இடுகைகள்

ஆங்கிலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலைச் சேர்த்து வைக்கும் பறவை! - லவ்பேர்ட்ஸ் 2011

படம்
      லவ் பேர்ட்ஸ் 2011       லவ் பேர்ட்ஸ் 2011 படம் நியூசிலாந்தில் தயாரான படம்.  Directed by Paul Murphy Produced by Alan Harris Matthew Metcalfe Written by Nick Ward Starring Rhys Darby Sally Hawkins Bryan Brown Music by Tim Prebble Cinematography Alun Bollinger   லவ் பேர்ட்ஸ் 2011 அரசின் ப்ளூகாலர் வேலை ஒன்றில் இருக்கிறார் நாயகன். அவருடைய காதலி அவரை சுத்த வேஸ்ட் என்று சொல்லிவிட்டு அடுத்த ஆளைத் தேடி போய்விடுகிறாள். இவர் அந்த வருதத்தில் இருக்கிறார். அப்போது அவருடைய வீட்டுக்கூரை மீது நீர்ப்பறவை ஒன்று அடிபட்டு வீழ்கிறது. அதனை எப்படி வளர்ப்பது என்று நாயகனுக்கு புரியவில்லை. அதற்காக அருகிலுள்ள வனவிலங்கு காட்சியகத்திற்கு சென்று வருகிறார். அங்கு வேலை செய்யும் பெண்ணுடன் பழக்கம் ஏற்படுகிறது முதலில் பிடிகொடுத்து பேசாத அம்மணி மெல்ல மனம் திறக்கிறார். அவருக்கு மணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர். ஒருவருக்கொருவர் மனசுக்குள் காதல் இருந்தாலும் சொல்ல தயங்குகின்றனர். இந்த நேரத்தில் நீர்ப்பறவையும் மெல்ல உடல் தேறுகிறது. இவர்களும் காதல் பறவை ஆனார்களா இல்லையா என்பதுதான் கதை. எல்லோரும் செல்லப்பிராணி ஒன்றை வளர்த்த ந

ஃபேன்டசி கதைகள் வழியாக முதலாளிக்கு ஐடியா சொல்லி ஹோட்டலை கைப்பற்றும் நாயகன்! - பெட்டைம் ஸ்டோரிஸ் 2008

படம்
        பெட்டைம் ஸ்டோரிஸ்     பெட்டைம் ஸ்டோரிஸ்  Director: Adam Shankman Produced by: Adam Sandler, Andrew Gunn, Jack Giarraputo Screenplay by: Matt Lopez, Tim Herlihy ஸ்டீக்கர் பிரான்சனுக்கு தன் தந்தையின் சிறிய ஹோட்டலை தான் வளரும்போது பெரிதாக மாற்றி கட்டவேண்டும் என்பது கனவு. ஆனால் தந்தைக்கு ஏற்பட்ட நஷ்டத்தால் ஹோட்டல் கைவிட்டு போகிறது. தந்தை அந்த ஹோட்டலை விற்றவரிடம் வைக்கும் ஒரே கோரிக்கை, தனது மகனை அந்த ஹோட்டலுக்கு நிர்வாகியாக நியமிக்கவேண்டும் என்பது. ஆனால் தோற்றுப்போனவர்களின் கோரிக்கை என்றைக்கு கச்சேரி ஏறியிருக்கிறது. எனவே, அவரின் மகன் ஸ்டீக்கர் ஹோட்டல் பணியாளராகவே இருக்கிறான். அதனை முன்னேற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறான். ஆனால் அதன் முதலாளி அதனை கண்டுகொள்வதில்லை. கூடவே தனது மகளைக் கட்டிக்கொள்ளவிருக்கும் மணமகனுக்கு புதிய ஹோட்டலுக்கான நிர்வாக பொறுப்பை கொடுக்க நினைக்கிறார். இந்த நிலையில் ஸ்டீக்கர் தனது அக்காவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார். அவருக்கு அது பிடிக்கவில்லை. காலையில் பள்ளி ஆசிரியை ஜில் குழந்தைகளை பார்த்துக்கொள்வார். இரவில் ஸ்டீக்கர் பார்த்துக்

கத்தியின்றி ரத்தமின்றி வங்கியில் நடைபெறும் பழிக்குப்பழி! - இன்சைட் மேன் - ஸ்பைக்லீ

படம்
          இன்சைட் மேன்     இன்சைட் மேன் ஸ்பைக்லீ பேங்க் கொள்ளையிடப்படுகிறது. நான்கு பேர் வங்கியிலுள்ள 40 பேர்களை உள்ளேயே பிடித்து வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் கோரிக்கை எதையும் வைக்கவில்லை. உண்மையில் பேங்கை எதற்காக அவர்கள் கொள்ளையிட வந்தார்கள்? அவர்கள் நோக்கம் என்ன என்பதுதன் படத்தின் மையக்கரு. பொதுவாக வங்கிக்கொள்ளை படங்களில் என்ன காட்டியிருப்பார்கள்? வங்கியை எப்படி சாமர்த்தியமாக கொள்ளையடிக்கிறார்கள். அத்தகவல் தெரிந்த காவல்துறையின் நடவடிக்கை, நடைபெறும் கொலை,கொள்கை ஆகியவற்றையும் எடுப்பார்கள். சிலர் எப்படி கொள்ளைக்கார ர்கள் சாதுரியமாக மாட்டிக்கொள்ளாமல் திருடினார்கள் என்று சொல்வார்கள். இந்தவகையில் இந்தப்படம் உங்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும். டென்ஷில் வாஷிங்கடன் பெயர் ஃபிரேசர். தன் மனைவியுடன் சில நாட்கள் டூர் போகலாம் என்று நினைக்கும்போது அவரது டேபிளுக்கு கேஸ் வருகிறது. பார்த்தால் சாதாரணமாக தெரிந்தாலும் வங்கியை முற்றுகையிட்டவன் எந்த கோரிக்கையும் வைக்காமல் சாப்பாடு மட்டும் வாங்கித் தர சொல்லுவது வித்தியாசமாக படுகிறது. சாமர்த்தியமாக காய் நகர்த்தும் கொள்ளையனின் சவால் பிரேசருக்கு ஒருவகையில் பிடித

தந்தையின் கொலைக்கு ஊடகங்களை பழிவாங்கும் சைக்கோ மகன்! - அன்டிரேசபிள்

படம்
          அன்டிரேசபிள் பேராசிரியர் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். அவரது மகன் இதனால் பாதிக்கப்படுகிறான். சைக்கோ ஆகிறான். தனது அப்பாவின் இறப்பை வீடியோக்களாக போட்டு காசு சம்பாதித்தவர்களை பழிவாங்க நினைக்கிறான். விஷத்தை குளுக்கோஸில் கலந்து கொள்வது, லைட் மூலம் தோலை எரித்து கொள்வது, ஆசிட் மூலம் ஒருவரின் உடலை கரைப்பது என பல்வேறு விஷயங்களை முயன்று கொலைகளை செய்கிறான் பேராசிரியர் மகன். அதனை அவன் எப்படி செய்தான் என்பது கதை. படம் முழுக்க நடித்திருப்பது ஜெனிஃபர், கிரிப்பின். ஆகிய  இருவரும்தான். எப்பிஐ என பந்தாவாக கோட் மட்டும் மாட்டுகிறார்கள். வழக்கில் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ஜெனிஃபர் மட்டுமே ஆபீசில் வேலை பார்ப்பது போல காட்டியிருக்கிறார்கள். மற்ற அதிகாரிகள் கம்பெனியின் இயக்குநர் கூட பஞ்சாயத்து டிவில் படம் பார்க்க கூடியது போல அடிக்கடி மீட்டிங் போடுகிறார்கள். ஆனால் எதையும் உருப்படியாக பேசுவதில்லை. படம் முழுக்க டயானே லேன்தான் வருகிறார். படத்தின் சுமையை தோளில் சும்ப்பவதும் அவர்தான். இதனால் அவரைப் போலவே நாமு்ம் சீக்கிரமே களைத்து விடுகிறோம். படுசோம்பல் - அன்டிரேசபிள் கோமாளிமேடை டீம்  

மக்களைக் காக்க தன்னார்வலர்களாக உருவாகும் சூப்பர் ஹீரோ கூட்டம்! - கிக் ஆஸ் -2010

படம்
    கிக் ஆஸ்       கிக் ஆஸ் Directed by Matthew Vaughn Screenplay by Jane Goldman Matthew Vaughn  Based on Kick-Ass by Mark Millar John Romita Jr. Music by John Murphy Henry Jackman Marius de Vries Ilan Eshkeri Cinematography Ben Davis மார்வெல் தயாரித்துள்ள படம். கொஞ்சம் டிசி காமிக்சின் படங்களுக்கு எதார்த்தமாக வரும்படி உள்ளது. காமிக்ஸ்களை விரும்பி படிக்கும் டீனேஜ் பையன் தேவ். அவன் வாழும் பகுதியிலுள்ள குற்றங்களை தடுக்க நினைக்கிறான். பெரிதல்ல. வழிப்பறிக்கொள்ளை, குறிப்பிட்ட நபர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள். இதனை செய்யும்போது அவனுக்கு மேலும் இரண்டு சூப்பர் ஹீரோக்களின் உதவி கிடைக்கிறது. அவர்கள்தான் பிக் டாடி, அவரின் மகள் ஹிட் கேர்ள். கிக் ஆஸைப் பொறுத்தவரை தான் செய்துகொண்டிருப்பதை சீரியசாக எடுத்துக்கொள்ளாத ஜாலியான ஆள். ஆனால் பிக் டாடி நகரில் வாழும் குற்றவாளி பிளஸ் தொழிலதிபராக ஃபிராங்கை ஒழித்துக்கட்ட நினைக்கிறார். பிக் டாடி ஏன் இப்படி மாறினார், கிக் ஆஸ் உண்மையில் தான் என்ன செய்துகொ ண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தானா என்பதை ரத்தம் படம் பார்க்கும் நமது முகத்தில் தெறிக்க தெறிக்க சொல்லியி

