்காக அதிக செலவுகளை செய்ய, சேமிப்புகளை கரைக்க தயாராக இருக்கிறீர்களா? - ரதின் ராய்

படம்
பிஸினஸ் ஸ்டாண்டர்டு ரதின் ராய், பொது பொருளாதாரம் மற்றும் கொள்கை அமைப்பு தலைவர் ரதின்ராய், மேற்சொன்ன அமைப்பின் தலைவராக இருந்து வரும் ஆகஸ்ட் மாதம் பதவியைவிட்டு விலகுகிறார். இவருடைய பதவிக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வரவிருக்கிறார். பிரதமர் மோடிக்கு ஆலோசகராக இருந்த ரதின்ராயின் அடுத்த திட்டம், இந்தியா சீனாவை விட குறைந்த செலவில் பொருட்களை தயாரித்து தர முடியுமா, இந்தியாவின் முன்னுள்ள அடுத்த திட்டங்கள், வாய்ப்புகள் என்னவென்று அவரிடம் பேசினோம். நீங்கள் பதவி விலகுவதற்கும், உர்ஜித் படேல் பதவி ஏற்பதற்குமான நிகழ்ச்சிகளை தற்செயல் என்று கூறலாமா? இந்த அமைப்பின் தலைவர் விஜய் கேல்கர். அவர் தலைவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதற்கும், உர்ஜித் படேல் அந்த பதவிக்கு அறிவிக்கப்பட்டதற்கும், நான் பதவியை ராஜினாமா செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. உர்ஜித் படேலை விட இப்பதவிக்கு வேறு யாரும் பொறுத்தமாக இருக்க முடியாது. உலகளவில் அவர் பிரபலமான ஆளுமை, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகிய அம்சங்கள் நம் முன் உள்ளன. அவர் பதவியேற்றபிறகு நான் பதவி விலகினால் கூட நீங்கள் அதற்குப் பின்னால் ஏதாவது கார

வேட்பாளர்களின் தகவல்களை தவறு என்றால் வழக்கு போடுங்கள்! - தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா

படம்
தேர்தல் ஆணையர், சுஷில் சந்திரா இந்தியன் எக்ஸ்பிரஸ் ரித்திகா சோப்ரா வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கிய விவரங்கள் தவறு என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று கூறியிருக்கிறீர்களே? நாட்டிலுள்ள ஜனநாயக முறைப்படி ஒருவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யும் விவரங்கள் உண்மையாக இருக்கவேண்டும். அவர் தவறான, பொய்யான விவரங்களை அளித்துள்ளார் என்று எங்களுக்கு தெரிய வந்து விசாரணை செய்து உறுதி செய்வோம். தொடர்புடைய அரசியல் கட்சிக்கும் அறிவிப்போம். பின்னர் வழக்கு தொடர்வோம். குற்றம் சாட்டப்பட்டவர் தான் தவறு செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை அளித்தால் அதனை ஏற்போம். அப்படியெனில் நீங்கள் நேரடியாக புகார், அதில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கு தொடரமாட்டீர்கள்? உண்மையில் வேட்பாளர் தனது விவரங்களை போலியாக உருவாக்கி ஆணையத்தை ஏமாற்ற முயல்வது உறுதியானால், களப்பணி அலுவலர் காவல்துறையில் புகாரை பதிவார். பின்னர், நீதிமன்றத்திற்கு இதனை எடுத்துச்செல்வோம். இதுமட்டுமன்றி, தனிநபராக கூட ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். அதனை நாங்கள் கட்டுப்படுத்த மாட்டோம். ஜம்மு காஷ்மீரில் டீலிமிட

என் மீதான விமர்சனங்களுக்கு ராக்கெட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளேன்! - லியாண்டர் பயஸ்

படம்
அவுட்லுக் லியாண்டர் பயஸ் விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெற்றபிறகு நிர்வாகம் சார்ந்த பணிகளுக்கு செல்லவிருக்கிறீர்களா? எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதனை மேற்கொள்வேன். இதுதான் என்றில்லை. நான் திறந்த மனதோடு இருக்கிறேன். உங்கள் சுயசரிதை எப்போது வெளிவரவிருக்கிறது? நாங்கள் முன்பிருந்தே அதற்கான வேலைகளை செய்து வருகிறோம். எப்படி வந்திருக்கிறது என இனிமேல்தான் பார்க்கவேண்டும். ஆஸ்கர் விருதை வாங்கவேண்டும் என்று நீங்கள் முன்னர் கூறியது உறுதியாகத்தானா? ஆமாம். நான் முன்னர் அப்படி கூறினேன். சாதனை கொஞ்சம், கனவு கொஞ்சம் என கருதி அப்படி சொன்னேன். விளையாட்டில் சாதிப்பதற்கான கனவில் அப்படி சொன்னேன்.   ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான பரிசுகளை நிதியும் வழங்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளதே? நான் இந்த கோரிக்கையை நூறு சதவீதம் ஆதரிக்கிறேன். ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரிதான் விளையாட்டில் உழைக்கிறோம். விளையாட்டு இப்போது முழுக்க கார்ப்பரேட் தன்மை கொண்டதாக மாறும்போது, ஒரு மாதிரியான ஊதியம் என்பதை பரிசீலிக்கலாம். பொதுமுடக்க காலத்தில் ஊக்கமூட்டும் பேச்சாளராள மாறியிருக்கிறீர்கள். எப்பட

