இடுகைகள்

தீண்டத்தகாத இனத்தவரின் பெண்களை விபச்சாரிகளாக்கிய மராட்டிய பேஷ்வாக்கள்!

  மராட்டியத்தில் புகழ்பெற்ற கலைகளாக தமாஷா, லாவணி ஆகிய கலைகள் உள்ளன. இந்த இரண்டு கலைகளும் பொழுதுபோக்கு கலைகளாக உள்ளன. ஆனால், சமூக கலாசார ரீதியாக முக்கியத்துவம் கொண்டதாக பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தலித்துகள், அதாவது தீண்டத்தகாவர்கள் தமாஷா, லாவணியை நடத்தி வருகிறார்கள். இதில் பாலுறவு, சாதி என இரண்டுமே நீக்கமற உண்டு. இதை தொடர்ச்சியாக நடத்தி வருவதில் மராட்டிய அரசியலுக்கும் முக்கியப் பங்குண்டு. மராட்டியத்தில் வாழும் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் தமாஷா, லாவணி ஆகிய கலைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள். அதில் ஈடுபடும் தலித் மக்கள்,  சாதி ரீதியான ஒடுக்குமுறை, பாலியல் வக்கிரம் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தமாஷாவில் பாடல், இசை, மைம், கவிதை ஆகியவை இடம்பெறுகிறது. அடிப்படையில் இதில் நாடகம், நகைச்சுவை என இரண்டுதான் இருக்கும். ஏறத்தாழ மேற்கு வங்காளத்தில் நடைபெறும் கூத்து போன்ற இயல்பைக் கொண்டது. இதில் பார்வையாளர்களாக மேல்சாதிக்காரர்கள், தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். தமாஷா ஆண் பார்வையாளர்களுக்கானது. எனவே, இதில் பங்கேற்கும் பெண்கள் அதற்கேற்ப, காமத்தை...

மார்க்சியம் எழுத்தாளர்களை, படைப்புகளை எப்படி பார்க்கிறது?

 மார்க்சியமும் இலக்கியமும் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் கட்டுரைகள் இடதுசாரி அரசியல் தலைவரான ஈஎம்எஸ் நம்பூதிரிபாட், எழுதியுள்ள நூல். இந்த நூலில் அவர் மார்க்சியத்தில் உள்ள எழுத்தாளர்கள், அவர்களின் தத்துவப்பின்புலம், படைப்பு, கலை சமுதாயத்திற்காகவே, சுயமான உணர்வு பிரதிபலிப்புக்காகவா என விரிவாக ஆராய்கிறார்.  மலையாளத்தில் தோழர் ஈஎம்எஸ் புகழ்பெற்ற எழுத்தாளர். மாற்று கருத்தியல் கொண்ட பத்திரிகளாக இருந்தாலும் கூட அவரிடம் கட்டுரைகளை வாங்கி பதிப்பிக்க தவறுவதில்லை என்ற தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார். அப்படியான பாங்கு தமிழில் கிடையாது. இங்கு பார்ப்பன ஊடகங்கள் அவர்களுக்கு வசதியான ஆட்களை வைத்து கட்டுரை எழுத வைக்கின்றன. திஜானகிராமனை படித்து தனிப்பட்ட ரீதியில் ஊக்கம் பெற்றவர்களும் திரைப்பட நடிகர்கள் காலையில் இட்லிக்கு என்ன தொட்டுக்கொள்கிறார் என கிசுகிசு எழுதி பிழைக்கும் நிலை... என்ன சொல்வது? மொத்தம் ஐந்து கட்டுரைகளில் எப்படி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை பார்ப்பன அரசியல் சக்திகள் கலைத்து, தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். எழுத்தாளர்களின் படைப்புகள் அரசியலில் பாதிப்பு ஏற்படுத்தாமல் போனது என்று குறிப...

ஒரு காலத்தில் மோசடி நிறுவனங்கள், இன்று நம்பர் 1 நிறுவனங்கள்!

