இடுகைகள்

பாரதி அழகுத்தமிழ் எழுத்துருக்கள்! - இலவசமாக பயன்படுத்தலாம்

படம்
        தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வலைத்தளத்தில் பாரதி அழகுத்தமிழ் எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றை தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். தனிப்பட்ட பயன்பாடு, தொழில்பயன்பாடு என ஏதாகிலும் இருந்தால் சரிதான். பெரிதாக கட்டுப்பாடுகள் கிடையாது. மொத்தம் 800 எழுத்துருக்கள் உள்ளன. பாரதி புத்தகாலயம், ஃப்ரீதமிழ்பான்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி. இவர்களது உழைப்பின் வழியாக இணையம் வழியாக தமிழ் எழுத்துருக்கள் நீண்டகாலம் நிலைத்திருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எழுத்துருக்களை புதிதாக பயன்படுத்த விரும்புபவர்கள் தமிழ் இணையக்கல்விக்கழகம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறை வலைத்தளத்தில் எழுத்துருக்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 

ஓவியத்தில் இருந்து உயிர்பெற்று வரும் தொன்மை மருத்துவர்!

படம்
      காலம் கடந்து வரும் தொன்மை மருத்துவர் சீனதொடர் யூட்யூப் சீனாவைப் பொறுத்தவரை நிறைய டிவி தொடர்களை ஒன்றாக இணைத்து அதை திரைப்படம் என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள். அப்படியான டிவி தொடர்தான் இது. அனைத்து டிவி தொடர்களிலும் இரு பெயர்கள் உண்டு. ஒன்று பெரிதாக சீன எழுத்தில் இருக்கும். மற்றொன்று சிறியதாக ஆங்கிலத்தில் உள்ளது. ஆங்கில சப்டைட்டில் போட்டு உலகளவில் வியாபாரம் பார்க்கிறார்கள். இந்த தெளிவும் வியாபார புத்தியும்தான் சீனாவுக்கு பெரிய பலம். இளம்பெண், பாரம்பரிய சீன மருத்துவமனையை நடத்தி வருகிறாள். ஆனால் அவளுக்கு நோயாளிகளின் நோயைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. உண்மையாக என்ன நோய் என்று கண்டுபிடித்தாலும் அதைக்கூறாமல் ஏராளமான மருந்துகளை பரிந்துரைத்து அதையும் தனது கடைவழியாக விற்று காசு சம்பாதிக்கிறாள். இதில் அவளது தம்பியும் உடன் நிற்கிறான். நாயகியின் தந்தைக்கு மகள் முறையாக மருத்துவம் பார்ப்பதே பிடித்தமானது. அவள் தில்லாலங்கடி வேலை பார்த்து காசு சம்பாதிப்பது பிடிக்கவில்லை. இந்த சூழலில், அவர்களது வீட்டில் மாட்டியுள்ள பழைய தொன்மையான ஓவியத்தின் முன் நாயகி நின்று பிரார்த்தனை செய்கிறாள...

சந்த நயம் கொண்ட அழகான காதல் பாடல்கள்! - பாவேந்தரின் காதல் பாடல்கள்

படம்
      பாவேந்தரின் காதல் பாடல்கள் கவிஞர் பாரதிதாசன் மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் மதுரை புரோஜெக்ட் என்ற பெயரில் சங்க இலக்கியங்கள் அனைத்தும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கும்படி தன்னார்வலர்கள் செய்திருக்கிறார்கள். அதை வேண்டுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம். பிடிஎப் அதிக நினைவகத்தை பிடிக்கும் என நினைத்தால், ஹெச்டிஎம்எல் கோப்பாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பாவேந்தர் பாரதிதாசனின் காதல் பாடல்கள் அனைத்துமே அழகானவை. சந்த நயமும், எதுகை மோனையும் கூட பாடல்களுக்கு அழகு சேர்ப்பவையாக, அணிகலன்கள் போலவே அமைந்துள்ளது. அதேசமயம், தமிழுக்கு தமிழ்நாட்டிற்கு ஆபத்து எனும்போது எரிமலையின் லாவா குழம்பு கொதிப்பதைப் போல பாடல் வழியாக கொதிக்கிறார். காதல் பாடல்களில் எப்படி அரசியல், புரட்சி, போராட்டம் என வரும் என சிலர் காரண காரியம் கேட்பார்கள். அதெல்லாம் அப்படித்தான். இந்தி திணிப்பு பற்றிக்கூட தீமனத்து வடக்கர், நம் கால்மாட்டில் நிற்கின்றார் என எச்சரிக்கை செய்கிறார். இன்றுவரை வரைக்கும் அந்த தீமனம் வருந்தவில்லை. மனம் மாறவில்லை. அனைத்து பாடல்களுக்குமான தலைப்பு எளிமையானது. பாடல்கள் செந்தமிழில் எழுதப்...

