போலிச்செய்தி காவலர்!
போலிச்செய்தி காவலர்!
“பத்திரிகையாளர்கள் வதந்திகளை
பரப்புவதில்லை என்று கூறுவார்கள். ஆனால் அதனை இணையம் சிறப்பாக செய்கிறது” எனும் சாமுவேல்
லாரன்ட், அரசியல் செய்தியாளர், பிரெஞ்சு தினசரியின் லெஸ் டெகோட்யூர்ஸ் இணையதளத்தில்
பணியாற்றி வருகிறார். முக்கியமாக போலிச்செய்திகளை கண்டறிந்து அகற்ற உதவுகிறார்.
2013 ஆம் ஆண்டு ஒரினச்சேர்க்கையாளர்கள்
தொடர்பாக பரவிய போலிச்செய்தியை கண்டறிந்து தடுத்ததில் நாடெங்கும் புகழ்பெற்றார் சாமுவேல்
லாரன்ட். “வதந்திகளை பேசக்கூடாது என நினைக்காதீர்கள். பேசினால்தான் மக்களிடையே தவறான
கருத்துக்களை புரியவைக்க முடியும்” என்பது சாமுவேல் பாலிசி.
சாமுவேல் லாரன்ட் லே மாண்டே என்ற
பெயரில் தொடங்கிய போலித்தகவல்களை ஆராய்ந்து உண்மையை அறியும் பனிரெண்டு பேர் கொண்ட குழுவினால்
2015 பாரிஸ் தாக்குதல், பிரெஞ்சு தேர்தலில் பரவிய போலி தகவல்கள் புகைப்படங்கள் ஆகியவற்றை
கண்டறிந்து உண்மையை வெளியிட்டது. இதன் விளைவாக செய்திகளின் தரம் அதிகரித்து இவ்வாண்டிற்கான
டேட்டா ஜர்னலிசம் விருதுக்கு டெகோட்யூர்ஸ் பத்திரிகை பரிந்துரைக்கப்பட்டது முக்கியமான
சாதனை.
ப்ரௌசர்களுக்கான எக்ஸ்டென்ஷன் உள்ளிட்ட பல்வேறு கருவிகளை உருவாக்கியது சாமுவேலின்
குழு. “போலிச்செய்திக்கு பிரான்சில் இலக்கானவர் இம்மானுவேல் மேக்ரான், ஏனெனில் இவர்
இடதுக்கும் வலதுக்கும் பிடிக்காத அரசியல் ஆளுமை” என்று புன்னகைக்கிறார் சாமுவேல் லாரன்ட்.