இடுகைகள்

அசுரகுலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆபாசப்பட நாயகன் லேக்- திருடுவதில் சூரன் இணைந்து செய்த கொலைகள்!

படம்
அசுரகுலம் லியோனார்டு லேக் - சார்லஸ் என்ஜி எனக்கு பெண்களோடு விளையாடு பிடிக்கும். எனக்கு தேவைப்படும் போது அவர்களைப் பயன்படுத்திக்கொள்வேன். அதேசமயம் எனக்கு போரடித்தால் அவர்களை கூண்டில் அடைத்து வைப்பேன். அதுவும் கூட சலிப்பு தந்தால் அவர்களை என் கண்பார்வையிலிருந்து அகற்றுவேன். முடிந்தவரை என் வாழ்க்கையிலிருந்தும் கூட ------ இப்படி சொன்னவர்தான் லேக். தன் வீடியோ டேப்பில் மனதில் இருந்தவற்றை உடைத்து பேசியிருந்தார். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் 1945ஆம் ஆண்டு அக்.29 அன்று பிறந்தவர், லேக். சிறுவயதில் அனைத்து அமெரிக்க குடும்பங்களிலும் நடக்கும் சங்கடங்கள் அவருக்கும் நடந்தன. குடும்பம் பிளவுபட்டது. அப்பா, அம்மா திசைக்கு ஒருவராக பிரிய பாட்டியை தஞ்சமடைந்தார் லேக். அப்போதே தன் சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்களை பார்ப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். அதுவும் போக கிடைத்த நேரத்தில் தவளை, பல்லி ஆகிய உயிரிகளை வேதிப்பொருட்கள் கொண்ட கலவையில் முக்கி கொன்று அதனைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார். 1965ஆம்ஆண்டு அமெரிக்காவின் கடற்படையில் பணிக்குச் சேர்ந்தார். ராடார் கருவியை இயக்கும் ஆப

என்னை அறிந்தால், மகனையும் கொல்வேன் - கேரி ரிட்ஜ்வே 2

படம்
அசுரகுலம் கேரி ரிட்ஜ்வே ஆற்றில் விடப்பட்ட சடலங்களை ஆராய்ந்து, அதைச் செய்வதற்கான வாய்ப்புள்ள குற்றவாளிகளின் பட்டியலை காவல்துறையின் டாஸ்க் ஃபோர்ஸ் தயாரித்தது. இதில் சீரியல் கொலைகாரர் டெட் பண்டியிடம் செய்த விசாரணையில் கிடைத்த தகவல்படி, கொலைகாரர் தனக்கு செல்வாக்கான தெரிந்தவர்களின் வட்டத்தில் கொலை செய்வார் என்ற ட்ரிக் ஏனோ கேரி விஷயத்தில் வேலைக்கு ஆகவில்லை. 1980ஆம் ஆண்டு போலீஸ் கேரியைப் பிடித்தது. கேஸ் என்ன தெரியுமா? செக்ஸ் செய்யும்போது, விலைமாதின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார் கேரி என்பதுதான். ஆனால் கேரி அலட்டிக்கொள்ளவே இல்லை. பாலுறவின்போது, திடீரென அவள் என்னை தாக்க முயன்றால், தற்காப்பிற்காக கழுத்தைப் பிடித்தேன் என்றார். நடந்த சம்பவத்தை திருட்டு, கொலை போல செய்து காட்ட முடியுமா? கற்பனை செய்து பார்த்த போலீஸ் அதிலுள்ள லாஜிக்கை டிக் அடித்துவிட்டு கிளம்பு என சொல்லிவிட்டார்கள். அதற்கு பிறகு சீ டாக் எனும் அப்பகுதியில் நிறைய பெண்களை சடலமாக எடுத்தும் கேரி மீது அணுவளவும் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. 1983ஆம் ஆண்டு கேரியின் டிரக், ஆபாசமாக ஆடியது. அங்கு ரோந்து வந்த போலீஸ் அதனைத்

பாலியல் வேட்டையன் - கேரி ரிட்ஜ்வே

படம்
அசுர குலம்  கேரி ரிட்ஜ்வே அமெரிக்காவில் பிறந்த கேரி, இருபது ஆண்டுகளாக சீரியல் கொலைகளை செய்து போலீசாரை பதற வைத்தார். பிறகு இவரை டிஎன்ஏ தகவல்களை வைத்து போலீஸ் பிடித்து சிறையில் அடைத்தது.  1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உடாவில் உள்ள சால்ட் லேக் நகரில் பிறந்தார். மேரி ரீடா ஸ்டெய்ன்மன் - தாமஸ் நியூட்டன் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். தாயால் இளம் வயதிலேயே பாலியல் மீது ஈர்க்கப்பட்டார். பதினொரு வயதில் வாஷிங்டனுக்கு, குடும்பமே இடம்பெயர்ந்தது. கேரிக்கு டிஸ்லெக்சியா பிரச்னையும் இருந்தது. இவரின் ஐக்யூவும் 82தான். அப்புறம் படிப்பைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? பதினாறு வயதிலேயே இவரின் குணம் பற்றி சில செயல்பாடுகள் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. சிறிய வனப்பகுதிக்குள் ஆறு வயது சிறுவனைக் கூட்டிச்சென்று, கத்தியால் குத்தினார். பிறகு அந்த சிறுவன் ஊரைக்கூட்டி உண்மையைச் சொல்லி உயிர் பிழைத்தார். கத்தியால் குத்தியபோது, கேரி சிரித்துக்கொண்டிருந்தார் என்றார். 1969ஆம் ஆண்டு, பள்ளிப்படிப்பை முடித்தார். கேரி அதற்கடுத்த என்ன செய்வது என்று யோசித்தார். காலாகாலத்தில் செய்வது கல்யாணம்தானே? ஆ