மக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற கூலிப்படைத்தலைவனிடம் மோதும் முன்னாள் குற்றவாளி! - அன்னோன்

படம்
        அன்னோன் 2011     அன்னோன் 2011 Director: Jaume Collet-Serra Writers: Oliver Butcher (screenplay), Stephen Cornwell (screenplay) டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ் விபத்தில் அடிபட்டு கோமாவில் கிடக்கிறார் நான்கு நாட்கள் கழித்து விழிக்கிறார். ஹோட்டலுக்கு வந்து பார்த்தால் மனைவியுடன் வேறொருவர் அவர் பெயரில் சரச சல்லாபம் செய்கிறார். இவரை இவரது மனைவி கண்டுகொள்ளவில்லை. தன் அடையாளத்தைச் தேடி ஹூ ஆம் ஐ என நாயகன் அலைவதுதான் படத்தின் கதை. படம், அதன் இறுக்கமான அழுத்தம் தரும் கதை முடிச்சுகளால் சுவாரசியப்படுத்துகிறது. பாஸ்போர்ட் உள்ள பெட்டியை ஏர்போர்டில் விட்டுவிடும் டாக்டர் மார்ட்டின் அதைப் தேடிப்போய் விபத்தில் சிக்கி கோமாவுக்கு போகிறார். அதிலிருந்து மீண்டு தன் அடையாளத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் முக்கியமான பகுதி. மரபணு மாற்ற சோளம் பற்றிய ஆராய்ச்சி,  பசியைப் போக்குவது என சமூக அக்கறையை இம்மியூண்டு எடுத்துக்கொண்டு கூலிக்கொலைகார ர்கள் பற்றி விரிவாக பேசியிருக்கிறார். லியாம் நீசன், ஜினாவாக வரும் டயானா, லிஷ்ஷாக வரும் ஜூன் ஜோனாஸ் ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள். பட

குடும்பத்தின் சாபம் தீர்க்க கொள்ளையடிக்கும் துரதிர்ஷ்டசாலி லோகன்! - லோகன் லக்கி 2017

படம்
    லோகன் லக்கி       லோகன் லக்கி  Directed by Steven Soderbergh Written byRebecca Blunt Music by David Holmes Cinematography Peter Andrews [a]   லோகன் குடும்பத்திற்கு உள்ள சாபத்தில் அண்ணன் ஜிம்மிக்கு காலில் அடிபட்டு விடுகிறது. விவாகரத்து வாங்கிய மனைவியிடம், தன் குழந்தையைப் பார்க்க கூட போராடும் நிலை. சுரங்கத்தில் வேலை பார்ப்பவருக்கு காலில் அடிபட்டு ஊனமான காரணத்தால் வேலை செய்ய தகுதியில்லை என்று நிராகரித்து வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார்கள். இதனால் அவரது குழந்தையைக் கவனித்துக்கொள்ளக்கூட கையில் காசில்லாத நிலை. அவரது தம்பி, பார் ஒன்றை நடத்திவருகிறார். அண்ணனின் கொள்ளைத்திட்டம் ஒன்று தோல்வியாக சிறைக்குச் சென்ற கோபம் அவரது மனதில் உள்ளது. அவரின் இடதுகையைக்கூட விபத்தில் பறிகொடுக்க,. கழிவுணர்ச்சியால் தினந்தோறும் கலங்கி வருகிறார். ஜிம்மியும் அவரது தம்பியும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள். இவர்களது தங்கை சலூன் ஒன்றில் வேலை செய்கிறார். துரதிர்ஷ்டம் துரத்தாத ஒரே ஆன்மா அவள் மட்டும்தான். இந்த நிலையில் வருமான பிரச்னையை சமாளிக்க ஜிம்மி, ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறான். அது கார் பந்தயம் நடத்தும் கம்பெனி

தன் உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்ற முயலும் நாயகன்! - டாக்டர் ஸ்லீப்

