சூழலுக்கு உதவும் பாக்டீரியா!
சூழலுக்கு உதவும் பாக்டீரியா!
பாக்டீரியாக்கள் இல்லாத இடம் ஏது?
அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ரிச்சர்ட்சன் பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தி கழிவுகளை
அழிக்கும்விதமாக அதனை மைக்ரோபைர் என்ற தன்னுடைய நிறுவனத்தின் மூலமாக பயிற்சிதர முயற்சித்து
வருகிறார்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த சாரா,
கழிவுகளை அழிக்க பாக்டீரியாக்களை விலங்குகளை போல பழக்கப்படுத்த முயன்றுவருகிறார். உலகில்
தேங்கியுள்ள ஆண்டுதோறும் தேங்கும் 11.2 பில்லியன் திடக்கழிவுகள் அனைத்தையும் மறுசுழற்சி
செய்யமுடியாது. இதற்கான தீர்வுகளாக இப்போது பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகளை ஆராய்ச்சியாளர்கள்
நம்புகின்றனர். “ஓட்ஸிலிருந்து நைலான் இழைகள் முன்னர் தயாரிக்கப்பட்டன. நாம் பாக்டீரியாக்களை
இதுபோல பயன்படுத்தினால் சூழலுக்கும் பிரச்னை கிடையாது” என்கிறார் சாரா ரிச்சர்ட்சன்.
பெட்ரோலியத்தை விட மலிவான விலையில் பாக்டீரியாவை அளிப்பது சாராவின் பிளான். மேரிலேண்ட் பல்கலையில் உயிரியல் படித்தவர், மரபணு
மற்றும் மூலக்கூறு உயிரியல் படிப்பை ஜான் ஹாப்கின்ஸ்
கல்லூரியில் நிறைவு செய்தவர், செயற்கை இழைகள் குறித்த ஆராய்ச்சியில் இறங்கி வேதிப்பொருட்களின்
ஆக்கிரமிப்பை குறைத்து வருகிறார்.