இடுகைகள்

சூழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கியமான சூழல் வலைத்தளங்கள்!

படம்
  சூழல் வலைத்தளங்கள்! www.afforestt.com 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம். பெங்களூரு மற்றும் நியூ டில்லியில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 12. இயற்கையான சூழலை மீட்டெடுக்க மண்ணுக்கு உகந்த மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை உருவாக்கிவருகின்றனர். இதன் நிறுவனர் , சுபேந்து ஷர்மா. Greenyatra.org இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில்மரக்கன்றுகளை நடும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மியாவகி காடுகளை, நிலப்பரப்பிற்கான ஆய்வுகளைசெய்து மரக்கன்றுகளை, தாவரங்களை நட்டு பராமரிக்கிறது. இதன் நிறுவனர், பிரதீப் திரிபாதி.  Careearthtrust.org 2000ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு. பள்ளிக்கரணை சதுப்புநிலம், நன்மங்கலம் காடுகளை பாதுகாத்து மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றியுள்ளது.  இப்பணிக்காக , மத்திய அரசின் சூழல், வனத்துறை அமைச்சகத்தில் இந்திராகாந்தி பார்யவரனன் விருது (The Indira Gandhi Paryavaran Puraskar) பெற்றுள்ளது. கேர்எர்த்ட்ரஸ்ட் அமைப்பு, பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகளை வளர்ப்பது பற்றிய கொள்கைகளை உருவாக்கி மத்திய, மாநில அரசுகளுக்கு

கட்டுமானங்களுக்கு குப்பைகேள போதும்!

படம்
  கட்டுமானங்களுக்கு குப்பைகளே போதும்!  கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் சூழலுக்கு உகந்த வகையில் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்கள். இந்த வீட்டை அங்குள்ள மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். இதில் பயன்படுத்தும் பொருட்கள் , பலவும் குப்பைக்கிடங்கில் இருந்து பெறப்பட்டவை.  இந்த வீட்டுக்கு உரிமையாளர் அபிஷேக், பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  இவருக்கு சூழலை மாசுபடுத்தாதபடி வீட்டைக் கட்டும் ஐடியாவைக் கூறியது பொறியாளர் வினு கோபால்.  அதனை வடிவமைத்தவர் கேரளத்தைச் சேர்ந்த பவாஸ் தென்கிலன். வினு கோபால், குப்பைச் சுவர் (Debris wall ) என்ற நுட்பத்தை காப்புரிமை செய்து வைத்துள்ளார். இதன்படி, 2007ஆம் ஆண்டு முதல் கட்டடங்களை வடிவமைத்து வருகிறார். இவர், உருவாக்கும் கட்டடங்கள் அனைத்துமே பிறர் தூக்கியெறிந்த குப்பைகளாலானவை.   கட்டுமானப் பொருட்களை 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள குவாரி, கட்டுமான இடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுப்பொருட்களிலிருந்து பெறுகிறார்.  அதை சேகரித்து வீடுகளை கட்டிவருகிறது வினுவின் குழு. இந்த வகையில்  தூக்கியெறியப்பட்ட கம்பிகள், டயர்கள் என எதையும் விடுவதில்லை.  ”

இந்திய கடல் ஆமைகள்!

படம்
  இந்திய கடல் ஆமைகள்! தோணியாமை  (Leatherback turtle) அறிவியல் பெயர்: டெர்மோசிலிஸ் கோரியாசியா (Dermochelys coriacea) நீளம்: 170 செ.மீ  எடை: 500 கி.கி உணவு : ஜெல்லி மீன் வாழுமிடம் : அந்தமான் நிக்கோபார் தீவுகள் தெரியுமா?:  கடல் ஆமைகளில் மிகப்பெரியது தோணியாமை இனம்தான்.  சித்தாமை அல்லது பங்குனி ஆமை (Olive ridley turtle) அறிவியல் பெயர் லெபிடோசெல்ஸ் ஆலிவாசியா (Lepidochelys olivacea) நீளம்:  62-70 செ.மீ. எடை:  45 கி.கி உணவு: இறால், நண்டு, சிப்பி, ட்யூனிகேட், பிற மீன்கள் வாழிடம்: இந்திய கடல்பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் தெரியுமா? மெக்ஸிகோ, இந்தியா, நிகரகுவா, கோஸ்டா ரிகா நாட்டு கடற்புரங்களில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பேராமை (Green Turtle) அறிவியல் பெயர்: செலோனியா மைடாஸ் (Chelonia mydas) நீளம்: 120 செ.மீ. எடை: 159 கி.கி. உணவு: கடல் புற்கள், பாசி, ஜெல்லி மீன் வாழிடம்: லட்சத்தீவுகள் தெரியுமா? பச்சை ஆமை, பிற ஆமைகளைப் போலன்றி தாவரங்களை முதன்மையாக உண்டு (Herbivorous) வாழ்கிற உயிரினம் அழுங்கு ஆமை (Hawksbill turtle) அறிவியல் பெயர் எரெட்மோசெலிஸ் இம்பிரிகாடா (Eretmoche

