இடுகைகள்

நூல் விமர்சனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லூயி புனுவலின் சுயசரிதை! - காதல், காமம், நட்பு , துரோகம், திரைப்படம், வாழ்க்கை

படம்
    louis  bunual  இறுதிசுவாசம்  லூயி புனுவல் தமிழில் சா.தேவதாஸ்  வம்சி பதிப்பகம் ரூ.200  நூல் முழுக்க லூயி புனுவல் தனது பால்ய கால வாழ்க்கை முதல் திரைப்பட அனுபவங்கள் வரை எழுதியுள்ளார். இதில் பலவும் ஆண்டு வரிசையில் எழுதப்படவில்லை என்பதால் நீங்களே இப்படித்தான் இருக்கும் என நிகழ்ச்சிகளை வரிசையாக அமைத்து படித்துக்கொள்ளலாம். மேலும் இதனை எழுத்தாளரும் கூறியுள்ளார். லூயி புனுவெல், தனது நினைவிலுள்ள விஷயங்களை எழுதியுள்ளேன். இதில் சில சம்பவங்கள் தவறியிருக்கலாம் என்று அவரே கூறிவிடுகிறார்.  லூயி புனுவெல் மிகை யதார்த்தவாதி என்பதால் அவர் எடுத்த பல்வேறு படங்கள் இத்தன்மையில் அமைந்துள்ளன. அவரின் சிந்ததனைகளைத் தெரிந்துகொள்வது படம் பார்க்கும்போது அதிர்ச்சி அடைவதை தவிர்க்க உதவும். ஸ்பெயினில் பிறந்தவர் அமெரிக்காவுக்கு சென்று படம்பிடித்தலை பார்வையிட்டு கற்று்க்கொண்டு வந்து அமெரிக்க பாணி கதை சொல்லலை கைவிட்டு தனக்குப்பிடித்தது போல திரைப்படங்களை உருவாக்கியது இவரின் மேதமைக்கு சான்று. படங்கள் தனித்துவம் கொண்டவை என்றாலும் மக்களின் மதச்சார்புத்தன்மை கொண்ட நாடுகளுக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தின என்றால் மிகையல்ல. 

சீனா, வளர்ச்சிக்கு கொடுத்த விலை என்ன? சீனா வல்லரசு ஆனது எப்படி? ரமணன்

              சீனா வல்லரசு ஆனது எப்படி? ரமணன் அனைவரும் தெற்கு சீன கடல், பிற நாடுகளுக்கு வழங்கும் கடன் என பல விஷயங்களிலும் சீனாவை கவலையுடன் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டு எப்படி முன்னேறியது என்பதை சொல்லும் ஏராளமான நூல்கள் இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன. ரமணன் எழுதியுள்ள இந்த நூல் அந்த வகையில் ஏராளமான தகவல்கள், ஆராய்ச்சிகள் என சீனாவின் வளர்ந்த கதையை எளிமையாக முன்வைக்கிறது. சீனாவின் வளர்ச்சி, உள்நாட்டில் எதிர்கொண்ட சவால்கள், கிராமங்களை அழித்து அதனை நகரங்களாக்கி குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை தயாரிப்பு என பல்வேறு சர்ச்சைக்குள்ளான சமாச்சாரங்களையும் நூலில் சொல்லியிருக்கிறார்கள். மாசேதுங் காலத்தில் சீனாவில் தொடங்கிய கலாசார, சமூக பொருளாதார மாற்றங்கள், டொங்பிங், ஜின்பிங் வரை அப்படியே தொடர்வதையும் சிறப்பாக விவரித்துள்ளார் ரமணன். குறிப்பாக நிலச்சீர்திருத்தங்கள். இந்த விஷயத்தில் இந்தியா கற்றுக்கொள்ள நிறைய சமாச்சாரங்கள் உள்ளன. ஒவ்வொரு சீர்த்திருத்தங்களாக முயன்று பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்த நாடு சீனா. இவற்றை ஒரே நேரத்தில் முயல்வதால் இந்தியா முன்னேற முடியவில்லை என்ற கருத்தைய

