இடுகைகள்

நல்ல பழக்கவழக்கங்களுக்கு சூழ்நிலை முக்கியமா?

படம்
 கெட்ட பழக்கங்களை கைவிடமுடியாததன் காரணம் என்ன? கெட்ட பழக்கம் என்று இங்கு குறிப்பிடுவது ஒருவரின் உடல்நலனைக் கெடுப்பது மட்டுமே. ஒருவரின் மனநிலை, சமூகத்தை, நாட்டை கெடுக்கும் பழக்கவழக்கங்கள், மூடநம்பிக்கைகள் தனி. கெட்ட பழக்கம் என்று சொல்வதை பான்பராக் போடுவது, புகையிலை பயன்படுத்துவது, மதுபானம் அருந்துவது ஆகியவற்றை வைத்து புரிந்துகொள்ளலாம். இதன்படி, ஒருவரின் மூளையில் கெட்ட விஷயங்களை செய்யும்போது குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் உருவாகிறது. அவையே திரும்ப திரும்ப புகையிலை பயன்படுத்துவது, பான்பராக் போடுவது ஆகிய செயல்களை ஊக்குவிக்கிறது. நல்ல பழக்கங்களை உருவாக்கிக்கொள்ள இதுபோல மூளையில் பதியும் அளவுக்கு ஏதேனும் பரிசுகளை தருவதாக செய்துகொள்ளவேண்டும். உங்களுக்கு நீங்களே பரிசு அளித்துக்கொள்ளலாம். மன அழுத்தம் காரணமாக மது அருந்தினால், மதுவை நிறுத்திவிட்டு தியானம், உடற்பயிற்சி என கவனம் செலுத்தலாம். நல்ல பழக்கங்களை பழகி பயிற்சி செய்ய காலம் எடுக்கும்.  நல்ல பழக்கங்களை தொடர்வது எப்படி? இரு நிமிடங்கள் உடற்பயிற்சி அல்லது தியானத்தை செய்யவேண்டும். அதை அப்படியே மெல்ல அதிகரித்து கொள்ளலாம். ஒரேயடியாக அதிகளவு ச...

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்கள்

படம்
 சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்கள் ராமச்சந்திர குகா கிழக்கு பதிப்பகம் சுதந்திர இந்தியாவில் சிறுபான்மையினர், ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலை கொண்ட உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல் மூலம் என்னென்ன பிரச்னைகளை எதிர்கொண்டனர் என்பதை நூல் சுருக்கமாக அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் ஆதரவு மனநிலையோடு, முஸ்லீம்களின் தேச விசுவாசத்தை சந்தேகப்பட்டது, அரசியல் பிரசாரங்களில் பேசியது, அதிகாரப்பூர்வமாக முஸ்லீம்களை அரசு பதவியில் இருந்து களையெடுத்தது எல்லாமே ராமச்சந்திர குகாவின் எழுத்தில் பதிவாகியுள்ளது.  இதைப் படித்தால், மதவாத சக்திகள் வல்லபாய் படேலுக்கு எதற்கு சிலை வைத்தார்கள் என்று புரிந்துகொள்ள முடியும். இந்த நூலுக்கான விமர்சனத்தை எழுதும்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கிறித்தவ கன்னியாஸ்தீரிகள் மதமாற்றம் செய்ததாக இந்து குண்டர் அமைப்பு கொடுத்து புகாரின் பெயரில் கைதாகியுள்ளனர். ஏற்கெனவே, இ்ந்திய ஐக்கிய நாடு என்பது நொறுங்கிக்கொண்டிருக்கும் குடியரசுதான். இனி இந்த நாடு, எத்தனை துண்டுகளாக உடையப்போகிறது என்பதுதான் எதிர்பார்க்க வேண்டிய ஒரே விஷயம்.  நூலில் நேரு கொண்டிருந்த க...

ஒருவரை கடத்தி வைத்து மூளைச்சலவை செய்து மாற்ற முடியுமா?