பூமிக்கு கார்பன் டை ஆக்சைடு முக்கியமா? பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  கேள்வியும் பதிலும்! சூழலில் கார்பன் முக்கியமா? கார்பன் டையாக்சைடு பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று. இதில், கார்பன் முக்கிய பகுதிப்பொருள். பூமியின் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைட் வாயு, சூரிய வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. பூமியிலிருந்து, சூரிய வெப்பம்  முழுவதும் வெளியேறிவிடாமல் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.  வளிமண்டலத்தில்  கார்பன் டையாக்சைட் வாயு இல்லையெனில், பூமியில் உள்ள கடல் விரைவில் உறைந்துபோய்விடும். அதேசமயம், மனிதர்களின் செயல்பாட்டால் காற்றில் கார்பன்டையாக்சைட் வாயு அதிகரிக்கும்போது, வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரிக்கும். உலகில் வாழும் அனைத்து பொருட்களிலும் கார்பன் உண்டு. மனிதர்களின் உடலிலும் கூட உண்டு. ஒருவர் தோராயமாக 45 கிலோ என கணக்கிட்டால் அவரது உடலில் 8 கிலோ கார்பன் இருக்கும். தாவரங்களிலும் பகுதியளவு கார்பன் உண்டு.  படிம எரிபொருட்கள் எவை? பூமியில் மட்கிப்போன தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு ஆகியவற்றுக்கு,  படிம எரிபொருட்கள்  என்று பெயர்.  https://climatekids.nasa.gov/carbon/

இயற்கைச் சூழல் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது! - நிதின்சேகர்

படம்
  நேர்காணல் நிதின் சேகர் இயற்கை செயல்பாட்டாளர், எழுத்தாளர் காட்டுக்குள் நீங்கள் தங்கியிருந்திருக்கிறீர்கள். அதில் உங்களுக்கு பிடித்தமான நினைவுகள் ஏதேனும் இருக்கிறதா? நாங்கள் ஒரு யானையைப் பிடித்து கட்டி வைத்திருந்தோம். அதன் பெயர், திகாம்பர். ஒருநாள் நான் அதன் நின்றபடி நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென எனது நெஞ்சில் ஏதோ ஒன்று வேகமாக வந்து பட்டது. கீழே விழுந்த பொருளைப் பார்த்தேன். அப்போதுதான் பிடுங்கி எறியப்பட்ட செடி.  திகாம்பர் தான் சலிப்பு தாங்காமல் என்மேல் செடியை எறிந்துள்ளது என புரிந்துகொண்டேன். திரும்ப அதே செடியை அதன் காலடியில் போட்டேன். திரும்ப திகாம்பர் என் மீது செடியை தும்பிக்கையால் பற்றி என் மீது எறிந்தது. ஆம் இப்போது நாங்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை சில நிமிடங்களுக்கு பிறகே அறிந்தேன். யானையை சுதந்திரமாக வைத்திருக்க நினைக்கிறோம். அதற்காக சூழலியலாளர்களாக நாங்கள் நிறைய உழைக்கிறோம்.  காட்டின் நடுவே சிறு குடிலைக் கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கிறீர்கள். அதுவும் அங்கு வாழும் மக்களின் மொழியும் கூட உங்களுக்குத் தெரியாது அல்லவா? மேற்கு வங்கத்தில

ஆற்றுத் துண்டாடலால் நடைபெறும் சேதங்கள்! - வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு கூடுகிறது!