படம்
         டாக்டர் ஸ்லீப் 2019     டாக்டர் ஸ்லீப் 2019 Director: Mike Flanagan Writers: Mike Flanagan (screenplay by), Stephen King (based upon the novel by) ஸ்டான்லி குப்ரிக் இயக்கத்தில் தி ஷைனிங் படம் பார்த்திருந்தால் இந்தப்படம் உங்களுக்கு தெளிவாக புரிய வாய்ப்புள்ளது. பார்க்காவிட்டாலும் இந்தப்படத்தைப் பார்க்கலாம்.தவறில்லை. ஆனால் தி ஷைனிங் படத்திற்கான ஆதார கதையை எழுதிய ஸ்டீபன் கிங் எழுதிய அடுத்த பாக நாவலை தழுவி டாக்டர் ஸ்லீப் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் படம் பார்க்கும்போது கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கும். எனவேதான் முன்னமே சொல்லிவிட்டோம். தி ஷைனிங் பார்த்தபிறகு, இந்த படத்தைப் பாருங்கள்.  டாக்டர் ஸ்லீப் 2019 டேனி, அப்பா இறந்தபிறகு அம்மாவுடன் வளர்கிறான். அவனுக்கு அடுத்து நடக்கப்போகும் விஷயங்களை முன்னரே அறிவது ஒருகட்டத்தில் சாபமாக அவனுக்குப் படுகிறது. மேலும் சிறுவயதில் ஏற்பட்ட பல்வேறு மோசமான அனுபவங்களின் பாதிப்பில் அம்மா இறந்தபிறகு மதுவுக்கு தீவிரமாக அடிமையாகிறான். அம்மாவின் பாசம் கிடைக்காமல், கிளப்பிலும் பப்பிலும் சுற்றுகிறான். மூளையில் தேங்கிவிட்ட அபாயகர நின

என்னுடைய காதலி யார் என்று தெரியுமா? லெட் மீ இன்

படம்
  லெட் மீ இன்       லெட் மீ இன்   Directed by Matt Reeves Screenplay by Matt Reeves Based on Let the Right One In by John Ajvide Lindqvist   Music by Michael Giacchino Cinematography Greig Fraser   லெட் மீ இன் 2008ஆம் ஆண்டு வந்த ஸ்வீடன் படத்தை ஆங்கிலத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள். லெட் தி ரைட் ஒன் இன் என்பதுதான் மூலப்படம். நியூ மெக்சிகோவின் லாஸ் அலமோஸில் 1980ஆம் ஆண்டு நடைபெறுகிறது படம். 12 வயது மகிழ்ச்சியில்லாத சிறுவன், ஓவன். அவனது பெற்றோர் விவகாரத்து பெற்றுவிட அம்மாவிடம் வளர்கிறான். பள்ளியில் அவனை அவனது வகுப்பு மாணவர்கள் மூவர் எப்போது அடித்து துன்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நிலையில் அவன் வாழும் அபார்ட்மெண்டிற்கு அபி என்ற 12 வயது சிறுமி வருகிறாள். ஓவன், அடிக்கடி டெலஸ்கோப்பில் பக்கத்து வீட்டு  சரச சல்லாபங்களை பார்த்து நமக்கும் ஒரு பெண்தோழி இருந்தால் என கனவில் இருக்கிறான் சரியான அபி அவர்களது கட்டடத்திற்கு வர ஆஹா.. என மகிழ்கிறான். ஆனால் முதல் பேச்சிலேயே அபி நாம் நண்பர்களாக இருக்க முடியாது என மறுக்கிறாள். பின்னாளில் அவன் அவனை விரும்பி நட்புகொள்கிறாள். பகல் முழுவதும் வெளியே வரா

காதலியை மீட்க மூன்று கொலைகளை செய்ய ஒத்துக்கொள்ளும் மெக்கானிக்! - மெக்கானிக் ரீசர்கேஷன்

படம்
        மெக்கானிக் -ரீசர்கேஷன்   மெக்கானிக் -ரீசர்கேஷன் ஜேசன் ஸ்டாதம் நடித்துள்ள படம். இதில் கதை என்று தனியாக ஒன்றைச் சொல்லவேண்டுமா? காசு கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளும் குணம் கொண்டவர் பிஷப் - ஜேசன் ஸ்டாதம். ஆனால் அவரை கட்டாயப்படுத்தமுடியாது. அவரே விரும்பினால்தான் கொலைகளை அசைன்மென்டாக ஏற்பார். இந்த நிலையில் அவரை வளைக்க ஜெசிகா ஆல்பாவை கம்போடியாவிலிருந்து கொண்டுவந்து கட்டம் கட்டுகிறார்கள். ஆனால் ஜேசன் அதைக் கண்டுபிடித்துவிடுகிறார். அதேநேரம் ஜெசிகாவைப் பற்றி ஆராய்ந்து பயோடேட்டாவை சேகரித்து வைத்துவிட்டு காதல் செய்து மிசிசிபி ந்தி பாட்டுக்கு ஆடி சங்கமமே ஆகிவிடுகிறார்கள். கிரெய்ன் என்ற அவனது பால்யன நண்பன்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம். அவனை பார்த்து ஓடாமல் அவனை கொன்றுவிடலாம் என முடிவுக்கு ஜேசன் வரும்போது ஜெசிகாவை கடத்திச்சென்று விடுகிறார்கள். கிரெய்ன் சிம்பிளாக மூன்று கொலைகளை செய்யவேண்டும் வந்தால் உன் காதலி உனக்கு. என சொல்லுகிறான். ஜேசன் அவனை நம்பி அசைன்மென்டுக்கு போனாரா, கொன்றாரா என்பதை திகுதிகு வேகத்தில் படமாக எடுத்திருக்கிறார்கள். ஜேசன் ஒவ்வொருவரையும் கொலை செய்ய செய்ய

