இடுகைகள்

உணவு விமர்சகர் தலையில் அடிபட்டு தொன்மைக்காலத்திற்கு சென்றால்.... ஃபுடி குயின் - சீன டிராமா

படம்
              ஃபுடி குயின் சீன டிராமா நவீன காலத்தில் யூட்யூபில் சேனல் வைத்து ஹோட்டல்களில் போய் சாப்பிட்டு அதைப் பற்றி விமர்சனம் செய்யும் பெண்மணி, தொன்மைக் காலத்திற்கு செல்கிறார். அங்கு பேரரசரின் மனைவியாக இருக்கிறார். அவரின்றி, கணவருக்கு நான்கு துணைவிகள் உண்டு. இப்படியான சூழலில் அவர் அரண்மனையில் தனக்கு பிடித்த சமையல் ஐட்டங்களை செய்து அனைவருக்கும் கொடுக்கிறார். இதனால் என்னவானது, அரசியல் சதிகள், பேரரசரைக் கொல்லும் முயற்சிகள் என நிறைய விஷயங்களை நாடகம் பேசுகிறது. அரசியல், சதி, பொறாமை, வஞ்சம், செக்ஸ் என இதையெல்லாம் விடுங்கள். இந்த டிராமா முழுக்க உணவுதான் பிரதானமானது. தொடர் முழுக்க பல்வேறு சீன கலாசார உணவுகளை வண்ணமாக சமைத்து தள்ளியிருக்கிறார்கள். அதை சாப்பிடவெனவே நாயகியின் தோழி இருக்கிறாள். அவளுக்கு முக்கிய வேலை ராணியை கருத்தரிக்க செய்வது, அடுத்து, ராணி செய்யும் உணவுகளை முதல் ஆளாக சாப்பிடுவது, முதல் வேலையை விட தொடர் முழுக்க இரண்டாவது வேலையைத்தான் சரியாக செய்கிறார். ஓகே உணவுகளை சாப்பிடும் பெண்ணை நேருக்கு நேராக பார்ப்பதும் அழகாகத்தான் இருக்கிறது. பேரரசருக்கு திர...

பெண்கள் வாசிப்பது என்பது முக்கியமான அரசியல் செயல்பாடு! - ஆகிருதி மந்த்வாணி

படம்
                நேர்காணல் எழுத்தாளர், ஆய்வாளர் ஆகிருதி மந்த்வாணி இலக்கியம் அல்லது க்ரைம் சார்ந்த நூல்கள் அல்லாமல் நடுநிலை இதழ்களைப் பற்றி ஆய்வுசெய்ய விரும்பியது ஏன்? இந்தி கிரைம் எழுத்தாளர் சுரேந்தர் மோகன் பதக் நூல்களைப் பற்றித்தான் முதலில் ஆய்வு செய்ய நினைத்தேன். அப்படித்தான்ஆராய்ச்சியும் தொடங்கியது. அவரது நூல்கள் வாசிக்க நன்றாக இருக்கும். விலையும் கூட அதிகம். ஆனால், அவரது நூல்களை வாசிக்கிறேன் என்று யாரும் தைரியமாக கூற மாட்டார்கள். மறைத்து வைத்து படிப்பார்கள். இப்போது அதை வெளியில் வைக்கத் தொடங்கியுள்ளனர். சுதந்திரத்திற்கு முந்தைய, பிந்தைய இந்தி மொழி இதழ்களை பற்றி பலரும் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் தேசியமொழி இந்தி என்ற அடிப்படையில் உருவானது. தேசியவாத கண்ணோட்டம் கடந்த நடுநிலை இதழ்களை, பொதுஅறிவு தகவல்களை வழங்கும் வார, மாத இதழ்களை மக்கள் வாசித்துள்ளனர். அதாவது, குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வாசிப்பார்கள். எனவே, நான் இடைநிலை இதழ்களை எடுத்து ஆராய்ச்சி செய்வது சரியென தோன்றியது. இடைநிலை இதழ்களின் வெளியீடு, அவற்றை வாசித்த பெண் வாசகர்களைப் ...

நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர்

படம்
            நம்பிக்கை தரும் இளையோர் - பிளாஸ்டிக்கை எதிர்க்கும் நிஞ்சா சிறுமி மாத்வி சித்தூர் மாத்வி சித்தூரின் பெற்றோர்கள் சென்னையை பூர்விகமாக கொண்டவர்கள். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்கள். மாத்வி, தினசரி பயன்பாட்டுப் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் கலப்பை அறிந்தார். இதனால் ஏற்படும் நோய்கள், மண்ணுக்கு, நீருக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க முயன்றார். இதற்காக கொலராடோவில் லிசா கட்டர் என்ற மக்களவை உறுப்பினரை சந்தித்து பேசி தனி மசோதாவை உருவாக்கி அதை சட்டமாக்குவதிலும் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்காக  ஆளுநர் போலிசின் ஆதரவையும் பெற்றார். அவர், மாத்வியின் செயல்பாட்டை பாராட்டியதோடு, மசோதா சட்டமானபோது அந்த விழாவுக்கும் அழைத்து தனது பேனாவை பரிசாக கொடுத்து கௌரவித்திருக்கிறார். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நீங்கள் கூறும் புகார்களை ஏற்க மறுக்கிறார்களா, தயங்காதீர்கள். திரும்பத் திரும்ப அவர்களைக் கேட்டுக்கொண்டே இருங்கள் என்கிறார் மாத்வி. பிஎஃப்ஏஎஸ் எனும் வேதிப்பொருட்களால் இளையோருக்கு புற்றுநோய், மலட்டுத்தன்மை, நோய்எதிர்ப்பு சக்தி குறைவது, கெட்ட கொ...

ஸிசோபெரெனியா நோயாளியை சாமியார் என நினைத்து வணங்கி வந்த காஷ்மீர் கிராம மக்கள்!

படம்
          ஸிசோபெரெனியா சாமியார்! மனநிலை பாதித்து பித்து நிலையில் அழுக்கு உடையில் திரிபரவர்களைக் கூட மக்கள் விட்டுவைப்பதில்லை. அவர்களையும் போகிறபோக்கில் கும்பிட்டுவிட்டு செல்கிறார்கள். அவர்கள் தின்றுவிட்டு வீசி எறியும் குவளைகளைக்கூட தெய்வ பிரசாதமாக ஏற்கிறார்கள். உண்மையில் இங்கு யாருக்கு மனநிலை பிறழ்ந்துள்ளது என்பதை வேறுபடுத்திப் பார்ப்பதே கடினம். இந்த லட்சணத்தில் மதவாதிகள், தெலுங்கு ஆட்களை வைத்து நாத்திகர்கள், ஆத்திகர்களைக் கொல்கிறார்கள் என கருத்தூசி படங்களை வேறு எடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கஷ்டம்தான். இந்தியாவில் வாழ்வதும், மக்களைப் புரிந்துகொள்வதும் மிக கடினமான செயல்களில் ஒன்று. இப்போது ஒரு கதையைப் பார்ப்போம். இந்த பாபாவின் பெயர் லாசே பாப். இவர் காஷ்மீரில் உள்ள குப்வாரா சோகுல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மரபான காஷ்மீரிகளின் வீடுகளைப் போலவே பெரிய முற்றம், வராண்டா கொண்ட வீட்டில் வசிக்கிறார். பாப் என அழைக்கப்படும் சொல்லுக்கு துறவி என்று பொருள். மேலே சொன்னது, அவரது பட்டப்பெயர். நிஜப்பெயர் குலாம் ரசூல். இந்த சாமியார் அவரது அக்கா வீட்டில் அமர்ந்து மக்களின் பிரச...

பிரச்னைகளைத் தீர்க்க எடுத்த முடிவுகளுக்காக வருந்தப்போவதில்லை!