மூன்று பேரின் இறப்பிற்கு காரணமாக குடும்பத்திற்கு கருப்பசாமி வழங்கும் நீதி! விட்டுவிடு கருப்பா - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
                விட்டுவிடு கருப்பா இந்திரா சௌந்தர்ராஜன் ரத்னா நகரில் வேலை பார்த்து வருகிறாள். அவள் மருத்துவராக பணிபுரியும் அதே இடத்தில் அரவிந்தும் மருத்துவர். கூடவே அவளைக் காதலித்தும் வருகிறான். காதல் புரிந்தாலும் ரத்னா கண்டும் காணாததுமாகவே இருக்கிறாள். என்ன காரணம் அவளது புத்திசாலி பகுத்தறிவுவாதியான தோழி ரீனா கேட்கிறாள். அதற்கு அவளது ஊரைச்சேர்ந்த கருப்பசாமி யாரை கைகாட்டுகிறதோ அவரைத்தான் கல்யாணம் செய்துகொள்ளமுடியும்.இல்லையென்று மறுத்தால் உயிர் காலி என்கிறாள். அதற்கேற்ப ரத்னாவின் குடும்பத்தில் பல்வேறு துர்மரணங்கள், விபத்துகள் ஏற்படுகின்றன. உண்மையில் இதெல்லாம் அமானுஷ்யமாக இருக்கிறது என ரீனா துப்பறிய கிளம்புகிறாள். அதில் அவள் கண்டுபிடிக்கும் சமாசாரங்கள்தான் கதையில் முக்கிய திருப்புமுனை. நாயக்கர் பங்களாவில் வரும் கடைசி பகுதி ட்விஸ்ட் இதிலும் உண்டு. ஆனால் அது பொருத்தமாக இல்லை என்பதுதான் நெருடல். ஊர் பஞ்சாயத்து தலைவரான தேவர், பக்தியை விட பணத்தை அதிகம் நம்புபவர். அவரின் மனைவிக்கு குடும்பம் நன்றாக வாழவேண்டுமென்ற  ஆசை. அவளது மாமியார் வட்டிக்கு பணம் கொடுத்து ஊர் சாபத்தை வாங்கிக்கொண்டாலும் எதையும்

ஆதித்த கரிகாலனை பலிவாங்கும் சகோதர பொறாமை, சதி! அத்திமலைத்தேவன் 5 - நிறைவுப்பகுதி

படம்
              அத்திமலைத்தேவன் 5 நரசிம்மா வானதி பதிப்பகம் இந்த பாகத்தோடு அத்திமலைத்தேவன் நிறைவடைகிறது . ஏறத்தாழ நரசிம்மா ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றி இதுவரை மறைத்து வைத்திருந்த அத்தனை விஷயங்களையும் வெளிப்படுத்திவிட்டார் . பல்லவர்களைப் பற்றிய ஆவணமாக நூலை படைத்து அவர்களின் பரம்பரையை விவரித்து இருந்தார் ஆசிரியர் . அபராஜிதனை ஆதித்த சோழ ன் குத்திக்கொள்ள சோழ சம்ராஜ்யம் தொடங்குகிறது . இதன் காரணமாக அவர்களின் பரம்பரை முழுக்க சாபம் பீடித்தது போல அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன . இதில் பெரிதும் பாதிக்கப்படுவது , ஆதித்த கரிகாலன்தான் . பொன்னியின் செல்வன் போல அல்லாமல் ஆதித்த கரிகாலன் எப்படி கொல்லப்பட்டிருக்கலாம் என்பதற்கான அத்தனை விஷயங்களையும் சிறப்பாக முன்வைத்திருக்கிறார் ஆசிரியர் . சுந்தர சோழரின் மகள் அனைத்து சதிகளுக்கும் பின்னணியில் இருந்து நடத்துகிறாள் என்பது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும் . அதற்கு வலு சேர்க்கும் விதமாக ஏராளமான ஆதாரங்களைக் காட்டுகிறார் . சிறப்பாக வந்திருக்க வேண்டிய சோழ சாம்ரா

ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்ட நாயக்கர் பங்களாவில் பேய்! - நாயக்கர் பங்களா - இந்திரா சௌந்தர்ராஜன்

படம்
  நாய்க்கர் பங்களா இந்திரா சௌந்தர்ராஜன் விக்கிரம நாயக்கர் ஊரிலேயே பெரும் செலவு செய்து மாளிகை ஒன்றை எழுப்புகிறார் . இதனால் உள்ளூரில் ஜம்புலிங்கம் என்ற பணக்காரர் கொதித்தெழுகிறார் . விக்கிரம நாயக்கரை செங்கமலம் என்ற தாசி மூலம் சாய்க்கிறார் . இதனாகல் அவரின் முழு குடும்பமும் தற்கொலை செய்து அம்மாளிகையில் சாகிறது . இதனால் ஊரே மிரண்டு நிற்கிறது . யாரும் அந்த மாளிகையை வாங்க முன்வருவதில்லை . முப்பது ஆண்டுகளாக பாழ்பட்டு கிடக்கும் மாளிகையை யாருமே வாங்குவதில்லை . உண்மையில் அங்கு இருப்பது ஆவியா என கண்டறிய முற்படுகிறார் பரம நாயக்கர் . அவருக்கு என்ன ஆனது என்பதுதான் கதை . அமானுஷ்யமாக தொடங்கி அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று முடித்து இறுதியில் ஆவிதாம்ப்பா என ஆச்சரியப்பட வைக்கும் கதை . இறுதியில் வரும் ட்விஸ்ட் பெரிதாக ஈர்க்கவில்லை என்பதுதான் வேதனை . மற்றபடி கதை மாளிகை உருவாவது , நாயக்கர் வாழ்க்கை வீழ்ச்சி வரை நன்றாக செல்கிறது . கோமாளிமேடை டீம் நூல் விமர்சனம், இந்திரா சௌந்தர்ராஜன்

இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டு உணர்ச்சிகர சம்பவங்களின் தொகுப்பு! லான்காஸ்டர்

படம்
Add caption

எளிய முறையில் எழுதப்பட்ட உளவியல் நூல் ! - உளவியல் உங்களுக்காக - இராம. கார்த்திக் லெட்சுமணன்

படம்
உளவியல் உங்களுக்காக மருத்துவர் ராம. கார்த்திக் லெட்சுமணன் பொதுவாக சமூகத்தில் நிறைய நம்பிக்கைகள் இருக்கும். இவை அறிவியல் சார்ந்தவை அல்ல. காலப்போக்கில் அப்படியே பலரும் நம்பி இப்போது நாமும் நம்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்போம். அதுபோன்ற பல விஷயங்களை மருத்துவர் கார்த்திக் கேள்விகளைக் கேட்டுள்ளார்.  இந்நூலிலுள்ள அனைத்து கட்டுரைகளும் எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளும்படி எழுதியுள்ளதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். அடிப்படையில் இந்த நூல் உளவியல் என்பது என்ன என்பதை விளக்கவே உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியாக அந்த விஷயத்தை மட்டுமே பேசாமல், பல்வேறு சமூக பிரச்னைகளைப் பேசுகிற நூல், உளவியல் சார்ந்த விஷயங்களையும் கவனப்படுத்தி பேசுகிறது.  உளவியலில் ஆளுமை, பழக்கவழக்கங்கள், குணம் ஆகியவை முக்கியம் என்பதால் பொறியியல் மட்டுமே படிக்க வற்புறுத்துவது போன்ற கட்டுரைகள் எளிதாக புரிந்துகொள்ளமுடிகிறது. அவை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மனச்சோர்வு, ஆளுமை பிரச்னைகள் என மருத்துவர் பேசுவது சிறப்பாக புரிந்துகொள்ள உதவுகிறது.  புகையிலை பழக்கத்தை கைவிடு, அசெர்ட்னெஸ், ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் ஆகிய கட்டுரைகள் குறிப்

சயாம் பூனை மிரட்டல் தலைவனை கண்டுபிடிக்கும் சங்கர்லால் - நியூயார்க்கில் சங்கர்லால் - தமிழ்வாணன்

படம்
ஜிபி நியூயார்க்கில் சங்கர்லால் தமிழ்வாணன்   தமிழ்வாணனின் அதிரடியான துப்பறியும் நாவல். டோக்கியோ சென்றிருக்கும் சங்கர்லால் அமெரிக்காவுக்கு பமேலா என்ற பணக்கார பெண்ணின் அழைப்புக்காக வருகிறார். ஆனால் அதற்குள் அவர் வருவதைப் பற்றிய செய்தி சட்டவிரோத குழுவின் தலைவனான பூனை என்கிற ஜாக்சனுக்கு கிடைக்கிறது. இதனால் சங்கர்லால் வந்தால் தனக்கு கிடைக்கிற பணம் கிடைக்காது என்பதால் அவரைக் கொல்வதற்கான ஒத்திகைப் பயிற்சியை நடத்த முயல்கிறான். இதில் அநியாயமாக ஜங்கிள்ஜான் என்பவன் உயிரை விடுகிறான். போலீசார் இந்த வழக்கில் பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கும் சங்கர்லால் துப்பறிவதில் பெரிய ஆர்வம் இல்லை. அவரோடு போட்டியிட்டு அவரை அவமானப்படுத்த நினைக்கிறார் நியூயார்க் காவல்துறை தலைவர் வில்லியம்ஸ். சங்கர்லால் பமேலாவுக்கு வந்த மிரட்டல் கடிதத்தைப்படித்துவிட்டு அவரை கவனமாக பாதுகாக்க நினைக்கிறார். ஆனால் அதற்குள் பூனை ஜாக்சன் முந்திக்கொள்ள நினைக்கிறான். பமேலாவைக் கொல்ல குறிப்பிட்ட நாளில் திட்டமிடுகிறான். ஆனால் அதற்குள் சங்கர்லாலைக் கொல்ல திட்டமிட்டு, அது நடக்காமல் போக அவனது அடியாள் ஆல்பர்ட்டை கொல்ல ஜாக்சன் உத்தர