மூன்று நண்பர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் பிறந்தநாள் பார்ட்டி! - ப்ராஜெக்ட் எக்ஸ்

படம்
         ப்ராஜெக்ட் எக்ஸ் ப்ராஜெக்ட் எக்ஸ் Directed by Nima Nourizadeh Screenplay by Matt Drake Michael Bacall Story by Michael Bacall CinematographyKen Seng படத்தின் கதை என்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. தாமசுக்கு பிறந்தநாள். அதற்காக வெங்கட்பிரபு போல கிராண்டாக ஒரு பார்ட்டியை வைக்கிறோம் என தாமசின் நண்பர்கள் காஸ்டா, ஜே.பி விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் செய்யும் ஏற்பாடும், செய்யும் விளம்பரமும் அவர்கள் வாழ்க்கையை மாற்றிப்போடுகிறது. என்னதான் ஆச்சு இந்த பசங்களுக்கு, என்னுடைய வீட்டுக்கு, என்னுடைய தெருவுக்கு என அங்கிருப்பவர்கள் அதிர்ச்சியடையும் சம்பவங்கள் அங்கு நடைபெறுகிறது. அத்தனைக்கும் காரணம் ஒரேயொரு பார்ட்டிதான். மில்லினிய இளைஞர்களின் மனநிலையைப் பற்றி விசுவலாகவே எடுத்து காட்டிவிட்டார்கள். படத்தின் ஒளிப்பதிவு முக்கியமானது. தாமசின் பிறந்தநாள் பரிசாக இந்த வீடியோவை கொடுக்கிறோம்.எனவே அவனது பிறந்தநாள் நிகழ்ச்சி அத்தனையையும் அப்படியே படம் பிடியுங்கள் என்பதுதான் கேமரா நண்பனுக்கு சொல்லும் வார்த்தை. எனவே, ஹேண்டிகேம் கேமராவின் அத்தனை சிக்கல்களோடும் படம் பயணப்படுகிறது. உண்மையில் இந்த படம் ஒளிப்பதிவ

தனித்துவம் வாய்ந்த சாகச செயல்களை விரும்பும் பெண் காணாமல் போனால்... பேப்பர் டவுன்ஸ் 2015

படம்
        பேப்பர்டவுன்ஸ்        பேப்பர்டவுன்ஸ்  Directed by Jake Schreier , Based on Paper Towns by John Green, Music by Son Lux [a] Cinematography David Lanzenberg க்வென்டினுக்கு மார்கோ என்றால் ரொம்ப பிடிக்கும். மார்கோவுக்கு மனிதர்களை விட அட்வென்ச்சர் என்றால்  அவ்வளவு பிரியம். ஒருநாள் க்வென்டினை அழைத்துக்கொண்டு தன்னை ஏமாற்றிய ஆண்தோழனை அவமானப்படுத்தி, அவனது நண்பர்களுக்கும் பதிலடி கொடுக்கிறாள். அடுத்தநாள் பார்த்தால் மார்கோ அவள் வீட்டில் காணவில்லை. எங்கே போனாள் என்றே தெரியவில்லை. ஆனால் க்வென்டினுக்கு மட்டும் தெரியும் பல்வேறு க்ளூக்களை விட்டுச்செல்கிறாள். க்வென்டின் அதைத்தேடிக்கொண்டு நியூயார்க் வரை செல்கிறான். அங்கு அவனுக்கு  ஒரு அதிர்ச்சி காத்துக்கிடக்கிறது., என்ன அது என்பதுதான் கதையின் முக்கியமான பகுதி. படத்தில் மார்கோ என்ற டீனேஜ் பெண்ணின் கதாபாத்திரம்தான் மிகவும் முக்கியமானது. சுதந்திரம், காதல், நட்பு என அனைத்திலும் தெளிவாக இருக்கிறாள். பெற்றோரின் அடையாளத்தில் வாழாமல் சுயமாக வாழ விரும்பும் பாத்திரம். உண்மையில் இந்த பாத்திரம் யாருக்குமே அடிப்படையில் புரியாதது போல இருக்கும். ஆனால் யோசித்தா

