இடுகைகள்

மார்க்சிய கொள்கை அடிப்படையில் சமூக குற்றங்களைக் காணலாம்!

படம்
  மார்க்சிய கொள்கை வழியில் கோணத்தில் குற்றத்தைப் பார்ப்பது பற்றி படித்தோம். அதிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. முதலாளித்துவ சமூகம் என்றால் குற்றம் செய்பவர்கள் அனைவருமே அந்த கருத்தில் உடன்பாடு கொண்டவர்களா, அனைத்து பிரிவினரும் குற்றம் செய்கிறார்களா என நிறைய கேள்விகளும் அதில் உண்டு. நடைமுறை யதார்த்தம் சார்ந்து கருத்துகளைப் புரிந்துகொள்வது, கருத்துகளின் அர்த்தம் அறிவது, அதிலிருந்து கற்றுக்கொள்வது, கற்றதும், பெற்றதுமான அனுபவங்களிலிருந்து ஆளுமையை உருவாக்கிக் கொள்வது ஆகியவை முக்கியமானவை. அதிகாரம், பணபலம் ஆகியவற்றைக் கொண்டுள்ளவர்கள்தான் சட்டங்களை உருவாக்குகிறார்கள். நேரடியாக உண்மையை எதிர்கொள்வது கடினம் என்பதால் நாம் அதை வேறுவேறு பெயர்கள் கொண்டு அழைக்கிறோம். உண்மையில் அதிகாரமும், பணபலமும் கொண்ட சிறுகுழுக்கள்தான் சமூகம் இயங்குவதற்கான விதிகளை வகுக்கிறார்கள். வெளியிடுவதும், நடைமுறைப்படுத்துவதும் வேறு வேறு அமைப்புகள், ஆட்கள். இப்படி அமைக்கும் சட்ட அமைப்பில் ஒருவரைக் கொல்வது என்பது சட்டப்படி ஏற்புடையதாகவும் உள்ளன. போதைப்பொருட்களை விற்பது, பெண்களை ஆபாச படம் எடுப்பது, வல்லுறவு செய்வது ஆகியவற்றில

தற்கொலை செய்யத் தூண்டும் பேயை எதிர்கொள்ளும் அம்மாவும் மகனும் - பூதாக்காலம் - ராகுல் சதாசிவன்

படம்
  பூதாக்காலம் மலையாளம்  பூதாக்காலம் ஷான் நிகாம்,ரேவதி பூதாக்காலம் ஷான் நிகாம், ரேவதி பூதாக்காலம் ஷான் நிகாம், ரேவதி   பேய்ப்படம். ஆனால் அதை முடிந்தவரை எளிமையாக எடுத்து நம் முன் காட்டியிருக்கிறார்கள். வினு, அப்பா இல்லாத பையன். பி ஃபார்ம் படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கிறார். அவரது அம்மா ஆஷா, குழந்தைகளுக்கான ஆசிரியையாக இருக்கிறார். வீட்டிற்கான வருமானம், அம்மாவின் ஆசிரியர் பணி மூலமே கிடைக்கிறது. வீட்டில் ரேவதியின் அம்மா, சக்கர நாற்காலியில் முடமாகி வாழ்ந்து வருகிறார். இவர்கள் உள்ள வீடு சற்று அசாதாரணமான தன்மையில் இருக்கிறது. வினு, மருத்துவம் சார்ந்து படித்தாலும் நினைத்த வேலை கிடைக்கமாட்டேன்கிறது. அவரது நண்பர்கள் கிடைத்த வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு முதலில் அப்படி செல்வது விருப்பமில்லை. ஆனால் பொருளாதார நெருக்கடி அவனை அந்த வேலைக்கும் கூட செல்ல நிர்பந்திக்கிறது.  இந்த நேரத்தில் அவனுக்கு உள்ள பெண் தோழியுடனும் எதிர்பார்த்தது போல உறவு செல்லவில்லை. புகைப்பிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் அதிகமாகிறது. இந்த நேரத்தில் ஆஷாவுக்கு மகன் தனது கணவர் போலவே மதுவால் அடிமையாக

பழிக்குப்பழி குணம் கொண்ட கான்ஸ்டபிளுக்கு சவால் விடும் தொடர் கொலைகாரர்! கூமன் - மலையாளம்

