இடுகைகள்

நம்பிக்கை மனிதர்கள்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கைவிடப்பட்டோரின் நம்பிக்கை வெளிச்சம்!

படம்
உணவும் கனிவும்தான் மனிதர்களுக்கு அழகு! படித்த படிப்போ, வாங்கும் சம்பளமோ ஆணவத்தை அதிகரிக்குமே தவிர நம் மனதில் நிம்மதியையோ நிறைவையோ தராது என்பதை பீகாரைச் சேர்ந்த சீக்கியர் குர்மீத் சிங் உறுதியாக நம்புகிறார்.  தினசரி பாட்னாவிலுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாழ்வின் இறுதி அத்த்தியாயங்களில் உள்ள முதியோர்களுக்கு உணவளிப்பது தினசரி பணியாக கொண்டுள்ளார். தினசரி இரவு 9 மணிக்கு வெயிலோ, மழையோ பாட்னா அரசு மருத்துவமனைக்கு ஆஜராகி நோயாளிகளிடம் பேசி உணவு தந்துவிட்டு செல்வதை 26 ஆண்டுகளாக அர்ப்பணிப்பான பணியாக செய்துவருகிறார் குர்மீத் சிங். "ஒருமுறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்தபோது ஆதரவில்லாதவர்களின் நிலையைப் பார்த்துத்தான் அவர்களுக்கு உணவு வாங்கித்தர நினைத்தேன். தினசரி தொடங்கிய பணி ஆண்டுதோறும் தொடர்வதற்கு இறைவனின் கருணையே காரணம் " என நெகிழ்கிறார் சிங். தனது ஊதியத்தில் பத்து சதவிகிதத்தை ஆதரவற்றோருக்காக செலவழித்து வருகிறார் குர்மீத் சிங். உணவு மட்டுமில்லாது ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ரத்ததானமும் செய்து அவர்களுக்கு உதவியிருக்கிறார், உதவி வருகிறார் குர்மீத் சிங்.

சூழலுக்கு உதவும் பாக்டீரியா!

படம்
சூழலுக்கு உதவும் பாக்டீரியா! பாக்டீரியாக்கள் இல்லாத இடம் ஏது? அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ரிச்சர்ட்சன் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி கழிவுகளை அழிக்கும்விதமாக அதனை மைக்ரோபைர் என்ற தன்னுடைய நிறுவனத்தின் மூலமாக பயிற்சிதர முயற்சித்து வருகிறார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த சாரா, கழிவுகளை அழிக்க பாக்டீரியாக்களை விலங்குகளை போல பழக்கப்படுத்த முயன்றுவருகிறார். உலகில் தேங்கியுள்ள ஆண்டுதோறும் தேங்கும் 11.2 பில்லியன் திடக்கழிவுகள் அனைத்தையும் மறுசுழற்சி செய்யமுடியாது. இதற்கான தீர்வுகளாக இப்போது பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகளை ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். “ஓட்ஸிலிருந்து நைலான் இழைகள் முன்னர் தயாரிக்கப்பட்டன. நாம் பாக்டீரியாக்களை இதுபோல பயன்படுத்தினால் சூழலுக்கும் பிரச்னை கிடையாது” என்கிறார் சாரா ரிச்சர்ட்சன்.  பெட்ரோலியத்தை விட மலிவான விலையில் பாக்டீரியாவை அளிப்பது சாராவின் பிளான்.   மேரிலேண்ட் பல்கலையில் உயிரியல் படித்தவர், மரபணு மற்றும் மூலக்கூறு   உயிரியல் படிப்பை ஜான் ஹாப்கின்ஸ் கல்லூரியில் நிறைவு செய்தவர், செயற்கை இழைகள் குறித்த ஆராய்ச்சியில் இறங்கி வே

ஓய்வூதியத்தில் இலவச பேருந்து - அசத்தும் டாக்டரின் சேவை!

படம்
ஓய்வூதியப் பணத்தில் மகளிர் பேருந்து வயதான காலத்தில் கிடைக்கும் பென்ஷன் பணத்தை மருத்துவம், ஆன்மிக பயணம் என ஜாலியாக செலவு செய்வதை பார்த்திருப்போம். இலவசபேருந்தை மாதச்செலவு செய்து இயக்குவார்களா? ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் பென்ஷன் பணத்தில் பெண்கள் கல்லூரிக்கு செல்ல பேருந்தை இயக்கி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு காரில் ராமேஷ்வர் பிரசாத் தன் மனைவியுடன் ராஜஸ்தானிலுள்ள சுரி என்ற பூர்விக கிராமத்துக்கு சென்றார். வழியில் மழை பெய்யத்தொடங்க, காரின் வேகத்தை குறைத்தவர் சாலையோரத்தில் பேருந்தை எதிர்பார்த்து கல்லூரி செல்வதற்காக தவிப்புடன் நின்ற மாணவிகளைப் பார்த்தார். விபரம் கேட்டு காரில் ஏற்றிக்கொண்ட ராமேஷ்வர்பிரசாத் யாதவ், பதினெட்டு கி.மீ தொலைவிலுள்ள காட்புட்லியிலுள்ள கல்லூரியில் அவர்களை இறக்கிவிட்டார். காரில் மாணவிகளிடம் பேசும்போதுதான் தினசரி கிராமத்திலிருந்து பேருந்து நிறுத்தம் வரவே 6 கி.மீ நடக்கவேண்டுமென்பதும் அதன்பிறகு அரசு பேருந்துக்கு மணிக்கணக்கில் காத்திருந்து இளைஞர்களின் கேலி கிண்டல்களை சகித்து கல்லூரிக்கு வரவேண்டுமென்பதும் ராமேஷ்வர் தெரிந்துகொண்டார். இதற்கு ஏ

