இடுகைகள்

அதிகம் பயணம் செய்யாத நூல்களின் வழியாக உலகம் சுற்றிய தந்தையின் கதை! - மகனின் நினைவஞ்சலி

 அப்பாவின் லிஸ்ட்  என்னுடைய அப்பா, எப்போதும் பட்டியலை உருவாக்கி வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 539 நூல்களை வாசித்திருந்தார். ஞாயிறுதோறும் அவர் பார்த்த புக்நோட் நிகழ்ச்சியின் எபிசோடுகளை ஏழாண்டுகளாக குறிப்பு எடுத்து எழுதி வைத்திருந்தார். இந்த வகையில் 322 நிகழ்ச்சிகள் வருகின்றன.  தினசரி செய்யவேண்டிய வேலைகள் பற்றியும், தனது சிறிய குளிர்பதனப் பெட்டியில் வாங்கி வைக்கவேண்டிய குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள் பற்றியும் கூட பட்டியல் எழுதி வைக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர் இறந்துபோன அதிகாலை ஐந்து மணி வரைகூட படிக்கும் நாற்காலி அருகே இருந்து சிறிய நோட்டில் குறிப்புகளை எழுதி வைப்பதை கடைபிடித்து வந்தார். அவர் மறைந்தபிறகே அவருடைய பட்டியல் நோட்டுகளை அடையாளம் கண்டு எடுத்தேன்.  அப்பா, 1927ஆம் ஆண்டு பிறந்தவர். மசாசூசெட்சிலுள்ள லோவல் எனும் இடத்தில் பிறந்தவர். அப்பாவின் அப்பா, என்னுடைய தாத்தா, தோல் தொழிற்சாலையில் பணியாற்றியவர். அவருடைய கொள்ளுத்தாத்தா, அயர்லாந்து நாட்டிலிருந்து குடியேறியவர். கம்பளி ஆலையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அப்பா, சாதுரி...

அழையாத விருந்தாளி! - ஒரு பக்க கதை

கேசவன், பிரமாண்டமான தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்தான். அறைக் கதவைத் தட்டியதும், கம் இன் என்ற கம்பீரக்குரல் கேட்டது. மருத்துவர் ஜீவா என பெயர் பலகை கூற, நெற்றியில் சுருக்கங்களோடு வெள்ளை உடை அணிந்த மனிதர் அமர்ந்திருந்தார். ''நீங்க, கேசவன்தானே?, ஐம் ரைட். உங்களுக்கு கை கால்ல இருக்கிற விறைப்புத் தன்மை, வலி, வீக்கம் பத்தி டெஸ்ட் பண்ணோம். முடிவு, ஒரே நோயைத்தான் குறிக்குது'’ ''என்ன நோய்ங்க சார்?’’ ''சுருக்கமா ஆர்ஏ. முடக்குவாதம். துரதிர்ஷ்டவசமா இதைக் குணப்படுத்த முடியாது. ஆனா, நோயோட தீவிரத்தைக் குறைக்க மருந்து இருக்கு. இது, மரபணு ரீதியாக வர்ற நோய்’’. அதிர்ந்த கேசவன், தழுதழுத்த குரலில் ''இந்த நோய், என்னோட குழந்தைக்கும் வருமா?’’ ''வாய்ப்பு இருக்கு. குழந்தைக்கும் உங்கள மாதிரியே 30 வயசுக்கும் மேல வரலாம். ட்ரீட்மென்டை எப்ப தொடங்கலாம்னு சொல்லுங்க’’, என்று தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு மருத்துவர்,மற்றொரு நோயாளியைப் பார்க்க விடைபெற்று சென்றார். மனைவி பூங்கொடிக்கு கருப்பை நீர்க்கட்டி காரணமாக கரு தங்கவில்லையே என்ற மனக்குறை மறைந்து நிம்மதியும் பரவ, தளர்வாக பை...

