இடுகைகள்

பொதுவாக்கெடுப்பில் இயற்கையை காக்க முயன்ற மக்கள்! - ஈகுவடார் எண்ணெய்க்கிணறு வாக்கெடுப்பு

படம்
    யாசுனி தேசியப்பூங்கா எண்ணெய் கிணறு ஈகுவடார் நாட்டில் தேசியப்பூங்காவில் பெட்ரோலிய கிணறு தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியை இயற்கை செயல்பாட்டாளர்கள் தீவிரமாக எதிர்த்து வந்தனர். எனவே, அரசு வேறுவழியின்றி இதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தியது. அதில், மக்கள் பெட்ரோலியத் திட்டத்தை கைவிடவே அதிகளவு வாக்களித்தனர். இதனால், அரசு அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது. உண்மையில் இதை பெருநிறுவனங்கள் விரும்பவில்லை. ஆனால், மக்கள் முழு முயற்சியாக நின்று இந்த சாதனையை செய்திருக்கிறார்கள். அரசு நிறுவனம் 12 இடங்களில் துளையிட்டு எண்ணெய்யை உறிஞ்சி எடுத்து வந்தது. மொத்தம் 225 கிணறுகள். ஒரு நாளுக்கு 57 ஆயிரம் பேரல்களை நிரப்பி வணிகம் செய்து வந்தனர். இந்த திட்டத்திற்கு இஷ்பிங்கோ – தம்போகோச்சா என்று பெயர். அமேசான் காட்டுப்பகுதியில் நடைபெற்ற இத்திட்டத்திற்காக இரண்டு பழங்குடியினங்களை அப்புறப்படுத்தியிருந்தனர். தொடக்கத்தில் இருந்தே எண்ணெய் கிணறு தோண்டுவதற்கு எதிர்ப்பாக வந்த எதையும் அரசு பரிசீலிக்கவே இல்லை. எண்ணெய் கிணறு தோண்டி அதை வணிகம் செய்வதிலேயே குறியாக இருந்தது. இதனால்தான், திட்டத்திற்கு எதிர்ப்பாக அதை ந

சைக்கிளில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கடத்தப்பட்டு கொல்லப்பட்ட மர்மம்! ஆம்பர் ஹாகர்மன்

படம்
  சிறுமி ஆம்பர் ஹாகர்மன் டெக்ஸாஸின் ஆர்லிங்க்டன் பகுதியில் இருந்த தாத்தாவின் வீட்டில் ஆம்பர் ஹாகர்மன் வாழ்ந்து வந்தார். வீட்டுக்கு அருகில், ஒன்பது வயது சிறுமியான ஆம்பர், தனது ஐந்து வயது சகோதரன் ரிக்கியுடன் சைக்கிளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். 1996ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று, கைவிடப்பட்ட வின் டிக்ஸி என்ற காய்கறிக்கடையின் பார்க்கிங் பகுதியில்தான் ஆம்பர் காணாமல் போனார். எப்போதும் போல அங்கு தனது சகோதரனுடன் சைக்கிளில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் அடையாளம் தெரியாத மனிதர் மூலம் கடத்தப்பட்டார். அப்படித்தான் அங்குள்ளவர்கள் காவல்துறையில் தகவல் சொன்னார்கள். கருப்பு நிற பிக் அப் காரில் வந்த மனிதர் ஆம்பரை சைக்கிளில் இருந்து கடத்திச்சென்றார் என வயதான தம்பதியினர் 911 என்ற எண்ணுக்கு டயல் செய்து தகவல் சொன்னார்கள். காவல்துறை அதிகாரிகள் வரும்போது, அங்கு ஆம்பரின் அடையாளம் ஏதுமில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு ஆம்பரின் இறந்துபோன உடல் கண்டெடுக்கப்பட்டது. நாயுடன் வாக்கிங் சென்றவர், கடத்தப்பட்ட இடத்திலிருந்து நான்கு கி.மீ. தொலைவில் இருந்த இடத்தில் ஆம்பரின் உடல் கிடப்பதை காவல்துறைக்கு தகவல்

அமெரிக்கர்களின் தூக்கத்தைக் கெடுத்து பீதிக்குள்ளாக்கிய ஸோடியாக் கொலைகாரன்!