படம்
 science questions and answers mr.roni ஒருவரை கடத்தி வைத்து மூளைச்சலவை செய்து மாற்ற முடியுமா? உளவியலாளர் ஜூடித் ஹெர்மன், 1992ஆம் ஆண்டு ட்ராமா அண்ட் ரெக்கவரி என்ற நூலை எழுதினார். இந்த நூலில் மூளைச்சலவை செய்வது பற்றி விளக்கி எழுதியுள்ளார். முரட்டு சங்கிகள், முட்டாள் சங்கிகள் தெலுங்கில் இந்துத்துவ படங்கள் எடுப்பதை பார்த்து வருகிறோம். எதையும் ஆராயாமல் முரட்டு முட்டாள்தனத்ததை எப்படி செய்வது என நூலில் கூறப்பட்டுள்ளது. இது வெறும் கோட்பாடு மட்டுமல்ல. பல்வேறு மத வழிபாடுகளைக் கொண்ட கல்ட்டுகள், சிறைச்சாலை கைதிகளுக்கு இப்படியான மூளைச்சலவை வேலைகளை செய்வார்கள். அடிப்படையில் ஒருவரின் முழு வாழ்க்கையையும் கட்டுப்படுத்தி தன்மதிப்பை இழக்கச் செய்தல்தான் முக்கியப் பணி. இடையறாது ஒருவரை உடல், மனம் என இரண்டிலும் வதைத்து சித்திரவதை செய்தல் அவசியம். அப்போது ஒருவரின் தன்மதிப்பு குன்றி, அதுவரை தான் கடைபிடித்த கொள்கைகளுக்கு மாறாக இயங்கத் தொடங்குவார். அதுதான் வெற்றி. மத அடிப்படைவாதிகள் இப்படித்தான் வெல்கிறார்கள். ஒருவர் உண்மை, ஆராய்ச்சி என்று பேசினால் மதவாதிகள் வன்முறையை கையில் எடுத்து எதிரிகளின் முதுகெலும்பை உ...

சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா?

படம்
 சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா? அண்மையில் சிங்கவலிமையை மனிதர்களுக்கு கடத்தும் பேரீச்சை பழ பிராண்டு ஒன்றை வாங்கினேன். கால்கிலோ பாக்கெட் 105 ரூபாய். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ரீதியில் கடையில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொண்டு இருந்தது. விவகாரம் என்னவென்றால், உண்மையில் அந்த பேரீச்சம்பழம் தரமானதா இல்லையா என்பதுதான். பாக்கெட் பளபளவென அழகாக உருவாக்கி இருந்தனர். விஷயம் வீக்காக இருந்தால் பப்ளிசிட்டி பீக்காக இருக்கும் என்ற தத்துவப்படியே பழ பிராண்டு இருந்தது.  தேயிலை, காபித்தூளுக்கு கொடுப்பது போல ஜிப்லாக் பாக்கெட்டை தயாரித்து இருந்தார்கள். ஆனால், ஈராக்கில் இருந்து பெறப்படும் பேரீச்சம்பழம் பக்குவப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்டுகிறது. அது எந்தளவுக்கு சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியை தரும்? பழம்தான் புதிதாக இருக்குமா என்ன? அதற்கு எதற்காக ஜிப்லாக் பாக்கெட். வெட்டி விளம்பரம்தான். முக்கியமாக பழத்தை கழுவி சாப்பிடுங்கள் என பான் இ்ந்தியா லெவலில் பன்மொழி முன்னறிப்பு வேறு. ஆனால், தண்ணீரில் கழுவினால் பேரீச்சையில் கொட்டை மட்டுமே மிஞ்சியது. அந...

இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? - உடற்பயிற்சி கலாசாரமே இல்லாத மதவாத நாட்டின் வெட்டிப்பெருமை!

படம்
  இந்தியா ஒலிம்பிக்கை நடத்தி ஆவதென்ன? இந்தியாவில் உள்ள பள்ளிகளில் உடற்கல்வி வகுப்பை கடன் வாங்கி பல்வேறு வகுப்புகளை நடத்துவார்களே ஒழிய அடிப்படையிலான விளையாட்டை, உடற்பயிற்சியை ஒருவருக்கு வழங்க அனுமதிப்பதில்லை. இந்த லட்சணத்தில் இந்தியா போட்டியிடும் போட்டிகளில் வெற்றிவாகை சூடவேண்டுமென ஊடகங்கள் ஊளையிடுகின்றன. பாலியல் சுரண்டல், தாக்குதல், வன்முறை இதற்கெல்லாம் ஈடுகொடுத்து வீரர், வீராங்கனைகள் போட்டிக்கு செல்வதே பெரியது. அவர்கள் பதக்கம் வெல்வது அடுத்த சோதனை. அதில் சரிவு ஏற்பட்டால், உடனே அரசியல்வாதிகள் அரிசி, உப்பு, புளி கணக்கையெல்லாம் எடுத்து நிதானமாக படிக்கத் தொடங்குவார்கள்.  எந்த நாட்டிலும் வீரர்களுக்கு இப்படியான அவமானம், இழிவு நடந்ததில்லை. இந்தியாவில் இதெல்லாம் சாதாரணம், ஏனெனில் இங்கு சாதிக்கு ஒரு நீதி என்ற தர்ம அமைப்பு உள்ளது. அடிப்படையில் இந்தியாவில் விளையாட்டு கலாசாரம் கிடையாது. அதை யாரும் ஊக்கப்படுத்துவதுமில்லை. மாத சம்பளத்திற்கு மாணவர்களை தயாரிக்க பள்ளிகள் உதவுகி்ன்றன. படிக்கவேண்டும். வேலைக்கு போகவேண்டும். திருமணம் செய்துகொள்ளவேண்டும். இதுதான் டெம்பிளேட்டான வழிமுறை.  மற்றப...

வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம்

படம்
  வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம் இங்கிலாந்தில் வரும் 2029ஆம் ஆண்டு பொது தேர்தலில் பதினாறு வயதானவர்கள் வாக்களிக்க தகுதி பெறுவார்கள். வாக்களிக்க பதினாறு வயது என்பது ஏற்கெனவே பல நாடுகளில் உள்ள நடைமுறைதான். சில நாடுகள் அதை ஏற்கவில்லை. குறிப்பாக உலகிலுள்ள 85 சதவீத நாடுகளில் வாக்களிக்கும் வயது 18 ஆக உள்ளது. இங்கிலாந்தில் இதற்கு முன்னர் 1969ஆம் ஆண்டு, வாக்களிக்கும் வயதை 21 இலிருந்து 18 ஆக மாற்றினா். அதற்குப் பிறகு இப்போது தொழிலாளர் கட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அதன் சுலோகன் பிரகாரம் மாற்றம் வந்திருக்கிறது.  பிரேசில், அர்ஜென்டினா, நிகரகுவா, மால்டா, ஜெர்சி, ஆஸ்திரியா, கியூபா, ஈகுவடார் ஆகிய நாடுகளில் பதினாறு வயதி்ல வாக்களிக்கும் உரிமை உள்ளது. வாக்களிக்கும் வயதை குறைப்பது அரசியல் கட்சிகளுக்கு உதவும் என்பது சரி. ஆனால், வாக்களிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது ஆய்வுக்குரியது. பதினாறு வயது என்றால் இயக்குநர் சபாபதி எடுத்த திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதைக் கடந்து பார்த்தால், இங்கிலாந்தின் துணை பிரதமர் வாதத்தை வலுப்படுத்த தான் அம்மாவானது பதினாறில்,வரி ...

வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆசிரியர் வழிகாட்டினால் போதுமானது!

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி டன்னிங் குருகர் விளைவு என்றால் என்ன? ஒருவர் தன்னுடைய திறமை , அதன் எல்லை இதுதான் என தெரியாமல் இருப்பது. இசைக்கலைஞர் கூட்டத்தில் ஒரு வராக இருப்பார். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் தன்னால் கான்செர்ட் நடத்திவிட முடியும் என நம்புவார். உண்மையில் அதற்கு தேவையான திறமை அவருக்கு இருக்காது. அதாவது, திறமையை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் தன்னால் சிறந்த இசைக்கலைஞராக முடியும் என நம்புவார்.  பழைய பொருட்களின் மீது இழப்பு என தெரிந்தும் முதலீடு செய்வது ஏன்? தீராத சண்டை என்றால் விவாகரத்து பெற்றுவிடலாம் என தலைவன் தலைவி படம் வலுவாக கூச்சல் போட்டு சொல்லியிருக்கிறது. கசப்பான உறவை சகித்துக்கொண்டு வாழ்வது, பழுதான பொருளை மீண்டும் மீண்டும் பழுது பார்த்து இயக்குவது ஆகியவை வாழ்க்கையில் இயல்பாக நடப்பவை. ஆனால், அப்படி செய்வது எதிர்காலத்தில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாது என செய்பவர் உணர்ந்திருக்கலாம்.ஆனால், அறிந்த உண்மையை நடைமுறையில் கொண்டு வர மாட்டார். அதற்கு காரணம் மனிதர் அல்லது பொருட்கள் மீது உள்ள பற்று, பாசம். இதனால்தான் புதுகார் வாங்கும் காசைக் கூட ஒருவர்...