பகர்வால் யார்?




Image result for bakarwals of kashmir


பகர்வால் வரலாறு!

ஜம்மு காஷ்மீரில் கொலையுண்ட சிறுமி, பகர்வால் எனும் நாடோடி முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர். குஜ்ஜார் இனத்தின் உப பிரிவு பகர்வால். காஷ்மீரில் வாழும் 67 சதவிகித குஜ்ஜார் இன மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக 2004 ஆம் ஆண்டு வெளியான பழங்குடிகள் ஆராய்ச்சி மற்றும் கலாசார பவுண்டேஷனின் அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.

 2011 ஆம் ஆண்டு சென்சஸ்படி காஷ்மீரின் மூன்றாவது பெரிய இனக்குழுவாக 11.9 சதவிகிதம் வாழ்ந்துவருவது குஜ்ஜார் பகர்வால்கள்தான். மாநிலத்தின் 21 மாவட்டங்களில் வாழ்ந்துவருபவர்களின் வருமான ஆதாரம் விலங்குகள்தான். ராணுவமும் அரசும் போட்டிபோட்டு வளர்ச்சி திட்டங்களின் பெயரில் நிலங்களை வளைப்பதால் மேய்ச்சல் நிலமின்றி தவிக்கிறார்கள் பகர்வால் மக்கள். "தொடர்ந்து வருமானத்திற்காக இடம்பெயர்ந்து வாழ்வதால் கல்வி, ஆரோக்கியம் குறித்த திட்டங்கள் பகர்வால் மக்களை முழுமையாக சென்றடையவில்லை" என்கிறார் நேருபல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சியாளரான துஃபைல்


பகர்வால் மக்களின் கல்வியறிவு விகிதம் 25 சதவிகிதத்திற்கும் குறைவு என்பதோடு பள்ளி செல்வதற்கான ஆர்வமும் பொருளாதார வாய்ப்புகளும் அவர்களுக்கு குறைவு என்பதே உண்மை. இந்து வெறியர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதும் இதே காரணத்தால்தான்.  


பிரபலமான இடுகைகள்