காமதேனுவின் சக்தியை சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் சுயநல குடும்பம்! - காமதேனுவின் முத்தம்

காமதேனுவின் முத்தம்  காலச்சக்கரம் நரசிம்மா வானதி பதிப்பகம்.  ப. 579 ரூ. 300 தெய்வீகத்தன்மை கொண்ட சாகச நாவல்.  கோவூர் என்ற ஊரிலுள்ள கோவிலில் பெரிய வீட்டுக்காரர்கள் ஊர் நன்மைக்காக யாகம் ஒன்றை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். இதில் பெரியவீட்டுக்கார  பெண்கள் யாரேனும் கர்ப்பிணியாக கலந்துகொண்டால்  அந்த ஊருக்கு சுபிட்சம் கிடைக்கும் என்ற நம்புகிறார்கள். காமதேனுவை கர்ப்பணிப் பெண் தன் கண்ணார பார்த்துவிட்டால் அவளுக்கு பிறக்கும் பெண் குழந்தைக்கு தெய்வீகத்தன்மை கிடைக்கிறது. அவள் சொல்வதெல்லாம் பலிக்கிறது. அவள் தொட்ட இடமெல்லாம் சந்தனம், பன்னீரின் மணம் வீசுகிறது. இப்படி தமயந்தி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு தேனுகா என்ற பெண்குழந்தை பிறக்கிறது. அவள் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாஞ்சாலியம்மா என்ற தமயந்தியின் மாமியார், புத்தி சுவாதீனம் இல்லாதவர் என கூறப்படுகிறாள். உண்மையில் அவளுடைய மகளுக்கு நேர்ந்த கொடூரமான முடிவால் அவள் புத்தி பிறழ்ந்து போனதுபோல ஆகிவிடுகிறாள்.  தமயந்தி கர்ப்பிணியாக இருக்கும்போது காமதேனுவைப் பார்க்கிறாள். அதை சொல்லவேண்டாமென அவள் வீட்டு வேலைக்காரி அங்காயி சொல்கிறாள். ஆனால் அதனை மீறி தமயந்தி

ஐஏஎஸ் பதவியில் சாதித்த சாதனைகளும், சிக்கல்களும் - ப.ஸ்ரீ. இராகவன்

படம்
நேரு முதல் நேற்று வரை  ராகவன்  கிழக்கு பதிப்பகம் சுதந்திரமடைந்த இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய ராகவன், தனது பணி அனுபவங்களை நூலில் விவரித்துள்ளார். வெறும் விருப்பு வெறுப்பு மட்டுமன்றி, எதிர்கால குடிமைப்பணித் தேர்வு எழுதும் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று இறுதிப்பகுதியிலும் வலியுறுத்தியுள்ளார். அதற்காக கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  தலைநகரான டில்லியில் பணியாற்றுவதற்காக ஆங்கிலத்தோடு இந்தியும் கற்றது தனக்கு எப்படி பயன்பட்டது என்பதை லால் பகதூர் சாஸ்திரியோடு பணியாற்றிய அனுபவத்தில் சொல்லியிருக்கிறார். இதை சொல்லும்போதும், பல்வேறு நிகழ்வுகளின்போதும் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் காரணமின்றி அரசியலுக்காக இடம் மாற்றுதல் செய்யப்படுவதை கண்டமேனிக்கு திட்டித் தீர்த்துள்ளார்.  இதற்கு காரணம் அரசு பணியில் உள்ள அரசு தலையீடூ  என புரிந்துகொண்டு நாம் வாசித்து கடந்துவிடலாம். நேரு, லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரிலால் நந்தா, ஜோதிபாசு என பல்வேறு அரசியல் தலைவர்களோடு பழகிய அனுபவங்களை நேர்த்தியாக தொகுத்து எழுதியுள்ளார். கொல்கத்தாவில் செய்த வளர்ச்சிப் பணிகள், அதற்கு ந