படம்
வெள்ளத்தால் மாறும் ஆற்றின் வழித்தடம்! 2008ஆம் ஆண்டு, இந்தியா- நேபாளத்தின் எல்லையில் உள்ள கோசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, 30 லட்சம் மக்களின் வீடுகள் வெள்ளத்தால் அழிந்தன.  வெள்ள எச்சரிக்கையை முன்கூட்டியே கூறாத அறிவியலாளர்கள், அரசு ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். வெள்ளப்பெருக்கு அபாயத்தை ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தன என்பதே உண்மை. இந்த சம்பவத்தில் நாம் அறியவேண்டியது, ஆறு தன் வழித்தடத்தை மாற்றிக்கொள்வதேயாகும்.  பெரியளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபிறகு, ஆற்றின் வழித்தடம் மாறுவதற்கு, ரிவர் அவல்ஷன் (River avulsion) என்று பெயர். தமிழில் வெள்ளத் துண்டாடல் எனலாம். ஆற்றின் வழித்தடத்தில் காலப்போக்கில் அரித்துச் செல்லும் மண்ணில் உள்ள வண்டல் கீழே படியும். இப்படி படியும் மண் ஆற்றின் நீர்ப்போக்கைத் தடுக்கும். இதனால் ஆற்றின் நீர் வேறுவழியாக செல்ல முயலும். இதனால் ஆற்றின் கரைப்பகுதிகளில் ஏற்படும் சேதம், நிலநடுக்கம் ஏற்பட்டால் உருவாவதைப் போலவே இருக்கும். கங்கை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான கோசி ஆறு, வெள்ளம் ஏற்பட்டபோது, அதன் வழித்தடத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்திற்கு மாறியது. ஆற்ற

கண்களைக் கவரும் சாக்லெட் மலை!

படம்
  கண்களைக் கவரும் சாக்லெட் மலை! பிலிப்பைன்ஸ் நாட்டில் போஹோல் தீவு (Bohol island)உள்ளது. இங்கு சிறிய, வட்டமான, பழுப்பு நிறமான மலைகள்  உள்ளன. இவை பெட்டியில் வைக்கப்பட்டுள்ள சாக்லெட்டுகளைப் போல காட்சியளித்தன. இதன் காரணமாகவே, இம்மலைக்கு சாக்லெட் மலை என்று பெயர். இதனைச் சுற்றிலும் மழைக்காடுகள், அரிசி வயல்கள் காணப்படுகின்றன.  இத்தீவில் டார்சியர் (Philippine tarsier)எனும் சிறு விலங்கு காணப்படுகிறது. இதனை உலகின் சிறிய விலங்கு என்று விலங்கியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த விலங்கு,  தனது கூர்மையாக பார்வைத்திறன் மூலம் இரவில் பூச்சிகளை வேட்டையாடுகிறது. இந்த சிறுவிலங்கை காப்பாற்ற இப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வருபவர்களுக்கு, டார்சியர் சரணாலயம் ஈர்ப்பூட்டும் இடமாக உள்ளது.   சாக்லெட் மலை, முழுக்க சுண்ணாம்புகல் பாறையால் உருவாகியுள்ளது. இதனை சுற்றிலும் புற்கள் வளர்ந்துள்ளன. சுண்ணாம்புக்கல் என்பது பவளப்பாறையால் உருவாகிறது. இத்தீவில் காலப்போக்கில் பெய்த மழைப்பொழிவு, சுண்ணாம்புக்கல் பாறையின் வடிவத்தை மாற்றியிருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.  பல லட்சம் ஆண்டுக

காற்று வேதியியலின் தந்தை - ஜான் பாப்டிஸ்டா வான் ஹெல்மான்ட்

படம்
  ஜான் பாப்டிஸ்டா வான் ஹெல்மான்ட் ( Jan Bapista van Helmont   1580 -1644 ) 1580ஆம் ஆண்டு ஸ்பானிய நெதர்லாந்து நாட்டின் (தற்போது பெல்ஜியம்) ப்ரூசெல்ஸ் நகரில் பிறந்தார். லூவெய்ன் நகரில் அமைந்திருந்த கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு படித்தார். 1599ஆம் ஆண்டு படிப்பை நிறைவு செய்தவர், மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார். ஐரோப்பா முழுவதும் பயணித்து தன் மருத்துவத் திறன்களை மெருகேற்றிக்கொண்டார்.  அக்காலகட்டத்தில் உடலுக்கு ஏற்படும் நோய்களுக்கான மருந்து, தாவரங்களில் இருந்து மட்டுமே பெறப்பட்டது. இதனை ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பாராசெல்சஸ் (Paracelsus)மாற்றினார். இவர், நோய்களுக்கு மருந்தாக வேதிப்பொருட்களைப் பயன்படுத்தலாம் என கூறினார். இதன்படியே செயல்பட்டார். இவரை ஹெல்மான்ட் வழிகாட்டியாகப் பின்பற்றினார்.  ஒயின் தயாரிப்பில் வெளியாகும், வாயு, குடலில் உருவாகும் வாயு ஆகியவற்றை முதன்முதலில் ஹெல்மான்ட்  கண்டறிந்தார். இந்த வாயுக்கள்தான் , மீத்தேன் மற்றும் கார்பன்டை ஆக்சைட். இதனால் ஆராய்ச்சியாளர்கள், இவரை காற்று வேதியியலின் தந்தை என்றும் கூறுகின்றனர். கிரேக்க வார்த்தையான Chaos