படம்
  ஸோடியாக் கில்லர் இந்த பெயரை ஊடகங்களும், காவல்துறையினரும் மறக்கவே முடியாது. அந்தளவு அத்தனை பேரையும் பீதிக்குள்ளாக்கிய சீரியல் கொலைகாரர். அமெரிக்காவில் வடக்கு கலிஃபோர்னியாவில் 60, 70 களில் ஏராளமான கொலைகளை செய்தார். பெரும்பாலும் ஜோடிகளாக உள்ளவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு செல்வது ஸோடியாக் கொலைகாரரின் பாணி. பிறகு தனது கொலை பற்றி குறியீடாக கடிதம் எழுதி நகரின் முக்கிய பத்திரிகைகளுக்கு, காவல்நிலையத்திற்கு அனுப்பி வைப்பார். கணினியில் என்கிரிப்ஷன் டீகிரிப்ஷன் என்று கூறுவார்கள். குறியீடுகளை என்ன தகவல் என்று அறிந்துகொள்ள ஒருவர் அதை டீகிரிப்ஷன் செய்யவேண்டும். அதன்படி ஸோடியாக் கொலைகாரரின் செய்திகளை காவல்துறையினர், மக்களில் சில தன்னார்வலர்கள் டீ கிரிப்ஷன் செய்து குற்றங்களை புரிந்துகொள்ள முயன்றனர். 37 கொலைகளை செய்தாலும் 5 கொலைகளை மட்டுமே அவர் செய்தார் என காவல்துறையால் நிரூபிக்க முடிந்தது. ஸோடியாக் கொலைகாரரைப் பற்றி ஏராளமான திரைப்படங்கள், நூல்கள் வெளியாகியுள்ளன.’’ எனது இறப்பிற்கு பிறகு அடிமையாக இருக்க மனிதர்கள் தேவை, சிறுமிகளை கொல்வது எளிதானது, மக்களைக் கொல்வது பிடித்திருக்கிறது. அ

சட்டவிரோத சூதாட்ட வலைதளத்தை தடுக்க முயலும் ஹேக்கரும், சீனியர் இன்ஸ்பெக்டரும்!

படம்
  போலீஸ் யுனிவர்சிட்டி - கே டிராமா போலீஸ் யுனிவர்சிட்டி கே டிராமா ராக்குட்டன் விக்கி ஹேக்கராக இருந்து சூதாட்ட வலைத்தளத்தில் பணத்தை திருடியவர், கொரிய காவல்துறை பல்கலைக்கழகத்தில் மாணவராகிறார். அவர் ஹேக்கர் என்று அங்கு பாடம் நடத்தும் முன்னாள் விசாரணை நடத்தும் அதிகாரி ஒருவருக்குத் தெரியும். அந்த மாணவரை தனது சூதாட்ட வலைத்தள விசாரணைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். அவரைத் தடுக்க ஏராளமான முயற்சிகள் நடைபெறுகின்றன. மாணவரை குற்றவாளியாக்கவும் முயல்கிறார்கள். தடைகளை தகர்த்து ஹேக்கர் மாணவர் காவல்துறை அதிகாரி ஆனாரா என்பதே கதை. தொடரின் நாயகன் யூ டாங்க் மன் என்ற சீனியர் இன்ஸ்பெக்டர்தான். இவர், சூதாட்ட வலைத்தளத்தை பிடிக்க பிளாக்நெட்டில் ஹேக்கர் ஒருவருடன் நட்பு வளர்க்கிறார். பேர்ட் என்ற பெயரில் பள்ளி மாணவராக உரையாடுகிறார். எதிர்முனையில் உள்ளவர் ஹேக்கர் யூன் என்ற கங்க் சியோன் ஹோ பள்ளி மாணவர். இவர் ஆதரவில்லாதவர். பெற்றோர் விபத்தில் இறந்துவிட, அவர்களின் நண்பர் எடுத்து வளர்க்கிறார். இவரது அண்ணன், இவரை தம்பியாக நினைப்பதில்லை. இதனால் கணினியே கதி என கிடந்து அதில் நிபுணத்துவம் பெறுகிறார். ஒருமுறை அப்பாவ

சோசலிசத்திலிருந்து பாசிசம் பிறக்கிறதா? - விளக்குகிறார் எஃப்ஏ ஹயேக்

படம்
  ரோட் டு செஃர்ப்டம் நூல் அட்டை ரோட் டு செஃர்ப்டம் எஃப்ஏ ஹயேக்   இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல் தத்துவவியலாளர், ஹயேக். இவர் நூலில்   அரசியல்   தத்துவங்களை விரிவாக விளக்கி எழுதியுள்ளார். இந்த நூலை இடதுசாரி ஆதரவாளர்கள் படிக்கும்போது நிச்சயம் நெஞ்சுவலி வரும். அந்தளவு கம்யூனிசத்தை, இடதுகளுக்கான கருத்தை தாக்கியுள்ளார். நாம் கவனிக்க வேண்டியது வரலாற்று ஆதாரங்கள் மூலம் தனது கருத்தை எப்படி படிப்பவர்களிடம் கொண்டு செல்கிறார், ஏற்க வைக்கிறார் என்பதை மட்டுமே. 1941ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நூலில் ஆசிரியர். சோசலிசம் வழியாக பாசிசம், நாஜியிசம் உருவாகிறது என்பதை விளக்கி கூறுகிறார். இங்கிலாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளே பெரும்பாலான கருத்துகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் எப்படி சட்டப்பூர்வமாக உருவாகிறது, மக்களை அதற்கு தயார்படுத்துகிறது, ஊடகங்களை அதற்கேற்ப வலதுசாரி அரசியல்வாதிகள் எப்படி வளைக்கிறார்கள் என்பதை நூலாசிரியர் நன்றாக விளக்கியுள்ளார். நூலை படிக்கும்போது ஜெர்மனியில் நடைபெற்ற ஹிட்லர் ஆட்சி, ரஷ்யாவில் நடைபெற்ற லெனின், ஸ்டாலின் ஆட்சி ஆகியவை நினைவில் வந்த

