உண்மையைத் தேடுவதே கலையின் வரலாறு!
முத்தாரம் Mini
பாபர் மசூதி இடிப்பு, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், இராக் ஆக்கிரமிப்பு
இதுபோன்ற நிகழ்வுகளை எப்படி கையாளுகிறீர்கள்?
ஓவியராக காலத்தோடு இணைந்து பயணித்து அவற்றை பதிவு
செய்து தொகுக்கிறேன். Holy shiver என்ற கண்காட்சி மதம்
சார்ந்த வன்முறை, மக்களின் பாதிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
கலைஞனின் மனதின் வழியே உள்ள உண்மையை உணர்வுடன் வெளிப்படுத்துகிறது கலை.
காந்தி, அம்பேத்கர்
இணைந்த ஓவியங்கள் எப்படி ஒன்றிணைக்க தோன்றியது?
காந்தி, அம்பேத்கர் ஒன்றிணைந்த
தம்ம ஸ்வராஜ் ஓவியம் அது. முரண்பாடான கருத்தியல்களைக் கொண்ட இருவரை
ஒரே பிரேமுக்குள் கொண்டுவரும் முயற்சி. கருத்தியல்கள்,
தத்துவம் வேறு எனினும் மனிதகுலத்தின் உயர்வுக்காக உழைத்தவர்கள்தான் காந்தியும்
அம்பேத்கரும். சமத்துவம் சமநீதிக்கான விஷயங்களில் இருவரின் கருத்துகளை
விலக்கி ஒருவர் இன்று உரையாடவே முடியாது.
வலதுசாரிகளுக்கு எதிரான கருத்தியல்களை கொண்டு எப்படி
துணிச்சலாக இயங்குகிறீர்கள்?
அச்சுறுத்தல்கள் ஏற்படும் காலங்களில் உண்மையைத்
தேடி அறியும் வேட்கை எழும். கலைஞர்களின் குரல்வளை நொறுக்கப்பட்டாலும்
தடைகள், தணிக்கை தாண்டி மக்கள் தீர்வுகளை நோக்கி நகர்வார்கள்.
கலையின் வரலாறே அதுதானே!
-ரியாஸ் கோமு, ஓவியர்.