கட்டணசேவையில் காதலைச் சேர்த்து வைக்கும் டேட்டிங் டாக்டர்! - ஹிட்ச்

படம்
        ஹிட்ச் - வில்ஸ்மித்          ஹிட்ச்  கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று விரும்புகிற ஆண்களை, அவர்கள் விரும்புகிற பெண்களை அணுகுவதற்கான திட்டங்களை போட்டுத்தரும் டேட்டிங் டாக்டர் தான் ஹிட்ச். அவரின் தொழில்வாழ்க்கை, சொந்த வாழ்க்கை இரண்டையும் படம் கூறுகிறது. ஹிட்ச்சைப் பொறுத்தவரை அவர் தன்னை விளம்பரம் செய்துகொள்ளாமல் வாய்வழி விளம்பரம் மூலமே பிறருக்கு அறிமுகமாகிறார். அவர் செய்வது கட்டண காதல் சேவைதான். ஆனால் அதில் சில கொள்கைகளை கடைபிடிக்கிறார். உ்ணமையில் ஒரு பெண்ணை காதலிக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டுமே உதவுகிறார். ஒரு இரவு என்று வருபவர்களை ஸ்லிப்பரால் அடித்து விரட்டிவிடுகிறார். அவருக்கே சவாலாக வருகிறான் ஆல்பர்ட். செய்யும் அனைத்து விஷயங்களையும் சாதாரணமாகவே சொதப்புபவன், காதலில் மட்டும் மிச்சம் வைப்பானேன்? இதனால் இளம்பெண்கள் மட்டுமல்ல ஆன்டி கூட அவன் பக்கத்தில் வருவதில்லை. அவனை ஒரு எக்ஸ்பரிமெண்டாக எடுத்துக்கொண்டு ஹிட்ச் காதலிக்க அட்வைஸ் கொடுக்கிறார். ஆல்பர்டுக்கு அலிகிரா என்ற பெண் தொழிலதிபர் மீது பேராசை. ஆனால் அவளை நேரடியாக அணுகி பேச முடியாது. அவளுக்கு நிதிநிறுவன ஆலோசனைகளை சொல்லு

பிரிவினைக்குள்ளாக்கி மக்களை ஆராய்ச்சி செய்யும் ஆபத்தான மனிதர்கள்! டைவர்ஜென்ட் - அலிஜீயன்ட்

படம்
          டைவர்ஜென்ட் - அலீஜியன்ட்                   டைவர்ஜென்ட் - அலீஜியன்ட்   டைவர்ஜென்ட் - அலீஜியன்ட் directed by Robert Schwentke   with a screenplay by Bill Collage, Adam Cooper, and Noah Oppenheim Based on Allegiant by Veronica Roth   Music by Joseph Trapanese Cinematography Florian Ballhaus   ஒரு நாட்டை பிரித்து அதனைக் கண்காணித்து அங்கு வாழும் மக்கள் மீது மரபணு ஆராய்ச்சி செய்கிறது ஒரு கூட்டம்.  அதனை ஒரு ஆட்சிக்குழுத் தலைவியின் மகன் தலைமையிலான இளைஞர்களின் குழு கண்டுபிடித்து தனித்தனியாக இருக்கும் நாடுகளை எப்படி ஒன்றாக இணைக்கிறார்  என்பதுதான் கதை. படத்தில் நாயகனுக்கு பெயரே 4தான். ட்ரிஸ் தான் நாயகியின் பெயர். அவரது மாசு மருவற்ற மேனியைப் போலவே அவரது டிஎன்ஏ மட்டும் பரிசுத்தமாக உள்ளது. இதைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்குழுவினர், அவளை அவர்களது நாட்டிற்கு வரவைத்து அழைத்துச்செல்கின்றனர். அவளது டிஎன்ஏ மாதிரியைப் பயன்படுத்தி தூய மனித இனத்தை உருவாக்குவதே அவர்களது லட்சியம். தொடக்கத்தில் அவர்களது அம்மா பற்றி ஆராய்ச்சிக்குழுத் தலைவர் டேவிட் பேசி ட்ரிஸ் மனதை சென்டிமென்டாக மடக்குகிறார். இதனால் அவ