கருப்பின குழந்தைகளை கொன்ற அசுரன்! - வேய்ன் வில்லியம்ஸ்

படம்
1979 ஆம் ஆண்டு தொடங்கி 1981ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடந்த கொலைகள் 29க்கும் அதிகம். அதனை குறிப்பிட்ட வரிசையில் பார்த்தால், இறந்தவர்கள் பெரும்பாலானோர் கருப்பின  சிறுவர்கள். இவர்களைக் கொன்றது யார் என போலீஸ் ஆராய்ந்ததில் சிக்கியர், வேய்ன் வில்லியம்ஸ். இரண்டு கொலைகளுக்காக தண்டனை பெற்றார். ஆனால் ஆதாரம் கிடைக்கவில்லை என்றாலும் இருபதிற்கும் மேற்பட்ட கொலைகளை செய்தார் என்று அமெரிக்க காவல்துறை அடித்துச் சொல்கிறது. அட்லாண்டாவில் பதிமூன்று, பதினான்கு வயது சிறுவர்கள் இருவர் காணாமல் போனார்கள். பெற்றோர் புகார் கொடுத்தார்கள். அரசு அமைப்பு அல்லவா? அதற்காக அசதியுடன் போங்கள் கண்டுபிடித்து தகவல் சொல்கிறோம் என போலீஸ் சொன்னது. இருவரின் உடல்களும் சில நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது. ஒருவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டிருந்தார். இன்னொருவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருந்தான். சீரியசான விவகாரம் போல என்று முட்டை ப ப்சை சாப்பிட்டு போலீசார் சாப்பிட்டு முடிக்கும் முன்னரே செய்தி வந்துவிட்டது. மூன்று சிறுவர்களின் உடலை யாரோ பார்த்தார்களாம். அப்புறம்தான், ஆஹா..

மனித உடல் உறுப்புகளில் கையுறை! மிரட்டிய எட் ஜீன்

படம்
அசுர குலம் எட் ஜீன் 1950களில் எட் ஜீன் பற்றி உலகம் அறிந்தது. இவரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து சைக்கோ என்ற நாவலை ராபர்ட் பிலோச் என்பவர் எழுதினார். இதைத்தான் ஹிட்சாக் சைக்கோ என்ற பெயரில் படமாக்கினார். ஜீன், தன் இறந்துபோன அம்மாவை அப்படியே பாடம் பண்ணி வைத்திருந்தார். இன்னும் பல பகீர்களை அவரது வீட்டில் போலீசார் பார்த்தாக கூறுகிறார்கள். அவை என்னவென்று பார்ப்போம். ஜீனை போலீசார் வளைத்து பிடித்தபோது, அவர் வைத்திருந்த பொருட்களை வித்தியாசமாக பார்த்தனர். அதில் ஓர் வித்தியாசம் தெரிந்தது. கையுறைகள், நாற்காலிகள், விளக்கு மூடிகள் என அனைத்தும் மனிதர்களின் உடல் உறுப்புகளாலேயே செய்தவை. பின்னே கொன்ற மனிதர்களை புதைத்தால்தானே நாய்களை வைத்து கண்டுபிடிப்பீர்கள்? இந்த  குணத்திற்கு பின்னால் ஒளிந்திருப்பது ஜீனின் இளமைப்பருவ குளறுபடிகள்தான். 1906ஆம்ஆண்டு ஆகஸ்ட் ஆறாம் தேதி அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் பிறந்தவர், ஜீன். ஜார்ஜ் - அகஸ்டா என்ற இவரது தந்தையும் தாயும் எப்படி திருமணம் செய்தார்களோ? எந்த விஷயத்திலும் பொருந்தாத ஜோடி. எப்போதும் ஸ்காட்சும் கையுமாக இருப்பவர் அப்பா என்றா