படம்
  கூமன் மலையாளம் இயக்கம் ஜீத்து ஜோசப் நடிப்பு – ஆசிஃப் அலி, ரமேஷ் திலக் தன்னை அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டரை பழிவாங்க நினைக்கும் கான்ஸ்டபிள் ஒருவரின் கதை. காவல்துறையில் இயங்கும் பலரும் உடலில் ஒரு வித திமிருடன் திரிவார்கள். அனைத்து விவகாரங்களிலும் தங்களின் கருத்து முடிவாக இருக்கும் என நினைப்பவர்கள். இந்த நிலையில் இப்படி இருக்கும் நாயகனை (கிரி சங்கர்) சிலர். தேவையில்லாமல் பகைத்துக்கொண்டு சில வார்த்தைகளை சொல்லிவிடுகிறார்கள். அதனால் அவன் அவர்களை தனது அதிகாரத்தை வைத்துக்கொண்டு பழிவாங்குகிறான். சாதாரண மனிதர்களுக்கு இப்படியென்றால்,  புதிதாக அலுவலகத்திற்கு வரும் இன்ஸ்பெக்டர் ஹரிலால் (பாபுராஜ்) அவனை உதாசீனப்படுத்துகிறார். ஒருமுறை ஊரில் நடக்கும் கபாடி போட்டியில், அரசியல்வாதி ஒருவனை பழைய பகையில் பழிவாங்க நாயகன் நினைத்து அடிக்கிறான்.அ ப்போது இன்ஸ்பெக்டர் அவனைப் பிரித்துவிட நினைத்து தள்ளிவிட சேற்றில் விழுந்துவிடுகிறான் நாயகன். அதை ஊரே பார்த்து சிரிக்கிறது. வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புகிறது. இதனால் இன்ஸ்பெக்டரின் மீது இருக்கும் கோபம், வன்மமாக மாறுகிறது. இன்ஸ்பெக்டரை பழிவாங்குவதற்கு நாயகன்

உதயமாகும் பேரரசன் - ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  ஆனந்த் மகிந்திரா வாகனத்துறையில் வேகமாக முன்னேறி வரும் தொழிலதிபர். தொடக்கத்தில் இரும்பு உற்பத்தி ஆலையாக தொடங்கப்பட்ட மகிந்திரா இன்று 20க்கும் மேற்பட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. உள்நாடு, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் வருமானத்தை பெருக்கும் பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு பின்னால் உள்ளவர்தான், ஆனந்த் மகிந்திரா. ட்விட்டரில் தொடர்ச்சியாக மக்களிடம் உரையாடி அவர்களின் எண்ணங்களை தெரிந்துகொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். அவரின் சிந்தனைகள் எப்படியானவை, நோக்கம் என்ன, வெற்றி சூத்திரங்கள் என்ன என்பதை அறிய நீங்கள் இந்த நூலை வாசித்தே ஆகவேண்டும்.. அமேசான் வலைத்தளம் https://www.amazon.in/dp/B0BSLYLGBB

குற்றத்தைக் கண்டுபிடிக்க உதவும் உளவியல்!

படம்
  கொலை நடந்துவிட்டது என்றால் அதைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் அரும்பாடு படுவார்கள். பல்வேறு துறைகளிலுள்ள திறன்களையும் அவர்கள் கொண்டிருந்தால் அல்லது நிபுணர்களின் துணை இருந்தால்தான் அவர்களால் உண்மையை அறிய முடியும். மானுடவியல், பொருளாதாரம், மருத்துவம், தத்துவம், உளவியல், சமூகவியல் என பல்வேறு துறைகளிலும் துப்பறிவாளர்கள் திறமை பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் வழக்கிலுள்ள இயல்புகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போகவும் அதிக வாய்ப்புள்ளது. குற்றங்களை ஆராய்ந்து அதனை துப்பு துலக்குவதில் முக்கியமான துறை, குற்றவியலாகும். இதிலும் கொலை, அதன் காரணம், ஆகியவற்றை கோட்பாடாக உருவாக்கி பிறகுதான் அதன் பின்னாலுள்ள உண்மையை அறிய முடியும். இதில் சில மாற்றுக்கருத்துகளும் உள்ளன. அதாவது, குற்றவியல் துறை அதன் சிறப்புத்தன்மைகளுக்காக சமூகவியலைச் சார்ந்துதான் இருக்கிறது என கூறி வந்தனர். ஆய்வாளர்கள் வோல்ஃப் கேங், ஃபெராகுடி ஆகியோர்,   1967ஆம் ஆண்டு, குற்றவியல் துறை அதன் கோட்பாடுகள், நுட்பங்களால் பிற துறைகளிலிருந்து வேறுபட்டு இயங்கும் தன்மையுடையது என கூறினர். குற்றங்களை முழுக்கவே உளவியல் சார்ந்து விளக்கிவிட முடிய