அகதி கார்ட்டூனிஸ்ட்டின் அலறல்!

படம்
அகதி கார்ட்டூனிஸ்ட்! 2013 ஆம் ஆண்டில் ஆஸி.யின் கிறிஸ்துமஸ் தீவில் அடைக்கலம் தேடிய அலி டொரானியை அரசு, மனுஸ் தீவுக்கு மாற்றியது. பப்புவா நியூகினியாவில் நான்கு ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வாழ்ந்துவருபவர் ஓசிடி மனநல பிரச்னையில் சிக்கினாலும் தன் பிரச்னைகளை கார்ட்டூன்களாக வரைந்து புகழ்பெற்றுள்ளார். ஈட்டன் ஃபிஷ் என்ற பெயரில் அலி வரையும் படங்கள் 2013 ஆம் ஆண்டிலிருந்து வெளியாகி வருகின்றன. கார்ட்டூன்கள் அலியை புகழ்பெறச்செய்தன; அதோடு மக்களை நாட்டிற்குள் அனுமதிக்காமல் முகாமில் வாழவைக்கும் ஆஸி.யின் தந்திரத்தை உலகிற்கு பட்டென சொல்லிய நறுக் படங்கள் கண்டனங்களை பெற்றுத்தந்தன.  2016 ஆம் ஆண்டு கார்ட்டூனிஸ்ட் ரைட்ஸ் நெட்வொர்க அமைப்பு துணிச்சலான கார்ட்டூனிஸ்ட் விருதை அலிக்கு வழங்கி கௌரவித்தது. காரணம், உலகப்போர்கால மக்களின் நிலைமையை அலியின் படங்கள் விவரிக்கின்றன என்பதால்தான். ஆஸி. அரசின் முகாமிலிருந்து வெளியேறிய அலி, தற்போது நார்வேயில் வசிக்கிறார். “முகாமில் நான் உயிருடன் இருந்ததற்கு காரணம், கலைதான். மனநலனை மேம்படுத்த உதவவில்லை என்றாலும் என்னை உளவியல் பிரச்னையிலிருந்து மீட்க கார்ட்டூன்

ரூ.10 ரூபாயில் பெண்கல்வி சாத்தியம்தான்!

படம்
பத்து ரூபாயில் பெண் கல்வி!- ச.அன்பரசு பெண்கள் நாட்டின் கண்கள் என பட்டிதொட்டியெங்கும் பேசினாலும் எழுதினாலும் இன்றுவரை இந்தியக் கிராமங்களிலுள்ள ஏழைக்குடும்பங்களில் பெண்களுக்கு அடிப்படைக் கல்விகூட கிடைப்பதில்லை என்பதுதான் நாட்டின் அவல உண்மை. படிப்பறிவற்று வேலைக்கு செல்லும் பெண்குழந்தைகளை பாதுகாக்க ஒரே வழி என குழந்தை திருமணத்தை பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பதும் கல்வியறிவின்மையின் பக்கவிளைவு சமூகத்தை குலைத்துபோடுகிறது. இதைத் தடுத்து பெண்களுக்கு கல்வியெனும் சிறகு தந்து வாழ்வில் உயர வைக்கிறார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திர சாம்சிங். 2000 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வேதிப்பொருள் நிறுவமான டூபாண்டில் பணியாற்றிய வீரேந்திர சாம்சிங், பெண்கள் கல்வி கற்காமல் வேலைக்கு அனுப்பியும், குழந்தை திருமணம் செய்விக்கப்படும் அவலத்தையும் கண்டு மனம் வெதும்பினார். உடனே தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு சேமிப்புத்தொகையோடு உத்தரப்பிரதேசம் வந்து சேர்ந்தார். அனுப்ஷர் என்ற கிராமத்தில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கி காத்திருந்தார். ம்ஹூம் ஒருவர் கூட தன் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வரவில்லை. வேலை

ஜார்ஜியா பெண் சிங்கங்கள்!