சூழலுக்கு இசைவாக விவசாயம் செய்வது மனிதர்களை அழியாமல் பாதுகாக்கும்! - பேராசிரியர் ரத்தன் லால்

படம்
ஓஹியோ பல்கலைக்கழகம் பேராசிரியர் ரத்தன் லால் இந்த ஆண்டிற்கான உலக உணவுப் பரிசை வாங்கியுள்ளார். இந்த விருது, விவசாயத்துறையில் நோபல் பரிசுக்கு நிகரானது. அவரிடம் விவசாயம் பற்றியும், விவசாயிகள் பற்றியும் பேசினோம். சிறு விவசாயிகளுக்கு என்னவிதமான விவசாய நடைமுறைகளை வழியுறுத்துகிறீர்கள்? ஹரியானா, உ.பி. பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகளை அறுவடை முடிந்தபிறகு நெல் கற்றைகளை எரிக்க வேண்டாம் என்று கூறியுள்ளேன். இதனால் ஏற்படும் மாசுபாடு நிலத்திற்கும், சூழலுக்கும் நல்லதல்ல என்று வலியுறுத்தியுள்ளேன். நிலத்தில் கழிவாக மிஞ்சி எரிக்கப்படும் நாற்று கற்றைகளை நிலத்திலேயே மட்கச்செய்வது அவசியம். நாம் மண்ணிலிருந்து நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற வளங்களை எடுத்துக்கொண்டு விவசாயம் செய்கிறோம். அதனை திரும்ப நிலத்திற்கு அளிப்பது முக்கியம். உரங்களை நாம் நேரடியாக மண் மீது பயன்படுத்தக்கூடாது இப்போதுள்ள பருவச்சூழலில் அது வெப்பமயமாதலை ஊக்குவிக்கும். முடிந்தவரை இயற்கை உரங்களை பயன்படுத்தலாம். அதுவே மண் வளம் காக்கும். அடுத்து நிலங்களிலுள்ள மேல் மண்ணை செங்கற்கள் செய்ய பயன்படுத்தக்கூடாது. இதனால் மண்வளம் கெட

இந்தியா எல்லை விவகாரத்தில் வேகமாக முடிவெடுக்க வேண்டிய நேரமிது! - வேத் பிரகாஷ் மாலிக்

படம்
ஜிபி மொழிபெயர்ப்பு நேர்காணல் வேத் பிரகாஷ் மாலிக், முன்னாள் ராணுவப்பிரிவு தலைவர். 1999இல் பாகிஸ்தான் கார்க்கில் பகுதிக்குள் நுழைந்த நிகழ்ச்சிக்கும், சீனா இப்போது உள்ளே நுழையும் நிகழ்ச்சிக்கும் தொடர்பிருப்பதாக நினைக்கிறீர்களா? இல்லை. பாகிஸ்தான் முன்னர் கார்க்கிலில் உள்ளே வர முயன்றபோது அதன் கருத்தியலும் அதற்கான திட்டமும் பெரிய உள்நோக்கத்தை கொண்டிருந்தது. லடாக்கில் சீனாவின் அத்துமீறலை நாம் அப்படி எடுத்துக்கொள்ளமுடியாது. சீனாவுடன் ராஜரீக உறவு, பேச்சுவார்த்தை என்று செயல்படும் இந்தியாவில் அந்நாடு அத்துமீறும் செயல்பாடு ஆபத்தான போக்கு. இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்க நாம் என்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்? ராணுவப்படைகள் சீனாவின் அத்துமீறலைத் தடுக்க எல்லையில் தயாராக இருக்கவேண்டும். இத்தோடு அரசியல்ரீதியான முடிவுகளை எட்டுவதற்கான செயல்பாடுகளிலும் இறங்கவேண்டும். பாகிஸ்தான் இந்தியா எல்லைப்பிரச்னை இனி எப்படி பார்க்கப்படும்? பாகிஸ்தான் தனது நாட்டிலுள்ள தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவளித்து எப்போதும் போல எல்லையில் அத்துமீறல்களை நடத்த வாய்ப்புள்ளது. இந்திய ராணுவம் பாகிஸ்தானின் அத்துமீறல்களை தடுக்க

