இடுகைகள்

இங்கிலாந்து லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யூத இனத்தைச் சேர்ந்த மூன்று போராட்டக்காரர்கள்! இன ஒழிப்புக்கு எதிர்ப்பு, மரங்களைக் காக்கும் முயற்சி, எல்ஜிபிடியினருக்கான கஃபே!

படம்
                  தாலியா வுடின் இவர் சூழல் மற்றும் சமூக நீதிக்காக போராடி வருகிறார் . ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார் . தற்போது இவர் மரத்தில் வசித்து வருகிறார் . இங்கிலாந்து அரசு அதிவேக ரயில் சேவைக்காக இருப்புப்பாதை அமைக்கவிருக்கிறார்கள் . காலன் வேலி எனும் அந்த இடத்தில் பிற சூழலியலாளர்களுடன் இணைந்து தொன்மையான மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் முயற்சியில் தாலியா ஈடுபட்டுள்ளார் . லண்டனுக்கு வெளியிலுள்ள இந்த இடத்தில் கடந்த ஐந்து மாதங்களாக மரங்கள் வெட்டப்படுவதை தடுத்து வருகிறார்கள் . தாலியா வுடனின் பெற்றோர் இருவருமே சூழலியல் போராட்டக்கார ர்கள் . இதனால் இளம் வயதில் சூழல் தொடர்பான அக்கறை தாலியாவுக்கு வந்துவிட்டது . சூழலியல் தொடர்பான அக்கறை தனியாக எதையும் கற்பது போல இல்லை . அது என்னுடைய வாழ்வினூடே இருந்து வந்தது . நான்குவயதில் தாலியாவின் தந்தை நுரையீரல் புற்றுநோய்க்கு பலியானார் . இத்தனைக்கும் அவர் புகைப்பழக்கம் இல்லாதவர் . இதனால் தாலியா காற்று மாசுபாடு பற்றிய கவனம் கொண்டார் . இங்கிலாந்தில் மட்டும் 64 ஆயிரம் பேர் காற்று மாசுபாட்டிற்கு பலியாகிறார்கள் . இவரத

புலனாய்வு கட்டுரைகளில் சாதனை படைத்த செய்தியாளர்! - சர் ஹரால்டு ஈவன்ஸ்

படம்
    சர் ஹரால்டு ஈவன்ஸ்   புலனாய்வு செய்தியாளர்! சர் ஹரால்டு ஈவன்ஸ், 92 வயதில் கடந்த புதன்கிழமை அன்று மறைந்தார். பிரிட்டிஷ் அமெரிக்க ஆசிரியரான இவர் இத்துறையில் 70 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். புலனாய்வு செய்தியாளர்,  வார இதழ் நிறுவனர், புத்தக வெளியீட்டாளர், ஆசிரியர் என அவரது தலைமுறை சார்ந்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். இங்கிலாந்தில் வெளிவரும் சண்டே டைம்ஸ் ஆசிரியராக ஈவன்ஸ் பணியாற்றினர். இவரும் இவரது தலைமையின் கீழ் அமைந்த குழுவும், மனித உரிமை மீறல்கள், அரசியல் ஊழல்கள் என பல்வேறு சமூக சீர்கேடுகளை அவலங்களை வெளியே கொண்டு வந்த பெருமை உடையவர்கள். தாலிடோமைட் எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு இழப்பீடு வேண்டி, ஈவன்ஸ் எழுதிய கட்டுரை பத்தாண்டுகளுக்குள் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தந்த்து. 14 ஆண்டுகள் சண்டே டைம்ஸில் பணியாற்றியர் பின்னாளில் டைம்ஸ்  பத்திரிகைக்கு மாறினார். ரூபர்ட் முர்டோக் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையை வாங்கியதுதான் காரணம். அவர் வாங்கியபிறகு ஈவன்ஸ் ஒரு ஆண்டுதான் அங்கு வேலை செய்தார். அதற்குப் பிறகு உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து அமெரிக்காவுக்

சல்லீசு ரேட்டில் கல்வி கற்க எந்த நாடு பெஸ்ட்?