படம்
ஜார்ஜியாவின் 3 பெண்கள்! ஜார்ஜியாவிலுள்ள ஐடா டகியேவா(29), பதினொரு பேர் கொண்ட அலியேவ் அசர்பைஜானி நாடக அமைப்பில் நடிக்கும் மூன்று பெண்களில் ஒருவர். “எங்கள் சமூகம் நாடகங்களில் பெண்களின் இருப்பை விரும்புவதில்லை. படிப்பதில் ஆர்வமில்லாதவர்களை நாடகங்களில் ஆர்வமூட்டி நாடகம் பார்க்க வைப்பது எளிதல்ல” என்கிறார் ஐடா டகியேவா. 16 வயதிலிருந்து நாடகங்களில் நடிப்பவரின் நாடக சம்பளம் 122 டாலர்கள். ஜார்ஜியாவின் மர்னூலியில் ரேடியோ மர்னூலி என்ற வானொலி நிலையத்தை நடத்தி வருகிறார் பத்திரிகையாளர் கமிலா மம்மடோவா(33). பிபிசி திட்டத்திற்காக தொடங்கிய ரேடியோவை ஜார்ஜியா மற்றும் அசர்பைஜான் செய்திகளை ஒலிபரப்பிவருகிறார். கருத்துக்களை யாரும் வந்து ரேடியோவில் பகிர்ந்துகொள்ளலாம் என்பது   கமிலா தரும் சுதந்திரம். “என்னை லெஸ்பியன் என்று திட்டினாலும் உண்மையை தடுத்து நிறுத்த முடியாது.” என்கிறார் இதழியல் மற்றும் சட்டப்பட்டதாரியான கமிலா. யுனைடெட் நேஷ்னல் மூவ்மென்ட் கட்சியை சேர்ந்தவரான சமிரா இஸ்மையிலோவா, அரசியல் வட்டாரத்தில் நுழையும்போது பல்வேறு மிரட்டல்களை சந்தித்து துணிவோடு அநீதிகளை எதிர்த்து சிறுபா

காப்பீட்டை விளக்கும் ஏஐ நுட்பம்!

படம்
மருத்துவ காப்பீட்டிற்கு AI! மருத்துவ காப்பீட்டிற்கு ஏஜெண்ட் ஒப்புவிக்கும் பொய்களை கேட்பதற்கு ஏஐ கேட்கும் சிம்பிள் நேரடியான பதில்கள் சூப்பர்தானே? அமண்டா லானெர்டின் அலெக்ஸ் எனும் ஏஐ பாட் அப்படி உருவானதுதான். ஜெல்லிவிஷன் நிறுவனத்தின் இயக்குநரான அமண்டாவின் அலெக்ஸ் எனும் ஏஐ ஐடியா, பெருமளவு மக்களுக்கு மருத்துவதிட்டங்களை எளிமையானவையாக்கின. 1990 ஆம் ஆண்டு யூ டோன்ட் நோ ஜாக், ஹூ வான்ட் டு பி மில்லியனர் எனும் கல்வி பிளஸ் பொழுதுபோக்கு என விளையாட்டுகளை வெளியிட்ட நிறுவனம் இது. மைக்ரோசாஃப்ட், சோனி ஆகிய நிறுவனங்களை சமாளிக்க முடியாது ஜெல்லிவிஷன் தவித்தது. அலெக்ஸ் எனும் ஜெல்லிவிஷன் நிறுவனத்தின் ஏஐ ஐடியாவை இன்று ஆயிரம் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. மதிப்பு 110 மில்லியன். வர்ஜீனியாவின் சார்லட்ஸ்வில்லேவில் பிறந்த அமண்டா,”டாக்டராக முயற்சித்தேன். ஆனால் கைகூடவில்லை, உடனே விளம்பரத்துறையில் வேலைக்கு சேர்ந்துவிட்டேன்” என்பவர் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் ஜெல்லிவிஷனில் இணைந்து இயக்குநராகியுள்ளார். 2017 ஆம் ஆண்டு சிகாகோவின் சிறந்த நாகரிகமான கம்பெனி என விருது பெற்றது. சவால்கள் காத்திருக்கி

குழந்தைகளை காக்கும் நல்லாசிரியரின் முயற்சி!