மக்களின் புகார்களை பரிசீலித்து தீர்த்து வைக்க முயலும் அமலாக்கத்துறை! என்போர்ஸ்மென்ட் டிபார்ட்மென்ட் - சீன தொடர்

படம்
    என்ஃபோர்ஸ்மென்ட் டிபார்ட்மென்ட் சீன தொடர் 40 எபிசோடுகள் யூகு ஆப் சீனதொடர்களைப் பொறுத்தவரை இழு இழுவென இழுக்குதடி என பார்வையாளர்கள் சொல்லாவிட்டாலும் தயாரிப்பாளர்களே நாற்பது எபிசோடுகள் அவர்களாகவே போய்விடுகிறார்கள். இதில் உள்ளூர் ஓடிடியான யூகு சில எபிசோடுகளை இலவசமாகவும் மீதி அனைத்தையும் விஐபி என சந்தா கட்டி பார்க்கும்படி மாற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் இத்தொடரின் பதினெட்டு எபிசோடுகள் மட்டுமே யூட்யூபில் இலவசமாக கிடைக்கிறது. பதினெட்டு எபிசோடுகளில் கதை எதை நோக்கி நகர்கிறது என புரிந்துகொள்ளலாம். கு லின், நீதிபதியாக இருக்கிறார். சட்டம் பற்றிய பரவலான அறிவுக்காக ஆறுமாதங்கள் வேறு துறையில் வேலை செய்வதற்காக பணிக்கிறார்கள். அப்படி அவர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார். அங்கு அதன் தலைவர் நீதிபதி சு என்பவரோடு முட்டல், மோதல் ஏற்பட்டு பிறகு உறவு நட்பாகி காதலாக மாறவும் தொடங்குகிறது. காதலுக்கு போகவேண்டாம். மக்கள் சேவையை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம். எழுதி வைத்த சட்டமே பிரதானம். அதை உரியபடி நிறைவேற்றினால் போதும் என இறுக்கமாக நடந்துகொள்கிறார் சு.கு லின், சட்டம் இருக்கிறபடி இருக்க...

ரோனி சிந்தனைகள் - அழிவு தரும் மட்டற்ற மகிழ்ச்சி

படம்
  ரோனி சிந்தனைகள் ஊருக்கு இளைத்தவன் என்பவன் தனது பலவீனத்தை வெளிப்படையாக தெரிவிப்பவனே. அதை வைத்தே அவன் கூறிய நல்ல விஷயங்களைக் கூட சேறு வீசி இழிவுபடுத்தி இன்பம் பெறுகிறவர்கள் உலகில் நிறையப்பேர் உண்டு. ஒருவனை தோற்கடிப்பது என்பது வெளியுலகில் காண்பதைப் போன்ற கைத்தட்டல்களோ, கோஷங்களோ இருப்பது அல்லது இல்லாமல் இருப்பது என்பதல்ல. மனதளவில் அவனை எழ முடியாமல் முற்றாக அழித்து கீழே தள்ளுவதுதான். செயல் என்பது வெளியே தெரிவது. அதற்கான சிந்தனை, எண்ணம், கனவு என்பது மனதில் உருவாகி வளர்வது. அக்கனவுகளை உடைத்துவிடவே பலரும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். உயர்ந்த கோட்டைகள் தரைமட்டமாக்கப்படுவது தொடர்வது இதன் காரணமாகத்தான். உருவாக்குவது படிப்படியான ஒரு நிகழ்ச்சி. ஆனால், அழிவு அல்லது சிதைவு என்பது உடனே நடப்பது அதற்கு மக்களின் பங்களிப்பும் ஆர்வமும் ஈடுபாடும் கூட அதிகம். ஒருவருக்கு நாயகன் என்பவர் அனைவருக்கும் அதேபோல இருக்கவேண்டுமென்பவதில்லை. அவரவர் கதையில் அவர்கள்தான் நாயகன். வில்லன், துணைப்பாத்திரங்களை நிதானமாக பொருத்திக்கொள்ளலாம். நேர்மை, கைராசி, நம்பிக்கை என்பதெல்லாம் காலம்தோறும் மதிப்பு கூடி வருபவை. ஒரு நல்ல...