உலகை காக்க சூப்பர்ஹீரோக்கள் எடுக்கும் அதிர்ச்சி தரும் முடிவு! - வாட்ச்மேன் 2009

படம்
            வாட்ச்மேன் Directed by Zack Snyder Written by David Hayter Alex Tse Based on Watchmen by Dave Gibbons Alan Moore Music by Tyler Bates Cinematography Larry Fong     டிசி காமிக்ஸின் அடர்த்தியான அரசியல் பேசும் படம். மார்வெல் ஃபேன்டசியான உலகை உருவாக்கி ஏராளமான சூப்பர் நேச்சுரல் திறன் கொண்ட ஆட்கள் அதில் உள்ளே இருப்பதாக காட்டுவார்கள். டிசி முழுக்க சாதாரண மனிதர்களை வைத்தே உலக அரசியலைப் பேச வைத்திருக்கிறார்கள். படம் 3 மணிநேரம் 35 நிமிடம் ஓடுகிறது என்பதால் பொறுமையாக பார்க்க முடிபவர்கள்தான் பார்க்கவேண்டும். அதிரடியான திருப்பம் வேண்டும் என்பவர்கள் வேறு படத்தைத்தான் பார்க்கவேண்டும். முதல், இரண்டாம் உலகப்போர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் பங்கேற்கிறார்கள். அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் நிகழும் காலகட்டம். அப்போது சூப்பர் ஹீரோக்களை யாரும் தேடவில்லை. அவர்களை மக்களும் எதிர்க்கிறார்கள்.  பின்னாளில் அவர்களுக்கு வயதாகிறது. மெல்ல சூழலைப் புரிந்துகொண்டு அனைவரும் ஒதுங்குகிறார்கள். இரவு ஆந்தை,  ஓஸ்மாண்டிஸ் , ரோச்சார்க் என மூவர் மட்டுமே இக்காகட்டத்திலும் நாயகர்களாக வலம்

அணுஆயுதப் போட்டியில் வல்லரசு நாடுகள் ஆடும் சடுகுடு ஆட்டம் ! தி மேன் ப்ரம் அங்கிள்

படம்
          தி மேன் ஃப்ரம் அங்கிள் இயக்கம், கய் ரிட்சி  இசை, டேனியல் மெம்பர்டன் ஒளிப்பதிவு ஜான் மதிசன் நாஜி ஆட்கள் அணு ஆயுத ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்த ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பதை உலக நாடுகள் அறிகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இதனை தடுப்பதற்காக தனித்தனியாக ஏஜெண்டுகளை நியமிக்கின்றன. இவர்கள் அனைவரும் அங்கிள் என்ற அமைப்பு மூலம் ஒன்றாக இணைந்து செயல்படு்வதுதான் கதை. இதில் பரஸ்பரம் சந்தேகம் கொண்ட நாடுகளின் உளவாளிகள் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.  வேறுபாடுகளை கைவிட்டு எப்படி ஒன்றாக சேர்ந்து எதிரிகளை வீழ்த்துகிறார்கள் என பொறுமையாக சொன்னால் அதுதான் தி மேன் பிரம் அங்கிள். அமெரிக்க ஏஜெண்டாக ஹென்றி கெவில், அர்மி ஹாமர், விகாந்தர் என அனைவருமே பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். படம் 007 போல வேகமாக இருக்காது. நிதானமாக பேசியபடியே பல்வேறு காட்சிகள் நகர்கின்றன. இதில் வேகம் கொண்ட காட்சி, திரில்லான காட்சி என்று எதையும் சொல்ல முடியவில்லை. ரஷ்ய ஏஜெண்டிடம் ஹென்றி கெவில் விகாந்தருடன் தப்பி காரில் செல்லும் காட்சி நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலகட்டம் சார்ந்த படம் என்ப

அமெரிக்க அதிபரை மத அடிப்படைவாத தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் மெய்காவலன்! - லண்டன் ஹேஸ் ஃபாலன்

படம்
        முழுக்க சண்டைதான். குடும்ப சென்டிமெண்ட் பெரிதாக ஒட்டவில்லை.     லண்டன் ஹேஸ் ஃபாலன் இயக்கம் பாபக் நஜாஃபி   இசை , டிரேவர் மோரிஸ்   ஒளிப்பதிவு எட் வைல்டு இங்கிலாந்திற்கு இறுதிச்சடங்கு ஒன்றிற்காக உலகத் தலைவர்கள் வருகிறார்கள் அவர்களை அடிப்படைவாத தீவிரவாதிகள் போட்டுத்தள்ளுகிறார்கள் . அவர்களின் முக்கியமான குறி , அமெரிக்க அதிபர்தான் . அவர் அவரின் மெய்காவலர் எப்படி ஒற்றைக்கையால் காப்பாற்றி அமெரிக்க கௌரவதை தலையில் முண்டாசாக கட்டி வெல்லுகிறார் என்பதுதான் படம் . பக்கா நமது ஊரில் காப்பான் படம் போல , இந்த படம் அமெரிக்க காப்பான் . ஜெரார்டு பட்லர் படத்தின் தயாரிப்பாளர் - நடிகர் கூட . எனவே படத்தின் பணமும் , பலமுமாக இவரே இருக்கிறார் . நாடு முழுவதும் முடங்கிவிட அரசு அமைப்புகளின் உதவியின்றி தனது நாட்டு அதிபரை காப்பாற்றுகிறார் . எப்படி என்பதுதான் கதை . உள்நாட்டு துரோகிகளால் அழியும் இங்கிலாந்தின் கதை டொக்கு இங்கிலாந்தில் பிற நாட்டு தலைவர்களை தீர்த்துக்கட்டுபவருக்கும் , அமெரிக்காவுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை . இரண்டுபேரும் ஆயுதங்களை விற்பவர்கள் என்பதுதான்