அத்தியாவசியப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பொருட்கள் மூலம் விவசாயிகளுக்கு நன்மைதான்! - சஞ்சய் அகர்வால்

படம்
விவசாயத்துறை செயலாளர், சஞ்சய் அகர்வால் வணிகத்திற்கு உருவாக்கப்பட்டுள்ள விதிகள் விவசாயிகளுக்கு எப்படி உதவும்? நமது நாடு தற்சார்பு கொண்டதாக உருவாக விவசாயிகளின் பங்கு முக்கியமானது. விவசாயிகள் நிலப்பரப்பு சார்ந்த அறிவும், திறனும் கொண்டவர்கள். இவர்கள், நம் நாடு உணவு பாதுகாப்பும், தன்னிறைவும் பெற முக்கியமானவர்கள். தற்போதுள்ள சட்டங்கள் மூலம் தானியங்களை மாநிலத்திற்குள்ளும், வெளிமாநிலத்திற்கும் கூட அவர்கள் விற்கலாம். இதன் காரணமாக, பொருட்கள் வீணாகாது. ஏபிஎம்சி அமைப்பின் உதவியால் விவசாயிகளுக்கு சரியான விலையும் கிடைக்கும். இந்த சட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த விவசாயத்தை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதாக பஞ்சாப் அரசு கூறியிருந்ததே? மத்திய அரசு சட்டத்திற்கு உள்பட்டே இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது. இதன்காரணமாக விவசாயத்தின் மீதுள்ள மாநிலங்களின் உரிமை பறிபோகாது. ஒப்பந்த முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? இதுநாள் வரை பணப்பயிர்களை பயிரிட்டு வந்தவர்களுக்கு அதில் நஷ்டம் ஏற்பட்டால் விவசாயிகள்தான் ஏற்று வந்தனர். அதனை நாங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கைமாற்றிய

பொது முடக்கத்தால் நோய்த்தொற்று குறையாது! - மருத்துவர் ஜெயப்பிரகாஷ் முலியில்

படம்
ஜெயப்பிரகாஷ் முலியில், தேசிய நோய்த்தொற்று தடுப்பியல் கழக தலைவர் கமிட்டி   ஒன்றை அமைத்தால் கோவிட் -19 கட்டுக்குள் வரும் என்று அரசு தீர்மானித்துள்ளது. இதுபற்றிய உங்களது கருத்து? அறிவியல் படி ஒரு நாட்டில் வைரஸ் தொற்று பரவத்தொடங்கிவிட்டால், அதனை பொதுமுடக்கம் மூலம் மட்டும் கட்டுப்படுத்துவது கடினம். நாட்டிலுள்ள 65 சதவீதப் பேருக்கு நோய்த்தொற்று இருந்தாலும் அறிகுறிகள் இல்லை. அறிகுறிகள் தெரிய வரும் வரையில் அவர் பல்வேறு பொருட்களை வாங்க கடைகளுக்கு சென்று வந்தால் எளிதாக நோய் பரவும். நம் நாட்டிலுள்ள மக்கள்தொகை பெருக்கத்தால் நோய்த்தொற்றை பூஜ்ஜியமாக்குவது மிகவும் கடினமான முடியாத செயல் கூட. சோதனைகளைப் பற்றிய கொள்கைகளை ஆதரிக்கிறீர்களா? ஆர்டி பிசிஆர் சோதனைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் நோயுற்றவர்கள் அறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். நெகட்டிவ் என்று சோதனையில் வந்தாலும் கூட அவர்களையும் கண்காணிக்கவேண்டியது அவசியம். காரணம், அறிகுறிகள் இல்லாமல் நோய்த்தொற்று பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நோய்த்தொற்று குடும்ப அங்கத்தினரை அதிகம் பாதிக்க வாய்ப்புள்

நம் நாட்டை பாருங்கள் என்ற சுற்றுலா திட்டத்தை தொடங்க போகிறோம்!