படம்
துருக்கிதான் காசு குறைவாக தரம் நிறைவாக கல்வி தருகின்றனர் என்கிறது ஆய்வு முடிவுகள். இதுபற்றிய ஆய்வு 58 நாடுகளில் உள்ள 360 பகுதிகளில் நடத்தப்பட்டு, துருக்கிதான் அனைத்து நாடுகளிலும் பெஸ்ட் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிப்புக்கு ஆண்டுக்கட்டணம் 9,250 பவுண்டுகள் ஆகிறது. இதில் பாதியை செலவழித்தாலே பட்டம் வாங்கிவிடலாம் என்றால் நீங்கள் அதைத்தானே தேர்ந்தெடுப்பீர்கள். அந்த வாய்ப்பை துருக்கி அளிக்கிறது. அந்நாட்டில் வாழ்வதற்கும், படிப்பதற்குமான தோராய செலவு 4, 899 பவுண்டுகள்தான் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இம்முறையில் மாணவர் ஒருவர் துருக்கியில் படித்தால் 26 ஆயிரத்து 618 பவுண்டுகளை சேமிக்க முடியும். ஆய்வுப்பட்டியலில் கட்ட ரேட்டில் எங்கு படிக்கமுடியும் என ஆராய்ந்தோம். அதில் இந்தியா, பாகிஸ்தான், மால்டா, மலேசியா ஆகிய நாடுகளில கல்விக்கட்டணம் குறைவாக உள்ளது. டாப் 20 பட்டியலில் இந்த நாடுகள் வந்துவிட்டன. இங்கிலாந்து மாணவர்கள் இந்த நாடுகளுக்கு படிக்க வந்தால், அவர்கள் தாய்நாட்டில் செலவழிக்கும் 71 சதவீத பணத்தை மிச்சம் பிடிக்கலாம். என்ன இந்தியா வந்தால் அதற்கென தேர்வ

ஆங்கிலம் பேசினால் இங்கிலாந்து செல்லலாம்!

படம்
அமைச்சர் ப்ரீத்தி படேல் இங்கிலாந்தில் குடியேற்றத்துறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் விசா நடைமுறைகளை மாற்றவிருக்கிறது. இதன்விளைவாக, ஆங்கிலம் பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவிருக்கிறது. “சிறப்பாக ஆங்கிலம் பேசும் இந்தியர்கள் இதன் மூலம் பயன் பெறமுடியும். திறன் வாய்ந்த மனிதர்களை இம்முறையில் நாங்கள் அடையாளம் கண்டுகொண்டு இங்கிலாந்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார் குடியேற்றத்துறை அமைச்சர் ப்ரீத்தி படேல். அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து முற்றாக விலகி விடும். இதனால் அரசு தன் குடியேற்றம், பாதுகாப்பு, தொழில் உள்ளிட்ட விஷயங்களில் மாறுதல்களை ஏற்படுத்த முயன்றுவருகிறது. பிரெக்ஸிட் பற்றியே பேச்சுகளும், வாக்கெடுப்பும் நடந்தபோது தெரசாமே இந்தியாவுக்கு வருகை தந்தார். தொழில்சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அப்போது உறுதியாயின. அதே முறையில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களை அங்கு கல்வி கற்கவும், ஆராய்ச்சி செய்யவும் இங்கிலாந்து அரசு வரவேற்று விசா காலத்தை கூட இரண்டு ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. தற்போது ஆங்கிலத்தை சரளமாகப் பேசி, இ

உலகை மாற்றிய இங்கிலாந்து பெண் கண்டுபிடிப்பாளர்கள்

படம்
ஷில்லி ங் இங்கிலாந்து பெண் கண்டுபிடிப்பாளர்கள் Rosalind Franklin 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நாட்டிங் ஹில்லில் பிறந்தவர். 1942ஆம் ஆண்டு நிலக்கரி பயன்பாடு பற்றிய இவரது ஆராய்ச்சி, அந்நாடு உலகப்போரில் நிலக்கரியை சிறப்பாக பயன்படுத்த உதவியது. இதுதொடர்பாகவே தன் முனைவர் படிப்பையும் செய்தார்.  1950ஆம் ஆண்டு ரோசாலின்ட் இருவகை டிஎன்ஏக்களை கண்டுபிடித்தார். இதன் காரணமாக கிங் கல்லூரியில் உதவித்தொகை பெற்றார். டிஎன்ஏ அதிகளவு ஈரப்பதமான சூழலில் இருந்தால் அதன் வடிவம் மாறிவிடும் என்பதை ஆராய்ச்சி செய்து கண்டறிந்தார். 1958ஆம்ஆண்டு ரோசாலின்ட் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டு 37 வயதில் மரணமடைந்தார்.  Janet Taylor 1804ஆம் ஆண்டு ஜேனட் டெய்லர் பிறந்தார். இவர் அவரது பெற்றோருக்கு ஆறாவது குழந்தை. இவர் தன் ஏழாவது வயதில் தாயாரை இழந்தார். கடல் சம்பந்தமான பல்வேறு சாதனங்களை தயாரித்து விற்று புகழ்பெற்றார். இவரது கருவிகள் பற்றி புகார்கள், சர்ச்சை இருந்தாலும் இதற்கான அகாடமி ஒன்றையும் துணிச்சலாக உருவாக்கி வென்றவர் இவர். 1617-1852 ஆம் ஆண்டில் பதிவான காப்புரிமைகள் எழுபதிற்கும் மேல். இதில் ஒ