ஃபேன்டசியாக கொலை! - ஹார்வி கிளாட்மன்

படம்
அசுரகுலம் ஹார்வி கிளாட்மன் அமெரிக்காவிலுள்ள பிராங்ஸில் பிறந்த ஹார்வி அபார புத்திசாலி. அதற்கேற்ற பிரச்னைகளும் அவரது மூளையில் இருந்தன. அவரின் செயல்பாடுகளை கவனித்த அவரது அம்மாவுக்கு அவரிடம் ஏதோ ஒரு தவறு இருப்பதாக பட்டது. தன்னைத்தானே துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் தன்மையை எதேச்சையாகத்தான் அவர் கண்டுபிடித்தார். உடனே மருத்துவர்களிடம் அழைத்து சென்னார். ஆனால் அவர்கள் அவரின் மனநலன் நன்றாக இருக்கிறது. வளர்ந்தவுடன் அனைத்தும் சரியாகிவிடும் என சினிமாவில் வருவது போலவே பேசினார்கள். வளர வளர ஹார்வியின் செயல்பாடுகள் பயமுறுத்துவது போலவே இருந்தது. பொதுவாக ஒல்லியாக பலவீனமாக இருப்பவர்களின் கனவு என்னவாக இருக்கும்? பலசாலியின் சில்லி மூக்கை உடைப்பதுதானே? இந்த விஷயத்தில் ஐக்யூ 130 புள்ளிகள் கொண்ட ஹார்வி வேறு மாதிரி யோசித்தார். பள்ளியில் சோனிப்பையனாக இருந்ததால் கிண்டல், கேலி, அடி, உதைகளை வாங்கினார். மெல்ல பெண்கள் என்றால் என்ன  காரணத்தாலோ பயப்படத் தொடங்கினார். நன்றாக புரிந்துகொள்ளுங்கள் மனதளவில் மட்டுமே. அக்காலகட்டத்தில் பெண்கள் தனியாக வசிக்கும் வீடுகளை நோட்டமிட்டு வந்தார். அடையாளத்தை மனதில் வைத

மனிதவேட்டையாடிய பேக்கரிக்காரர்! - ராபர்ட் ஹான்சன்

படம்
அசுரகுலம் ராபர்ட் ஹான்சன் சுபாவின் மனித வேட்டை நாவலை படித்திருக்கிறீர்களா? அதில் ஒருவரை திட்டமிட்டு கொலைக்குற்றம் சுமத்தி வெளியில் நடமாடுவதை தடை செய்து காட்டில் விட்டு வேட்டையாடத் துரத்துவார்கள். கொலை செய்யத் துடிப்பவர்கள், ராணுவத்தில் வேலை செய்து மனம் மரத்துப்போன மூன்று ரிடையர்ட் பெருசுகள். 1924ஆம் ஆண்டு ரிச்சர்ட் கானல் என்ற எழுத்தாளர் மோஸ்ட் டேஞ்சரஸ் கேம் என்ற சிறுகதையை எழுதினார். அதில் சிறுவிலங்குகளை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டும் வேட்டைக்காரர் ஒருவரைப் பற்றி பேசியிருப்பார். அதே கான்செப்டை அப்படியே பின்னர் நாவல், சினிமா, டிவி தொடர் என இன்ஸ்பையராகி உருவாக்கினார்கள். ஆனால் அவர்கள் அறியாத உண்மை, ராபர்ட் ஹான்சன் தன் பண்ணையில் மனிதர்களை அப்படித்தான் வேட்டையாடிக்கொண்டிருந்தார் என்பது. 1957 இல் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த பணியாற்றியவர் ராபர்ட். பின்னர் அப்பணி முடிந்து நாடு திரும்பியவர் ஐயோவாவில் ஓர் பெண்ணைப் பார்த்து காதலில் விழுந்தார். எழும்போது திருமணம் செய்திருந்தார். அப்போது பார்த்து ஏதோ ஒரு காரணத்தில் அங்குள்ள பள்ளியின் பஸ் காரேஜை எரித்துவிட்டார். இதனால் டரியலா

வாழ்க்கையை அழித்த இளம் வயது பாலியல் வல்லுறவு - ரிச்சர்ட் ராமிரெஸ்

படம்
அசுரகுலம் ரிச்சர்ட் ராமிரெஸ் 1980களில் ரிச்சர்ட் பயமுறுத்தாத ஆட்களே கிடையாது. பதினான்கு மாதங்களில் இவர் கொலை செய்வதில் காட்டிய வேகம் போலீசையே யார் இவன் என தேட வைத்தது. பதிமூன்று பேருக்கு சொர்க்க வாசல் டிக்கெட் போட்டவர். ஐந்து பேரை கொலை செய்ய முயற்சித்து நரகத்தின் வாசலை விஆர் படமாக காட்டினார். டைஹார்ட் படத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கார்கள், ஹெலிகாப்டர் சகிதமாக வருவார்களே அப்படி சினிமா போல வந்து ராமிரெசை மீட்டார்கள். எங்கிருந்து? மக்களிடமிருந்துதான். அப்போது ராமிரெசை கொலைகாரன் என அடையாளம் கண்டனர் மக்கள். உடனே தெலுங்கு இயக்குநர் போயபட்டி சீனு போல யோசித்து அருகே கிடந்த இரும்பு குழாய்களை எடுத்து கண்டமேனிக்கு வெளுக்கத் தொடங்கினர். சீரியல் கில்லருக்கும் வலிக்கும்தானே? அதைப் பார்த்த போலீஸ், உடனே ஓடிப்போய் காப்பாற்றினர். சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டாமா? நல்லவேளை என்னைக் காப்பாற்றினீர்கள் என போலீசுக்கு நன்றி சொன்னார் ராமிரெஸ். ராமிரெசின் க்ரைம் வாழ்க்கை 13 வயதிலிருந்து தொடங்கியது. பெரிய அப்பாடக்கர், டகால்டி ஆள் எல்லாம் கிடையாது. சிம்பிளாக வழிப்பறி திருடர் அவ்வளவுதான். கொல

