இந்தியாவை குறிவைக்கும் ரஷ்யா!
பெற்றோர்களை கைவிட்டால் சம்பளம் கட்!
வயதான பெற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை கைவிடும் மாநில அரசு பணியாளர்களுக்கு சம்பளம் கட் என்று
அசாம் அரசு இயற்றிய சட்டம் மக்கள் பிரதிநிதிகளின் ஒப்புதல் பெற்று விரைவில் அமுலுக்கு
வரவிருக்கிறது.
பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் பிரணாம்(PRANAM) எனும் இச்சட்டம் கடந்தாண்டு தயாரிக்கப்பட்டது. "அரசு பணியாளர் தன்னை நம்பியுள்ள பெற்றோர்களை கைவிட்டால், அவரின் ஊதியத்தில் 10% பிடிக்கப்பட்டு பெற்றோர்களின் வங்கிக்கணக்கில்
வரவு வைக்கப்படும்" என அதிர்ச்சி தகவல் தருகிறார் அசாம் அமைச்சர் ஹிமந்தா
பிஸ்வா சர்மா. அதேசமயம் பெற்றோர்களுடன் மாற்றுத்திறனாளி சகோதரர்கள் இருந்தால்
இத்தொகை 15% ஆக உயரும் என அசாம் அரசு சட்டம் எச்சரிக்கிறது. அன்பு பிறந்தால் எதுவும் கட்டாயமில்லை என்பதை உணரவேண்டிய நேரமிது.
உ.பியிலுள்ள மதுராவில் ஒருவரை உயிரோடு
கொளுத்த முயற்சித்த இரு நண்பர்கள் பிடிபட்டனர். குட்காவை ஷேர் செய்ய மறுத்ததற்காகத்தான் இந்த கொலைவெறி.
மதுராவின் சம்போகா கிராமத்தைச் சேர்ந்த பர்தேசி, மளிகைக்கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி திரும்பிக் கொண்டிருந்தார். அவரை வழிமறித்த ராஜூ, ராகுல் தாக்கூர் என்ற இரு நண்பர்கள்
கொஞ்சமே கொஞ்சம் குட்கா கடன் கேட்க, பர்தேசி இன்ஸ்டன்ட்டாக மறுத்திருக்கிறார். டென்ஷன் ஆன இருவரும் உடனே பர்தேசியின் பையிலிருந்த கெரசினை எடுத்து அவரது தலையில்
ஊற்றி நெருப்பை பற்றவைத்துவிட்டனர். மக்களின் உதவியால் 20% நெருப்புக்காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார் பர்தேசி. கொலைமுயற்சி, அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில்
வழக்கு பதிவு செய்து வழக்கம்போல குற்றவாளியை சேசிங் செய்து வருகிறது போலீஸ்.
3
இந்தியாவை குறிவைக்கும் ரஷ்யா!
அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் தேர்தலை ரஷ்யா
குறிவைத்து காத்திருப்பதாக இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் இணையத்துறை
தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 2016 தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு சர்ச்சை தீராத நிலையில் அடுத்த
நடக்கவிருக்கும் பிரேசில், இந்திய தேர்தல்களிலும் ரஷ்யாவின் தலையீடு
இருக்கும் என்பது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையின் இணையத்துறை பேராசிரியர் பிலிப் என். ஹோவர்டு தகவல் தெரிவித்துள்ளார். "அமெரிக்காவிலுள்ள ஊடகங்கள் போல இந்தியாவிலும், பிரேசிலிலும் ஊடகங்கள் வலிமையாக இல்லை. விழிப்புணர்வுடன் இல்லாதபோது ரஷ்யா உளவுத்துறையின் தவறான தகவல்களின் பிரசாரத்தை
தடுக்கமுடியாது" என எச்சரித்த பிலிப், விரிவான தகவல்களை எதையும் கூறவில்லை. அமெரிக்க சட்டசபையின் துணை தலைவர் மார்க்
வார்னர், ரஷ்யாவின் சமூகவலைதள எதிர்மறை செய்திகளின் பரிமாற்றத்தை
உறுதிசெய்துள்ளார்.
4
பழிக்குப்பழி இளைஞர்கள்!
இரண்டு மாதங்களுக்கு முன்பு ரம்ஜான் விடுமுறைக்கு பூன்ச்சிலுள்ள
வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் ஆரங்சீப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் காஷ்மீரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
தற்போது சவுதி அரேபியாவில் பணியாற்றும் ஐம்பதிற்கும் மேற்பட்ட
இளைஞர்கள் இச்சம்பத்திற்கு காரணமான தீவிரவாதிகளை பழிவாங்க ராணுவத்தில் இணைய முடிவு
செய்துள்ளனர். "எங்கள் சகோதரன் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட அன்றே வேலையை
விட்டு விலகுவது என முடிவு செய்துவிட்டோம். ஐம்பது பேர் இணைந்துள்ள எங்கள் குழுவின் ஒரே நோக்கம், ஆரங்கசீப்பின் கொலைக்கு காரணமானவர்களை பழிவாங்குவதுதான்" என திகிலூட்டும்படி பேசுகிறார் சவுதி ரிட்டர்ன் இளைஞர் முகமது கிராமத். முஸ்லீம் பிரிவினை ஆயுதக்குழுக்களில் இணையாமல் ராணுவத்தில் இணைந்ததுதான் ஆரங்கசீப்
செய்த தவறு. ஆரங்கசீப்பின் தந்தை உட்பட அவர் குடும்ப உறுப்பினர்கள்
அனைவருமே ராணுவப்பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவை வெல்ல 76 சாலைகள்!
சீனா டோக்லம் எல்லைப்பகுதியில் பல்வேறு கட்டுமான வேலைகளை
தொடங்கியுள்ளது. இதுதொடர்பான அமெரிக்காவின் அறிக்கையை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. அறிக்கையை நிஜமா, பொய்யா என சரிபார்க்க அப்பகுதிக்கு செல்லவே இந்தியாவுக்கு
சரியான சாலைவசதிகள் கிடையாது என்பதே முகத்திலறையும் நிஜம்.
19 மணிநேரம் நடந்து 120 வீரர்கள் படை டோக்லம் பகுதிக்கு சென்று எல்லையை பாதுகாக்கும்
நிலையில் இந்தியா உள்ளது. 2005-06 ஆம் ஆண்டில் 73 சாலைகள் சீன எல்லைப்பகுதியில் அமைக்க உத்தரவானது. ஆனால் 2012 ஆம் ஆண்டு தகவல்படி 73 சாலைகளில் 34 மட்டுமே நிறைவடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனா 4056 கி.மீ தூரத்திற்கு சாலைகளை அமைத்து எல்லையை வலுவாக்கியுள்ளது. ஆனால் இந்திய அரசு இப்போதுதான் அருணாசல பிரதேசத்தை எளிதாக எட்டும்படி பிரம்மபுத்திரா
நதியின் குறுக்காக 9.2 கி.மீ பாலம் அமைத்துள்ளது. 2013 ஆம் ஆண்டு இந்திய அரசு சீனா - பாகிஸ்தான் எல்லைப்புறங்களை ரயில் மூலம்
இணைக்கும் திட்டத்தை கொண்டுவந்தாலும் இன்றுவரை சர்வே பணி முடியவில்லை. இதேநேரத்தில் சீனா, நேபாளத்தில் காத்மண்ட் - திபெத் பகுதிகளை இணைக்கும் ரயில்பணிக்கு ஒப்பந்தமிட்டு வேலையைத் தொடங்கிவிட்டது.