நவீன சூழலியலின் தந்தை - ஜி எவ்லின் ஹட்சின்சன்

படம்
  ஜி எவ்லின் ஹட்சின்சன் (G.Evelyn hutchinson 1903 -1991) உயிரியலாளர், ஆசிரியர் நவீன சூழலியலின் தந்தை என்று என்னை அழைக்கிறார்கள்.  எனது மாணவர்கள் தான் சூழலில் உள்ள உயிரினங்களை கணிக்கும் கணிதமாதிரியை உருவாக்கினார்கள்.  இங்கிலாந்தில் பிறந்த ஹட்சின்சன், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பட்டம் பெற்றார். பிறகு தென்னாப்பிரிக்காவிற்கு ஆசிரியராக பணிக்கு சென்றார். பின்னாளில், அமெரிக்காவிற்கு சென்று யேல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார்.  ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா. வட அமெரிக்கா என பல்வேறு பகுதிகளில் சூழலியல் பற்றி ஆராய்ந்தார் ஹட்சின்சன். குறிப்பிட்ட சூழலில் உயிரினங்கள் வாழ்வதற்கான பல்வேறு காரணங்களை தேடினார். ஏரிகளைப் பற்றி ஆய்வு செய்த முதல் அறிவியலாளர்  (limnologist), எவ்லின் ஹட்சின்சன் தான். கோட்பாட்டு உயிரியலாளராக ஆராய்ச்சிகளை செய்தவர், படிம விலங்கின மாதிரிகளைக் கொண்டு  சூழலுக்கும் அவற்றுக்குமான தொடர்பை அறிய முயன்றார். வெப்பமயமாதலை முன்னரே கணித்தவர் என சூழலியலில் கருதப்படும் ஆராய்ச்சியாளர் எவ்லின் ஹட்சின்சன்.  https://www.oxfordbibliographies.com/view/document/obo-97801998

வளர்ந்த நாடுகள் தான் மாசுபடுதலுக்கு முழுப்பொறுப்பு - மாதவன் ராஜீவன், முன்னாள் செயலர், புவி அறிவியல் துறை

படம்
  மாதவன் ராஜீவன் முன்னாள் செயலர், புவி அறிவியல்  உலகம் முழுக்க வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் காரணம் என்ன? காலநிலை மாற்றம்தான் உலக நாடுகள் முழுவதும் வெப்பம் அதிகரிக்க முக்கியமான காரணம். இதன் விளைவாக வெப்ப அலைகள் உருவாகின்றன. மழைப்பொழிவு அதிகரிக்கிறது. வெள்ளப்பெருக்கு சொத்துகளை நாசமாக்குகிறது. மனிதர்களின் தலையீடு காலநிலை மாற்ற விளைவுகளை மேலும் தீவிரமாக்குகிறது.  வெப்பமண்டல நாடுகளில் கூட காலநிலை மாற்ற விளைவுகள் குறையவில்லை. நாம் எப்படி இதற்கான தீர்வைக் கண்டறிவது? தீவிரமான காலநிலை வேறுபாடுகள் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியசிற்குள் இருக்க வேண்டுமென்பதுதான் காலநிலை மாநாட்டு ஒப்பந்தம் கூறுவது. அதற்கு நாம் பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டியிருக்கிறது.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ரஷ்யா ஆகியவையே உலகளவில் அதிக மாசுபாடுகளை உருவாக்குகின்றன.  வளரும் நாடுகள் இதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா? வளர்ந்த பணக்கார நாடுகள் மாசுபாடு பற்றிய பிரச்னையில் முக்கியமான முடிவை எடுக்கவேண்டும். உலகளவில் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸி

பாறைகள் மண்துகள்களாக மாறும் செயல்பாடு! - ஆர்கானிக் வெதரிங்

படம்
  பாறைகளில் ஏற்படும் மாற்றம்! நடக்கும்போது, விளையாடும்போது காலில் ஒட்டியுள்ள மண்ணைப் பார்த்திருப்பீர்கள். இந்த மண் எப்படி உருவாகிறது என அறிவீர்களா? பாறைகள் மெல்ல உடைந்து துண்டுகளாகி, சிறு துகள்களாகி மண்ணாகிறது. இயற்கையாக நடைபெறும் இச்செயல்பாட்டிற்கு, வெதரிங் (weathering) என்று பெயர்.  பாறைகள் உடைந்து சிறு துண்டுகளாகி மண் துகள்களாக மாறுவதற்கு மரம், விலங்குகள், நுண்ணுயிரிகள், மனிதர்களின் செயல்பாடுகள் காரணமாக உள்ளன. இதனை  சூழலியல் வல்லுநர்கள், பயாலஜிகல் வெதரிங் (Biological weathering)என்று குறிப்பிடுகின்றனர். ஷ்ரூஸ் (Shrews), மோல்ஸ் (Moles), மண்புழுக்கள், எறும்புகள்  ஆகியவை பாறையில் துளைகளையும், விரிசல்களையும் ஏற்படுத்துகின்றன. இவற்றில், பறவைகள் தம் எச்சம் மூலமாக  விதைகளை விதைக்கின்றன. விதைகள் முளைத்து செடியாகி, மரமாகும்போது பாறை மெல்ல உடைபடுகிறது.  சயனோபாக்டீரியா (Cyanobacteria),  பாறையில் வளரும் செடிவகை (Lichens), பாசி, பூஞ்சை ஆகியவையும் பாறைகளைத் துளையிடுகின்றன. இதற்கு, வேதிப்பொருட்களைப் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக பாறையிலிருந்து, தனக்குத் தேவையான கனிமங்களைப் பெறுகின்றன. பிட்டாக் ஷ

சூழல் தொடர்பான அருஞ்சொற்களின் தொகுப்பு !

படம்
  அருஞ்சொல்.... கிளைமேட் சேஞ்ச் (Climate Change) குறிப்பிட்ட காலகட்டத்தில் அளவிடப்படும்  காலநிலை மாற்றம். இதில் வெப்பநிலை, மழைப்பொழிவு, காற்று ஆகியவை உள்ளடங்கும்.   கிளைமேட் ஃபீட்பேக் (Climate Feedback) காலநிலை மாற்றத்தின் விளைவுகளை அதிகரிக்க அல்லது குறைக்க செய்யும் செயல்முறைகள்.  கிளைமேட் லேக் (Climate Lag) காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மெதுவாக நடப்பது. வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கரியமில வாயு, வெப்பமயமாதல் பாதிப்பை மெதுவாக ஏற்படுத்துகிறது. இதற்கு 25 முதல் 50 ஆண்டுகளாகும்.  கிளைமேட் மாடல் (Climate Model) கணித முறைகளைப் பயன்படுத்தி காலநிலை மாற்றங்களைக் கணக்கிட காலநிலை மாதிரி (Climate Model) உதவுகிறது. எ.டு: பருவக்காலங்களில் ஏற்படும் புயல்களை முன்னமே அறிந்து நிலச்சரிவு ஆபத்தை தடுப்பது. கிளைமேட் சென்சிடிவிட்டி (Climate Sensitivity) வளிமண்டலத்தில் கரியமில வாயு குறிப்பிட்ட அளவு அதிகரித்தபிறகு பூமி வெப்பமாக உள்ளதா அல்லது குளிர்ந்துள்ளதா என அளவிடுவது.  https://polarpedia.eu/en/climate-lag/ https://www.climate.gov/maps-data/climate-data-primer/predicting-climate/climate-models

அறிவியல் பிட்ஸ் - 2070ஆம் ஆண்டில் காணாமல் போகும் கள்ளி!

படம்
  2070ஆம் ஆண்டில் அழியும் கள்ளி! வெப்பம் அதிகமுள்ள நிலப்பரப்பில் கள்ளி வகை தாவரங்கள் வாழ்வது நாம் அறிந்ததுதான். அண்மையில், அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த ஆய்வில், கள்ளிகள் கூட வெப்பம் அதிகரித்து வந்தால் அழிந்துவிடும் என கூறியுள்ளனர். உலகிலுள்ள 60 சதவீத கள்ளி இன தாவரங்கள் 2070ஆம் ஆண்டுக்குள் 90 சதவீதம் அழிந்துவிடும் என மதிப்பிட்டுள்ளனர். இதுபற்றிய ஆய்வு நேச்சர் பிளான்ட்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. இதுபற்றிய ஆராய்ச்சியில் 400க்கும் அதிகமான தாவர மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் அட்லாண்டிக் காடுகள் என பல்வேறு சூழல்களில் கள்ளி இன தாவரங்கள் வாழ்கின்றன. இப்பகுதிகளில் 1,500க்கும் மேற்பட்ட இனத்தைச் சேர்ந்த கள்ளிகள் காணப்படுகின்றன. விளைச்சல் நிலங்கள் அதிகரிப்பு, நிலத்தின் வளம் இழப்பு, பல்லுயிர்த்தன்மை இழப்பு ஆகியவை கள்ளி அழிவிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.  “நாங்கள் செய்த ஆராய்ச்சியில் கள்ளி இன தாவரங்கள் 60 முதல் 90 சதவீதம் அழிய வாய்ப்புள்ளது. இதற்கு காலநிலை மாற்றம் முக்கியமான காரணமாக உள்ளது” என அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மிச்செல் பைலட் க