சுகானுபவமான கொலைகள்! - எட்மண்ட் கெம்பரின் கதை!

படம்
எட்மண்ட் கெம்பர் 3 1970களில் பிரபலமாக இருந்த கெம்பருக்கு இன்னொரு பெயர் கோ -எட் கில்லர். கலிஃபோர்னியாவின் பண்ணை வீட்டில் இருந்த தாத்தா பாட்டியை போட்டுத்தள்ளி தன் கொலைவரிசையை தொடங்கினார். ஒன்பது பெண்களை சிறப்பான முறையில் தீர்த்துக்கட்டினார். பின் அவரது பார்வை அவரது அம்மா, நண்பர்கள் பக்கம் திரும்பியது. வாஸ்தவம்தானே தேடிப்போய் கொல்வதை விட அருகிலேயே இருப்பவர்கள் நேரத்தை மிச்சப்படுத்துகிறார்கள் என்று நினைத்து அவர்களின் மூச்சை நிறுத்தினார். 1948ஆம்ஆண்டு டிச. 18 அன்று, கலிஃபோர்னியாவில் பர்பேங்க் நகரில் பிறந்தார் கெம்பர்.  பிற சீரியல் கொலைகார ர்களை விட புத்திசாலி. ஐக்யூ டெஸ்டில் 136 புள்ளிகள் பெற்றவர். புத்தி கூர்மையாக இருந்தால் துடிப்பும் வேகமும் அதிகமாக இருக்குமே? ஆம் அப்படித்தான் இருந்தார். அறிவுக்கூர்மையாக இருப்பவர்களுக்கு பாலியல் உணர்வும் திறனும் சூட்டிப்பாக இருக்கும். கெம்பர் தன் சகோதரிகளின் பொம்மைகளை எடுத்து பாலியல் திருவிழாக்களையே கொண்டாடி வந்தார். கைக்கு சிக்கிய விலங்குகளை அடித்து துவைத்து இடியாப்பமாக்கினார். மேலும் பள்ளி ஆசிரியை மீது காதல் பொங்கியது. அதிரடியாக ஒரே வார்த்

கருணையற்ற கொலைகாரன் - பிடிகே

படம்
பள்ளியில் படித்தபோது மிகச்சிறப்பான மாணவர் அல்ல. சுமாராக திரியும் கூட்டத்தில் ஓர் மாணவர் மட்டுமே. பின் கல்லூரியிலும் பெரியளவு பெயர் பெறவில்லை. நாம் எல்லோரும் அப்படித்தான் கடந்து வந்திருப்போம். டென்னிஸ் ரேடாரும் அப்படித்தான் வளர்ந்தார். படித்தார். அவர் 30 ஆண்டுகளாக மறைத்து வந்த ரகசியம் ஒன்று உண்டு. அதுதான் அவர் சீரியல் கொலைகாரன் என்பது. அதனை அவர் தன் மனைவியிடம் கூட வெளிப்படித்தியிருக்கவில்லை. அதற்கான அறிகுறிகளைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. மதிப்பான மனிதர்கள், குடும்பம் இருந்தது. பள்ளி ஸ்கவுட் குழுவில் இடம்பெற்றவர், பின்னர், தேவாலய பிரார்த்தனை குழுவின் தலைவராக இருந்தார். விபத்து, கொலை பற்றிய செய்திகளை கேட்டாலே பதறி வேறுபுறம் செல்பவர் பத்து பேர்களுக்கும் மேற்பட்டவர்களை கொன்று புதைத்தார் என்றால் நம்புவீர்களா? டென்னிஸ் ரேடார் பிடிபட்டபோது, அவரது குடும்பம் பதறியது. அவரது மகள் எனக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுத்தவர் இப்படி செய்திருப்பாரா என்று கேட்டார். பின்னர் போலீஸ் எடுத்துச் சொல்லியதும்,  எனது தந்தை தவறான விஷயங்களிலிருந்து சரியான விஷயங்களுக்கு வழிகாட்டி உள்ளார் என்று கூறி பே

திகட்ட திகட்ட கொலை - இரு சகோதரர்களின் அட்டூழியம்!