மக்களுக்கு வாழ்க்கையைச் சொல்லிக் கொடுத்த குருவின் கதை! - குருதேவ்

இந்த நூலில் பானுமதி நரசிம்மன், தனது சகோதரும் தனது குருவுமான ரவிஷங்கர் பற்றி எழுதியுள்ளார். அவரின் பிறப்பு, கல்வி, தீட்சை பெறுவது, சத்சங்கம் நடத்துவது, ஆசிரம ம் உருவானது. அவரின் பெற்றோரின் வாழ்க்கை. அவர்களின் பங்களிப்பு என பல்வேறு விஷயங்களை இந்த நூல் பேசுகிறது. உலகிற்கு இன்று தேவையானது அன்பு என வலுவாக பல்வேறு இடங்களில் ரவிஷங்கர் பேசியுள்ளார். வாழ்க்கை பற்றிய பல்வேறு விளக்கங்களையும் அவர் கொடுத்துள்ளார். இதுபற்றி அவரின் சகோதரியே நேரில் கண்டு எழுதுவது நூலின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. நூலில் பல்வேறு அதிசயங்களை குரு நிகழ்த்துவது குறைவா கவே இருக்கிறது. அதுவே நூலின் முக்கியமான சிறப்பு. சீடர், பக்தர், மாணவர் ஆகியோரை வரையறை செய்து எழுதிய கட்டுரை முக்கியமானது. மேலும் ஞானத்திற்காகவே குருவிடம் வர வேண்டுமெ ன்று கூறியிருப்பது சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு  குரு செல்வதும், அங்கு நேரும் இக்கட்டுகளும் படிக்க பிரமிப்பைத் தருகின்றன. எளிய மனிதர் அமைதிக்கான தூதராக மாறியதை நேர்த்தியாக நூல் விவரிக்கிறது. கோமாளிமேடை டீம்

துரோக நண்பன், உடலைக் கொடுத்து புகழ்பெற துடிக்கும் காதலி! - அவள் எழுதிய பெஸ்ட்செல்லர்

படம்
காமன்ஃபோல்க்ஸ் அவள் எழுதிய பெஸ்ட் செல்லர் ரவி சுப்ரமணியன் தமிழில் - மஹாரதி வெஸ்ட்லேண்ட் வங்கித்துறையில் பணியாற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆதித்யா கபூர், தன் வாசகி ஒருத்தியைக் காதலிக்கிறார். சூழ்ச்சியான அந்த காதலால் அவர் படும் பாடுகள்தான் கதை.  நூலில் தலைப்புதான் சரியில்லை. ஆனால் தமிழ் மொழிபெயர்ப்பு சரளமாக எளிதில் தடுமாற்றமின்றி படிக்கும் வகையில் மஹாரதி மொழிபெயர்த்திருக்கிறார். முக்கியமான அம்சம் இது. வங்கியாளர் ஒருவர் புகழ் வெளிச்சத்தில் இருக்கிறார். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியொன்றில் அவர் பேசும் பேச்சை பேத்தல் என்று வாசகி ஒருவர் ஊதாசீனப்படுத்தி பேசுகிறார். இதனால் எழுத்தாளர் ஆதித்யா கோபம் கொள்கிறார். தன்னுடைய நூல்களை படிக்குமாறு கேட்டுக்கொண்டு அங்கிருந்து சமாளித்து பேசி வெளியேறுகிறார். பின்னர் அடுத்த நாள் காலையில் அவருக்கு மின்னஞ்சல் வருகிறது. அதில் தங்களுடைய நாவல் பிரமாதமாக இருக்கிறது. நான் தங்களை அவமதித்து பேசியது தவறு என கூறுகிறாள் ஸ்ரேயா என்ற அந்த பெண். அவள் நடந்துகொண்ட முறையால் கோபத்தில் இருக்கும் நிர்வாகத்தையும் இந்த மின்னஞ்சலையும் அதற்கு பதிலிட்ட ஆதித்யாவின் மின்னஞ்சலையும் வைத

கிறித்துவத்தில் ஒளிந்திருக்கும் தொன்மை மர்மம்! - டாவின்சி கோட்

படம்
டாவின்சி  கோட் டான் ப்ரௌன் எதிர் வெளியீடு பிரான்சிலுள்ள  அருங்காட்சியகத் தலைவர், மர்ம நபரால் கொல்லப்படுகிறார். அவர் சுட்டு கொல்லப்படுவதற்கு முன்பு அவரின் மூன்று நண்பர்களும் அடுத்தடுத்து கொல்லப்பட்டுவிடுகின்றனர். இந்த கொலை கற்சாவி ஒன்றுக்காக நடைபெறுகிறது. இந்த கொலைகளை டீச்சர் என்பவர் வழிநடத்த அரிங்கரோசா என்ற பிஷப்பின் சீடன் சிலாஸ் எனும் அடிப்படைவாதி கொலைகளை செய்கிறான். ஏன் இந்த கொலைகள், கற்சாவி என்பது என்ன?  என்பதை விவரிக்கிறது டாவின் கோட். நாவல் முழுக்க ஏராளமான கணிதப்புதிர்கள் உள்ளன. கணிதத்தில் 35 மார்க்குகளை எடுத்த ஆட்கள் இந்த நூலை தவிர்ப்பது நல்லது. காரணம், ஏராளமான விஷயங்கள் கணிதம் மூலமாகவே பூடகமாகவே கூறப்படுகின்றன. பிபனாச்சி தொடர்வரிசை, டாவின்சியின் குறியீட்டு முறை, என்கிரிப்ஷன், டீகிரிப்ஷன் என பல்வேறு புதிர்முறைகளை சிறப்பாக அமைத்து அதனை விடுவித்திருக்கிறார் நூல் ஆசிரியர் டான் ப்ரௌன். நூலில் புதிராக அமையும் கதாபாத்திரம் அதனை சிறப்பாக வடிவமைத்து இறுதியில் அதனை உடைத்து பிரமிப்பு தருகிறார் ஆசிரியர். முழு நாவலையும் வடிவமைப்பது டீச்சர் எனும் போனில் மட்டும் பாத்திரம்தான்

விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்துகிறதா கொரில்லா?

படம்
கொரில்லா ஷோபா சக்தி கருப்பு பிரதிகள் இலங்கையில் நடப்பது என்ன? அங்கு அமைதிப்படை தமிழ் மக்களுக்கு வழங்கியது என்ன? இதில் அரசியலின் பங்கு பற்றி எண்ணற்ற கேள்விகளை கொண்டுள்ள மக்களுக்கு இதில் பதில் கிடைக்கிறது. நூல் யாகோப்பு அந்தோணி தாசன் பிரான்ஸ் அரசுக்கு அகதி விண்ணப்பத்தை எழுதி அளிப்பது போல தொடங்குகிறது. அதிலே பகடி தொடங்கிவிடுகிறது. அதில் எளிமையாக வாழ நினைக்கும் ஒருவனுக்கு புலிகள் இயக்கம் எப்படி சாவுமணி அடிக்கிறது என்று பல்வேறு சம்பவங்கள் வழியாக கூறும் சம்பவங்கள் பீதியூட்டுகிறது. ரொக்கிராஜ் என்பவரின் முழு வாழ்க்கைதான் கதை. அவர் எப்படி குஞ்சன் வயலிலிருந்து இயக்கத்திற்கு செல்கிறார், அங்கு பயிற்சி எடுப்பது, பின் ஊருக்கு காவலாக வருவது, இயக்கத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், சுரண்டல்கள், அடக்குமுறைகள், வன்முறை ஆகியவற்றை இந்த நாவல் அப்பட்டமாக பேசுகிறது. இதனால்தான் நூலை விமர்சிக்கையில் சாருநிவேதிதா விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் நூல் என்று கூறியிருக்கிறார். அதை அவர் படித்துவிட்டு சொல்லியிருக்கும் தன்மைக்கு மதிப்புக்கொடுத்து அதனை பிரசுரித்திருக்கிறார்கள். இந்த த

வாழ நினைக்கும் ஆன்மாவின் துயரமான ஆசை - இச்சா - ஷோபா சக்தி

படம்
இச்சா ஷோபா சக்தி கருப்பு பிரதிகள் இந்த நூல் பிரான்சில் உள்ள எழுத்தாளர் ஷோபா சக்திக்கு, போலீஸ் அதிகாரி ஒருவர் கையெழுத்துப் பிரதிகளை அளிப்பது போல தொடங்குகிறது. தற்புனைவு வகையில் எழுதப்பட்டுள்ள நூலை கண்ணீர் பெருகாமல் தொடர்ச்சியாக வாசிப்பது கடினமாக உள்ளது. ஆலா என்ற தமிழ்பெண்ணின் வாழ்க்கைதான் இலங்கை அரசியல், வரலாறு, புலிகளின் எழுச்சி, வீழ்ச்சி ஆகியவற்றுடன் சொல்லப்படுகிறது. நூலின் செழுமை இதில் புழங்கும் ஏராளமான பழமொழிகள், புதிய சொற்களில் தெரிகிறது. தமிழீழ ஆதரவாளர்களுக்கு இந்த நூல் நிச்சயம் பிடித்தமானதாக இருக்காது. ஷோபாசக்தி/vikatan சாதாரணமாக படிப்பவர்களுக்கு அந்த நிலத்தில் நிம்மதியாக வாழ நினைப்பவர்களுக்கு விடுதலை இயக்கம் எப்படி பிரச்னைகளை உருவாக்குகிறது என்ற எண்ணமே ஏற்படுகிறது. தினசரி வாழ்க்கைப்பாடுகளுக்கு தடுமாறி வரும் தமிழ் மக்களிடம் புலிகள் வலுவில் வந்து உதவி கேட்க பிரச்னைகள் தொடங்குகின்றன. இப்படித்தான் ஆலா என்ற பெண்ணின் வாழ்கையும் இஞ்சி தேநீரை புலிகளுக்கு வழங்கிய பொழுதில் மாறுகிறது. அடுத்த நாள் அவளது தம்பியை வெட்டிக்கொல்கிறது சிங்கள ஊர்க்காவல் படை. இதில் ஏற்

பில்கேட்ஸிற்கு பிடித்த புத்தகங்கள்!