மண்ணிலுள்ள அமிலங்கள், பாதுகாக்கப்பட்ட உயிரியல் பகுதி! - தெரியுமா?

படம்
  மண்ணிலுள்ள அமிலங்கள்! இந்தியாவில் உள்ள அனைத்து நிலங்களும் ஒரேமாதிரியான சத்துக்களை கொண்டிருப்பவை அல்ல. சில இடங்களிலுள்ள நிலங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். மண்ணிலுள்ள அமிலத்திற்கு எதிரிடையான வேதிப்பொருளை மண்ணில் பயன்படுத்தும்போது மண், பயிர்களை விளைவிப்பதற்கு ஏதுவான நிலையைப் பெறும். பெரும்பாலான பயிர்கள் அமிலம், காரம் என அதிகம் மிகாத மண்ணில்தான் சிறப்பாக விளைகிறது.  மண்ணில் தாவரங்கள் வளர்வதற்கும் அதிலுள்ள அமில, கார அளவுகள் முக்கியமானவை. ஆசியா மற்றும் அமெரிக்காவில் அதிகம் விளையும் பூ தாவரம், ஹைட்ரேஞ்சியா (Hydrangea). இந்த தாவரம் அமிலம் நிரம்பிய மண்ணில் விளைந்தால், நீலநிற பூக்களும், காரம் நிரம்பிய மண்ணில் விளைந்தால் ரோஸ் நிற பூக்களையும் பூக்கின்றன. மண்ணிலுள்ள அமில, கார அளவை பிஹெச் அளவுகோல் மூலம் எளிதாக கணக்கிடலாம்.  மேற்குலகில் நிலத்திலுள்ள அமிலத்தன்மையை சீர்படுத்த சுண்ணாம்பை பயன்படுத்துகின்றன. இதன் விளைவாக, நிலத்தின் அமிலத்தன்மை நடுநிலையாக பிஹெச் 7 என்ற அளவுக்கு மாறுகிறது.  பாதுகாக்கப்பட்ட உயிரியல் பகுதி ( Biome Domes )  உலகில் பாலைவனங்கள், காடுகள் என பல்வேறு நிலப்பரப்புகள்  உண்டு.

சறுக்கி கீழே விழும் அட்லாண்டிக் பஃபின் - கோமாளிப்பறவை

படம்
  கோமாளிப்பறவை அட்லாண்டிக் பஃபின்ஸ்களை, கடல் கோமாளிகள் என  கூறுகிறார்கள். இதற்கு காரணம், இதன் செயல்பாடுகள்தான். மலை உச்சியில் இருந்து கீழே விழுவது போல பறக்கும் இயல்புடையது. நிமிடத்திற்கு இறக்கைகளை 300 முறை அசைக்கிறது. மீன்களை வேட்டையாடினால் ஒரு டஜன் மீன்களை அலகில் பிடித்து வைத்து உண்ணும். இதன் ஆரஞ்சு நிற வளைந்த அலகு மீன்கள் கீழே விழாமல் தடுக்கிறது.  வெள்ளை முகம், ஆரஞ்சுநிற அலகு, கண்களைச்சுற்றியுள்ள கருப்பு வண்ணம் ஆகியவையே கோமாளித் தோற்றத்திற்கு காரணம்.  பஃபின்களின் ஆரஞ்சு நிறம் அதன் ஆரோக்கியத்தை குறிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஆரஞ்சு நிறம் கோடைக்காலத்தில் இணைசேரும்போதுதான் உருவாகிறது. இப்படி ஆரஞ்சு நிறத்தை உருவாக்க, பஃபின் பறவை அதிக ஆற்றலை செலவழிக்கிறது. இணைசேரும் காலம் முடிந்தவுடன் ஆரஞ்சுநிறம் மங்கி, பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. டஃப்டட் பஃபின் (Tufted puffin), ரினோசெரஸ் ஆக்லெட் பஃபின் (Rhinoceros auklet puffin) ஆகிய பறவை இனங்களில் புருவங்கள் நீளமாக இருப்பது, நீர்யானை போன்ற முகத்தோற்றம் ஆகியவை உண்டு. இதெல்லாம் இணை சேர்வதற்கான காலத்திற்கான ஈர்ப்பிற்காக என ஆராய்ச்சியாளர

வெப்பம் குறைந்து வரும் எரிமலைப் பகுதிகள்!