படம்
மொழிபெயர்ப்பு நேர்காணல் பிரகலாத் சிங் படேல், சுற்றுலாத்துறை அமைச்சர் பெருந்தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை எப்படி மீட்கப்போகிறீர்கள்? சுற்றுலாத்துறையின் வளர்ச்சி இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிடைக்கும் அந்நியச் செலாவணி ஆகியவற்றின் மூலமே அளவிடப்படுகிறது. அந்த வகையில் சுற்றுலாத்துறை பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அதனை இழப்பிலிருந்து மீட்பதற்கான திட்டங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பெருந்தொற்றுக்கு பிறகான திட்டங்கள் என்ன? மத்திய அரசு இத்துறைக்கான நிதி ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மக்களின் கைகளில் பணம் கிடைக்கும்போது, இத்துறை நல்ல நிலைக்கு மீள வாய்ப்புள்ளது. இப்போதைக்கு இந்தியாவிலுள்ள சுற்றுலா தளங்கள், தங்குமிடங்கள், உணவு விடுதிகள் ஆகியவற்றை பாதுகாப்பானதாக மாற்றவேண்டும். பிறகே, சுற்றுலா பயணிகள் எந்த கேள்வியுமின்றி இங்கு வருவார்கள். இனி இத்துறையினர் முன்பு போல அன்றி, பல்வேறு புதுமைத்திறன்களோடு இருந்தால் மட்டுமே நிலைத்திருக்க முடியும். இதற்கு சரியான கல்வி மற்றும் விழிப்புணர்வை அளிக்க வேண்டியுள்ள

நோய்த்தொற்றை முன்னதாகவே தடுப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது! - தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர்

படம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் மொழிபெயர்ப்பு நேர்காணல் தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர் பெருந்தொற்று காலத்தில் என்னென்ன விஷயங்களை கேரளம் அடையாளம் கொண்டதாக கருதுகிறீர்கள்? கேரளத்தின் அரசு பொதுமருத்துவமனைகளின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இதனை முன்னர் இருந்த அரசுகள் உருவாக்கின. இடதுசாரி அரசு, இதிலுள்ள வசதிகளை மேம்படுத்தியுள்ளது. கேரள அடிப்படை வசதிகள் முதலீட்டு வாரியம், இந்த மருத்துவமனைகளை மேம்படுத்த நான்காயிரம் கோடி ரூபாயை செலவழித்துள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் நுண்ணுயிரிகள் நோய்த்தொற்று தொடர்பான பிரிவை தொடங்கியுள்ளோம். மாவட்ட மருத்துவமனைகளில் இதயநோய் பிரிவுகளை தொடங்கியுள்ளோம். தாலுக்காக்களில் 20 நீரிழிவு மருத்துவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளதோடு, ஆரம்ப சுகாதார மையங்களையும் உருவாக்கத் தொடங்கியுள்ளோம். தொடக்க சுகாதார மையங்களில் 68 க்கு மத்திய அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். இதுதவிர வலிநிவாரண சிகிச்சை மையங்களையும் கொண்டுள்ளோம். எபோலா, நிபா வைரஸ் பாதிப்பால் நாங்கள் தொற்றுநோய் பிரச்னைகளை கையாள்வதில் கவனமாக இருக்கிறோம். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் சென்ற இடம், நண்ப

மாஸ்க் மட்டுமே கோவிட் -19 நோய்த்தொற்றை தடுத்து விடாது! - மருத்துவர் சுரேஷ் திரேகன்

படம்
டாக்டர் சுரேஷ் திரேகன் மெல்ல நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பொதுமுடக்கம் நீக்கப்பட்டு வருகிறது. விதிகள் தளர்வு செய்யப்பட்டு வருகின்றன. என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்? விதிகளை தளர்த்தினாலும் நீங்கள் முக கவசங்களை அணிந்தபடி வெளியில் செல்லவேண்டும். யார் முக கவசங்களை அணிந்தாலும் சரி, அணியாவிட்டாலும் சரி நீங்கள் உங்கள் பாதுகாப்பிற்கு சுத்தம் சுகாதாரத்தை கடைபிடியுங்கள். வெளியே சென்று வந்தால் கைகளை நன்றாக கழுவுங்கள்.அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களும், பத்து வயதிற்கு கீழுள்ளவர்களும் கவனமாக இருக்கவேண்டும். மற்றபடி நோய்த்தொற்றை தடுத்து சிதறடிக்க கூடிய வெள்ளித்தோட்டா ஏதும் நம்மிடம் கிடையாது. அலுவலங்கள் தொடங்கிவிட்டன. பணியாளர்களும் பணிகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர்? அவை இயல்பானதுதான். முதலில் குறைவாக இருந்த பாதுகாப்பு விஷயங்களை இப்போது அதிகமாக செய்யவேண்டும். வணிகத்தை மட்டும் நிறுவனங்கள் பார்க்காமல் நிறுவன பணியாளர்களின் பாதுகாப்பையும் பார்ப்பது அவசியம். பொருளாதார இழப்பு என்பதை மட்டும் பார்க்க கூடாது. பணியிடங்களில் நோய்த்தொற்று பரவலாகி அனைவரையும் பாதித்தால் என்ன செய்வீர்கள்?