படம்
குழந்தை திருமணங்களை நிறுத்திய நல்லாசிரியர்! அழுகையும் தவிப்புமாக நின்றிருந்த ரதிமா சொல்லாமலேயே அனைத்தும் புரிந்துவிட்டது தலைமை ஆசிரியர் சந்தன்குமார் மைதிக்கு. 24 பாரக்னாஸ் மாவட்டத்தில் அடிக்கடி நடக்கும் விஷயம்தான் அது. என்ன அது? குழந்தை திருமணம் எனும் சமூக அவலம்தான்.  கடந்த ஜனவரி 3 ஆம் தேதி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் பதினைந்து வயது ரதிமாவை காஷ்மீருக்கு சுற்றுலா செல்வதாக அழைத்துச்சென்று ஐம்பது வயது மனிதருக்கு ரதிமாவின் தந்தை திருமணம் பேசி முடித்துவிட்டார். 'கல்யாணம் வேண்டாம் நான் படிக்கிறேன்" என்று ரதிமா மன்றாடியும் கல்யாணம் நடந்தது. ரதிமாவின் மூத்த சகோதரிக்கும் அதே இடத்தில் மணம் நடைபெற்றது. ரதிமாவின் கணவர் பிலால் அகமது சிருவுக்கு ஏற்கனவே இருமனைவிகள், குழந்தைகள் உண்டு. உடலும் மனமும் முதிராத ரதிமாவையும் பிலால் உடலுறவுக்கு பலவந்தம் செய்த கொடுமை, பின்னர்தான் தெரிய வந்திருக்கிறது.ரதிமாவின் சகோதரர் யூசுப் ரயில் டிக்கெட் வாங்கி அனுப்ப அந்நரகத்திலிருந்து தப்பித்து மதுராபூருக்கு வந்திருக்கிறார் ரதிமா. உடலும் மனமும் சிதைந்து வந்த ரதிமாவை அவரது தந்தை ப

பாடகர் டூ அரசியல்வாதி!

படம்
மக்கள் குரல்! தான்சானியாவில் டார் லைவ் என்ற இசைநிகழ்ச்சியில் ஸ்லிம்ஃபிட் உடையில் தோன்றி பாடும் பாடகரின் குரலுக்கு மக்கள் கூட்டமே இமைக்க பறந்து கேட்டு முடிவில் ஆர்ப்பரிக்கிறது. இருபது ஆல்பங்களை மாஸ் ஹிட் செய்துள்ள பாடகரான ஜோசப் பிலினி (எ) சுகு மக்கள் பிரச்னைகளை பேசும் அரசியல்வாதியாகவும் பரிணமிக்க தொடங்கியுள்ளார். அதிபர் ஜான் மகுஃபுலியை விமர்சித்ததற்காக 73 நாட்களை சிறைதண்டனை அனுபவித்து வெளிவந்தவர் அரசை விமர்சிப்பதில் இன்னும் கூர்மையடைந்திருக்கிறார். எம்ட்வாரா நகரில் ஏழைக்குடும்பத்தில் பிள்ளையான சுகு பிறந்தார். செக்யூரிட்டி வேலையில் சேர்ந்து கிடைக்கும் நேரத்தில் பாடல்களை எழுத தொடங்கி சிகு யாங்கு, நி மிமி ஆகிய பாடல்களை சில ஆண்டுகள் இடைவெளியில் வெளியிட்டார். போலீஸ் வன்முறை, தெருகுழந்தைகள், எய்ட்ஸ் பிரச்னை என பலரும் யோசிக்கத்தயங்கும் கான்செப்ட்டுகள்தான் சுகு பாடல்களின் தீம். என்டானி யா போங்கோ, கமிங் ஆஃப் ஏஜ் பாடல்கள் சுகுவை உலகளவில் பிரபலமாக்கின. 2010 ஆம் ஆண்டு எதிர்கட்சியான சதேமாவில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் மொழியில் பேசி பிரச்னைகளை முன்வைத்து

போலிச்செய்தி காவலர்!

படம்
போலிச்செய்தி காவலர்! “பத்திரிகையாளர்கள் வதந்திகளை பரப்புவதில்லை என்று கூறுவார்கள். ஆனால் அதனை இணையம் சிறப்பாக செய்கிறது” எனும் சாமுவேல் லாரன்ட், அரசியல் செய்தியாளர், பிரெஞ்சு தினசரியின் லெஸ் டெகோட்யூர்ஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். முக்கியமாக போலிச்செய்திகளை கண்டறிந்து அகற்ற உதவுகிறார். 2013 ஆம் ஆண்டு ஒரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பாக பரவிய போலிச்செய்தியை கண்டறிந்து தடுத்ததில் நாடெங்கும் புகழ்பெற்றார் சாமுவேல் லாரன்ட். “வதந்திகளை பேசக்கூடாது என நினைக்காதீர்கள். பேசினால்தான் மக்களிடையே தவறான கருத்துக்களை புரியவைக்க முடியும்” என்பது சாமுவேல் பாலிசி. சாமுவேல் லாரன்ட் லே மாண்டே என்ற பெயரில் தொடங்கிய போலித்தகவல்களை ஆராய்ந்து உண்மையை அறியும் பனிரெண்டு பேர் கொண்ட குழுவினால் 2015 பாரிஸ் தாக்குதல், பிரெஞ்சு தேர்தலில் பரவிய போலி தகவல்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை கண்டறிந்து உண்மையை வெளியிட்டது. இதன் விளைவாக செய்திகளின் தரம் அதிகரித்து இவ்வாண்டிற்கான டேட்டா ஜர்னலிசம் விருதுக்கு டெகோட்யூர்ஸ் பத்திரிகை பரிந்துரைக்கப்பட்டது முக்கியமான சாதனை.  ப்ரௌசர்களுக்கான எக்ஸ்டென்ஷ

மனித உரிமைகள் பேசும் ஹாலிவுட் நாயகி!