  ஒரு காலத்தில் மோசடி நிறுவனங்கள், இன்று நம்பர் 1 நிறுவனங்கள்! சீனா ஒரு காலத்தில் வெளிநாட்டு பொருட்களை ரிவர்ஸ் எஞ்சினியரிங் செய்து தனக்கான பொருட்களை உருவாக்கி்க்கொண்டது. அங்கு கண்டுபிடிப்புகளே கிடையாது. காப்பி பேஸ்ட் மட்டுமே என்ற நிறைய கருத்துகள் கூறப்பட்டன. தொடக்க காலத்தில் இதில் உண்மை இருந்தாலும் ஒரு நாடு அப்படியே இருப்பதில்லை. இன்று சீனாவில் உள்ள சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களின் பாதிப்பு இருக்கலாம். ஆனால், அவை வேறுபட்ட பல்வேறு வசதிகளை வழங்கி மக்களின் தினசரி வாழ்க்கையில் பங்களித்து வருகின்றன. அப்படி ஒரு நிறுவனத்தை இப்போது பார்க்கலாம். அதன் பெயர் சினா வெய்போ. 50 மில்லியன் பயனர்கள் இந்த சமூக வலைதளத்தில் உள்ளனர்.  இதை உருவாக்கியவர் தைவான் நாட்டைச் சேர்ந்த கை பு லீ. 1961ஆம் ஆண்டு பிறந்த லீ, அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு கணினி படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். ஆப்பிள், சிலிகான் கிராபிக்ஸ், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. சீனாவின் பெய்ஜிங்கில் கூகுள் நிறுவனத்திற்காக வேலை செய்தார். அப்போது சீனாவில் ஸ்டார்ட்அப்களுக்கு நிதியுதவி செய்ய...

யூக்கு டூவு - சீனா பொழுதுபோக்கு வீடியோ துறையில் அரசன்

 file:///home/anbarasu/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88/3.jpg யூக்கு டூவு - சீனா பொழுதுபோக்கு வீடியோ துறையில் அரசன் யூக்கு டூவு என்ற வலைத்தளம்தான் சீனாவில் பொழுதுபோக்கு வீடியோக்களில் நாற்பது சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இதற்குப்பிறகுதான் பைடு, டென்சென்ட்டெல்லாம் வருகிறது. 2014ஆம் ஆண்டே இதில் 500 மில்லியன் பயனர்கள் இருந்தனர். யூக்கு டூவைத் தொடங்கியவர் விக்டர் கூ. இவர் ஹாங்காங்கை பூர்விகமாக கொண்டவர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் படித்தவர். எம்பிஏவை ஸ்டான்போர்டில் படித்தவர், முதலீட்டு நிறுவனமான ரிச்சினா குழுமத்தில் பணியாற்றி வந்தார். 1999ஆம் ஆண்ட சீனாவில் இணையம் பெரிதாக வளரவில்லை. அப்போது சோகு என்ற நிறுவனத்தில் வேலை செய்தார். தனக்கென தனியாக சொந்த நிறுவனம் தொடங்கும் ஆசை இருந்தது. 2005ஆம் ஆண்டு யூக்கு நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த எட்டு ஆண்டுகளில் நிறுவனம் பெரிதாக வளர்ந்தது. 2010ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு அதன் போட்டியாளரான டூவு.காம் நிறுவனத்தோடு இணைந்தது. சீனாவிலேயே இரண்டாவது பெரிய ஆன்லைன் வீடியோ சேவை நிற...

ஆன்லைன் வணிகத்தில் முதலை - அலிபாபாவின் வெற்றி

படம்
  ஆன்லைன் வணிகத்தில் முதலை சீனாவில் உள்ள ஆன்லைன் வணிகத்தில் எண்பது சதவீதம் ஆதிக்கம் செலுத்துவது அலிபாபா. இபே, அமேசான் ஆகிய தளங்களை ஒன்று சேர்த்தால் வரும் வருமானத்தை விட அதிகம். ஜாக் மாவின் அலிபாபா நிறுவனம், சிறுகுறு வணிகர்களை இணையத்தின் வழியாக இணைக்கிறது. 2014ஆம் ஆண்டு நியூயார்க் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனம்.  இபே நிறுவனம், சீனாவில் தொடங்கப்பட்டபோது அலிபாபா அதை எதிர்கொள்ள தாபோபாவோ என்ற இணையத்தளத்தை தொடங்கியது. ஆன்லைன் வணிகத்தில் பொருளை விற்பவர், இணையதளத்திற்கு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டும். அலிபாபாவின் தாவோ இணையத்தளத்தில் அப்படி எந்த தொகையும் தரவேண்டியதில்லை. இபேவின் தளத்தில் பொருட்களை விற்க காசு கட்டவேண்டும். தாவோ தளம் நேரடியாக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றது.  அப்போது ஆன்லைன் வணிகத்தில் சீனா திறன் பெற்றிருக்கவில்லை. பொருட்களை வாங்கிவிட்டு இணையத்தில் பணம் கட்டுவதற்கு வசதி கிடையாது. வங்கிகள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நாமே வங்கிகளை மாற்றுவோம் என்றார் மா. அதன்படி, அலிபே என்ற இணையவழி பணம் செலுத்தும் வசதியை உருவாக்கினார். நாடெங்கிலும் உள்...