படம்
ஆளுமைகள் என்ன படித்தார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள நினைப்போம். சிலர், அவர்கள் என்ன படித்தார்களோ அதை அப்படியே படித்து டெவலப் ஆவோம் என நினைப்பார்கள். சரியோ, தவறோ நூலில் படித்து தெரிந்துகொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது உண்மை. ஆண்டுதோறும் பில்கேட்ஸ் தான் படித்த நூல்களை மக்களிடம், ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்வார். அப்படி சில நூல்களை இந்த ஆண்டும் படித்ததாக கூறினார். An American Marriage , Tayari Jones அமெரிக்காவின் மேற்கு பகுதியில் வாழும் கருப்பின தம்பதிகளின் காதல் வாழ்க்கையை பேசும் நாவல். பெரிதாக எதிர்பார்க்க ஏதுமில்லை. ஆனால் கருப்பினத்தவர் ஒருவருக்கு அவர் செய்யாத குற்றத்திற்கு விதிக்கப்படும் தண்டனை அவர் வாழ்க்கையை எப்படி சிதைக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். பெரிய நூல்களைப் படிக்கும்போது கூடவே இது போன்ற மென்மையான நாவல்களை படிக்கவேண்டும் என்கிறார் கேட்ஸ். These Truths: A History of the United States , Jill Lepore அமெரிக்காவின் வரலாற்றில் அந்நாட்டை அசைத்துப் பார்த்த வரலாற்று நிகழ்வுகளை நியூயார்க்கர் பத்திரிக்கையின் பத்திரிகையாளர் ஜில் தொகுத்துள்

அமெரிக்காவின் இனவெறியின் கதை!

படம்
இன்று உலகம் முழுக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஆட்சிக்கு வருபவர்கள் தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் வாயால் நாட்டிற்கு சுவர் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்களின் குறையை மறைக்க மக்களிடையே மத, இன,சாதி போர்களை தூண்டி வருகின்றனர். அமெரிக்கா இதற்கு விதிவிலக்கு கிடையாது. இந்த பயம் அமெரிக்காவில் எப்படி தோன்றியது என வரலாறு ரீதியாக காரணங்களை தேடி நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். பெஞ்சமின் பிராங்களின் காலத்தில் ஜெர்மன், ஆசிய, யூத அகதிகள் அந்நாட்டில் இருந்தனர். அனைவரும் பாடுபட்டுத்தான் அமெரிக்கா வலிமையான நாடாக மாறியது. வென்றால் அமெரிக்கர். தோற்றால் கருப்பினத்தவர் என்று அமெரிக்கா குறிப்பிட்ட பாலிசியை கடைபிடிக்க கூடியது. இந்த பாகுபாடு அரசியல் எப்படி வளர்ந்தது என்பதை இந்த நூல் விளக்குகிறது. அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த  தாமஸ் ஜெஃபர்சன், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லாஃபயேட்டா ஆகியோர் கொண்ட நட்பு, இருவரின் வாழ்க்கை இதன் பின்னணியில் வரலாறு என எழுதப்பட்ட நூல். படித்து இருவரின் நட்பை வியந்து போற்றும்படி எழுதியிருக்கிறார் ஆசிரியர். நகரில் நடைபெறும் குற்றங்களை ஒருவ

வில்லாதி வில்லன்கள் - உலகை அழித்த தலைவர்களின் கதை!

படம்
pixabay வில்லாதி வில்லன்கள் பாலா ஜெயராமன் கிழக்கு பதிப்பகம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்கவே கொள்கை என்று பேசி ஆட்சிக்கு வருபவர்கள் உருவாக்கும் சட்டங்கள், நாடுகளை எப்படி துண்டாடுகின்றன என்பதற்கு நிறைய வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. நடப்பில் பாஜக அரசு என்றால், தொன்மைக் காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள், போர்ச்சுக்கல், இங்கிலாந்து ஆகியவை இதே வேலையைச் செய்தன. வரலாற்றில், வடகொரியாவின் கிம் குடும்பம், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், சீனாவின் மாவோ, ரஷ்யாவின் ஸ்டாலின் வரை நாட்டை சீரழித்த ஆட்களைப் பற்றி கூறலாம். நூலில் உலக நாடுகளில் உள்ள மக்களை கொன்றழித்த, ஆட்சியாளர்களைப் பற்றி சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இதில் கொள்கை என்ற வகையில் கிம் குடும்பம் இன்றும் சில கொள்கைகளைப் பின்பற்றி வடகொரியாவை சர்வாதிகாரமாக ஆண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தில் எந்த முடிவும் எட்டப்படாது என்று நம்பிக்கை கொண்டவர்கள், கம்யூனிசத்தின் பக்கம் செல்வார்கள். அதுவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தானே? எந்தக் கொள்கைகளாக இருந்தாலும் காலத்திற்கேற்ப மாற வேண்டும். பிற நாடுகளுடன் இசைவாக இருந்து நாட்டை முன்னேற்ற வேண