படம்
  வெப்பம் குறைந்துள்ள எரிமலைப்பகுதிகள்! பூமியில் அடியில் உள்ள வெப்பம் காரணமாக, பாறைகளை எரித்தபடி எரிமலைக்குழம்பு வெளியே வருகிறது. இப்படி எரிமலைக்குழம்பு வெளியேறும் இடங்களை எரிமலை என்கிறோம். எரிமலைக் குழம்பு வெளியேறும் நிலப்பரப்பிற்கு ஹாட்ஸ்பாட்(hot spot) என்று பெயர். பொதுவாக இப்படி எரிமலைகள் உருவாகின்றன என்றால் அந்த இடம், பூமியின் அடிப்பரப்பிற்கு நெருக்கமாக உள்ளது என்று பொருள்.  சில எரிமலைப்பகுதிகளில் வெளியேறும் எரிமலைக்குழம்பில் பல்வேறு வேதிப்பொருட்கள் உண்டு. குளிர்ந்த எரிமலையில் சிலசமயங்களில் எரிமலைக்குழம்பு வெளிவந்தாலும் அவை ஒப்பீட்டளவில் வெப்பநிலை குறைந்தவை என ஆய்வுகள் கூறுகின்றன.  நிலத்திட்டு, கடல்நீர்த்தட்டு ஆகியவை ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும்போது மலைகள், எரிமலைகள் தோன்றுகின்றன. நிலத்திட்டின் நடுப்பகுதியில் எரிமலை இயக்கங்கள் ஏற்படுவதாக புவியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  ஹவாய் தீவுகள், தெற்கு அட்லாண்டிக் அஸ்சென்சன் தீவு, தெற்கு பசிபிக் பிட்கெய்ர்ன் தீவுகள் ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.  பல்வேறு தனிப்பட்ட பகுதிகளில் எரிமலை வெடிப்பு இருப்பதை ஆய்வாளர் ஸியுவான் பாவோ என்று ஆய்வா

சூழல் சொற்கள்! - அறிய வேண்டிய ஆங்கிலச் சொற்களும், அதன் பொருளும்!

படம்
  பொருள் அறிவோம்! Abrupt Climate change காலநிலையில் உடனடியாக நடைபெறும் மாற்றம் அல்லது விளைவு Adaptation புதிய மாறிவரும் இயற்கை சூழல் அமைப்புகளுக்கு ஏற்ற வகையில் வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்வது Adaptive Capacity எதிர்கால காலநிலை மாற்றத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் திறன். இத்திறன் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தது.  Aerosols வளிமண்டலத்தில் உள்ள சிறு துகள்கள் அல்லது நீர் திவலைகள். இவை சூரிய வெப்பத்தை ஈர்க்கின்றன. எடு.கடல் உப்பு, எரிமலை சாம்பல், தூசி Afforestation காடுகள் இல்லாத இடங்களில் மரக்கன்றுகளை நட்டு காடுகளை உருவாக்கி வளர்ப்பது https://19january2017snapshot.epa.gov/climatechange/glossary-climate-change-terms_.html

