காந்த தன்மை எப்படி உருவாகிறது?
ஏன்?எதற்கு?எப்படி? –Mr.ரோனி
சில பொருட்களுக்கு மட்டும் எப்படி காந்த தன்மை உருவாகிறது?
பொருட்களின் அடிப்படையான அணுக்களிலுள்ள
எலக்ட்ரான்களின் இயக்கத்தினால் காந்த தன்மை உருவாகிறது. மையக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள்
சுற்றிவரும் இயல்புடையன. எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட வயர் வழியே செல்லும்போது, அங்கு
காந்த தன்மை உருவாகும். ஆனால் பெரும்பாலும் இவை வலுவான காந்தப்புலத்தை உருவாக்குவதில்லை.
வலுவான எலக்ட்ரான்களின் கட்டுமானம் கொண்ட இரும்பு போன்ற பொருட்களில் காந்த தன்மை வலுவாக
இருக்கும்.