ஜோம்பிகளுக்குத் தப்பி மாலில் வாழும் ஆறு மனிதர்கள்!

படம்
  வாட் சிக்ஸ் சர்வைவர்ஸ் டோல்ட் - ஜே டிராமா வாட் சிக்ஸ் சர்வைவர்ஸ் டோல்ட்   ஜே டிராமா   ஜோம்பிக்களின் கதை. ஜப்பானில் நாடே ஜோம்பி வைரஸ் பரவி பிரச்னையாக உள்ளது. எம் மால் என்ற கட்டிடத்தில் எட்டு பேர் இருக்கிறார்கள். அவர்களின் கட்டிடத்திற்கு அருகில் ரிரிசான் என்ற இளம் மாணவி மயக்கமடைந்து விழுகிறாள். அதைப் பார்க்கும் ஒருவர், மொட்டை மாடியில் இருந்து அந்த மாணவியை மீட்கிறார். மாணவி ரிரிசான் கண் விழிக்கும்போது குழு தலைவர், சமையல் பெண்மணி, யூட்யூப் வீடியோ எடுக்கும் இளம்பெண், தரையை துடைக்கும் வேலையை செய்பவர், உடற்பயிற்சி செய்யும் இளைஞர், மாடல் பெண்மணி   என பலரையும் பார்க்கிறாள். இவர்கள் ஷாப்பிங் மாலுக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள்.   அங்குள்ள உடை, எலக்ட்ரானிக்ஸ், உணவு, மளிகைப்பொருட்கள் , அழகு சாதனம் என அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். உதவி வேண்டி மொட்டை மாடியில் சில ஏற்பாடுகளை செய்கிறார்கள். ஆனாலும் கூட அது பயனளிக்கவில்லை. இதற்கு இடையில் மனிதர்களுக்கு   அன்பு, காதல், நட்பு உருவாகிறது. அதுவே சண்டை, பழிக்குப்பழி என பலதையும் ஏற்படுத்துகிறது. தொடரை சற்று காமெடியாக எடுக்க முனைந்திர

வெறுப்பேற்றினால் கொலை செய்ய ரெடியாகும் நாயகி! ஜோல்ட் - கேட் பெகின்சோல்

படம்
  ஜோல்ட் 2021 - கேட் பெகின்சோல்  ஜோல்ட் ஆங்கிலம் யூட்யூப் விஆர் ஃபிலிம்ஸ் ஒரு குழந்தைக்கு இயல்பாகவே மூளையில் கார்டிசோல் என்ற வேதிப்பொருள் அதிகம் சுரக்கிறது. இதனால், அவளுக்கு யாராவது வெறுப்பேற்றுவது போல தோன்றினால், சீண்டினால் அவர்களை அடித்து உதைக்க தொடங்குகிறாள். சமூகமே ஏராளமான முட்டாள்களை கொண்டதுதான் என்பதால், அவளை வார்த்தையால், உடலால் சீண்டுபவர்களை விட்டுவைப்பதில்லை. அடித்து கை கால்களை முறிக்கிறாள். இதனால் அவளை மருத்துவர்கள் சோதித்து ஆய்வக எலி போல பாதுகாக்கிறார்கள். மனிதர்கள் இப்படியான வன்முறை எண்ணம் கொண்டிருந்தால், யார் வருகிறார்களோ இல்லையோ   சிஐஏ வந்துவிடும். அவர்கள்தான் நாயகி கேட் பெகின்சோலுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பணத்தை கொடுத்து வருகிறார்கள். கண்காணிக்கிறார்கள். அவளை தங்களது திட்டத்திற்கு பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள். இந்த நேரத்தில் நாயகி, அவர்களிடமிருந்து விலகிப் போகிறாள். தனக்கான வாழ்க்கையை தானே தேடுகிறாள். அந்த முயற்சியில் ஜஸ்டின் என்பவன் டேட்டிங் காதலனாக கிடைக்கிறான். அவனுடன் அவளுக்கு சிக்கல் ஏற்படாததால் உடலுறவு கொள்கிறார்கள். ஆனால் அடுத்த நாள் பார்த்தா