கைவிடப்பட்டோரின் நம்பிக்கை வெளிச்சம்!



Image result for gurmeet singh gave dinner


உணவும் கனிவும்தான் மனிதர்களுக்கு அழகு!


படித்த படிப்போ, வாங்கும் சம்பளமோ ஆணவத்தை அதிகரிக்குமே தவிர நம் மனதில் நிம்மதியையோ நிறைவையோ தராது என்பதை பீகாரைச் சேர்ந்த சீக்கியர் குர்மீத் சிங் உறுதியாக நம்புகிறார்.

 தினசரி பாட்னாவிலுள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாழ்வின் இறுதி அத்த்தியாயங்களில் உள்ள முதியோர்களுக்கு உணவளிப்பது தினசரி பணியாக கொண்டுள்ளார். தினசரி இரவு 9 மணிக்கு வெயிலோ, மழையோ பாட்னா அரசு மருத்துவமனைக்கு ஆஜராகி நோயாளிகளிடம் பேசி உணவு தந்துவிட்டு செல்வதை 26 ஆண்டுகளாக அர்ப்பணிப்பான பணியாக செய்துவருகிறார் குர்மீத் சிங்.

"ஒருமுறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்தபோது ஆதரவில்லாதவர்களின் நிலையைப் பார்த்துத்தான் அவர்களுக்கு உணவு வாங்கித்தர நினைத்தேன். தினசரி தொடங்கிய பணி ஆண்டுதோறும் தொடர்வதற்கு இறைவனின் கருணையே காரணம் " என நெகிழ்கிறார் சிங். தனது ஊதியத்தில் பத்து சதவிகிதத்தை ஆதரவற்றோருக்காக செலவழித்து வருகிறார் குர்மீத் சிங்.

உணவு மட்டுமில்லாது ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ரத்ததானமும் செய்து அவர்களுக்கு உதவியிருக்கிறார், உதவி வருகிறார் குர்மீத் சிங்.


நன்றி: ஆனந்த் எஸ்.டி. தாஸ், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்