மீண்டும் பத்து ரூபாய்! - 1page story

  மீண்டும் பத்து ரூபாய் ! அண்ணாச்சி , மல்லித்தூள் ஐம்பது கிராம்ல ஒண்ணு போட்டுருங்க என்று சொன்ன சங்கர் , சாமான் பையை வாங்கிக் கொண்டு திரும்பினான் . பைக்கில் பையை மாட்டிவிட்டு பில்லியனில் அமர்ந்தான் . அப்போது முன்னே நடந்து சென்ற பிச்சைக்காரர் , கையில் இருந்த பத்து ரூபாயை கீழே தூக்கிப்போட்டுவிட்டுப் போவதைப் பார்த்தான் . வேறு யாராவது பணத்தைப் பார்க்கிறார்களா என்று ஓரக்கண்ணில் பார்த்தான் . உடனே , நடந்து சென்று , கசங்கலாக இருந்த பத்து ரூபாயை எடுத்து பர்சில் இருந்த ஐநூறு ரூபாயோடு வைத்தான் . பத்துரூபாய் லாபம் என சந்தோஷப்பட்டான் சங்கர் . வீடு வரும் வழியில் கறிக்கடையைப் பார்த்தான் . பிள்ளைகள் ஞாபகம் வர , உள்ளே நுழைந்தான் . ஒரு கிலோ எவ்வளவுங்க என்று கேட்டுவிட்டு , பர்சிலிருந்து பணத்தை எடுக்க முயன்றான் . ஐநூறு ரூபாயைக் காணவில்லை . கண்டெடுத்த பத்துரூபாய் மட்டுமே இருந்தது . சங்கருக்கு உள்ளூர பீதியானது . கடையில் இருந்து வெளியே வந்தவன் , பர்சை எடுத்து மேலும் கீழுமாக பார்த்தான் . பர்ஸில் எந்த கிழிசல் , ஓட்டையும் இல்லை . அப்புறம் வெச்ச ஐநூறு ரூபாய் எங்கே ? என சங்கர் யோசித்தவாறே பைக்கை கிளப்பினான் . ...

திரைப்பட பாடலாசிரியர், ஆன்மிக பாடல்களை இயற்றிய பூவை செங்குட்டுவனுக்கு அஞ்சலி

 திரைப்பட பாடலாசிரியர், ஆன்மிக பாடல்களை இயற்றிய பூவை செங்குட்டுவனுக்கு அஞ்சலி காங்கேயத்திற்கு அதிகாலையில் தனியார் பேருந்தைப் பிடித்து சென்றுகொண்டிருந்தேன். எப்போதும் துள்ளிசை பாடல்களைப் போடும் ஓட்டுநர், அன்று பொழுது விடியவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, பாடல்கள் ஆன்மிகத்தில் முழுகியிருந்தன. ஷண்முகா ஷண்முகா என புஷ்பவனம் குப்புசாமி குழுவினர் பாடிக்கொண்டிருந்தனர். அடுத்து பாடியவரும், முருகன் பாடலையே பாடினார். அப்போது என் மனதில் பல்வேறு எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. ஒருவரிடம் உதவி கோரிப்பெற சென்று கொண்டிருந்தேன். அங்கு உதவி கிடைக்கலாம். கிடைக்காமல் போகலாம். இரண்டாவதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு.  மனக்கலக்கமடைந்த நேரத்தில், திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடல் தொடங்கியது. அப்பாடலைக் கேட்க கேட்க மனதிலுள்ள கலக்க எண்ணங்கள் குறைந்தது. அந்தப் பாடலின் வரிகளைக் கவனிக்க தொடங்கினான். முருகனுக்கு எண்ணற்ற மனக்கோயில்கள் உண்டு, அதில் அன்புக்கோ பஞ்சமில்லை என பெண் குரல் பாடியது. நிதானமாக குரலை உயர்த்தாமல் பாடியவிதம்தான் முக்கியமானது.  அந்தப் பாடலை எழுதியவர் இதை எப்படியான மனநிலை...

நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன்

  நவீன தமிழிலக்கிய அறிமுகம் ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் பொதுவாக இப்படியான நூல்களை எழுத்தாளர்கள் எழுதுவது அரிது. எழுதினால் நிறைய வசைகளே வீடு தேடி வரும். பரவாயில்லை என எழுத்தாளர் ஜெயமோகன் துணிந்து எழுதியிருப்பார் போல. நூலை வாசித்தாலே நீங்கள் அதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.  தன்னுடைய ரசனை அடிப்படையில் ஜெயமோகன் வாசித்த பல்வேறு எழுத்தாளர்களை வகைமைபடுத்தி நூல்களை விமர்சித்து எழுதியுள்ளார். பெரும்பாலும் இடதுசாரிகளுக்கு இலக்கியப் பரப்பில் பெரிய இடம் இல்லை. இப்படி அவர்களது படைப்புகள் பற்றி விமர்சனம் செய்வது அவர்களுக்கு கோபத்தை உருவாக்ககூடும். ஆனால், நூலை வாசிக்க வாசிக்க ஜெயமோகன் அவர்களின் பரந்துபட்ட இலக்கிய வாசிப்பு நம்மை முற்றாக ஆட்கொள்கிறது.  நவீன தமிழிலக்கிய அறிமுகம் போன்ற நூல்,இலக்கிய வாசிப்புக்கு வரும் வாசகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இந்த நூலும் அதேபோல இலக்கியத்தை வகைமை பிரித்து எப்படியான நூல்கள் இங்குள்ளன. அதிலுள்ள பல்வேறு இசங்கள் என்னென்ன என விளக்கியுள்ளது. இதை தெரிந்துகொண்டவர்கள் அதற்கேற்ப நூல்களை எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்து நூல்களை வாசித்துக்கொள்ளலாம். இதனால் தேவ...