கொள்ளையடித்த பணத்தை ஏமாற்றும் நண்பர்களை களையெடுக்கும் கொஞ்சம் நல்லவன்! - பார்க்கர்

படம்
        பழிக்குப்பழி வாங்கும் நல்ல கொள்கைகள் கொண்ட கொள்ளையன்         பார்க்கர் இயக்கம் டெய்லர் ஹாக்போர்டு மூலக்கதை ஃபிளாஷ்பயர் - டொனால்ட் வெஸ்ட்லா     இசை , டேவிட் பக்லி   ஒளிப்பதிவு மைக்கேல் முரோ அம்யூஸ்மெண்ட் பார்க் லாபத்தில் கொழிக்கிறது . அதில் கிடைக்கும் வருமானத்தை கொள்ளையிட கொள்ளையர்கள் திட்டமிடுகிறார்கள் . திட்டத்தை செயல்படுத்த பார்க்கர் உதவுகிறான் . பார்க்கரின் மாமனார்தான் தனக்கு பதில் பார்க்கரை திட்டத்தில் ஈடுபடுத்துகிறார் . அவரது நண்பர்கள்தன் கொள்ளையர்கள் டீம் . அதில் இணைகிறான் பார்க்கர் . வெற்றிகரமாக அம்யூஸ்மெண்ட் பார்க்கை கொள்ளையடித்து விடுகிறார்கள் . ஆனால் பணத்தை திருடிவிட்டு வரும்போது , மீண்டும் ஒரு கொள்ளை என மாமனாரின் ந ண்பர்கள் பார்க்கரை வற்புறுத்துகின்றனர் . அதற்கு பார்க்கர் , நம் டீல் முடிந்தது . எனக்கு அடுத்த திருட்டு செய்ய இப்போது விருப்பமில்லை என்று சொல்ல நண்பர்களுக்குள் மோதல் வர , பார்க்கர் சுட்டு வீழ்த்தப்படுகிறான் . அவன் ஏரி ஒன்றில் தூக்கி வீசப்படுகிறான் . அவனை வயதான தம்பதியினர் காப்பாற்றுகின்றனர் . மருத்துவமனையிலிருந்து தப்பும் பார்க்

முன்னாள் காதலியின் சதியில் மாட்டும் காதலனின் கதை! - ப்ரீசியஸ் கார்கோ

படம்
450 × 675 ப்ரீசியஸ் கார்கோ 2016 ஆங்கிலம் இயக்கம் மேக்ஸ் ஆடம்ஸ் கதை – ஆடம்ஸ், பால் சீட்டாசிட் இசை ஜேம்ஸ் எட்வர்ட் பார்கர், டிம் டெஸ்பிக் ஒளிப்பதிவு பிராண்டன் காக்ஸ் கரென் என்ற கொள்ளைக்காரி, எடி என்ற குற்றவாளி தலைவரை ஏமாற்றி வைரங்களை திருடுகிறார். இதற்காக கரென் தன் முன்னாள் காதலனின்(ஜாக்) உதவியை நாடுகிறாள். அதற்கு சொல்லும் பொய், அவளது முன்னாள் காதலனின் தோழி லோகனின் உயிரை ஊசலாட வைக்கிறது. இறுதியில் எடியின் பிடியில் சிக்கிக்கொள்ளும் கரெனை எப்படி ஜாக் மீட்கிறான் என்பது இறுதிக்காட்சி. சிறிய அளவில் குற்றவாளிக்குழுக்களுக்கு ஆயுதங்களை கொடுக்கல் வாங்கல் செய்து வருகிறான் ஜாக். அவனின் பேக்கப்புக்காக அவனோடு எப்போது துணையாக இருக்கிறாள் கேர்ள்பெஸ்டி லோகன். இது காதலா, நட்பா என யோசிக்காதீர்கள். கடைசிவரையும் நட்பாகவே கொண்டுபோய் முடித்துவிட்டார்கள். ஜாக்குக்கு முன்னாள் காதலி ஒருத்தி இருந்தாள். ஆனால் கருத்துவேறுபாட்டில் பிரிந்துவிடுகிறாள். ஜாக் சரி, மனம் காலியாகத்தானே இருக்கிறது என காதலிக்க நினைக்கிறார். அப்போதுதான் லோகனின் நாய் கிரேஸ் வசமாக மாட்ட அதை வைத்தே விலங்குகள் மீது பாசம் கொண்ட டாக