க்ரௌன் ஷைனெஸ் -மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி

படம்
  மரங்கள் உருவாக்கிக்கொள்ளும் இடைவெளி! பெருந்தொற்று தொற்றாமலிருக்க ஆறு அடி இடைவெளி அவசியம். இதுபோலவே, இயற்கைச்சூழலிலுள்ள மரங்கள்  இடைவெளி விட்டு வளருவதை கடைபிடித்து வருகின்றன. காட்டில் மரங்கள்  நெருக்கமாக அமைந்திருக்கும். ஒரு மரத்தின் உயர்ந்த கிளைகள்  அருகிலுள்ள மரங்களை தொடுமளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் கூட அவற்றைத் தொட்டிருக்காது. சிறிய இடைவெளி இருக்கும். இதற்கு க்ரௌன் ஷைனெஸ் (Crown Shyness)என்று பெயர். அடர்ந்த காடுகளின் மேற்புறத்தைப் பார்த்தால் இதனை எளிதாக  புரிந்துகொள்ளலாம். மரத்தின் கிளைகளுக்கு இடையிலான இடைவெளி, ஜிக்ஸா புதிர்போலவே இருக்கும்.  1920ஆம் ஆண்டிலேயே அறிவியல் ஆய்வு அறிக்கைகளில் க்ரௌன் ஷைனெஸ் பற்றி எழுதப்பட்டுள்ளது. மரங்களின் இந்த இயல்பை அறிவியல் முறையில் தீர்மானித்து கூறியவர், தாவரவியலாளர் ஃபிரான்சிஸ் ஜேக் புட்ஸ் (Francis jack putz). 1982ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஃபிரான்சிஸ் தனது குழுவினருடன் கள ஆய்வுக்காக சென்றார். அங்குதான் கருப்பு மாங்குரோவ் மரத்தைக் கவனித்தார். மேற்புறத்தில் கிளைகள் படர்ந்திருந்தாலும் அவை பிற மரத்தின் கிளைகளுடன் இணையவில்லை. இதனால், மரங்கள் தங்களின் தனி

நியூரோமார்பிக் கேமரா மூலம் கிடைக்கும் பயன்!

படம்
  தெரியுமா? சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், 2021ஆம் ஆண்டு இறுதியில் நியூரோமார்பிக் கேமரா (Neuromorphic Camera) பொருத்தப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க விமானப்படை அகாடமியும், வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழகம் என இரண்டு அமைப்புகள் இணைந்து நிறுவியுள்ளன. இக்கேமரா திட்டத்திற்கு ஃபால்கன் நியூரோ (Western’s Falcon Neuro project ) என்று பெயர். இந்த கேமரா தட்பவெப்பநிலை சார்ந்த மாற்றங்களை படம்பிடிக்க கூடியது. மின்னல், இடி, மேகங்களுக்கு இடையிலான மின்னோட்டம் ஆகியவற்றை பதிவு செய்து தகவல்களை பூமியில் உள்ள கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்புகிறது.  தென்னாப்பிரிக்காவில் எம்போனெங் (Mponeng) என்ற தங்கச்சுரங்கம் உள்ளது. இது பூமியிலிருந்து 4 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகில், 3,900 மீட்டர் ஆழத்தில் டாவ்டானா (Tautona), சவுகா (Savuka) ஆகிய சுரங்கங்கள் தோண்டப்பட்டுள்ளன.  பூமியின் கீழே தோண்டப்படும் சுரங்கத்தில் வெப்பம்  70 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கும். இதைக் குறைக்க ஐஸ்கட்டிகள் கரைத்த திரவத்தை சுரங்கத்தில் பீய்ச்சி அடித்து வெப்பம் தணிக்கிறார்கள். பலவீனமான சுரங்கப்பகுதியில் ஷாட

அகதிவேலியால் உணவின்றி தவிக்கும் விலங்குகள்!

படம்
  அகதி வேலியால் பாதிக்கப்படும் உயிரினங்கள்! போலந்து நாடு, பெலாராஸ் நாட்டிலிருந்து வரும் அகதிகளைத் தடுக்க வேலி அமைத்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியா வழியாக வரும் அகதிகளை தடுப்பதே இதன் நோக்கம். இந்த வேலி பியாலோவிசா (Białowieża Forest) எனும் காட்டின் இடையே அமைக்கப்படுகிறது. தொன்மையான காடான இங்கு, 12 ஆயிரத்திற்கும் அதிகமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய இடமாக பியாலோவிசா காடு அறிவிக்கப்பட்டுள்ளது.  போலந்து மற்றும் பெலாரஸ் இடையே கட்டப்படும் வேலியின் நீளம் 130 கி.மீ. ஆகும். இதன் உயரம் 5.5 மீட்டர் ஆகும். உலகம் முழுக்க இப்படி கட்டப்பட்டுள்ள கம்பிவேலி, சுவர்களின் தோராய நீளம் 32 ஆயிரம் கி.மீ. ஆகும். இதன் காரணமாக உணவு, நீர் தேடி உயிரினங்கள் பிற நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் 700 பாலூட்டி இனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  பியாலோவிசா காட்டில் பூஞ்சைகள், மரங்களில் வளரும் பாசி (mosses), பாறைகளில் வளரும் செடி (lichens), பூச்சி வகைகள் ஆகியவை காணப்படுகின்றன.  மேலும் ஐரோப்பிய காட்டெருமை, காட்டுப்பன்றி, ஓநாய், லின்க்ஸ் எனும் பூனை ஆகிய உய