பரிசும் தண்டனையும் - பாயும் பொருளாதாரம்

படம்
      6 பாயும் பொருளாதாரம் ஒரு தொழில்துறையில் போட்டிக்கு அதிக நிறுவனங்கள் இல்லாமல் இரண்டே இரண்டு நிறுவனங்கள் இருந்தால் அதை ஒலிகோபோலி என்று குறிப்பிடுகிறார்கள். இதில் ஒரு நிறுவனம் செய்யும் விலைகுறைப்பை இன்னொரு நிறுவனமும் எதிர்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றியமைக்கவேண்டும். இல்லையெனில் வணிகத்தில் பாதிப்பு ஏற்படும். லாபமும், நஷ்டமும் இரு நிறுவனங்களின் செயல்பாட்டிலும் உள்ளது. ஒன்றையொன்றைச் சார்ந்தே வணிகத்தின் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கட்டுமானம், தொலைத்தொடர்பு ஆகிய துறைசார்ந்த பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டின் நிறுவனங்களை எதிர்க்க தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவதுண்டு. இதை கார்டெல் என குறிப்பிடலாம். இப்படி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவது, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் இப்படியான வணிகப்போக்கு நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளனர். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக தொலைத்தொடர்பு வசதியை இந்தியாவில் வழங்கப்போகிறார் என்றால் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், ஆட்சித்தலைவருக்கு அணுக்கமான குஜராத் தொழிலதிப...

மாவோவின் இளமைக் காலத்தை விளக்குகிற நூல்!

படம்
  மாவோ - ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் எட்ஹர் ஸ்னோ சவுத் விஷன் புக்ஸ் தமிழில் எஸ் இந்திரன் ப.127 இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1937ஆம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகே வெளியுலகிற்கு சீனா, அதன் கம்யூனிச தலைவரான மாவோ பற்றிய முழுமையான அறிவு கிடைத்தது. மாவோவின் நூற்றாண்டான 1993ஆம் ஆண்டு மூல நூலின் மொழிபெயர்ப்பு சுருக்கமாக தமிழில் மொழிபெயர்ப்பாளர் இந்திரனால் எழுதி வெளியிடப்பட்டது. மாவோவின் இளமைப்பருவம் நூலில் சிறப்பாக வாசகர்களின் மனதில் பதியும்படி எழுதப்பட்டுள்ளது. மூல நூலின் சுருக்கம் என்பதால் மற்ற பகுதிகள் எல்லாம் வேகமாக கடந்துசெல்கிறது. அவை எவற்றிலும் மனதில் பதியும் எந்த சம்பவமும் இல்லை. அடிப்படையாக நூல் வழியாக தெரிந்துகொள்வது என்னவென்றால், நூலிலுள்ள சம்பவங்களை எட்ஹரிடம் ஐந்து மணிநேரத்தில் மாவோ கூறியிருக்கிறார். அவற்றை அவர் பதிவு செய்து அல்லது குறிப்பெடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். நூலில் ஆச்சரியமூட்டும் விஷயம், அவரோடு வேலை செய்த தோழர்களுக்கு என்ன ஆனது, இப்போது என்ன செய்கிறார்கள் என்பதையும் கூட அக்கறையோடு பிராக்கெட் போட்டு எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த தகவல் வாசகர்களுக்கு எந்த...