விட்டமின் டி உடலுக்கு அவசியத் தேவையா?

படம்
giphy.com இன்று இங்கிலாந்தில் பாதிக்கும் மேலான மக்கள் விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிட்டு வருகிறார்கள். இப்படி சாப்பிடும் மாத்திரைகள் உடலின் இயக்கத்திற்கு உதவுமா? என பல கேள்விகள் சாப்பிடுபவர்களுக்கும் உண்டு. அதனைப் பார்ப்பவர்களுக்கும் உண்டு. ஊட்டச்சத்து சந்தை என்பது 2015 இல் இங்கிலாந்தில் 414 மில்லியன் பௌண்டுகளாக வளர்ந்திருந்தது. கடந்த ஆண்டு உணவு ஏஜென்சி செய்த ஆய்வில் 48 சதவீத வயது வந்தோர் தினசரி விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது. அரசு அமைப்பான என்ஹெச்எஸ், மக்கள் பனிக்காலத்தில் விட்டமின் டி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்  என்று கூறியது. ஆனாலும் கார்டியன் பத்திரிகை விட்டமின் டி மாத்திரைகளை சாப்பிடுவது உடலில் பெரியளவு மாற்றங்களை உருவாக்கவில்லை என்று கூறியது. இங்கிலாந்தில் நாற்பது சதவீதம் பேர் விட்டமின் டி பற்றாக்குறையால் சிகிச்சை பெற்று வருகின்றனர். விட்டமின் டியை சூரிய ஒளி மூலமே நாம் பெறுகிறோம். இச்சத்து உடலில் உணவின் மூலம் பெறும் கால்சியம் சத்தை சரியான முறையில் பெற உதவுகிறது. இச்சத்து அதிகளவில் உடலில் இருந்தால், கால்கேமியா எனும் ரத்தத

உறக்கம் உயிரைப் பறிக்கிறதா? - இங்கிலாந்தில் அடிக்கிறது அலாரம்!

படம்
giphy.com  ஐரோப்பிய நாடுகளில் விரைவில் ஓட்டுநர்களின் உறக்கப் பிரச்னையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன. ஐரோப்பிய யூனியனில் புதிதாக தயாரிக்கப்படும் கார்களில் விபத்தைக் குறைப்பதற்காக முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இவை 2022 இல் அமலுக்கு வரும்.  காரில் உறக்கத்தைக் கண்காணிக்கும் கருவி, கருப்புப்பெட்டி ஆகியவை இடம்பெறவிருக்கின்றன. என்ன காரணம், அதிகரித்து வரும் விபத்துகள்தான். 2017 ஆம் ஆண்டில் மட்டும் ஐரோப்பாவில் 25 ஆயிரத்து 300 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் விபத்துகளால் படுகாயமுற்றுள்ளனர். இந்நாடுகளில் சாலை விபத்துகளில் பலியாகுபவர்களின் எண்ணிக்கையை  2030க்குள் 7 ஆயிரமாக குறைக்க ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருகிறது. இதற்காக ஓட்டுநருக்கான மேம்பட்ட உதவி அமைப்புகளை( ADAS) உருவாக்குவதற்கான அறிக்கையை கடந்த ஆண்டு ஏப்ரலில் உருவாக்கியது. இதில் 15 புதிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெறவிருக்கின்றன. “நீங்கள் இந்த வசதிகளை காரில் முதன்முறையாக பாதுகாப்பு சீட்பெல்ட் அறிமுகமானது போலத்தான் பார்க்கவேண்டும்” என்கிறார் ஐரோப்பிய யூனியன

டிஎன்ஏ சோதனைகள் ஆபத்தானவையா? -இங்கிலாந்தில் தொடரும் கண்காணிப்பு!

படம்
மெடிக்கல் நியூஸ் டுடே அதிகரிக்கும் டி.என்.ஏ. சோதனைகள்! செய்தி: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் டி.என்.ஏ வை சோதனை செய்யும் சாதனங்கள் விற்கப்படுகின்றன. இச்சோதனைகளின் விளைவுகள் பற்றிய விவாதங்கள் மருத்துவ வட்டாரங்களில் தீவிரமாகியுள்ளன. இங்கிலாந்தில் டி.என்.ஏ. சோதனைகளைச் செய்வதற்கான சாதனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அங்குள்ள தகவல் கமிஷனர் அலுவலக தகவல்படி, தோராயமாக 40 லட்சம் மக்கள் டி.என்.ஏ சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வணிகத்தில் மூன்று தனியார் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.  டி.என்.ஏ. சோதனை தவறல்ல; முறையான பாதுகாப்பு ஏற்பாட்டுடன் இதனைச் செய்வது அவசியம்.  தனியார் நிறுவனங்கள் மக்களின் தகவல்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் தந்து பராமரிக்கிறார்கள் என்ற பயம், புகார்களாக மாறியுள்ளன. இதன் விளைவாக,  தகவல் கமிஷனர் அலுவலகத்திற்கு பத்திற்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் என்ன பிரச்னை வர வாய்ப்புள்ளது? இரண்டாம் நிலை நீரிழிவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இந்தச் சோதனை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவியல் வட்டாரத்தினர் எச்சரி

பொருளாதாரத்தை கிரிப்டோ கரன்சி ஆளும்! - இங்கிலாந்து கவர்னர் யூகம்!

படம்
அமெரிக்க அரசின் டாலர் என்பது வர்த்தக பொருள் என்பதோடு அரசியல் அதிகாரமாகவும் உள்ளது. ரூபாயில் வர்த்தகம் செய்யும்போது, இந்தியாவுக்கு கிடைக்கும் லாபம் டாலரில் வணிகம் செய்யும்போது கிடைப்பதில்லை. ஆனால் அதை கைவிட முடியாத தற்கு காரணம், அமெரிக்க மீதான பயம்தான். இதில் முஸ்லீம் நாடுகள், மிக தைரியமாக அமெரிக்காவை எதிர்க்கின்றன. காரணம், அங்கு நிறைந்துள்ள எண்ணெய் வளம், பொருளாதார பலம்தான். டாலர், பௌண்டுகளுக்கு மாற்றாக டிஜிட்டல் பரிமாற்றத்தில் கிரிப்டோ கரன்சிகள் வந்தபின் அனைத்தும் மாறியுள்ளன. குறிப்பிட்ட பணத்தை வணிகத்தில் பயன்படுத்தவேண்டும் என்ற நிர்பந்தம் இனி இல்லை. தற்போதைய பாங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னர் மார்க் கார்னி, எதிர்காலத்தில் ஃபேஸ்புக்கின் லிப்ரா போன்ற விர்ச்சுவல் கரன்சிதான் உலகை ஆளும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இன்றுவரை வெளிநாட்டு வர்த்தகத்தில் டாலர் மட்டுமே ஏகபோகமாக உள்ளது. 1944 ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ்  ஒப்பந்தப்படி டாலர் உலகின் சக்திவாய்ந்த கரன்சியாக மாறியது. இதன் மதிப்பை தக்க வைத்து அரசியல் காய் நகர்த்தி முதன்மையான நாடாக மாறியது அமெரிக்கா. இன்று உலகம் முழுக்க பல

கனவை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காதீர்கள்!

