டான்ஸ் போலீஸின் குத்தாட்டம்!- பிட்ஸ்!
டான்ஸ் போலீஸ்!
ஹரியானாவைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், மதுவருந்திவிட்டு நள்ளிரவில் டான்ஸ் ஆடியதோடு காரை சாலையை மறித்து நிறுத்தி இம்சை
இடஞ்சல்களை ஏற்படுத்தி துறைரீதியான என்கொயரிக்கு உள்ளாகியுள்ளார்.
ஹரியானாவின் குருகிராமிலுள்ள சீட்லாமட சாலையில் காரில்
இசைச்சூறாவளி சுழன்றடிக்க சாலையில் இறங்கினார் வாலிபர். நள்ளிரவில் ஷார்ட்ஸ், ஸ்லீவ்லெஸ் பனியன் கெட்டப்பில் அரைமணிநேரம்
உற்சாக குத்தாட்டம் போட்டு மக்களை மெர்சலாக்கினார். ட்ராஃபிக் நெரிசலாவுதே ப்ரோ என கேட்டவர்களை "நான் இன்ஸ்பெக்டர் டான்ஸ் ஆட உரிமையுண்டு" என கெட்டவார்த்தைகளால் வசை பாடினார். மீட்க வந்த ரோந்துப்படையினரையே தாக்க
முயன்ற டான்ஸ் போலீஸ்காரரை மிகவும் சிரமப்பட்டு காவல்நிலையத்திற்கு கூட்டி வந்துள்ளனர். தருண் தாகியா என்ற டான்ஸ் போலீஸூம், காரிலிருந்து அவரது நண்பரும் நூஹ் மாவட்டத்தின் தாரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது
என்கொயரில் தெரியவந்திருக்கிறது. மக்களின் புகாரும், ஊடகங்களின் நெருக்கடியும் ஒன்றுசேர, அவரை சஸ்பெண்ட் செய்ய குருகிராம் கமிஷனர்
கே.கே.ராவ் பரிந்துரைத்துள்ளார்.
2
எவரெஸ்ட் நேர்மை!
ராஜஸ்தானைச் சேர்ந்த இதயநோயாளி தவறவிட்ட சிகிச்சை பணத்தை
அபேஸ் செய்யாமல் அவருக்கே திருப்பிக்கொடுத்து நேர்மையின் சிகரமாகியுள்ளார் ஆட்டோ ஓட்டுநர்.
ராஜஸ்தானின் ஜோத்பூரைச் சேர்ந்த பிரேம்லதா கெலாட், இதயநோயாளி. தன் வாழ்நாள் சேகரிப்பான 4 லட்சத்தை பைபாஸ் சிகிச்சைக்காக எடுத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றபோது பணப்பையை தவறுதலாக
ஆட்டோவிலேயே வைத்துவிட்டு தல்தெஜ் எனுமிடத்திலுள்ள மருத்துவமனையில் இறங்கிவிட்டார். அவர் தவறவிட்ட 4 லட்ச ரூபாய் பணத்தை சபலப்படாமல் எடுத்து பிரேம்லதாவிடம்
மனிதநேயத்துடன் ஒப்படைத்துள்ளார் ஆட்டோ ட்ரைவரான நாஞ்சி நயி. "ஆட்டோவை சுத்தப்படுத்தும்போதுதான் பிரேம்லதா அம்மாவின் பணப்பையை பார்த்தேன். நான் என் வாழ்வில் அவ்வளவு பணத்தை பார்த்ததேயில்லை. மருத்துவமனையில் இறக்கிவிட்ட பிரேம்லதா அம்மாவுடையதாக இருக்குமோ என உடனே வஸ்த்ரபூர்
போலீசிடம் தகவல் தெரிவித்தேன்" என நெகிழ்ச்சியாகிறார் நாஞ்சி. இதயத்தில் ஏற்பட்ட மூன்று அடைப்புகளை சரிசெய்வதற்கான சிகிச்சை பணம் தொலைந்தவுடன்
இருளடைந்த பிரேம்லதாவின் முகம் நாஞ்சி திருப்பித்தந்த
பணம் மூலம்தான் தெளிந்திருக்கிறது.
3
ஜூனியர் எஞ்சினியர்!
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியரான தனிஷ்க் ஆப்ரஹாம், பதினான்கு வயதில் பயோமெடிக்கல் எஞ்சினியரிங் பட்டம் பெற்று பிரமிக்க வைத்துள்ளார்.
ஆப்ரஹாம் தன் பதினொரு வயதிலேயே கலிஃபோர்னியா கல்லூரியில்
பட்டம் பெற்று சாதித்த ஜூனியர் சாதனையாளர். "பனிரெண்டு வயதில் பொறியியல் படிக்க தொடங்கி இதோ பதினான்கு வயதில் முடித்துவிட்டேன்" என உற்சாகமாகிறார் தனிஷ்க் ஆப்ரஹாம். யுசிடேவிஸ் மெடிக்கல் சென்டரில் பிஹெச்டி
படிக்க தற்போது விண்ணப்பம் அனுப்பியுள்ளார். ஆப்ரஹாம் ஐந்து வயதிலேயே ஸ்டான்ஃபோர்டின் சிறப்பு குழந்தைகளுக்கான கல்வியை(EPGY) நிறைவு செய்தவர், வேதியியல், புவியியல், உயிரியல், வானியல் என அனைத்திலும் டாப் இடம் பிடித்தார். இப்படி படிப்பது குழந்தைகளின் இயல்பான தன்மையை பாதிக்காதா? என்று கேட்டால், "இயல்பான குழந்தைகளின் தன்மையை ஆப்ரஹாம் இழந்ததாக நாங்கள் கருதவில்லை. இயல்பு, இயல்பற்றது என குழந்தைகளிடம் எதனைக்கூறுவீர்கள்?" என்கிறார் ஆப்ரஹாமின் அம்மா தஜி ஆப்ரஹாம்.
4
]
தானம் தர போராட்டம்!
தானம் தர யார் மறுப்பார்கள் என நினைப்பீர்கள். ஆனால் ராஜஸதானைச் சேர்ந்த வர்ஷாவுக்கு தானம் தருவதில் அவரின் குடும்பமே முட்டுக்கட்டை
போட்டுள்ளனர்.
வர்ஷா தன் நண்பரான ராணுவ அதிகாரி கர்னல் பங்கஜ் பார்க்கவா
என்பவருக்கு தன் கிட்னியை தானம் தர முன்வந்திருக்கிறார். ஆனால் இதற்கு வர்ஷாவின் குடும்பம் எதிராக நிற்க, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வென்று தன் நண்பரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். "தானமளிப்பவராக பதிவு செய்யாதவர்கள் கூட வர்ஷா போல இனி தானமளிக்க முன்வரும் வாய்ப்பு
இத்தீர்ப்பு மூலம் உருவாகியுள்ளது" என்கிறார் கிஃப்ட் ஆஃப் லைஃப் பவுண்டேஷனைச்
சேர்ந்த அனில் வஸ்தவ். குடும்பத்தினர் மறுத்ததால் வர்ஷாவின்
கிட்னி தானத்திற்கு அரசின் கமிட்டி முதலில் தடை விதித்துவிட்டது. "தற்போது கோர்ட் வர்ஷாவுக்கு தானமளிக்க கமிட்டி விதித்த தடையை நீக்கியுள்ளதால் ராணுவ
வீரருக்கு உறுப்பு மாற்ற ஆபரேஷன் நடைபெற்றுள்ளது" என்கிறார் மருத்துவரும் கமிட்டி உறுப்பினருமான பானு மூர்த்தி.