படம்
அமண்ட்லா ஸ்டென்பெர்க் ''எனக்கு எது பொருத்தமான துறை என இன்னும் முடிவு செய்யவில்லை. இதுதான் என எதிலும் அடைத்துக்கொள்ள விரும்பவில்லை '' என உற்சாகமாக சொல்கிறார் அமண்ட்லா.  ஹங்கர் கேம்ஸ், எவ்ரிதிங் எவ்ரிதிங், தி டார்க்கெஸ்ட் மைண்ட்ஸ் படத்தில் நடித்தவர் என்பதைத் தாண்டி சமூக செயல்பாட்டாளர், தன் தலைமுறையின் விமர்சனக்குரல் என்பதாக நீளும் இவரின் ஆளுமை யாரையும் ஆச்சரியப்படுத்தக்கூடியது.  எனது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அரசியல்மயப்படுத்தப்படும் ஆபத்து இருப்பதால் கவனமாகவே செயல்பட்டு வருகிறேன் என பரிபக்குவமாக பேசுபவருக்கு வயது இருபது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  சோஷியல் தளங்களை கெடுக்கும் பல்வேறு நிறுவனங்களைப் பற்றிய பதிவுகளும் தன்னைத்தானே கிண்டல் செய்து போடும் வீடியோக்களும் அமண்ட்லா பிராண்ட் ஸ்பெஷல். கடந்தாண்டு ஆஞ்சி தாமஸின்  நாவலைத் தழுவி உருவான தி ஹேட் யூ கிவ் எனும் படத்தில் நடித்தார். போலீஸ் ஆயுதம் ஏதுமற்ற கருப்பின இளைஞரை கொன்றதை எதிர்த்து நீதி கேட்கும் செயல்பாட்டாளராக நடித்திருந்தார்.  பணம் சம்பாதிப்பது தாண்டி தான் எப்படி செயல்படவேண்டுமென்ற நிதானமும் இவருக்கு இ

கல்வியில் தொழில்நுட்ப மேம்பாடு தேவை!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக முனைவர் பட்டதாரியான, மிச்செல் வில்லியம்ஸ், மாணவர்களுக்கு அறிவியல் துறையில் சாதிக்க ஆலோசனைகளை வழங்கி அவர்கள் சாதிக்க உதவுகிறார். 2015 ஆம்ஆண்டு மிச்செல் தொடங்கிய வில்லியம்ஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனம்,  பத்தாண்டுகளுக்கு மேலாக கற்பிக்கும் துறையில் உள்ளார். வகுப்பறை தாண்டிய கல்வியை உறுதியாக நம்புபவர், தன் நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பிராக்டிக்கலாக அறிவியலில் சாதிக்க தொழில்முனைவோர்களுடன் பேசுவது, இணையவடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை கற்பித்துவருகிறார்.  “கல்வியை தொழில்நுட்பம் மூலம் நாங்கள் மேம்படுத்துகிறோம்” என புன்சிரிப்புடன் பேசுகிறார் மிச்செல். ஸ்டெம் எனும் அறிவியல்துறைகளில் மாணவர்களை படிப்பிக்க வேடிக்கையுடன் பாடம் நடத்துபவர், தேசிய அறிவியல் கழகத்தின் CAREER பரிசு பெற்றுள்ளார். கல்வி நிறுவனத்தை மேம்படுத்துவதுடன் பல்வேறு எளிய பயன்பாடுகளுக்கான மென்பொருட்களை தயாரிப்பது, முதலீடுகளை அதிகரிப்பது என பம்பரமாக சுழன்று வருகிறார் மிச்செல் வில்லியம்ஸ்.  

நிகரகுவா பாரஸ்ட் கம்ப்!

