கல்யாணத்துக்கு கிஃப்டாக ரத்தம் போதும்!
கல்யாணப்பரிசாக
ரத்தம் தேவை!
கல்யாணப்பரிசாக
வாட்ச், குத்துவிளக்கு, பாத்திரங்கள் என கொடுப்பார்கள்.
ஆனால் கல்யாண வீட்டினர் ரத்தம் கேட்டால் சொந்தங்களுக்கு எப்படியிருக்கும்?
மேற்குவங்காளத்தின்
நாடியா மாவட்டத்திலுள்ள தெஹட்டா நகரில்தான் இந்த ரத்ததான களேபரம். சுபினய்
மோண்டல் தன் மகள் சௌமிதாவுக்கு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தார். அப்போது மகள் சௌமிதாவின் கண்டிஷன், "எனக்கு நகை
கூட நீங்கள் தரவேண்டாம். ஆனால் கல்யாண நாளில் ரத்த தான முகாம்
நடத்தினால் போதும்." என்று உறுதியாக கூற இருதரப்பினரும்
சம்மதித்தனர்.
கல்யாணம் நடைபெறும்
இடத்திலேயே மருத்துவர்கள் வந்தவுடன் பரிசளிக்க வந்த விருந்தினர்களின் கையில் ஊசி குத்தி
ரத்தத்தை சேகரித்து அசத்தினர். முதல் ஆளாக ரத்தம் தந்தவர் மணமகளின் தாயாரான
தாலியா. விழாவில் முப்பதிற்கும்
மேற்பட்டோர் ரத்த தானம் செய்து அசத்தியது அப்பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது.