இடுகைகள்

நவீனத்துவ இந்தியாவையும், அதன் வளர்ச்சியையும் தடுக்கும் பெரிய எதிரி இந்துமதம்.

படம்
பெருமை மிக்க சூத்திரன் இந்துமதம், தனது கருத்தியலை பயன்படுத்தி எப்படி தீண்டத்தகாதவர்களை ஒடுக்கிறது என பார்ப்போம். முதலில் அவர்கள் தங்களை சூத்திர ர்களாக கருதவேண்டும். அப்படி இருக்க விரும்ப வேண்டும். இதுதான் அனைத்து மோசமான கருத்தியலின் அடிப்படையும் கூட. பெயர், புகழ், அடையாளம், மதம் இல்லாமல் இருப்பவர்களை அனைவரும் ஏற்றுக்கொண்ட பெயரைக் கொண்டு அடையாளப்படுத்துகிறார்கள். இதுகூட அவமானத்தை மறைக்க என்று கூறுகிறார்கள். தீண்டத்தகாதவர்கள் தங்களை சூத்திரர்களாக நினைத்துக்கொண்டாலும் அவர்கள் இந்துமதத்திற்குள்ளாகவே இருக்கிறார்கள். ஆனாலும் கூட அவர்கள் இந்து கடவுள்களை வணங்க கூடாது. இந்துமத புனித நூல்களை தொடக்கூடாது. அவர்கள் கலாசாரமான மொழியை பேசக்கூடாது. தங்களுடைய பெயரைக் கூட கௌரவமாக வைத்துக்கொள்ளக்கூடாது. தீண்டத்தகாதவர்கள் தினசரி அடி, உதை, கொல்லப்படுவது, எரிக்கப்படுவது, வல்லுறவு செய்யப்படுவது ஆகிய அநீதிகளை எதிர்கொண்டு வருகிறார்கள். எதற்காக? அவர்கள் இந்து அல்ல என்பதற்காக. இந்து மனித பிரமிடின் வெளியேதான் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இந்துமத படிநிலைமுறையின் ஒட்டுமொத்த எடையையும் தூக்கி சு...

கல்வி ஒருவற்கு... சீன கல்வி சீர்திருத்தங்கள் புதிய மின்னூல் வெளியீடு

படம்
    https://www.amazon.com/dp/B0FC2V9TT9

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களை வைத்து முஸ்லீம்களை படுகொலை செய்து வருகிறார்கள்!

படம்
  இந்து சாதி முறை அமைப்பு உலகிலேயே இந்தியா ஒரு சிக்கலான நாடு என வெளிநாட்டு தோழர்களுக்கு கூற விரும்புகிறேன். ஆரியர்கள்தான் இரண்டு உலகப்போருக்கு காரணம் என ஜெர்மன் நாட்டு தத்துவவாதிகளைக்கூட நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள கல்வியாளர்கள் கூட இந்துமதத்தின் மர்மங்களை கண்டறிய முடியவில்லை. வயது மூப்படையாத, இறக்காத ஒன்றாக இந்துமதம் இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய மதம். இந்த சாதி அமைப்பு, நான்கு பிரிவுகளைக் கொண்டது. மேலிருந்து கீழ் எனும் பிரமிடு சாதி அடுக்குமுறை கொண்டது. மறுபிறவியை அடிப்படையாக கொண்டு ஒருவர் செய்த புண்ணியம் மேல்சாதியிலும் பாவம் கீழ்சாதியிலும் பிறக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள். இந்துமதத்தில் சர்வ சக்தியும் ஆற்றலும் கொண்டவர்களாக பார்ப்பான்கள் உள்ளனர். இவர்கள் சாதி அடுக்கில் முதலாக இடம்பெறுகிறார்கள். இவர்களே நாட்டை, கட்சிகளை, ஆட்சித்தலைவர்களைக் கூட கட்டுப்படுத்துகிறார்கள். இந்த மேலாதிக்க இந்துமதம் ஆரியர்களின் கண்டுபிடிப்பு. தனியாக ஒருவரை ஒடுக்குவதை விட அமைப்பு ரீதியாக என்றென்றைக்குமாக ஒடுக்கும் அற்புத ஆற்றலைக் கொண்டது. உலகின் எட்டாவது அதிசயம் எ...