படம்
அடக்குமுறைக்கு எதிராக ஓட்டம்! உங்களுடைய தாய்நாடு சிறியதாக இருக்கலாம்; ஆனால் கனவு பெரியதாக இருக்கலாம் என்று கூறிய நிகரகுவா கவிஞர் ரூபம் டாரியோவின் வரிகளை சொல்லிக்காட்டியபடி ஓடுகிறார் நிகரகுவாவைச் சேர்ந்த வனேகஸ். நிகரகுவா ஆட்சியாளர் ஆர்டேகாவின் வன்முறை ஆட்சிக்கு எதிராக நூறு டிகிரி வெயிலில் தன் நீரிழிவு நோயையும் பொருட்படுத்தாமல் ஓடுபவரை போலீஸ் புன்னகையோடு பார்க்கின்றனர். “ஆர்டேகாவின் ஊழல் ஆட்சிக்கு எதிரான என்னுடைய முயற்சியை மக்களும் வரவேற்கிறார்கள்” எனும் 63 வயதான வனேகஸ், தினசரி 21 கி.மீ ஓடுகிறார். அண்மையில் நடந்த மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை கொண்டு முடக்கிய அரசின் மூர்க்கமான வன்முறையால் 36 பேர் இறந்துபோனதை வனேகஸ் மறக்கமுடியாமல் தவித்து ஃபாரஸ்ட்கம்ப் பட டாம் ஹேங்க்ஸ் போல ஓட முடிவெடுத்திருக்கிறார். வணிக மேலாண்மையாளராகவும் டிஜேவாகவும் பார்ட்டியில் பரபரப்பான இருந்தவருக்கு ஏற்பட்ட நிரீழிவு பிரச்னை அவரது வாழ்வை மாற்றியது. பக்கத்து வீட்டிற்கு கூட பெயர்தெரியாமலிருந்த வனேகஸ் இன்று நிகரகுவாவின் தேசிய நாயகனாக மாறியிருக்கிறார். இருமுறை கைது செய்யப்பட்டு கொலைமிரட்டல் விடுக

ஐபோனில் மக்கள் பணம் உள்ளது!

படம்
ஐபோன் வளர்ச்சி! ஐபோனில் தொடுதிரை, இணையம் இல்லாதபோது அதனை எப்படி ஸ்மார்ட்போன் என்று கூறுவீர்கள் என்று கூறும் பொருளாதார ஆலோசகர் மெரினா மசூகாடோ, புதிய கண்டுபிடிப்புகளில் பயன்படும் அரசு பணத்தை யாரும் எழுதுவதில்லை என்கிறார். புதிய கண்டுபிடிப்பில் சமூகத்தின் பங்களிப்பும் உண்டு என்பதே மெரினாவின் வாதம். யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் நிறுவனரும் இயக்குநருமான மெரினாவின் சமூக தொகுப்பிலான கண்டுபிடிப்பு, நிதி ஒதுக்கீடு பல்வேறு மட்ட பொருளாதார நிபுணர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. “ அடிப்படை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அரசு ஒதுக்கும் நிதி முதலீடுகள், மக்களின் வரிப்பணத்திலிருந்து பிறந்தவை” என்கிறார் ஆடம் ஸ்மித் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாம் டுமிட்ரியு. The Value of Everything எனும் நூலில் கண்டுபிடிப்பின் மதிப்பு, அதிலிருந்து நிறுவனங்கள், தனிநபர் ஈட்டும் லாபம் ஆகியவற்றை பற்றி பேசியுள்ளார். பொருளின் மதிப்பை விற்றும் வாங்கியும் மறைமுகமாக நடைபெறும் வணிகம் எப்படி ஆபத்தான முதலாளித்துவ கருவியாக மாறுகிறது என்பதை எழுதியுள்ளார். சிலிகன்வேலி எப்படி வால்ஸ்ட்ரீட் மற்றும் லண்டன் உள

முஸ்லீம்களை வாழவைத்த சஞ்சீவ் பிரதான்!

படம்
முஸ்லீம்களை இணைத்த நல்மனிதர்! உத்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் மாவட்டத்திலுள்ள துல்ஹெடா கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம் குடும்பங்களை சஞ்சீவ் பிரதான் என்ற நல்மனிதர், அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே திரும்ப குடியமர்த்தி வாழ உதவியுள்ளார். 2013 ஆம் ஆண்டு முசாஃபர்நகர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரங்களால் உயிருக்கு பயந்து துல்ஹெடா கிராமத்தை விட்டு வெளியேறிய 65 முஸ்லீம் குடும்பங்களில் 30 குடும்பங்களை அவர்கள் வாழ்ந்த கிராமத்திற்கே கொண்டுவந்துள்ளார் சஞ்சீவ். குடியமர்த்துவதோடு அவர்களை வாழ்விடங்களை பாதுகாத்தும் வருவது சஞ்சீவ் பிரதானின் பெயர் சொல்லும் செயல். முன்னாள் பஞ்சாயத்து தலைவராக செயல்பட்ட சஞ்சீவ், அங்குள்ள பெரும்பான்மையினரான ஜாட் சமூகத்தை சேர்ந்தவர். 2015 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு உதவிய காரணத்தாலே பிரிவினைவாதிகளால் தோற்கடிக்கப்பட்டும் மக்கள் சேவையில் குறையொன்றுமில்லை. “கலவரத்தின்போது முஸ்லீம்களை பாதுகாப்பதில் நானும் என் நண்பர்களும் உறுதியாக இருந்தோம். ஒருவரின் குணத்தை விட மதம் முக்கியமல்ல. முஸ்லீம்களும் நாங்களும் எங்கள் கிராமத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்கிறோம். மீதியுள

கல்விக்கடன்களை குறைக்க முயலும் அமெரிக்கர்!

