தீம்பார்க்கில் சம்பளம் பெறும் சிறுவர்கள்!
பிட்ஸ்!
மெக்சிகோவைச் சேர்ந்த கிட்ஸானியா தீம் பார்க்கில், சிறுவர்கள் ஜாலி ரைடு விளையாட்டுகளுக்கு பதில் பைலட், தீயணைப்புத்துறை உள்ளிட்ட ஏதேனும் வேலைகளை தேர்வு செய்து கிடைக்கும் சம்பளத்தில்
ஏதேனும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
1975 ஆம் ஆண்டு அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில்
செயல்பட்ட மதுபானத் தொழிற்சாலையில் தீப்பிடித்து தொழிலாளர்கள் 13 பேர் இறந்தனர். விபத்தில் கொட்டிய விஸ்கியை குடித்த மக்களும்
அதன் விஷத்தன்மையால் இறந்துபோனதால் கிரேட் விஸ்கி ஃபையர் எனும் இவ்விபத்தின் காரணமே
தெரியாமல் போனது.
ஃபின்லாந்தில் பிஹெச்டி பட்டம் வென்றவர்களுக்கு
டாப் ஹேட் தொப்பியை அணிவித்து கௌரவிக்கிறார்கள்.
நாய் அல்லது பூனை தன் கால்களை பரப்பு குப்புற படுத்து
உறங்கினால் அதற்கு Sploot என்று பெயர்.
2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்
Mate என்ற சொல்லை 24 மணிநேரம் பயன்படுத்த தடைவிதித்திருந்தது.
ஸ்பைசி காரசார உணவுகளை சாப்பிட நம்மைத்தூண்டும்
ஹார்மோன்களின் பெயர் டோபமைன், எண்டோர்பின்.