உலகத்தலைவர் யோகாவின் மூலம்தான் உருவாக முடியும்! - ஹெச்.ஆர். நாகேந்திரா
மருத்துவர் ஹெச்.ஆர். நாகேந்திரா
சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தானா சம்ஸ்தானா, பெங்களூரு
யோகாவால் உடல்நலம் மேம்பட அறிவியல்பூர்வமாக என்ன ஆதாரங்கள்
இருக்கின்றன?
யோகா என்பது உடல், உயிர்,
மனம், புத்தி என அனைத்து விஷயங்களும் மேம்பட உதவுகிறது. இதனை அன்னமய கோஷா, பிராணமய
கோஷா, மனோமய கோஷா, விஜினாமய கோஷா இவற்றைக் குறிப்பிடலாம்.
தொற்றுநோய்களை அனாஜிதா வியாதி
என்று குறிப்பிடலாம். யோகா, நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. யோகா நமது உடல்,
மனத்தின் மீது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவை வாழ்க்கையில் அன்பு மற்றும்
திருப்தியை ஏற்படுத்துகிறது.
கோவிட் -19க்கு எதிராக யோகா சிறந்த தீர்வினைத் தரும் என நினைக்கிறீர்களா?
நாம் இன்னும் பெருந்தொற்று
பாதிப்பை தடுக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கவில்லை. யோகா செய்வது ஒட்டுமொத்த நோய்எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும்.
ஒருவரை யோகா ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பது என்ன நிச்சயம்?
ஆயுர்வேதத்தில் ஆகார, விகார,
விச்சார, ஆச்சார என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். உணவு, மகிழ்ச்சி, சிந்தனை, உடல்நலம்
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்துதான் உடல்நலம், உள்ளநலம்
இரண்டையும் சீராக வைத்திருக்கிறது.
உடற்பயிற்சி தராத விஷயங்கள் எதையாவது யோகா தருமா?
யோகா, உடலில் உள்ள அனைத்து
தசைகளையும் நெகிழ்வாக வைத்திருக்க உதவுகிறது. மூச்சுவிடும் வேகத்தை குறைத்து சிந்தனையை
தெளிவாக்குகிறது. தினசரி யோகா செய்து வந்தால் உடல், மனம் ஒருங்கிணைப்பு சிறப்பாக இருக்கும்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் விவேகானந்தர், அரவிந்தர் சொன்ன
உலகத்தலைவர் என்ற கனவு நிறைவேறிவிடும் போல..
நிச்சயமாக. மேற்கத்திய பார்வையில்
உடற்பயிற்சி என்பது வெறும் உடல்சார்ந்தது மட்டும்தான். ஆனால் யோகா மட்டுமே உடல் கடந்து
உயிர், மனம் ஆகியவற்றைப் பேசுகிறது. அவற்றை வளப்படுத்துகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக