ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது
ஆமை முட்டைகளின் கோஷம் - பேராசை நல்லது ஒருவரின் அப்பா, நாட்டின் சுதந்திரத்திற்கு போராடியவர். வாழ்க்கையை எளிமையாக அமைத்துக்கொண்டு செய்யும் கடமையில் கவனம் செலுத்தவேண்டும் என நினைத்தவர். ஆனால், அவரது மகன்களோ செய்யும் அனைத்து விஷயங்களிலும் லாபத்தையே எதிர்பார்க்கிறார்கள் என்றால் என்ன சொல்வது? அப்படியான சூழலில், அப்பா தனது மகன்களை ஆமை முட்டைகள். அவர்களை எனது மகன்களாகவே நினைக்க முடியவில்லை என்றார். இப்படி கூறியவர் கமாண்டர் வாங் ஸென். சீனாவின் தொடக்க கால கட்ட தலைவர்கள் உடுத்தியுள்ள ஆடை எளிமையானது. ஃசபாரி சட்டை பேண்ட் அல்லது ராணவ சீருடையை உடுத்தியிருப்பார்கள். பெரும்பாலும் அழகான சட்டை மாற்றிக்கொண்டு புகைப்படம் எடுப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. ஆனால், அவர்களது மகன்களது வாழ்க்கை மிகவும் சொகுசானது. எளிமையான மனிதர்களிடமிருந்து வேறுபட்டது. திகைப்பூட்டும் அளவுக்கு பகட்டானது. தொண்ணூறு இரண்டாயிரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வாரிசுகள் வளம் பெற்றுவிட்டார்கள். தொடக்க கால கல்வியை பெய்ஜிங்கில் பெற்றவர்கள், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்படிப்புக்கு செல்லத் தொடங்கினர். அதிபர் ஷியின் அப்பா, ஷ...