படம்
கல்வி சீர்திருத்தவாதி! அமெரிக்காவில் கல்வி கற்க வாங்கிய கடன்தொகையின் அளவு 1.5 ட்ரில்லியன்களாக அதிகரித்துள்ளது. இது கிரடிட் கார்டு கடன்தொகையைக் காட்டிலும் மிக அதிகம். இதனை தடுக்கவே ஐசக் மோர்ஹவுஸ் முயற்சித்து வருகிறார். ஏனெனில் 2023 ஆம் ஆண்டு இக்கடன்தொகையால் அமெரிக்காவில் 40 சதவிகித மாணவர்கள் கடனாளிகளாக இருப்பார்கள்.  “பிராக்சிஸ் கம்பெனி மூலம் நாங்கள் நடைமுறை நிஜத்தை தீவிரமாக அமல்படுத்திவருகிறோம்” என கம்பெனி லோகோ டீஷர்ட் –ஜீன்ஸில் ஜோவியலாக பேசுகிறார் ஐசக். 2013 ஆம் ஆண்டு தொடங்கிய பாரக்ஸ் நிறுவனம் பட்டதாரிகளுக்கு விற்பனை தொடர்பான வேலைகளை அளிக்கிறது. 75 நிறுவனங்களில் ஆறுமாத இன்டர்ன்ஷிப் பெற்றுக்கொடுத்து 14, 400 டாலர்கள் ஊதியம் பெற உதவுகிறார். அமெரிக்காவின் மிச்சிகனிலுள்ள கலாமசூவில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றவர், பெல்மாண்ட் பல்கலைக்கழக உதவித்தொகையை மறுத்து பிராக்சிஸ் ஸ்டார்ட்அப்பை தொடங்கியுள்ளார். கணினி, போன் வயர்களை இணைத்து கொடுத்து பகுதிநேர வேலை பார்த்தபடி வகுப்புகளுக்கு சென்றுவந்தார் ஐசக். கல்வியின் தரம் குறைந்து வேலைவாய்ப்பிழப்பு ஏற்படுபவர்கள் எப்படி கல்வி கடன்கள

பொருளாதாரத்தை காப்பாற்ற முயலும் குடிமகன்!

படம்
நாட்டை காப்பாற்றும் வங்கியாளர்! இ ங்கிலாந்து துணை கவர்னராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சர் பால் டக்கர், ஹார்வர்டிலுள்ள ஆபீசில் தங்கி வங்கி குறித்த 568 பக்கங்கள் கொண்ட Unelected Power: The Quest for Legitimacy in Central Banking and the Regulatory State நூலை எழுதியுள்ளார். “அமெரிக்காவில் பல லட்சம் மக்கள் தம் வீடுகளை இழக்க காரணம், மக்களிடையே விழிப்புணர்வு இல்லாததுதான் காரணம். நம்மை ஆள்வது யார்? என்ற கேள்வியை அவர்கள் ஏன் எழுப்பவில்லை” என நேரடியாக பேசுகிறார் டக்கர். லண்டனின் வடமேற்குப்பகுதியான காட்சல் பகுதியைச் சேர்ந்த டக்கர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பட்டதாரி. இடது,வலது என சாயாமல் ஜனநாயகத்தை காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மனிதர். பணவீக்கத்தை கட்டுப்படுத்த வரிவிகிதங்களை அறிவிப்பதோடு வங்கிகளின் நடைமுறைகளையும் கட்டுப்படுத்தும் பொறுப்பை டக்கர் முக்கியமானது என கருதுகிறார். “மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள், ஊழியர்களைக் கொண்ட வங்கிகளை நிர்வகிக்க தனி கமிட்டி தேவையில்லை. சரியான தலைவர் கிடைத்தாலே போதும்” என தற்போதைய நிலையை விமர்சிக்கிறார். இங்கிலாந்தில் ஏற்பட்ட பொருளாதா

பசியை ஒழிக்கப்போராடும் இந்தியர்!

