பங்குச்சந்தையில் பெண்புலி!
பங்குச்சந்தையில்
பெண்புலி!
அமெரிக்காவின்
நியூயார் பங்குச்சந்தை எக்ஸ்சேஞ்ச் அமைப்பு வரலாற்றில் ஸ்டேசி கன்னிங்காம் நிச்சயம்
வரலாற்று அதிசயம்.
226 ஆண்டுகால வரலாறு கொண்ட நியூயார்க் பங்குச்சந்தையின் 67 ஆவது தலைவராக ஸ்டேசி பதவியேற்றிருக்கிறார். பங்குச்சந்தை
அமைப்பில் கிளர்க் ஆக 1996 ஆம் ஆண்டு முதல் பணியாற்றியவர்.
இன்றும் நியூயார்க் பங்குச்சந்தையின் தாய் நிறுவனமான ஐசிஇயில் அங்கமாக
உள்ள 21 அதிகாரிகளில் ஆண்களின் பங்கே அதிகம்.
இதில் ஸ்டேசி உட்பட
நான்கு பெண்கள் உள்ளனர்.
தீவிரமான இணைய வர்த்தகத்தில் தங்களை தக்கவைத்துக்கொள்ளும்
பெரும் பொறுப்பு ஸ்டேசிவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்டேசியின் போட்டி நிறுவனமான
NASDAQ நிறுவனத்தின் இயக்குநராக ஏதினா ஃப்ரீட்மன் அண்மையில்தான் பதவியேற்றார்
என்பது இதில் குறிப்பிடத்தக்கது.