இடுகைகள்

சீனாவின் கல்வி சீர்திருத்தம் - கல்வியில் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு!

படம்
வாழ்ந்து கெட்டுப்போன நாட்டிற்கு அதன் கடந்தகாலமே எதிரி. சீனாவில் காலத்திற்கேற்ப கொண்டு வரப்படும் மாற்றங்களை தடுப்பதும் இப்படியான கடந்தகால பெருமைகள்தான். சீனாவில் குடி அரசு செயல்படுத்திய கல்வி சீர்திருத்தங்கள் நாட்டின் மேற்கு, மத்தியப் பகுதிகளில் உள்ள பள்ளியில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. நகரம், கிராமம் ஆகியவற்றிலுள்ள மாணவர்களிடையே திறன் இடைவெளி அதிகரித்தது. அரசின் சீர்திருத்தம் அதை அடையாளம் கண்டு குறைக்கவில்லை. மேம்படுத்தவுமில்லை. சீனா, தனது சீர்திருத்தங்களுக்கு முன்னதாகவே தேர்வுமுறை, மதிப்பெண் என தனது நடைமுறை கல்விமுறையில் பிரச்னை இருப்பதை அடையாளம் கண்டுகொண்டது. பிறகே, மேற்குலக நாடுகளில் உள்ள கல்வித்தரத்தை புரிந்து அக்கொள்கைகளை நகல் எடுத்து தனது கல்விமுறையில் கொண்டுவர முயன்றது. தொடக்கத்தில் புதுமைத்திறனோ, கண்டுபிடிப்பு ஊக்குவிப்போ சீன கல்விமுறையில் கிடையாது. எனவே, மேற்கு நாடுகளிடமிருந்து இப்படியான புதுமையான அம்சங்களை கடன் பெற்றது. பாடத்திட்டங்களை ஆசிரியர்கள் ஏற்று புரிந்துகொண்டால் மட்டுமே அது மாணவர்களை சென்றடையும். ஆசிரியர்கள் சொல்லித்தருவதை மாணவர்கள் புரிந்துகொண்ட...

விலங்குகளின் வயதை மனிதர்களோடு எப்படி ஒப்பிடுவது?

படம்
     அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஆபத்தான நாய் இனங்கள் எவை? பிட்புல், ராட்வெய்லர், ஜெர்மன் ஷெப்பர்ட் என்பவை முதல் மூன்று இடங்களைப் பிடிக்கின்றன. இந்த வகை நாய்களை வளர்க்கும் முன்னர் அவை பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம். நாய்களுக்கு பயிற்சியும் முக்கியம். உங்கள் மாநிலம், நாட்டில் எந்த நாய் இனங்கள் வளர்க்கலாம், வளர்க்கக்கூடாது என அரசு விதிகளை உருவாக்கியிருக்கும். அதை பின்பற்றினால் எப்பிரச்னையும் எழாது. நாய்கள் ஊளையிடுவது எதற்காக? அதனுடைய இடத்தைப் பிற நாய்களுக்கு தெரிவிப்பதற்காக. ஊளையிடுதலை நன்றாக கவனித்தால் ஆம்புலன்சின் சைரன் போலவே ஒலிக்கும். மர்ஜோரி என்ற நாயின் பங்களிப்பு என்ன? மாங்கெரல் இன நாயான மர்ஜோரிக்கு நீரிழிவு நோய் இருந்தது. அதற்கு இன்சுலின் செலுத்தி உயிரைக் காத்தனர். மருத்துவத்துறையில் இதுபற்றி மருத்துவர்கள் ஆராய மர்ஜோரி உதவியது. குரைக்காத நாய் இனம் எது? பசென்ஜி என்ற நாய் இனம் குரைப்பதில்லை. மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழமையான நாய் இனம். விலங்குகளின் வயது, மனிதர்களின் வயது எப்படி ஓப்பீடு செய்வது? நாய்களுக்கு ஒரு வயது என்றால் அது மனிதர்களின் பதினை...

தீண்டத்தகாதவர்கள் பிறப்பும், வாழ்வும், இறப்பும் என்றும் மாறாதவை!

படம்
  நடைமுறையில் அகிம்சை இந்துக்களின் அகிம்சை முறை எனும் கருத்தில் வெளிநாட்டினர் எளிதாக ஏமாந்துபோய்விடுகிறார்கள். உலகிலுள்ள கொடூரமான வன்முறை கொண்ட சமூகம் இந்துக்கள்தான். இவர்கள்தான் அகிம்சையை உடைத்து எறிபவர்களாக இருக்கிறார்கள். ஒரு உயிரைக் கொல்வது, காயப்படுத்துவது தவறு, அதை செய்யக்கூடாது என்று தொடக்க கால உபநிஷத்தில் கூறப்படவில்லை. விலங்குகளை காயப்படுத்தக்கூடாது என பார்ப்பனர்களில் ஒரு பிரிவு கூறுகிறார்கள். ஆனால், அப்படி கூறுவதன் அர்த்தம் அந்த செயலை எதிர்ப்பதால் அல்ல. அவற்றை தேவையில்லை என்று கருதும் மனப்பான்மையால் என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தத்துவவாதி ஆல்பெர்ட் ஸ்வெய்ட்சர் கூறினார். இந்துமதம், சகிப்புத்தன்மை, அகிம்சை ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது என கூறுவது கருப்பு பொய் ஆகும். இந்துக்களின் சகிப்பற்ற தன்மையே தீண்டாமையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. வரலாற்று ரீதியான ஆவணங்களில் இந்து மன்னர்கள், பௌத்தர்களை, சமணர்களை படுகொலை செய்த சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று உயர்சாதி இந்துவும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியருமான ரோமிலா தாப்பர் கூறினார். வரலாற்று அடிப்படையில், அகிம்சை, சகிப்புத்...