படம்
அசுரகுலம் கென்னத் பியான்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள மலையில் திடீரென 12 முதல் 28 வயதுள்ள பெண்களின் பிணங்கள் கண்டெடுக்கப்படத் தொடங்கின. இருவர் இக்கொலைகளுக்கு காரணம் என போலீஸ் கண்டுபிடித்தது. அதில் ஒருவர்தான் கென்னத்.  மேற்சொன்ன மலையருகே நிறைய பெண்களின் பிணங்களை காவல்துறை கர்மசிரத்தையாக எடுத்து மார்ச்சுவரியில் அடுக்கியது. பின்னர் கிடைத்த விஷயங்களை வைத்து ஆராய்ந்தபோது, பெண்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு குறிப்பாக வல்லுறவுக்கு பின்னரே கொல்லப்பட்டிருந்தனர்.  அங்கு செய்த கொலைகளைக் காட்டிக் கொடுத்து போலீஸ் விசாரணை செய்ய விசில் ஊதியவன் ஓர் சிறுவன்தான். அவன் அந்த இடத்திற்கு புதையல் கண்டுபிடிப்போம் என்ற விளையாட்டிற்காக வந்தான். அங்கு வந்தபின்தான், அவனது பதினான்கு வயதிற்கு ஒத்த இரு சிறுமிகள் நிர்வாணமாக கட்டிவைக்கப்பட்டிருப்பதை பார்த்தான். அருகில் போய் பார்த்தபோது, இருவரின் உடலின் சதைகளும் கெட்டு புழுக்கள் வெளிவந்துகொண்டிருப்பதை பார்த்து திகைத்துப் போனான். பின்னர் இக்காரியத்தை செய்த இருவரையும் போலீசில் காட்டிக்கொடுத்தான்.  கென்னத், அவரது சகோ

சாத்தான் சொல்லித்தான் சுட்டேன்! - டேவிட் பெர்கோவிட்ஸ்

படம்
அசுரகுலம் டேவிட் பெர்கோவிட்ஸ் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள மக்களை கொலை பீதியில் ஆழ்த்தியவர் டேவிட். சன் ஆஃப் சாம் கொலைகாரர், .44 காலிபர் கொலைகாரர் என்று அழைக்கப்பட்ட சீரியல் கொலைகார ர். நியூயார்க்கில் ப்ரூக்ளின் நகரில் 1953ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று பிறந்தார். இவரது பெற்றோருக்கு இவர் பிறந்தபோது மணமாகவில்லை. அது அவர்கள் மனமுறிவால் பிரிந்துபோக உதவியது. குழந்தையாக இருந்த டேவிட், தம்பதி ஒருவருக்கு த த்து கொடுக்கப்பட்டார். சிறுவயதில் இருந்தே டேவிட்டுக்கு வன்முறையான எண்ணங்கள் இருந்தன. பெரியளவு யாருடனும் கலந்துபேசாத ஆள். திருட்டில் வல்லவர். ஏதாவது ஓரு இடத்தில் நெருப்பு எரிந்தால் அங்கேயே அதை ரசித்துக் கொண்டு நின்றுவிடுவார். இதனை பைரோமேனியா என்று கூறுகிறார்கள். நெருப்பை ரசிப்பது, ஓர் இடத்தை தீக்கிரையாக்கி மகிழ்வதை உளவியல் மருத்துவர்கள் முக்கியமான சீரியல் கொலைகார ர்களுக்கான அறிகுறியாக சொல்கிறார்கள். அத்தனையும் அப்படியே டேவிட்டுக்கு பொருந்திப்போனது.  பதினான்கு வயதிலேயே பள்ளியில் ஏராளமான ஒழுக்கம், நடத்தை தொடர்பான குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டார் டேவிட். அந்நேரத்தில் அவர

ஆல்பெர்டோவின் செக்ஸ் வாழ்க்கை!

படம்
ஆல்பெர்ட் டிசால்வோவின் செக்ஸ் வாழ்க்கை பெண்களை நைலான் கயிற்றில் கட்டி அவர்களை தலையில் பாட்டிலால் அடித்து குற்றுயிராக்குவது முதல் பணி. அதற்குப் பிறகு அவர்கள் வலி, வேதனையில் துடிப்பார்கள். பின்னர் ரத்தப்போக்கினால் இறப்பார்கள். அதெல்லாம் ஆல்பெர்டுக்கு தெரியாது. அவனுக்கு மகிழ்ச்சி வேண்டும். அப்போது வல்லுறவு செய்வதுதான் அவனுக்கு பிடித்தமானது. பின் உடலை குறிப்பிட்ட மாதிரி செட் செய்து விட்டு கிளம்புவான். போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்த சீரியல் சைக்கோ கொலைகாரர் இவர். ஆல்பெர்ட்டின் குற்றச்செயல்கள் பற்றி பிறகு பார்ப்போம். முதலில் அவரது குடும்பம் பற்றி... அவரின் தந்தை குடிபோதையில் அலைபவர். வீட்டிற்கே விலைமாதர்களை கூட்டி வந்து மஜா செய்பவர். இதனால் தெரியவேண்டிய அத்தனையும் சிறுவயதிலேயே ஆல்பெர்டோவுக்கு தெரிந்துவிட்டது. அவரது சகோதர ர்கள் சீர்திருத்த பள்ளிக்கு செல்வதும் வருவதுமாக சாதனை செய்து கொண்டிருந்தனர். ஆல்பெர்டோ டிசால்வோ வளரும்வரை போஸ்டனில் உள்ள மால்டன் நகரில் எந்த குற்றங்களிலும் ஈடுபடவில்லை. ஜெர்மன் அகதியான இர்ம்கார்ட் என்ற பெண்ணை திருமணம் செய்தார். செக்ஸ் மீது மிக ஆர்வமாக இருந்