இந்தியாவை தேங்கி கிடக்கிற, நோய் பிடித்த சமூகமாக மாற்றியதே இந்துமதம்தான்!

படம்
 அரசை கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கம் இந்தியச்சமூகத்தில் கிராமம், நகரம், மாவட்டம், மாநிலம், நாடு என்று தேடினாலும் ஆளும் வர்க்கத்தின் அளவு பத்து சதவீதம்தான் தேறும். இந்தியாவிற்கென நாடாளுமன்றம் உள்ளது. அதற்கான உறுப்பினர்கள், கேபினட் அமைச்சர், பிரதமர் என யாராக இருந்தாலும் சரி, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இயங்க முடியாது. இந்த ஆளும் வர்க்கம்தான் அரசை நடத்துகிறது. அரசு இவர்களை நடத்தவில்லை. அரசியலமைப்புச்சட்டம் சில விஷயங்களைக் கூறலாம். நாடாளுமன்றம் சட்டங்களை கொண்டு வரலாம். கேபினட் அமைச்சகம் முடிவுகளை எடுக்கலாம். அரசு கூட இறுதியாக ஏதேனும் முடிவுகளை எடுக்கலாம். ஆனால் ஆளும்வர்க்கத்திற்கு அந்த முடிவுகள் சட்டங்கள் பிடிக்காதபோது, அவை நடைமுறைக்கு வராது. எனவே, தலித்துகளை காக்கும் சட்டங்கள் அனைத்தும் காகித தாளில் மட்டுமே உள்ளது. அவை நடைமுறைக்கு வரவில்லை. காரணம், அவையெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு உவப்பாக இல்லை. இப்பிரச்னையை எளிதாக கூறலாம். ஆளும் வர்க்கத்தை எதிர்த்து எந்த அரசும் இயங்க முடியாது. இதை எதிர்த்து யாரும் இயங்க முடியாது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியை ஆட்சியை விட்டு அகற்றியது கூட இதே ஆளும...

மாபியா குழுவில் அண்ணன் உளவாளி, காவல்துறையில் தம்பி ஒற்றன்! - இன்சைடர் - துருக்கி தொடர்

படம்
       இன்சைடர் துருக்கி தொடர் 10 +--- மார்டின் ஸ்கார்சி எடுத்த ஆங்கிலப்படத்தை நினைவூட்டுகிற டிவி தொடர். அதாவது, மாபியா தலைவர், தனது வளர்ப்பு மகனை போலீஸ் துறையில் அதிகாரியாக வேலை செய்ய வைத்திருப்பார். அதேசமயம், அவரது குழுவில் போலீஸ் அதிகாரி ஒருவன் உளவாளியாக வேலைக்கு சேர்வான். இந்த இருவருமே உளவாளிகள்தான். யார் வெற்றி பெற்றார்கள் என்பதை ஆங்கிலப்படத்தில் காட்டியிருப்பார்கள். அதுவேறு. அதே லைன்தான். ஆனால் இங்கு வேறுபாடு ஒன்றுதான். இப்படி உளவாளிகளாக இருப்பவர்கள் அண்ணன், தம்பியாக இருந்தால் எப்படியிருக்கும்? துருக்கிக்காரர்கள் உணர்ச்சி கொந்தளிப்பு கொண்டவர்கள். தொடரும் கூட சாமானியமாக முடியாது. இழுத்துக்கொண்டே போகும். அதற்கு இந்த தொடரும் விதிவிலக்கல்ல. மெதின் என்பவர், செலால் என்ற கெபாப் கடையை நடத்தி வரும் மாபியா தலைவரிடம் வேலை செய்கிறார். மேற்பார்வைக்கு கெபாப் கடை என்றாலும் உள்ளுக்குள் சட்டவிரோத வேலைகளை செலால் செய்து வருகிறார். இவருக்கான ஆட்களை பிச்சைக்கார குழு மூலம் காஸ்குன் என்பவன் உருவாக்கித் தருகிறான். செலாலிடம் வேலை செய்பவர்கள் அனைவரும் அவரை அப்பா என்றே அழைக்கிறார்கள். அத...

