நைஜீரியாவை அறிய வாசிக்க வேண்டிய நூல்கள்!
நைஜீரியாவை வாசிப்போம்!
EASY MOTION TOURIST
BY LEYE ADENLE
அமரர் இசைக்கலைஞர்
ஃபடாய் ரோலிங் டாலர் என்பவரின் வரிதான் நூலின் தலைப்பு. லகோஸ்
நகரில் இறந்த விலைமாதுக்களின் கொலையை கய் கோலின்ஸ் என்பவர் எப்படி கண்டுபிடிக்கிறார்
என்பதே கதை. அதிகாரவெறி கொண்ட அரசியல்வாதிகள், லஞ்சத்தில் மூழ்கிய போலீஸ்துறை ஏற்படுத்தும் ட்விஸ்டுகள் நூலை சுவாரசியமாக்குகின்றன.
CARNIVOROUS CITY BY
TONI KAN
ஆபல் டைக் என்ற
சிறுநகரத்தில் பணியாற்றும் ஆசிரியருக்கு அவரின் தொலைந்து போன சகோதரர் குறித்த தகவல்
வருகிறது.
கூடவே சோனி என்ற குற்றவாளியின் கதையும் தொடர க்ளைமேக்ஸை நோக்கிய ரோலர்கோஸ்டர்
பயணத்தை தரும் நாவலை எளிமையாக வாசிக்கலாம்.
SATANS AND SHAITANS
BY OBINNA UDENWE
கடவுள் இறந்துவிட்ட
உலகில் என்ன நடக்கும்?
குற்றங்களும் அநீதிகளும்தானே! இல்லுமினாடிகளின்
உலகை அம்பலப்படுத்த முயலும் டொனால்டு அமெச்சி, சுவிஷேச பிரசாரகர்
கிரிஸ் சுபாவுக்கு நிகழும் சம்பவங்கள்தான் கதை. தற்கொலைப்படை
தாக்குதல், கொலைமுயற்சி, அரசியல் சதிகள்
ஆகியவற்றை பேசுகிற நூல் இது.