செருப்பு, உள்ளாடை, கொலை - முன்னேற்றம் கண்ட ஜெர்ரி!

படம்
ஜெர்ரி ப்ரூடோஸ் சிறுவயதிலிருந்து மனதில் உருவாகும் ஆசைதான் ஒருவரின் ஆளுமையை வளர்க்கிறது. அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்திலுள்ள போர்லாந்தில் வாழ்ந்த ஜெர்ரியின்ஓரே ஆசை செருப்புகளை சேகரிப்பது. அதுவும் ஹைஹீல்ஸ் என்றால் குப்பைத்தொட்டியில் இருந்தாலும் சேகரித்து வைப்பார். எப்போது தொடங்கிய ஆசை தெரியுமா? அவருக்கு ஐந்து வயது இருக்கும். அப்போதே நடந்து செல்பவர்களை விட அவர்களின் கால்களை அலங்கரிக்கும் கால்களிலேயே ஜெர்ரியின் பார்வை நிலைகொண்டிருந்தது. அச்செருப்புகளை தானே வைத்துக்கொள்ள விரும்பினாலும் அதனை எப்படி கேட்டுப் பெறுவது என சிறுவன் ஜெர்ரிக்கு தெரியவில்லை. தனது ஆசையை நிறைவேற்ற குப்பைத்தொட்டியில் தேடினான். ஆச்சரியமாக அவன தேடியது கிடைத்தது. ஆம் செருப்புதான். ஆனால் ஜெர்ரி அதோடு நிற்கவில்லை என்பதுதான் பிரச்னை. செருப்பு, உள்ளாடைகள் எனத் தொடங்கிய பயணம் இறுதியில் அவரின் மரணத்தில் வந்து நின்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வயதாக வயதாக அவரின் செருப்பு தேடும் ஆர்வமும் வளர்ந்தது. இம்முறை அதிகமாக எல்லை மீறியே சென்றுவிட்டது. அருகிலிருந்து குடியிருப்புகளுக்கு சென்று காலிங்பெல் அடித்து, கதவ

அசுரகுலம் - பிணங்களைப் பார்த்து சுய இன்பம் செய்த ஜெஃப்ரி!

படம்
அசுரகுலம் ஜெஃப்ரி டாமர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி செய்த கொலைகள் 17 அனைத்தும் இளைஞர்கள். அதுவும் பல்வேறு ஓரினச்சேர்க்கை பார்களில் பார்த்த இளைஞர்களுக்கு செக்ஸ் ஆசை, பணம் காட்டி வீட்டுக்கு கூட்டி வந்து கொன்றவர். இதற்காக 16 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றார். ஆனால் முதல் கொலைமுயற்சியில் கழுத்தறுபட்டு தப்பித்தவர், இரண்டாவது முயற்சியில் கொல்லப்பட்டார். கொன்றவர் சக கைதியான ஸ்கார்வர். இவர் மரணித்த ஆண்டு 1994. பதிமூன்று ஆண்டுகளில் 17 இளைஞர்களை கொன்றவர் ஜெஃப்ரி. எப்படி தெரியுமா? ஓரினச்சேர்க்கை, பூங்கா, பேருந்து நிறுத்தம் என்று செல்வார்.அங்குள்ளவர்களில் செக்ஸ் விற்பனைக்கு என தில்லாக நிற்கும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை தேர்வு செய்து பேரம் பேசி வீட்டுக்கு அழைத்துச் செல்வார். அங்கு சென்றதும் முதலில் மது பிறகு சமாச்சாரம் என்று சொல்லிவிட்டு, ஆல்கஹாலில் மயக்க மாத்திரைகளை கலந்துகொடுப்பார். அவர் குடித்துவிட்டு மயங்கியவதும் அவரின் உடல் பாகங்களை அக்கு அக்காக பிரிப்பார். ஜெஃப்ரி ஜோம்பி என்ற உணர்விழந்த மனிதர்களை நம்பினார். அதற்காக கூட்டி வந்த ஆட்களின் மண்டையில் துளையிட்டு அமிலங்க