புலிகளை பாதுகாக்க பாடுபட்ட வால்மிக் தாப்பர் - அஞ்சலிக் கட்டுரை

படம்
  சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும், புலிகளைப் பற்றிய ஆராய்ச்சியாளருமான வால்மிக் தாப்பர் காலமாகியுள்ளார். செரிமான உறுப்புகளில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார். உலகில் காடுகளை பாதுகாக்கும் செயல்பாட்டாளர்களில் முக்கியமானவராக வால்மிக் தாப்பர் இருந்துள்ளார். இரண்டு டஜன் நூல்களை புலிகளைப் பற்றி எழுதியுள்ளார். பிபிசி வெளியீடான லேண்ட் ஆப் டைகர் (1997) என்ற ஆவணப்படம் இவரது ஆளுமையை உலகிற்கு வலுவாக சொன்னது. வால்மிக் தாப்பர் கானுயிர்கள் பற்றி முறையாக கற்று அறிந்தவர் அல்ல ரந்தம்பூரில் உள்ள புலிகளைப் பார்த்து ஆய்வு செய்து ஐம்பது ஆண்டுகளாக அறிவை சேமித்து அதை உலகினரோடு பகிர்ந்து கொண்டார். 1987ஆம் ஆண்டு, ராந்தம்பூர் பவுண்டேஷன் என்ற தொண்டூழிய நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் வழியாக காடுகளை பாதுகாக்கும் செயல்பாடுகளை செய்தார். மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தஸ்ட்கர் என்ற மற்றொரு தொண்டூழிய நிறுவனத்தை தொடங்கி நடத்தினார். 2012ஆம் ஆண்டு டைகர் மை லைப், ராந்தம்பூர் அண்டு பியான்ட் என்ற நூலை எழுதினார். இரைச்சல் இல்லாத மனிதர்களிடமிருந்து தள்ளி தொலைவிலுள்ள இடங்களில் புலிகள் வாழ்கின்றன, வாழ விரும்புகின்றன என ச...

பாலியல் தேர்வு என்பது முக்கியமா?

படம்
 உளவியல் அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி பாலியல் தேர்வு என்பது முக்கியமா? இயற்கைக்கு முக்கியம். பொதுவாக பெண் விலங்குகள் முட்டையிட, குட்டி போட அதிக சக்தியை செலவிடுகின்றன. அப்படி பெறும் குஞ்சு, குட்டி எதிர்பார்த்த அளவுக்கு வலிமையாக இல்லையென்றால் இயற்கையை எதிர்த்து, அந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்டு உயிர் பிழைத்திருக்க முடியாது. ஆண்கள், பெண்களை ஈர்க்கவே பல்வேறு அழகான சிறகுகளைக் கொண்டிருக்கின்றன. பெரிதாக, எடை கூடுதலாக உள்ளன. இப்படி உள்ள ஆண்கள், அதிக பெண் இணைகளை அணுகி இனத்தைப் பெருக்க முடியும். பலவீனமான ஆண்களுக்கு பெண் இணைகள் கிடைக்காது. அப்படி கிடைக்காமல் பார்த்துக்கொள்வதில்தான் வலிமையான ஆணின் பெருமை உள்ளது. ஒரு ஆண், பெண்ணை ஈர்க்க அவளுக்கு நகைகளை வாங்கிக்கொடுப்பது, நல்ல உணவகத்திற்கு கூட்டிச்சென்று பிரியாணி வாங்கிக்கொடுத்து கையாலேயே பரிமாறுவது எல்லாம் எதற்காக? ஈர்ப்புக்காகத்தான். இணையை தன் அருகிலேயே வைத்துக்கொள்ளத்தான். ஐக்யூ டெ்ஸ்ட் என்றால் என்ன? இன்டெலிஜென்ஸ் கொசியன்ட். சிந்திக்கும் திறனை போட்டிகள் வைத்து சவால்களை தீர்ப்பதன் வழியாக முடிவு செய்து மதிப்பெண்களை வழங்குவார்கள். நினை...