இடுகைகள்

சுயநலம் கொண்ட பணக்கார குழுக்களால் ஏற்படும் பேராபத்து!

படம்
அமெரிக்கா, முன்பு போல வலிமையான நாடு கிடையாது. அங்கு 85 மில்லியன் மக்களுக்கு மருத்துவ காப்பீடு கிடையாது. அரசு பள்ளிகள் பலவீனமாகி வருகின்றன. அரசு தொழிலாளர் உரிமை காக்கும் அமைப்பு மூடப்பட்டு விட்டது. இனவெறி, புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போலி வதந்திகள் உருவாக்கப்பட்டு பரவி வருகின்றன. முதலாளிகளுக்கு ஆதரவான அமெரிக்க அதிபர், பணக்காரர்களுக்கு சரக்கு வாகன ஓட்டுநர், செவிலியர் ஆகியோரை விட குறைந்த வரியை விதிக்கிறார். இதற்கு காரணம் என்ன, சர்வாதிகாரம் எப்படி பணக்கார தொழிலதிபர்களால் நடைமுறைப்படுத்தப் படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் விளக்கி எழுதியிருக்கிறார். வலதுசாரி இன மதவாதம் வளருவது பற்றி கவலை கொள்கிறீர்களா? இந்த நூல் உங்களுக்காகவே!

wrappers ...ara press

படம்
 

wrapper images... ara press

படம்
 

இந்தியாவில் அதிகரிக்கும் பெரும் பணக்காரர்கள்... தீவிர வறுமையில் அழுத்தப்படும் 95 சதவீத மக்கள்!

படம்
  பெர்னி சாண்டர்ஸ் பார்வையில் இந்தியா... இந்தியா, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. மொத்தம் 1.46 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு மொத்தம் 200 பெரும் பணக்காரர்கள்.இவர்கள், 2025ஆம் ஆண்டில் 941 பில்லியன் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள்.  இந்தியாவில் 75 மில்லியன் மக்கள் தீவிரமான வறுமையில் வாடி வருகிறார்கள். இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ள கௌதம் அதானி, பிரதமருக்கு நெருக்கமானவர்.இவர் நிலக்கரி, அடிப்படை கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். பிரதமரின் நெருக்கமான நட்பை பயன்படுத்தி பல லட்சம் கோடி மதிப்பு கொண்ட அரசு ஒப்பந்தங்களைப் பெற்று வருகிறார். கூடுதலாக பெரும் வரி விலக்கு, தனது நிலக்கரி நிறுவனத்திற்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு, தொழிலாளர் சங்கங்களை அழுத்தி செயலிழக்கச் செய்வது, ஆதரவான நீதித்துறையினர் மூலம் விசாரணைகளை தாமதப்படுத்தி நிறுவனங்களை காப்பாற்றுதல் என நிறைய விஷயங்களை சாதித்து வருகிறார்.  பல கோடி மக்கள் அடிப்படையான சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்தான உணவு, வேலை கிடைக்காமல் வறுமையில் தடுமாறி வருகிறார்கள்.  இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுக...

பலரின் பிரச்னைகளை தீர்த்து வலிமையாக்கும் மர்ம புத்தக கடைக்காரர்!

படம்
 ஐயம் நாட் எ டிமான் காட் லேக்கி மாங்கா காமிக்ஸ் ஹரிமாங்கா இந்த கதையில், நாயகன் பூமியில் இருந்து மற்றொரு உலகிற்கு வந்தவன். அவனுக்கு ஆதரவாக இங்கி என்ற கருப்பு நிற சக்தி ஆதரவாக உள்ளது. ஆஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் நடத்தும் புத்தக கடையில் பொறுப்பாளராக இருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் அக்கடையில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் சாதாரணமானவை. போட்டித்தேர்வு, இலக்கிய நூல்கள், கட்டுரைகள் என்றுதான் இருக்கின்றன. ஆனால், யாராவது பிரச்னை என்று வரும்போது அவர்களின் பிரச்னைகளுக்கு ஏற்றபடி நூல்களும் மாறுகின்றன. அதை, புத்தகடையில் உள்ள பொறுப்பாளரான நாயகன் அறிவதில்லை.  அவர் முதலில் அதை அறியாமல் இருப்பது சரி. ஆனால், கதை நெடுக அவர் எங்கேயும் தனது நூல்களை வாங்கிப்படித்தவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படிப்பட்ட அதிகாரவெறி கொண்ட மக்கள் என உணருவதேயில்லை. அந்த இடத்தில்தான் கதை தொய்வடைகிறது. நாயகனைப் பொறுத்தவரை அவன் ஒரு சிறந்த விற்பனையாளன். அதேசமயம், அவன் நூல்களை விற்க செய்யும் முயற்சியாக, யாரேனும் மழைக்கு ஒதுங்கினால்கூட அவர்களுக்கு தலை துவட்ட துண்டு, தேநீரை வழங்குகிறான். அதுவும் கூட க்ரீன் டீ. முதல்முற...