கொலைகார தேசம் - அமெரிக்கா

படம்
ஜெஃப்ரி டாமர் அசுரகுலம் கொலை விழும் நாடு! அமெரிக்காவில் இன்றுவரை இரண்டு லட்சத்து இருபதாயிரம் கொலை வழக்குகளை என்ன செய்வது எப்படி முடிப்பது என தெரியாமல் போலீஸ் திணறி வருகிறது. இக்கணக்கு தொடங்குவது 1980ஆம் ஆண்டிலிருந்து. போலீஸ்தான் சீரியல் கொலைகார ர்களை பிடித்து மின்சார நாற்காலி, அல்லது விஷ ஊசி போட்டுக்கொல்கிறது. ஆனாலும கொலைகளின் எண்ணிக்கை ஏன் குறையவில்லை. 1900 இல் அமெரிக்க காவல்துறை சீரியல் கொலைகார ர்களை வகைப்படுத்தி வைத்திருந்த து. இம்முறையில் 3 ஆயிரம் பேர் இருந்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்திய ஆயுதம் துப்பாக்கியாகவே இருந்தது என்கிறார். மருத்துவர் மைக்கேல் ஆமோட். இக்கொலைகார ர்களின் 52 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 40 சதவீதத்தினர் கருப்பர்கள். பிற இனத்தவர்கள் மீதி. 1970 முதல் 2005 வரை 93 மூன்று பேர்களை கொலை செய்த சாமுவேல் லிட்டியல் என்ற கொலைகாரப் பெண் இப்பட்டியலில் முன்னணியில் உள்ளார். என்ன காரணம்? தனிமைதான். சீரியல் கொலைகார ர்களில் இளம் வயது பெரும்பாலும் தாயிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவே இருக்கிறது. இது அவர்களின் மூளை வளர்ச்சியில் பெரும் மாறுதல்கள

கற்பழித்தபின்னர் பெண்களை சுட்டுத்தின்பேன் - லூகாஸ், ஓட்டிஸ் டூல்

படம்
ஒருவரைக் கொல்வது என்பது வாசல் கதவு வரை இயல்பாக நடப்பது போன்றதுதான். கொல்லவேண்டும் என்று எனக்கு தோன்றினால், உடனே வெளியே போவேன். ஒருவரைப் பிடித்துக்கொல்வேன் - லூகாஸ். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களுக்கிடையே பயணித்து நூற்றுக்கணக்கானவர்களை வல்லுறவு செய்து, கொன்று எரித்து அதோடு விடாமல் அவர்களின் இறைச்சியை கம்பியில் சுட்டு தின்ற இரட்டையர்களை அறிந்திருக்கிறீர்களா? அவர்கள்தான்  லூகாஸ், ஓட்டிஸ் டூல். இருவருக்குமான கடந்தகாலத்தை அவர்களது பெற்றோர்தான் நாசமாக்கினார்கள். லூகாஸின் தாய் ஓர் விலைமாது. அதிலும் சைக்கோ என்றால் உங்களுக்கு புரியுமா? தான் ஆண்களுடன் காசுக்காக செக்ஸ் வைத்துக்கொள்வதை லூகாஸைப் பார்க்க வற்புறுத்துவது அந்த தாய்க்கு மிகவும் பிடிக்கும். இந்த சித்திரவதை பொறுக்கமுடியாமல் தாயின் கழுத்தை அறுத்துக் கொன்றார் லூகாஸ். லூகாஸின் அம்மாவுக்கு அவர் ஒரு சுமையாகவே தெரிந்தார். அதனால்தான் அம்மாவை 23 வயதில் கழுத்தை அறுத்து கொன்றார். நிம்மதி பெருமூச்சு விட்டார். பின்னே அம்மா அவரைக் கண்டுகொள்ளாத தால்தானே அவரது ஒரு கண், நோய்த்தொற்று ஏற்பட்டு பறிபோனது. அப்போதே சிறு விலங்குகளைப் பிடித்

செக்ஸ் ஃபேன்டஸி - நிர்வாணம் தேடிய ஜெர்ரி புருடோஸ்!

படம்
அசுரகுலம் ஜெர்ரி புருடோஸ் ஜெர்ரிக்கு பெண்கள் என்றால் பிடிக்கும். அவருடைய அம்மாவுக்கு ஜெர்ரியை பெண்ணாக பார்க்கவேண்டுமென்ற எண்ணம் ஈடேறவில்லை என்ற வருத்தம் இருந்தது.இதனால் அவர் வளரும்போது அவருக்கு தாய், மகன் பாசமெல்லாம் இருக்கவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தாய், மகனை அடித்து உதைத்தார். இதன் விளைவு என்னானது தெரியுமா? சிறியவயதிலிருந்து பெண்களின் ஷூக்களை திருடத் தொடங்கினார். ஜெர்ரி. பின்னர் பெண்களின் உள்ளாடைகள் மீது காதல் பிறக்க, அவையும் திருடுபோயின. இதெல்லாம் அவருக்கு ஒருகட்டத்தில் போதவில்லை. பெண்களை அடித்து உதைத்து வல்லுறவும் கொள்ள ஆரம்பித்தார். இதன்விளைவாக சிறைக்கும் சென்றார். இவரின் வினோத பழக்கத்தை கண்டறிந்த போலீஸ், அவரை மனநல மருத்துவமனைக்கு பேக் செய்தது. சிசோபெரேனியா எனும் உளவியல் பாதிப்பு ஜெர்ரிக்கு இருந்தது. 1939 ஆம் ஆண்டு பிறந்த ஜெர்ரி, தெற்கு டகோடா பகுதியைச் சேர்ந்தவர். 1957 இல் படித்து எலக்ட்ரானிக்ஸ் வல்லுநர் ஆனார். அப்போது பதினேழு வயதான பெண்ணை திருமணம் செய்தார். மனைவி வீட்டுவேலைகள் செய்யும் நிர்வாணமாகத்தான் பணி செய்ய வேண்டும். அப்போது காலில் ஹீல்ஸ் மட்டு