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்!

வங்கி இணைப்பு -    மாற்றங்கள் இவைதான்! இந்திய அரசு, பத்து பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நான்காக மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அதன் வணிகம், கடன் வழங்கும் திறனை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைள்    முழுமையடைய    தோராயமாக ஓராண்டு பிடிக்கும். வங்கிகள் இணைப்பால் வங்கிகளில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? 1.பயனர்களின் வங்கிக் கணக்கு எண் மாற்றப்படலாம். ஒன்றிணையும் இரு வங்கிகளில் வெவ்வேறு கணக்கு எண்களை வைத்திருப்பவர்களுக்கு, ஒரே எண் அளிக்கப்படும். தொலைபேசி எண் மேம்படுத்தும் அறிவுரை கூறப்படலாம். 2.வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி எண் ஆகியவையும் கூடுதலாக மாற்றப்படும். வங்கியில் அளிக்கப்பட்ட செக் புத்தகம், கடன்தொகை    தவணை ஆகியவை மாற்றத்தைச் சந்திக்கலாம். 3. வங்கிகள் இணைக்கப்படுவதால், வங்கிக் கிளைகள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. இணைக்கப்படும் வங்கிகள் ஒரே பகுதியில் இரண்டு இருந்தால், சிறிய வங்கியின் கிளைகள் மூடப்படும். ஏடிஎம் வசதிகள் குறைக்கப்பட வாய்ப்பில்லை. முன்னர் இணைக்கப்பட்ட விஜயா, தேனா, பரோடா வங்கிகளின் ஏடிஎம்கள் இன்றும் செயற்பட்டு வருகின்றன. 4. கட...

தொழிலதிபர்களை மிரட்டும் வரி!

தொழிலதிபர்களை மிரட்டும் வரி! அண்மையில் கர்நாடகாவைச் சேர்ந்த காபி தொழிலதிபர் சித்தார்த்தா, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின்னணியில் கடனும் அரசின் வரி மிரட்டல்களும் இருந்தன. இந்திய அரசின் வங்கி திவால் சட்டம் போன்றவை மோசடிகளைத் தடுக்கும் நல்ல முயற்சிகள்தான். ஆனால், சந்தை ஏற்றத்தாழ்வுகளில் தவிக்கும் நிறுவனங்களை வரித்துறை வரைமுறை கடந்து மிரட்டுவது நியாயமற்றது என்ற குரல் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளது. “நீங்கள் ஒரே கொள்கையை அனைத்து வணிகங்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியாது. தொழில்முயற்சி தோல்வி அடைந்தால், உடனே தொழிலதிபர்களுக்குத் தண்டனை வழங்க நினைப்பது தவறு” என்கிறார் எஸ்ஸார் நிறுவனத்தைச் சேர்ந்த பிரசாந்த் ரூயா. உலக நாடுகளிலுள்ள அனைத்து தொழில்களும் வர்த்தகம் தொடர்பான ஒரே கண்ணியில் இணைந்துள்ளன. அதில் அமெரிக்கா சீனா நாடுகளுக்கிடையேயான வர்த்தகப்போர் கூட, வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தொழில்துறைக்கான கடன் வழங்குதலில் கவனமாக ஆராய்ந்து கடன் வழங்குதலை கடைப்பிடிப்பது வாராக்கடன் பாதிப்பைக் குறைக்கலாம். இந்தியா தொழில்கள் மீது அதிக வரி மற்றும் நெருக்குதலை அளிப்பதால், கடந்த ஆண்டு ...