குரலும் தகவல் தொடர்பும்!
குரலின் எதிர்காலம்!
“பிறரிடம் பேசுவதை நாம் சாதாரணமாக
நினைக்கிறோம். நம் வாழ்வை திறம்பட நடத்து உதவுகிற, மிக சிக்கலான முறை” என்கிறார் சால்ஃபோர்டு
பேராசிரியரான ட்ராவெர் காக்ஸ்.
ஹோமோசெபியன் அல்லது நியாண்டர்தால்
காலத்தில் மொழிகளை மனிதர்கள் பேசத்தொடங்கியிருக்கலாம். மொழியின் மேம்பாடு பற்றிய தகவல்களை
இன்னும் ஆராய்ச்சியாளர்களால் அறிய முடியவில்லை. பேசுவதை விடுங்கள். மனிதர்களின் பெரியமூளையின்
அளவு வேறு எந்த பாலூட்டிகளுக்கும் கிடையாது. “உடலின் பாகங்களை கட்டுப்படுத்துவதற்கான
கட்டளைகளை பிறப்பிக்கும் மூளையின் பணியால் அது வளர்ச்சி பெற்றிருக்கலாம். ஆனால் இங்கும்
பேச்சு முக்கியமாகவில்லை” என்கிறார் ட்ராவெர்.
“உடலுக்கு உடற்பயிற்சிபோல, குரல்நாண்களுக்கு
நண்பர்களுடன் நிறைய பேசுவதே சிறந்த பயிற்சி. பருவத்தில் உடையும் குரல் மாறுபாடின்றி
இறுதிவரை அப்படியே இருக்கிறது. வயதுக்கான தளர்ச்சிகளை கடந்து குரலில் பெரிய மாறுதல்கள்
ஏற்படுவதில்லை. எழுத்தாளர்கள் தமது கதாபாத்திரங்களின் குரல்களை எழுத்தாக மாற்றும் வித்தை
குறித்தும் நாங்கள் ஆராய்ந்துள்ளோம்” என்கிறார் பேராசிரியரும், Now You’re Talking: Human Conversational from
Neanderthals to Artificial Intelligence நூலை
எழுதி வெளியிட்டவருமான ட்ராவெர் காக்ஸ்.