டிஜிட்டல் ஊடகங்கள் என்றால் என்ன, அதன் விதிமுறைகளைப் பற்றிய கையேடு!

 டிஜிட்டல் ஜர்னலிசம் ஹேண்ட்புக் சேஜ் பதிப்பகம் இந்த நூலைப் பற்றி சற்று விரிவாக பேசவேண்டும். ஏற்கெனவே, இதைப்பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.அதை நினைவில் கொண்டிருக்கிறேன் நண்பர்களே. நூல் ஆய்வு நூல் என்பதால் 600 பக்கங்களுக்கும் மேல் செல்கிறது. இந்த நூல் முழுக்க உலகம் முழுக்க பல்வேறு டிஜிட்டல் ஊடகங்கள் எப்படி இயங்குகின்றன, எதிர்கொண்ட சிக்கல்கள் என்னென்ன, பெரும் ஊடகங்கள் இயல்பான வணிகத்தை மாற்ற முயன்ற நிறுவனங்களை எப்படி நசுக்கின என்று விளக்கமாக கூறியிருக்கிறார்கள்.  டிஜிட்டல் ஊடகங்கள் என்றால், இணையத்தில் உள்ள செய்தி வெளியீட்டு வலைத்தளங்கள் என்று புரிந்துகொள்ளலாம். இன்று வெறும் வலைத்தளங்கள் என்று இல்லாமல் தனியாக செய்திகளை வெளியிட்டு அதிலும் பெரும் சம்பாத்தியத்தைக் காட்டும் நிறுவனங்கள் உண்டு. வேடூநியூஸ், ஒன்இந்தியா ஆகிய தளங்கள் டிஜிட்டல் தளங்களை வெகுசனமயாக்கின. நல்லவிதமாக அல்ல.  எலன் மஸ்க் எப்படி நான் எக்ஸில் வெளியிடும் வீடியோக்கள் ஒருவரை அங்கேயே அதிகநேரம் தங்க வைக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா, அதேபோல்தான். எந்தளவு மட்டமாக தலைப்பை வைக்க முடியுமோ அந்தளவு வைப்பார்கள். வியாபா...

வாரம் முழுக்க காவல்துறை அதிகாரி, வார இறுதியில் கொலையாளி! விஜிலாண்டே

படம்
  விஜிலாண்டே மாங்கா காமிக்ஸ்  கொரியா இந்தக்கதையில் நாயகன், ரௌடி ஒருவனால் பாதிக்கப்பட்டு தாயை இழந்தவன்.அதாவது, அம்மாவை ரௌடி அடித்து உதைத்து படுகொலை செய்துவிடுகிறான். நீதிமன்றம் குற்றவாளிக்கு மெலிதான தண்டனை கொடுத்துவிட்டு விட்டுவிடுகிறது. இது நாயகனை பாதிக்கிறது. சிறுவனாக இருப்பவன், பெரியவனாகி குற்றவாளிகளை அடியோடு அழிப்பதாக உறுதி எடுக்கிறான். அதற்கு காவல்துறையே சரியான வழி என அங்கு வேலைக்கு சேர்கிறான். அவனது வயதில் உள்ளவர்களில் கராத்தே, ஜூடோ, ஜிஜூட்சு ஆகியவற்றை சிறப்பாக கற்றவர்கள் யாருமில்லை என்று பெயரும் புகழும் எடுக்கிறான். உங்களுக்கு இப்போதே புரிந்திருக்கும். யார் விஜிலாண்டே என்று. நாயகன்தான் குற்றவாளிகளை ஹூடி அணிந்துகொண்டு சென்று கை முஷ்டிகளால் தாடையை பெயர்த்து குத்து குத்தென குத்தியே கொல்கிறான். வேறு எந்த ஆயுதங்களும் கிடையாது. ஒருவகையில் அப்படி கொல்வது நாயகனுக்கு ஆத்ம திருப்தியை தருகிறது.  கொரியாவில் நீதித்துறை கறைபடிந்த ஊழல் புரையோடியது. இதன் காரணமாக பள்ளியில் கேலி சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல், அடித்து உதைத்தல், குடும்ப வன்முறை என எவற்றுக்கும் நீதித்துறை கடுமையான த...