க்ரீசிலுள்ள ஆன்மிகத் தலங்கள்

படம்
  மன வலிமையை சோதித்துப் பார்க்கும் ஆன்மிகத் தலங்கள் – க்ரீஸ்   ஆசிய அளவிலும் கூட கோவில்களை எளிதாக சமதளத்தில் கட்ட மாட்டார்கள். சாதாரணமாகிவிடுகிறதே… அதனால் அதை மலைப்பாங்கான சற்று தொலைவு பயணித்துச் சென்று களைப்போடு அண்ணாந்து பார்த்தால் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும் தெய்வீக அனுபவத்தோடு இணைத்து இருப்பார்கள். க்ரீசும் இதேபோல கோக்குமாக்காக யோசிக்கும் ஆட்களின் கைகளில் இருந்திருக்கிறது. எனவே, அங்கு மெட்டோரா எனும் நகரில் ஏராளமான ஆன்மிக புனித தலங்கள் உண்டு. அங்கு செல்வதே உடலுக்கும் மனதுக்குமான சிறந்த சோதனைதான். தொலைதூர நிலங்களில்தான் முதலில் ஆன்மிகத் தலங்கள் இருந்தன. ஆனால் கிறிஸ்துவ மத வெறியர்களின் போர்களால் ஆன்மிகத் தலங்கள் அழிந்தன. பிறகு ஆன்மிகத் தலங்களை எளிதில் அணுக முடியாத மலைப்பாங்கான இடத்தில் அமைத்தனர். இந்த வகையில் மெட்டோராவில் 24 ஆன்மிகத் தலங்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் இப்போது செயல்பாட்டில் உள்ளவை ஆறு மட்டுமே. தலா மூன்று யூரோக்களை செலவிட்டால் இங்கு சென்று ஆன்மிக அனுபவத்தை, துறவிகளின் வாழ்க்கை எப்படி இருந்தது என அறியலாம். ஆண்கள், பெண்கள் தங்கள் உடல் பாகங்களை முகம், கை, கால்களை தவ

டிவி நிருபர் காதலைச் சேர்த்து வைக்க ஆடும் ருத்ர தாண்டவம் - பங்காரம்- தரணி

படம்
  பங்காரம் இயக்கம் தரணி இசை வித்யாசாகர் ஒளிப்பதிவு கோபிநாத் டிவி சேனலில் வேலை பார்க்கும் நிருபர், தீவிரவாதி ஒருவரை பேட்டி எடுக்கச் செல்கிறார். ஆனால் அந்த வேலையை டிவி உரிமையாளர் நினைத்தபடி செய்யாததால் வேலை இழக்கிறார். கூடவே வேறு வேலைக்கும் போகமுடியாதபடி சூழல் மாறுகிறது. இதை சரி செய்ய டிவிக்கு நிதி அளிக்கும் பெத்த ரெட்டி என்பவரை சந்திக்கச் செல்கிறார். அதுதான் படத்தின் முக்கியமான திருப்பு முனை. இதுவரையில்தான் படம் சற்று படமாக தெரிகிறது. அதற்குப் பிறகு, போட், ஜேபிஎல் என எந்த ஸ்பீக்கரை காதில் வைத்திருந்தாலும் நுவ்வு செப்பக்கூடாதுடா ரே, சம்பெய்ண்டா வாடே, நறுக்குத்தானு, ஏய்..என வில்லன் குழுக்கள்   எழுப்பும் கூச்சல்களால் உடலே அடிக்கடி அதிர்ச்சியில் தூக்கிப் போடுகிறது.   படத்தில் மீரா சோப்ரா இருக்கிறார். ஆனால் அவருக்கும் பங்காரத்திற்கும் காதல் போல பாடல்களை வைப்பார்கள். ஆனால் காதல் கிடையாது என்பதுதான் ட்விஸ்ட். ஆனால் படத்தில் இருக்கும் ஒரே அம்சம். சண்டைதான். கோடரியால் வெட்டுவது, கழுத்தை அறுப்பது, நெருப்பால் சுடுவது, மூங்கில் குச்சியால் நாயகின் வயிற்றில் குத்துவது என படம் நெடுக ரத்த க