போதை மீட்பு புனிதர்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா பிசாவு, உலகளவில் போதைப்பொருட்களை ஐரோப்பாவுக்கு கொண்டுசெல்லும் ஜங்ஷன் பாய்ண்ட். தோராயமாக 27 சதவிகித போதைப்பொருட்கள் இவ்வழியாக ஐரோப்பாவுக்கு செல்கின்றன.

கினியா பிசாவு நாட்டைச் சேர்ந்தவர்களும் போதைப்பொருட்களைப் பயன்படுத்த தொடங்க அரசும் கட்டுப்படுத்தமுடியாமல் திணறியது. கத்தோலிக்க பாதிரி டோமிங்கோஸ் டே அமைத்துள்ள டெசாவியோ ஜோவெம் என்ற ஒரே மறுவாழ்வு மையம் மட்டுமே 1.8 மில்லியன் மக்கள் கொண்ட இந்நாட்டில் போதை அடிமைகளை மீட்க உதவுகிறது. கடந்த 15 ஆண்டுகளில் போதைப்பொருட்களால் 3,800 பேர் இறந்துள்ளனர். மூன்றில் இருபங்கு மக்கள் வறுமையால் வாடும் நாடு இது.

மறுவாழ்வு மையத்தில் மருத்துவர்கள், மருந்துகள் பெரியளவு கிடையாது. ஒரு நோயாளிக்கு 2.50 டாலர் செலவு செயது உணவு, மருந்து,தங்கும் வசதிகளை செய்துதருகின்றனர். பத்தாண்டுகளுக்கு முன்று அரசியல் சமச்சீரின்மையால் ஐ.நா அமைப்பு இந்நாட்டை போதைதேசமாக அடையாளப்படுத்திய அவலமும் நிகழ்ந்தது. ஆனால் இன்று போதைப்பொருள் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அரசின் ஆதரவில்லாத சூழலில் நாட்டின் ஒரே உளவியல் மையத்திலும் மூன்றுநாட்களுக்கு மேல் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய வசதி கிடையாது.
>.





பிரபலமான இடுகைகள்