பாசிசத்தை தூண்டும் ஃபேஸ்புக்- முகநூலின் மறுபக்கம்!

படம்
ரியல் ஃபேஸ் ஆஃப் ஃபேஸ்புக் இன் இந்தியா பரன்ஜோய் - சிரில் சாம் இந்தியாவில் 2004 ஆம் ஆண்டிலிருந்தே சமூக வலைத்தளத்தினால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அனைவரையும் இணைக்கிறோம் என்று ஃபேஸ்புக் சொன்னாலும், உண்மையில் மக்கள் இன்று தம்மைத் தவிர வேறு யாரையும் நம்புவதில்லை. அப்படியொரு பயத்தை ஃபேஸ்புக்கும் அதன் சகோதர நிறுவனமான வாட்ஸ் அப்பும் உருவாக்கியுள்ளன. இப்படி கூறிய சிரில் சாம், பரன்ஜோய் ஆகிய இருவரும் அதற்கான தகவல்களை அடுக்குகின்றனர். இவர்கள் கூறும் எதனையும் மறுக்க முடியவில்லை என்பது முக்கியமானது. எப்படி பாஜக, காசு கொடுத்து ஃபேஸ்புக் மூலம் திட்டமிட்ட பொய் செய்திகளை, போலி வீடியோக்களை உருவாக்கி மக்களின் மனதில் பயத்தை உருவாக்குகின்றன என்பதை விளக்கியுள்ளனர். இதில் பிரசாந்த் கிஷோர் என்ற டெக் நபரின் பங்கும் முக்கியமானது. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி நினைவிருக்கிறதா...... பிளான் பெத்த பிளான்தான். ஆனால் கொஞ்சமேனும் நம்பிக்கையை மக்களிடம் சம்பாதித்து வைப்பதில் அன்புமணி தடுமாறிவிட்டார். வீழ்ந்துவிட்டார். இதனால் முதல் கையெழுத்தை இன்னும் அவர் செக் புக்கில் மட்டும் போட்டுக்கொண்டிருக்கிற

மாலனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமா? - அந்திமழை வெளியீடு

படம்
எந்த இடத்தையும் அடைய அல்ல , சும்மா நடக்கவே விரும்புகிறேன் மாலன் அந்திமழை மூத்த பத்திரிகையாளரான மாலனை, அந்திமழை இளங்கோவன் அடையாளம் கண்டு  நேர்காணல் செய்துள்ளார். அவரின் முன்னாள், இந்நாள் எதிர்கால திட்டங்களை இந்த நூலில் நாம் நிதானமாக வாசித்து அறிய முடிகிறது. வங்கி அதிகாரியின் மகனாக பிறந்த மாலன், பின்னாளில் குங்குமம், தினமணி, இந்தியா டுடே, குமுதம், புதிய தலைமுறை, சன் டிவி என பல்வேறு ஊடகங்களில் சாதித்தவர். பல்வேறு புதிய முயற்சிகளை திறம்பட செய்தவர். இன்று மாலன் சமூக வலைத்தளங்களில் எழுதும் விஷயங்களின் சார்பு நிலை பற்றிய குறிப்பும் இந்த நூலில் ரசிக்கும்படி எழுதப்பட்டுள்ளது. அது சரியா, தவறா  என்பது வாசிப்பவர்கள் தீர்மானித்துக்கொள்ளலாம். மாலனின் பாரதி பாசம், தினமணியில் செய்த மாற்றங்கள். அதன் கேப்ஷனை வடிவமைத்தது என நுணுக்கமான தகவல்கள் இதில் நிறைந்துள்ளன. குங்குமத்தில் சாவியின் நட்பு, திசைகளின் தொடக்கம், அதில் செய்த புதுமைகள், சுஜாதாவுடனான நட்பு,  திசைகளின் அட்டைப்பட மாற்றங்கள் என பல்வேறு விஷயங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. இந்தியா டுடே பத்திரிகையில் செய்திகளோடு சிறுகதைகளும் கொண