படம்
நேர்காணல் ஜிம் அல் கலீலி, க்வாண்டம் இயற்பியலாளர்(சர்ரே பல்கலைக்கழகம், இங்கிலாந்து) நீங்கள் வளரும்போது என்னவாக ஆசைப்பட்டீர்கள்? நான் முதலில் கண்டுபிடிப்பாளராக மாறவே ஆசைப்பட்டேன். பிறகு ராக் இசைக்கலைஞனாக விரும்பினேன். கால்பந்து அணிக்கு விளையாட நினைத்தேன். நீங்கள் யாருக்கேனும் அறிவுரை சொல்ல வேண்டுமென்றால் என்ன சொல்லுவீர்கள்? நான் என் மனைவி ஜூலியைத் திருமணம் செய்தபோது எனக்கு பொருளாதார நெருக்கடி இருந்தது. அதைப்பற்றி நான் பேசியபோது, நீ அதைப்பற்றி கவலைப்படாதே, உன் கனவுகளைப் பின்பற்றி செல். நாம் இந்த கஷ்டங்களைச் சமாளித்துக்கொள்ளலாம் என்று கூறினார். அதனால்தான் நான் முனைவர் படிப்பை படிக்க முடிந்தது. நான் பெற்ற பிறருக்குச் சொல்ல விரும்பும் அறிவுரையும் இதுதான். நீங்கள் செய்யும் பணியை எளிமையாகச் சொல்லுங்கள் பார்ப்போம். நான் ஒரு கண்டுபிடிப்பாளன். பயணியும் கூட. அறிவியல் முடிவுகளை சிந்தனைகளை மக்களிடம் கூற முயற்சிக்கிறேன். நான் ஒரு க்வாண்டம் இயற்பியலாளர். அவ்வளவுதான். உயிருடன் இருப்பவரோ இறந்தவரோ விஞ்ஞானி ஒருவரைச் சந்திக்கவேண்டும். யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்.  ஆல்பர்ட் ஐன்

இங்கிலாந்து மேயரின் சாதனை ஆர்வம்!

படம்
உலகம் முழுக்க வெப்பமயமாதல் பற்றி அக்கறையும் பயமும் உள்ளது. இதன்பொருட்டு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் உழைத்து வருகின்றனர். இதற்காக இங்கிலாந்தில் புதிதாக பொறுப்பேற்ற மேயர் அசத்தலான காரியம் ஒன்றை செய்திருக்கிறார். வெப்பமயமாதல் பற்றி மாணவர்களுக்கு விளக்க பாடம் சொல்லித்தரவென ஆசிரியர்களை தொடக்கப் பள்ளியில் நியமிக்க இருக்கிறார். ஜேமி டிரிஸ்கோல் என்பவர் வடக்கு டைன் பகுதியில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர்தான் இந்த ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த முறையில் சுற்றுச்சூழல் கல்வியை ஐ.நா அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் கற்றுத்தர இருக்கிறார். இது மாணவர்களின் கல்வியை முழுமையாக்கும் என்கிறார் இவர். இம்முறையில் ஐம்பதிற்கும் மேலான ஆசிரியர்கள் , இப்பயிற்சியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். இந்தவகையில் சூழல் தொடர்பான கவனத்தை மேயர் தொடக்கத்திலேயே ஏற்படுத்தியுள்ளது பலரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நன்றி: இகோ வாட்ச்

தெரசா மேக்கு விடைகொடுக்கும் நேரம் !

படம்
போரிஸ் ஜான்சன் அடுத்த இங்கிலாந்து பிரதமராகிறார். இப்போதே அவரை இங்கிலாந்தின் அடுத்த டிரம்ப் என்று ஒரு கூட்டமும், மற்றொரு கூட்டம் அவர்தான் அடுத்த சர்ச்சில் என்றும் பேசிக்கொண்டிருக்கிறது. தெரசா மேக்கு இது பிரிவு உபசார நேரம். இன்னும் சிறிது நேரத்தில் டௌனிங் தெருவில் தன் கணவர் பிலிப்புடன் விருந்தில் பங்கேற்று தன்னுடன் பணியாற்றிய அலுவலக ஊழியர்களுக்கு விடை சொல்லுவார். இது தெரசா மேவின் இறுதி சொற்பொழிவுக்கு முன்னாடி நடைபெறும். இவர் பக்கிங்காம் பேலஸ் சென்று ராணி முன்னே தன் பதவியை விட்டு விலகியதைக் கூறுவார். மந்திரிசபையை ஜான்சன் மாற்றியமைக்க வாய்ப்புள்ளது. அடுத்து பிரெக்ஸிட் திட்டத்தை அனைவரும் ஏற்கச் செய்யும் பெரும் பொறுப்பு இவரின் தோள் மீது ஏறுகிறது. தெரசா மே, ராணியின் முன் பதவி விலகுவதோடு போரிஸ் ஜான்சன் பதவியேற்பதையும் பார்க்கும் அவலம் வேறு உள்ளது. இது பழங்கால நெறிமுறைப்படி நடைபெறும் சடங்கு. தெரசா மே பதவி விலகினாலும் அவர் மூன்றாண்டுகளாக பிரதமராக பதவி வகித்திருக்கிறார். பிரிட்டனின் வரலாற்றில் இரண்டாவது பெண்மணி இவர். நன்றி: சிஎன்என்

ராமானுஜன் இயந்திரம் - இஸ்ரேல் ஆய்வாளர்கள் சாதனை!

