பொதுமுடக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை - ராஜீவ் பஜாஜ் இயக்குநர் பஜாஜ் நிறுவனம்




                                    



Bajaj Auto's Aurangabad Factory Shut After 79 Employees Test ...
swarajya




நேர்காணல்

ராஜீவ் பஜாஜ், பஜாஜ் நிறுவன இயக்குநர்

தொழிற்சாலையில் இரண்டு தொழிலாளிகள் இறந்துள்ளனர். விதிகள் மீறல்தான் இறப்புக்கு காரணமா?

இந்தியாவில் 30 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை எப்படி வீட்டிலேயே வைத்திருக்க முடியும்.? இறந்தவர்களில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம், மற்றொருவருக்கு நீரிழிவுநோய் ஆகிய பிரச்னையும் இருந்துள்ளது. அறிகுறிகள் மெல்லியதாக இருக்கிறது என ஒருவரை மருத்துவர்கள் சோதிக்கவில்லை. மற்றொருவருக்கு ஆக்சிஜன் வசதி கொடுக்கப்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக கோவிட் -19 தொற்று வேகமாக பரவி வருகிறது ஆபத்தானது.

பொதுமுடக்கம் பற்றிய உங்களது கருத்துகள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறதே?

நான் சமூக வலைத்தளத்தில் செயல்படவில்லை. எனவே இந்த கருத்துகள் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. நான் கூறிய கருத்து பொதுமுடக்கம் பற்றியல்ல. அந்நேரத்தில் அதிகமான நோய்த்தொற்று மற்றும் மரணித்த மக்கள் பற்றித்தான். நீங்கள் இந்தியாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் கணக்கை எடுத்துப் பாருங்கள். ஜப்பான், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தொழிற்சாலைகளை மூட மாவட்ட நிர்வாகம் நெருக்கடிகளை கொடுக்கிறதா?

அப்படியெல்லாம் இல்லை. அவர்கள் மிகவும் ஆதரவாகவே இருக்கிறார்கள். பஜாஜ் நிறுவனம் விதிகளை கடைப்பிடித்து வருவதாகவே மாவட்ட ஆட்சியர் சொல்லியிருக்கிறார். எங்கள் நிறுவனம் மட்டுமல்ல பிற நிறுவனங்களும் விதிகளை கடைப்பிடித்துத்தான் வருகிறார்கள்.

பொதுமுடக்கம் தவறு என்கிறீர்களா?

நான் கீழே சிந்திய பாலுக்காக அழவில்லை. இந்தியாவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், குவகாத்தி ஆகிய மாநிலங்களில் நிறைய நாட்கள் பொதுமுடக்கம் அமலாகியிருக்கிறது. இதனால் என்ன பிரயோஜனம் என்று புரியவில்லை. இப்படி நீண்டுகொண்டே போகும பொதுமுடக்கம் எப்போது முடிவுக்கு வரும்?

ஸ்வீடனைச் சேர்ந்த அறிவியலாளர் ஜோகன் கிளெசெக், பொதுமுடக்கம் அமல்படுத்தும்போதே அது முடிந்தபிறகு என்ன செய்யவேண்டும் என்பதை தீர்மானிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். பொதுமுடக்கம் இருந்தாலும் நோய்த்தொற்று இப்போது வேகமாக பரவி வருகிறது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என அரசுக்கு தெரியவில்லை.

ஆனால் பொதுமுடக்கம் இல்லையென்றால் எப்படி நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது?

நீங்கள் சொல்வதை நான் ஏற்கமாட்டேன். புனேவில் சில இடங்களில் மூன்று மாதங்களுக்கு பொதுமுடக்கம் அமலாகியது. மக்கள் வீட்டில் இருந்தார்கள். ஆனால் பொதுமுடக்கம் விலக்கப்படும்போது நிலைமை என்னாகும்? எப்போதும் போல அவர்கள் தெருக்களில் உலவுவார்கள். மீண்டும் மீண்டும் பொதுமுடக்கத்தை அமல் செய்து மூன்று மாதம் வீட்டிலேயே இரு என்று சொல்வது எப்படி சரியான முடிவாகும்? நோய்த்தொற்று மெதுவாக பரவ இந்த வழிமுறை மறைமுகமாக உதவுகிறது.

இங்குள்ள மக்கள் அடர்த்தி அதிகம். நாம் பொதுமுடக்கம் மூலம் நோய்த்தொற்றைக் குறைக்கவில்லை. சராசரியாக மெல்ல நோய்த்தொற்றை அதிகரித்துக்கொண்டுதான் வருகிறோம்.

தொழிற்சாலையில் தொழிலாளர்கள் நோய்த்தொற்று பற்றி பயப்படவில்லையா?

நாங்கள் பாதுகாப்பு அணுகுமுறைகளை சரியாக கடைபிடித்து வருகிறோம். நாங்கள் ஊழியர்களுக்கு இரண்டு வாய்ப்புகளை தந்தோம். தொழிற்சாலைகளுக்கு வந்து பணிபுரிவது, அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை வீட்டிலேயே காத்திருப்பது. உலகில் எந்த நிறுவனமும் இரண்டு ஆண்டுகளுக்கு வீட்டிலுள்ள ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாது. அதிர்ஷ்டவசமாக எங்கள் நிறுவன ஊழியர்கள் கடுமையாகவும் ஸ்மார்ட்டாகவும் உழைக்கத் தெரிந்தவர்கள்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்