படம்
ஏழைகளுக்கு அமுதூட்டிய கரங்களுக்கு இங்கிலாந்தில் விருது!  அந்த பன்னாட்டு நிறுவனத்தின் இயக்குநருக்கு பெரிய அதிர்ச்சி. வேலைக்கு சேர்ந்து சில மாதங்களிலேயே நான் பணிவிலகுகிறேன் என்று கூறி, தன்முன்னே வந்து நின்ற இளைஞரை கூர்ந்து பார்த்தார். 22 வயதான இளைஞர் தெளிவாக, தான் செல்லவேண்டிய பாதையை கிறிஸ்டல் கிளியராக செலக்ட் செய்துவிட்டார். தைரியமாக வெளியே வந்து 2014 ஆம் ஆண்டு ஃபீடிங் இந்தியா என்ற என்ஜிஓ அமைப்பை தன் நண்பர்களுடன் இணைந்து தொடங்கி நிற்க நேரமின்றி பசியில் தவிக்கும் மக்களுக்கு இன்றுவரை 85 லட்சம் டன்கள் உணவுகளை வழங்கி பசிப்பிணி தீர்த்திருப்பது சாதனைதானே! அந்த இளம் தலைவனின் பெயர்தான் அங்கித் கவாத்ரா. விருது தந்த ராணி ! பட்டினி மற்றும் ஊட்டச்சத்துக்குறைவால் தவிக்கும் இந்தியாவில் ஒருவேளை உணவின்றி தவிக்கும் லட்சம் உயிர்களுண்டு. அசராமல் ஏழைகளுக்கு உணவளித்த அசாதாரண உழைப்பு பிளஸ் அர்ப்பணிப்பு பணிக்குத்தான் இங்கிலாந்தின் குயின் யங் லீடர் 2017 விருது அங்கித் கவாத்ராவின் கைவசமாகியிருக்கிறது. கடந்த ஜூன் 29,2017 அன்று லண்டனின் பக்கிங்காம் பேலஸில் நடைபெற்ற விழாவில் 25 வயதான அங்கித் க

புற்றுநோய் பாதிப்பை ஏற்றுக்கொள்வது அசாதாரணமானது!

படம்
புற்றுநோய் போராளி! கேரளாவிலுள்ள திரிசூரில் புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு பேலியேட்டிவ் சிகிச்சை மையத்தை உருவாக்கி ஆதரவளித்து வருகிறார் ஷீபா அமீர். தனது பனிரெண்டு வயது மகள் நிலோஃபா லுக்குமியா நோயால்  பாதிக்கப்பட்டிருப்பதை 1997 ஆம் ஆண்டு அறிந்தபோது ஷீபாவின் வாழ்க்கை அடியோடு மாறியது. "என் மகளுக்கு லுக்குமியா புற்றுநோய் வந்த செய்தியறிந்து நொறுங்கிப்போனேன். அவளை மும்பை டாடா நினைவு மருத்துவமனைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். நாங்கள் அங்கிருந்த 11 வது மாடி முழுவதுமே சிகிச்சை நோயாளிகளால் நிறைந்திருந்தது.  சிலருக்கு கண்களில் புற்றுநோய், சிலருக்கு புற்றின் பாதிப்பில் கால்கள் இல்லை என அடுத்தநாளை அக்குழந்தைகள் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை" என தீர்க்கமாக பேசுகிறார் ஷீபா. அந்த பாதிப்பு அவருக்கு இறுதிவரை குறையவே இல்லை. அதுவே சோலஸ் என்ற என்ஜிஓவை தொடங்க வைத்தது. அப்போது அவரது மகள் நிலோஃபா தனது வாழ்நாளின் இறுதியில் இருந்தாள். "அம்மா, என்னை நிச்சயம் காப்பாத்திடுவேல்ல" என்பதுதான் அவள் இறுதியாக பேசியது. 2013 ஆம் ஆண்

நெல்சன் மண்டேலாவின் அகிம்சை வழி!

படம்
நெல்சன் மண்டேலா வழியில்! 2005 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகையாளர் எஸ்கிண்டர் நெகா, மனைவி செர்கலம் ஃபாசில் எத்தியோப்பியா அரசினால் தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார் நெகா. 1974 ஆம் ஆண்டு மார்க்சிய ராணுவம் எத்தியோப்பாவில் ஆட்சிக்கு வந்தபோது, நெகா அமெரிக்காவில் அரசியல் பொருளாதார பட்டம் பெற உழைத்துக்கொண்டிருந்தார். 1991 ஆம் ஆண்டு எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி(EPRDF) கட்சி ஆட்சிக்கு வந்தது. 1993 ஆம் ஆண்டு தைரியமாக புதிய நாளிதழை நெகா தொடங்கினார். அப்போது ஆட்சிசெய்தது, மக்கள் தொகையில் 6% உள்ள திக்ராயன்ஸ் மக்களைக் கொண்டுள்ளது எத்தியோப்பா அரசு. உள்நாட்டு நிகழ்வுகளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளில் நெகா எழுத அரசின் பார்வை இவர் மீது விழுந்தது. பொய் குற்றச்சாட்டுகளின் மூலம் சிறையிலடைக்கப்பட்டார் நெகா. “எத்தியோப்பா அரசு தென் ஆப்பிரிக்க அரசியல் மாதிரிகளை அப்படியே பின்பற்றுகிறது. நாம் அனைவரும் வெ்வேறு வேகத்தில் சென்றாலும் நம் இறுதி இலக்கு ஜனநாயக சுதந்திரம்தான்.