படம்
கணிதமேதை ராமானுஜனின் கணிதம், இன்று கணினித் துறைகளிலும் பயன்பட்டு வருகிறது. 1887 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து தானாகவே கணிதத்தை பரிசோதனை செய்து அதில் சாதனைகளைச் செய்தவரை இந்தியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இங்கிலாந்து அரவணைத்துக்கொண்டது. தற்போது அவரின் கணிதம் மூலமாக பை மற்றும் இ என்ற நிலை எண்களுக்கான விளக்கங்கள் கிடைத்துள்ளன. 1914 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கல்வி கற்க சென்றார் ராமானுஜன். அங்கு அவருக்கு பேராசிரியர் ஹார்டி என்பவர் அறிமுகமானார். இவர் மூலமே ராமானுஜனின் பல்வேறு தியரங்கள் மக்களுக்கு அறிமுகமானது. ராமானுஜன் தானாகவே கற்று போட்ட பல்வேறு கணக்குகள் சரியானவை என்று பின்னர் உறுதியாயின. ஆனால் அவர் பிறரை ஒப்புக்கொள்ள வைக்கும் முறையை கடைபிடிக்கவில்லை என்கிறார் வார்விக் பல்கலையைச்சேர்ந்த ஆசிரியரான செலிமர். இதுபற்றி இஸ்ரேல் விஞ்ஞானிகள் ராமானுஜன் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இவர்கள் செய்துள்ளது சோதனை கணிதம் என்ற முறையில் நல்ல முயற்சிதான். ஆனால் இது புதிதான யோசிக்கும் முறை அல்ல என்கிறார்  செலிமர். நன்றி: நியூ சயின்டிஸ்ட்

ஜோஃப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்தின் ராஜதானி எக்ஸ்பிரஸ்

படம்
கரீபியன் காளை ஜோஃப்ரா ஆர்ச்சர் வலது கை வேகபந்துவீச்சாளர். மணிக்கு நூற்று நாப்பது கி.மீ வேகத்தில் புயலாய் தாக்கும் யார்க்கர்கள், பவுன்சர்களால் பல பேட்ஸ்மேன்களின் ஹெல்மெட் அடிக்கடி அடிபடுவது ஆர்ச்சரின் உபாயம்தான். பார்படாஸில் பிறந்து மேற்கிந்திய தீவுகளுக்காக 19 வயதுக்குட்பட்டோர் அணியில் விளையாடியவர், இப்போது இங்கிலாந்து அணி ஜெர்சி அணிந்துவிட்டார். உலகக் கோப்பை அணியில் இங்கிலாந்துக்காக பந்து வீசி எதிரணிகளை மிரட்டி வருகிறார். மூன்று ஸ்டம்புகள்தான் இவரது குறி. அதற்கு குறுக்கே வரும் எதனையும் இவரது பந்து தகர்க்கிறது. அது பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டோ, கையோ, காலோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டுமே. ஹெல்மெட்டில் அடித்து ஸ்டம்புகளை தகர்த்து பந்துகளும் உண்டு. அப்படி ஒரு வேகம். வயது 24 அதற்கான வேகத்தில் பந்து ஸ்டம்புகளை நொறுக்குகிறது. இந்தியாவில் விராட் கோஹ்லி எப்படி எந்த பந்துகளைப் போட்டாலும் அடித்து நொறுக்கிறாரோ, அதேபோல்தான் ஜோஃப்ராவும். அடியேன் பார்க்கலாம் ப ந்துகளை ராக்கெட் வேகத்தில் வீசுகிறார். விளையாண்ட முதல் சர்வதேச போட்டி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானது. ஹஸீம் ஆம்லாவுக்கு

பதினைந்து வயதில் தொழிலதிபர்!