ஹெயர் வெற்றிக்கதை!

படம்
  ஹெயர் வெற்றிக்கதை 1949ஆம் ஆண்டு பிறந்தவர் ஸான் ருய்மின். இவர் பிறந்த ஆண்டில்தான் சீனாவில் மக்கள் சீன குடியரசு உருவானது. இவர் வளர்ந்து வந்த காலத்தில்தான் சீனாவில் கலாசார புரட்சி, மிகப்பெரிய முன்னேற்ற பாய்ச்சல் நடவடிக்கைகள் நடைபெற்றன. இவை அவரின் கல்வி, சமூகத்தைப் பார்க்கும் பார்வை ஆகியவற்றை பாதித்திருக்கலாம்.  ருய்மினுக்கு நிறுவனத்தை நடத்தும் மேலாண்மை திறன் எப்படி வந்தது என ஒருவர் சந்தேகம் கொள்ளலாம். அவருக்கு இந்த வகையில் ஆதர்சம், ஜப்பானிய நூல்கள். ஜப்பானிய மேலாண்மை நூல்களை படித்தே தனது நிர்வாக அறிவை பெருமளவு வளர்த்துக்கொண்டார். அவையெல்லாம் குயிங்டாவோ குளிர்பதனப்பெட்டி தொழிற்சாலைக்கு அரசு அனுப்பி பணியாற்றச் சொன்னபோது பயன்பட்டது. தொடக்கத்தில் அங்கு ருய்மின் சென்றபோது, குளிர்பதனப்பெட்டிகளை தயாரித்தாலும் அதில் நிறைய தவறுகள் இருந்தன. மோசமான வடிவமைப்பு காரணமாக அதை குறைந்த விலைக்கு மக்களுக்கு விற்றனர். மக்களுக்கு அதை வாங்கினாலும், குளிர்பதனப்பெட்டி அடிக்கடி பழுதானதால், விரக்தி அடைந்தனர்.  ருய்மின், தொழிலாளர்களிடம் குளிர்பதனப்பெட்டி பற்றி கேட்டார். செய்யும் போது பிழை ஏற்பட்டாலும...

மனநல குறைபாடுகளுக்கும், கிரியேட்டிவிட்டுக்கும் என்ன தொடர்பு?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி வான்காவுக்கு என்ன வகையான உளவியல் குறைபாடு? டச்சு ஓவியர் வின்சென்ட் வான்கா பற்றி அறிந்திருப்பீர்கள். வாழும்போது பெரிதாக வரைந்த ஓவியங்கள் விற்கப்படவில்லை. வறுமையில் வாழ்ந்தவர் , தன்னைத்தானே கொன்றுகொள்ள முயன்று 37 வயதில் வெற்றியடைந்தார். அவரது மனநிலை என்ன, பிரச்னை என்ன என்பதை ஆய்வாளர்கள் அவர் எழுதிய கடிதங்கள் வழியாக புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.  வான்கா, அப்சின்த் என்ற ஆல்கஹால் பானத்தை அருந்தி வந்தார். இதனால் மனநிலையில் திடீரென்ற உற்சாகம், ஆர்வம் ஏற்பட்டுவந்தது. அவருக்கு வலிப்பு, பைபோலார் டிஸார்டர் குறைபாடு இருக்கலாம் என உளவியலாளர்கள் கருதுகிறார்கள். வான்காவின் சகோதரிக்கு ஸிசொபெரெனியா குறைபாடு இருந்தது. அவர் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக வைக்கப்பட்ட வரலாறும் உள்ளது.  மனநல குறைபாடுகளுக்கும், கிரியேட்டிவிட்டுக்கும் என்ன தொடர்பு? புதுமைத்திறன் கொண்ட மனிதர்களுக்கு மனநல குறைபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை வைத்து தொடர்பை உளவியலாளர்கள் உருவாக்கி பார்க்கிறார்கள். பொதுவாக எழுத்தாளர்களுக்கு மனநிலை சட்டென மாறுவது, மன அழுத்தம் கொள்வது, ...