பிழைத்திருப்போம் - எங்கே செல்லும் இந்தப்பாதை?- தங்குவதற்கான இடம், அவசியமான பொருட்கள்

படம்
    இறுதிப்பகுதி     பிழைத்திருப்போம் எங்கே செல்லும் இந்தப்பாதை? பேரிடர், கலவரம், வதந்தி, பொய் வழக்கு என எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். நிம்மதியாக இருக்க தலைக்கு மேலே கூரை வேண்டும். அதாவது தங்குவதற்கு இடம்வேண்டும். அது பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம் அதற்கான செலவும் குறைவாக இருக்கவேண்டும். இடங்களை முன்னமே கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள். தூரம் போகும் தூரம் குறிப்பிட்ட தொலைவில் இருக்கவேண்டும். வண்டியில் நீங்கள் போய்க்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? பெட்ரோலும் வண்டியில் குறைவாக இருக்கும்போது ஏதாவது ஒரு இடத்தை உறுதி செய்து அதை நோக்கி சென்றே தீரவேண்டும். அல்லாதபோது உங்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். பல்வேறு இடங்கள் ஒரு கெட்ட விஷயம் நடக்கும்போது, வீட்டின் கதவை மட்டும் திறக்காது, ஜன்னல்களையும் திறந்துகொண்டு வரும் என்பார்கள். மோசமான விஷயங்கள் நடைபெறும்போது, உடனே தப்பிக்க நான்கு திசைகளுக்கு நான்கு இடங்கள் என தயாரித்து வைத்துக்கொண்டால் உதவியாக இருக்கும். ஒரே இடத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அது ஆபத்தும் கூட. தனிக்குரல் கலைஞரான குணால் கம்ரா, தனது பகடி...

விரைவில் - மின்னூல் வெளியீடு - உபசாந்தம் - உளவியல் நூல் - இராம பாரதி

படம்
 

சீனாவின் கல்வி சீர்திருத்தங்கள் - நாட்டுப்பற்றை அடிப்படையாக கொண்ட பாடத்திட்டம்!

படம்
நாட்டில் எந்த சீர்திருத்தங்கள் வந்தாலும் அதற்கு கலந்துரையாடல்கள், விவாதங்கள் அவசியம். பல்வேறு தரப்பு, கொள்கைகளை விவாதித்தால்தான் பல்வேறுவிதமான பார்வைகள் நமக்கு கிடைக்கும். அதுவே, நேர்மறை, எதிர்மறையான விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி அதை புரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் சீனாவில் கல்வி சீர்திருத்தங்கள் வேகம் பெற்றது தொண்ணூறுகளுக்கு பிறகுதான். சீனா போன்ற தொன்மை பெருமை கொண்ட நாட்டில், அதன் கடந்த காலமே சீர்திருத்தங்களுக்கு எதிராக மாறுவது புதிதான ஒன்றல்ல. சீனாவில், 1990ஆம் ஆண்டு இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு கல்வி புத்துயிர்ப்பு செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2001ஆம் ஆண்டு, அடிப்படை கல்வித்திட்ட சீர்திருத்தம் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டது. 2011ஆம் ஆண்டு சீனாவின் கல்வித் திட்டங்களில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. காலப்போக்கில் மேம்பாடுகள் இருந்தன என்பது உண்மை என்றாலும் மத்திய அரசின் மேலாதிக்கம் கூடுதலாக இருந்தது. 2017ஆம் ஆண்டு அதிபர் ஷி ச்சின் பிங்கின் கருத்துகள் அடிப்படையில் நாட்டுப்பற்று தொடர்பான கருத்துகள், பாடங்கள் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இவை முழுக்க மாணவர்கள...

சாதி என்பது ஒருவகையான இந்து மனநல நோய்!

படம்
  இந்து பார்ப்பன கருத்தியல் என்பது, லாபத்தை அதிகரித்து மேல்சாதியினரை வைத்து சொத்துக்களை கட்டுப்படுத்தி தங்களது அந்தஸ்து, பிற சாதிகளுக்கு இடையிலான உறவைக் காப்பாற்றிக்கொள்வதாக இருக்கிறது. பார்ப்பன சமூகம், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, சமூகத்திலுள்ள பிற சாதி இளைஞர்களை தவறாக வழிநடத்தி தங்களது கருத்தியலை பாதுகாக்க போரிடுமாறு செய்கிறார்கள். இந்த வகையில் அவர்கள் மக்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கல்வி என்பது இந்தியாவுக்கு எந்த தீர்வையும் கொண்டு வராது. சாதி, தீண்டாமை என்பது இந்தியாவில் பரவலாக கடைபிடிக்கப்பட காரணமே படித்த மக்கள்தான். சாதி என்பது அவர்களின் மூளையில் உள்ளது. இது ஒருவகையான இந்து மனநல நோய். இந்து மதம் என்பது அமைப்பு என்பதையும் கடந்தது. இ்ங்கு வாழும் ஒவ்வொரு இந்துவும் சாதி, தீண்டாமையை கடைபிடிப்பதை தனது மதக்கடமையாக கருதுகிறான். இதில் பொருளாதார அமைப்பும் உண்டு. முதலாளி, தனது அடிமையை நன்றாக சோறு போட்டு, உடை உடுத்த வைத்து, தங்குவதற்கு இடம் கொடுத்து சந்தைமதிப்பு குறையாமல் பார்த்துக்கொள்வாரோ அதுபோலத்தான் இங்கும் நடைபெறுகிறது. தீண்டாமை என்பதைப் பொறு...