படம்
15 வயசு தொழிலதிபர்! இங்கிலாந்தைச் சேர்ந்த பதினைந்து வயது மாணவர் கணக்குத் தணிக்கை நிறுவனம் தொடங்கி சாதனை புரிந்துள்ளார். ரன்வீர்சிங் சந்து என்ற மாணவர் தன் முதல் தொழில்முயற்சியைத் தொடங்கியபோது அவரின் வயது 12 . இப்போது தன் சக நண்பர்களின் தொழில் முயற்சிகளுக்கும் கணக்கு ஆலோசகராக உதவிவருகிறார். ஒரு மணிநேரத்திற்கு 50 பவுண்டுகளை கட்டணமாக பெற்று வருகிறார். 2016 ஆம் ஆண்டு இணையத்தில் அக்கவுண்ட்ஸ் தொடர்பான படிப்பை நிறைவு செய்தார் ரன்வீர்சிங். எதிர்காலத்தில் தொழிலதிபராக மாறுவதே என் ஆசை, லட்சியம் என கூறியிருக்கிறார். தன் தந்தையின் இடத்தில் ஆபீசை போட்டு பத்து வாடிக்கையாளர்களை பிடித்து கம்பெனியை நடத்தி வருகிறார். எப்படி படிப்பையும் தொழிலையும் சமாளிக்கிறீர்கள் என ஆர்வமாக கேட்டதற்கு, படிப்பும் தொழிலும் வேறுவேறானவை. இதில் மன அழுத்தங்கள் ஏற்படவில்லை என தில்லாக பேசுகிறார் சிங். சில ஆண்டுகளுக்கு முன்பே டெக் பிசினஸ் விருதைப் பெற்றுவிட்டார் சிங். படம்-செய்தி:  நன்றி: தி இந்து

இங்கிலாந்தில் சூடு பறக்கும் சூழல் போராட்டம்!

படம்
இங்கிலாந்தில் வெப்பமயமாதல் அதிகரிப்பு காரணமாக, மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். இதில் முக்கியமானது, அவர்கள் விடுமுறை தினத்தன்று போராடுவதும் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை என்பதும்தான். ஆனால் அதற்காகவெல்லாம் அரசு சும்மா இருக்குமா? 2025 ஆம் ஆண்டிற்குள் கார்பனைக் குறைக்கும் நிர்பந்தம் இருக்கும் அரசை மேலும் போராட்டம் நடத்தி நெருக்கடியில் தள்ளியதற்காக, சுமார் 570 பேர்களை அரசு கைது செய்துள்ளது. இங்கிலாந்தின் ஹீத்ரு விமானநிலையத்தில் இளைஞர்கள் சூழல் தொடர்பான பாடல்களைப் பாடி போராடியதும் மக்களை உணர்ச்சிகரமாக போராட்டத்திற்கு அழைத்துள்ளது. போராட்டத்தில் அகாடமி அவார்டு வென்ற தாம்சன் என்ற நடிகையும் இணைந்துள்ளது போராட்டக்கார ர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பதிமூன்று முதல் பதினான்கு வரையிலான இளைஞர்கள் நாம்தான் பூமியின் கடைசி தலைமுறையா என்று கேள்வி கேட்டு வைத்த பேனர்கள் மக்களை போராட்டத்திற்கு தொடர்ந்து ஈர்த்து வருகிறது. என்னுடைய எதிர்காலம் பற்றிய பயத்தினால்தான் நான் போராட்டத்திற்கு வந்தேன். அதே பயம்தான் போராடுவதற்கான தைரியத்தையும் தந்தது என்று ராய

பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்னாகும்?

படம்
பிரெக்ஸிட் பிரிவால் இங்கிலாந்துக்கு என்ன நடக்கும்? பிரிட்டன், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிவது உறுதி. இது தாமதமானாலும் நடக்கப்போகிறது. தனிநாடாக நிற்கும் வணிகம் உட்பட அனைத்தையும் இங்கிலாந்து அரசு தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக தெரசா மே பல்வேறு நாடுகளுக்குச் சென்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறார். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது 9 சதவீதம் குறைவாகவே இருக்கும். ஐரோப்பிய யூனியனிலிருந்து கிடைத்து வந்த பொருட்கள் அனைத்தும் இனி கிடைக்காது. இதன் அர்த்தம், இங்கிலாந்து இனி சுங்கவரி அதிகமாக கட்டவேண்டி இருக்கும். இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து 30 சதவீத உணவுப்பொருட்கள் இங்கிலாந்துக்கு வருகின்றன. நன்றி: தி கார்டியன்.காம்