வல்லுறவு பிறகு மன்னிப்பு - காமவெறியன் டிசால்வோ

படம்
அசுரகுலம் ஆல்பெர்ட் டிசால்வோ அமெரிக்காவின் போஸ்டன் நகரில் தனியாக வாழும் பெண்களை மிரட்டிய கொலையாளி ஆல்பெர்ட் டிசால்வோ. 1962 -1964 வரையிலான காலகட்டத்தில் 13 க்கும் மேற்பட்ட பெண்களை வல்லுறவு செய்து கொன்றார். அனைத்து கொலைகளுக்கும் பொதுவான அடையாளம், கைகளும் கால்களும் பெண்களின் உள்ளாடைகளால் கட்டப்பட்டிருக்கும். இந்த ரீதியில் மாதம் இரு கொலைகள் என திட்டமிட்டு ஆல்பெர்ட் செயல்பட்டு வந்தார்.  போலீசுக்கு கிடைத்த முதல் துப்பு, கொலைகாரர் வீட்டின் கதவை, ஜன்னலை உடைத்து உள்ளே வரவில்லை என்பதே. இதன் பொருள், பெண்களுக்கு உள்ளே வருபவர் அதாவது கொலையாளி முன்னமே தெரிந்தவராக இருக்கவேண்டும். அல்லது அவர்கள் அவரை உள்ளே வர அனுமதிக்கின்றனர் என தீர்மானித்துக்கொண்டனர். 1964 ஆம் ஆண்டு டிசால்வோவின் வல்லுறவு விளையாட்டிற்கு முடிவு கட்டப்பட்டது. வல்லுறவுக்குள்ளான பெண் துணிந்து போலீசில் புகார் செய்தார். எப்படிம்மா உள்ளே வந்தான் என்பதற்கு, டிடெக்டிவ் என்று சொல்லி உள்ளே வந்து வல்லுறவு செய்தார். பின்னர் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டார் என்று அந்த பெண் விசாரணையில் கூறினார். இவர் மட்டுமன

சிறுவர்களை செக்சுக்கு பயன்படுத்திய கோமாளி! - ஜான் வெய்ன் கேசி

படம்
அசுர குலம் ஜான் வெய்ன் கேசி இன்று ஜோக்கர்கள்தானே எதிர்கால வில்லன்களாக மாறுகிறார்கள். அப்படித்தான் ஜான் வேய்ன் கேசி, நினைத்துப் பார்க்க முடியாத கொடூர ஆளாக மாறியதும். முதலில் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கேசி ஒரு கோமாளிதான். கோமாளி வேடம் போட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுபவர்தான். ஆனால் உள்ளுக்குள் அவர் ஓரினச்சேர்க்கையாளர். பாலினம் சார்ந்த விருப்பங்கள் நிச்சயம் குற்றம் கிடையாது. ஆனால் அதற்கு அவர் நாடியது சிறுவர்கள். அவர்களை கட்டாயப்படுத்தி உறவு வைத்துக்கொண்டு சிறை தண்டனை பெற்ற வரலாறு அவருக்கு உண்டு. பின்னர், சிறுவர்களை கொல்லத் தொடங்கியதுதான் அவரை சீரியல் கொலைகாரர்களில் முக்கியமானவராக மாற்றியது. சிகாகோவில் கட்டடத்துறை சார்ந்த வேலைகளைச் செய்து வந்த கேசி பொது சமூகத்தில் நல்ல பெயரை சம்பாதித்தார். ஊரில் கந்தையா மாமா, பழனிச்சாமி சித்தப்பா என சிலர் உண்டு. இவர்கள் ஊரில் எந்த விழா நடந்தாலும் அங்கு சென்று வாழை மரத்தை ஊன்றி நிமிர்த்தி வைப்பது முதல் சோற்று பந்தியை கவனிப்பது வரை வேலைகளை செய்வார்கள். ஏறத்தாழ கேசி அப்படிப்பட்ட ஆள்தான். அதனால்தான் அவருக்கு சிகாகோவில் அவர