சுவாரசிய பிட்ஸ்!







பிட்ஸ்!

எழுத்தாளர் ரூடியார்டு கிப்ளிங் எழுதும் ஒரு வார்த்தைக்கு 10 ஷில்லிங் பெற்றார். இரண்டு ஆக்ஸ்ஃபோர்டு மாணவர்கள் அவருக்கு பத்து ஷில்லிங்குகளை அனுப்பி வைத்து அவரின் சிறந்த வார்த்தை எது என கேட்க, கிப்ளிங்கின் பதில் Thanks என்று வந்தது.

பறவைகளின் கால்களிலும் இறகுகளிலும் ஒட்டிக்கொள்ளும் மீனின் முட்டைகள் பல்வேறு நீர்நிலைகளில் விழுந்து மீன்களாகின்றன.

ஒரு பொருள் மீண்டும் இயங்கும் நிலைக்கு வரும் வரை அதனை அடிப்பதற்கு Percussive Maintenance என்று பெயர்.

நார்வேயில் எலக்ட்ரிக் கார் வைத்திருந்தால் பார்க்கிங் இலவசம் என்பதோடு அதனை பஸ் செல்லும் பாதைகளிலும் ஒட்டிச்செல்ல அனுமதி உண்டு.

ஒலிவியா ஃபார்ன்ஸ்மித் என்ற சிறுமி கார் விபத்தில் சிக்கினார். உடல்நலம் தேறியபின் அவருக்கு பசி,வலி,பயம் ஆகியவை ஏற்படாததோடு தூக்கமும் தேவைப்படவில்லை. இக்குறைபாட்டுக்கு Chromosome 6 Deletion என்று பெயர்.   







  

பிரபலமான இடுகைகள்