படம்
        நேர்காணல் டேரன் வாக்கர் நீங்கள் ஃபோர்ட் பவுண்டேஷனை விட்டு விரைவில் விலகப்போகிறீர்கள். வரலாற்றில் இந்த நேரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஜனநாயகத்தில் இக்காலகட்டம் சவாலானது. நம்பிக்கைதான், ஜனநாயகத்திற்கு பிராணவாயு போன்றது. சமத்துவமின்மை, நம்பிக்கைக்கு எதிராக மாறுகிறது. நம்பிக்கையில்லாத மனிதர்கள், இதுவரை சமூகத்தில் இது சாத்தியமா என்று நினைத்துப்பார்க்காத செயல்களை செய்யத் தொடங்கியுள்ளனர். அதுதான் என்னை  கவலையில் ஆழ்த்துகிறது. ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறதா? நல்ல காற்றை சுவாசிப்பீர்கள், மோசமான உணவை சாப்பிடும் சூழல் நேராது. மனிதர்கள் தங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு நகர்வது சற்று வேறுவிதமானது. நான் ஃபோர்டை விட்டு வெளியேறுவதை மகிழ்ச்சியாகவே உணர்கிறேன். எனக்கு மிக குறைவாகவே நண்பர்கள் உள்ளனர். எதிர்காலத்தில் உண்மையான நண்பர்களோடு சேர்ந்து உணவருந்துவேன். சம்பளத்தில் பாகுபாடு உள்ள சூழ்நிலையில், மக்கள் அதை எதிர்த்து போராடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஹென்றி ஃபோர்ட் போன்றோர் அளிக்கும் பேரளவிலான நிதி என்பது ச...

பிணை வழங்கி குற்றம் செய்த சாமியார்களை தேர்தலுக்காக பயன்படுத்தும் அபாயகரமான தந்திரம்!

படம்
               குற்றவாளிகளைப் பயன்படுத்தி தேர்தல் வெற்றியை பெற நினைக்கும் மதவாத சக்திகள்! உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவரைப் பார்க்கப் போய் நிறைய மக்கள் நெரிசலில் சிக்கி இறந்துபோனதை இணையத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள். அந்த சர்ச்சைக்குள்ளான சாமியாரை காவல்துறை நெருங்கமுடியவில்லை. முதல் தகவல் அறிக்கையிலும் அவர் பெயர் பதிவிடப்படவில்லை. அவரின் பெயர்தான் நாராயணன் சாகர் ஹரி. போல் பாபா என மக்களால் அழைக்கப்படுபவர், ஜாதவ் எனும் தலித் இனக்குழுவில் பேராதரவு கொண்டவர். அந்த மக்கள்தான் இவரை அதிகளவு பின்தொடர்கிறார்கள். வட இந்தியாவில் சாமியார்களுக்கும் அவர்களின் மடங்களுக்கும் பஞ்சமேயில்லை. அனைத்து சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்கப்படுவதைப் போலவே சாமியார்கள் அனைத்து சாதிகளுக்கும் மோட்சத்தை வழங்குகிறார்கள். மடத்தை கட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் புகைப்படங்களை வைத்துத்தான் அங்கு விழாக்களும், திருமணங்களுமே நடக்கிறது. நடப்பதே பிராமண இந்துத்துவ பாசிச அரசு என்பதால், அவர்களுக்கு உதவும் சாமியார்களை,அரசு கைது செய்யாது. துணிச்சலும் இல்லை. இதுதான் நடைமுறை உண்மை. சீக்கிய ...

மழைப்பேச்சு பாட்காஸ்ட் - பாட்பீன், பிளேயர் எஃப்எம் தளங்களிலும் கிடைக்கிறது

படம்
            மழைப்பேச்சு பாட்காஸ்ட் எபிசோடுகளை பாட்பீன், பிளேயர் எஃப்எம் ஆகிய வலைத்தளங்களிலும் கேட்கலாம்.   கூடுதலாக இன்டர்நெட் ஆர்ச்சீவ் தளத்தில் புதிய எபிசோடுகள் பதியப்படுகிறது. அவற்றை வாசகர்கள் கேட்கலாம்.