பயத்தை கடப்பது எப்படி?
பயத்தை எப்படிக் கடப்பது?
தொகுப்பு: லோக்கல் ப்ரூஸ்லீ
புரிந்துகொள்ளுங்கள்
முதலில் பயம் என்பதை எதுகுறித்து என தெளிவுக்கு வருவது அவசியம். அவசரப்படாதீர்கள். இதனை உளவியல் மருத்துவர் சோதனைகள் மூலம் உறுதி செய்து பீஸ் வாங்குவார். அவர் வேலையை நாம் கெடுக்க முடியாது. Cognitive Behavioural Therapy (CBT) என்பதுதான் அவர் உங்களுக்கு அளிக்கும் சிகிச்சை.
பயம், உங்களது கருத்து, ஆளுமை பயம் தொடர்பாக ஏற்படும் உடல் மொழி, அசைவுகள் ஆகியவற்றை மருத்துவர்கள் நோட்பேடில் குறித்து வைத்து அதற்கேற்ப சிகிச்சை வழங்குவார்கள்.
நீங்களே உங்களது பயம் குறித்து உங்களுடன் உரையாடலாம். அல்லது அது குறித்து நண்பர்களிடம் பகிரலாம். இதன் மூலம் பயம் குறித்த பாதிப்பிலிருந்து வெளியே கொண்டு வர உங்களது ஆத்ம நண்பர்களே உதவுவார்கள். நச்சு தாங்க முடியல என்றுதான்.
மீள்வதற்கான பயிற்சி
சிலந்தி அல்லது கூட்டமாக உள்ள இடம் உங்களுக்கு பிரச்னை என்றால் சிலந்தியை கையில் ஓடவிட்டு ரசிக்கும் உத்தம வில்லன்கள் உங்கள் செட்டிலேயே இருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து அதனைப் பார்த்து பயத்திலிருந்து வெளியே வாருங்கள். கூட்டம் பயமென்றால் சரவணா ஸ்டோர்ஸின் லிப்டில் பயணித்து பர்ச்சேஸ் செய்யும் பாவனையுடன் மேலேயும் கீழேயும் போய் வாருங்கள் பொழுது போவது கூடவே உங்கள் பயமும் போய்விடுவது நிச்சயம்.
நன்றி: பிபிசி
ImageL Pinterest