இடுகைகள்

ஆண்களுக்கும் வந்துவிட்டது கருத்தடை மருந்துகள்!

படம்
ஆண்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு அவசியம் !- பரபரக்கும் புதிய ஆராய்ச்சி எழுபது முதல் எண்பதுவரை இந்தியா முழுக்க குடும்பக்கட்டுப்பாடு காய்ச்சல் வேகமெடுக்க , இதில் ஆண்களைவிட பெண்களே பங்கெடுத்தனர் . ஆனால் முழுமையாக கருத்தடை பயனளித்ததா என்றால் இல்லை என்றே கூறவேண்டும் . அவசரகதியில் பல்வேறு பரிசுப்பொருட்களோடு சாதனைக்காக செய்யப்பட்ட குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன்களின் பக்கவிளைவுகள் பெண்களின் ஆயுள்வரை துரத்தின . நவீனத்தில் கருத்தடை விஷயத்தில் ஆண்களும் பங்குகொள்ள தொடங்கியுள்ளனர் . நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆண்களுக்கான கருத்தடை சாதனங்கள் ஆணுறை , வாச்டக்டமி உள்ளிட்டவையே . குடும்பக் கட்டுப்பாட்டை தானே ஏற்கும் பெண்களுக்கு காப்பர் டி , கப்கள் டஜன் கணக்கிலான முறைகளை பயன்படுத்தினாலும் பக்கவிளைவுகளினால் அவை கருத்தடைக்கான சிறந்தவழியாக உருவாகவில்லை . தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கான கருத்தடை சாதனங்களாக மாத்திரைகள் , உடலில் தடவும் ஜெல் மருந்துகள் என 2024 ஆம் ஆண்டில் இச்சந்தையின் மதிப்பு 1 பில்லியனாக எகிறும் என்கிறது Global Market Insights அமைப்பின் ஆ...

ராஷ்டிர மொழியாகும் இந்தி!- பிறமொழிகளின் நிலைமை என்ன?

படம்
இந்தியமொழிகளின் வளர்ச்சி ! இந்தியாவிலுள்ள மக்களில் 43.6% பேர் இந்திமொழி பேசுவதாக சென்சஸ் தகவலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன . பத்தாயிரம் பேர்களுக்கும் மேல் பேசும் மொழியாக 121 மொழிகள் உள்ளன . பட்டியலிடப்பட்ட 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை 96.7% பேர் பேசிவருகின்றனர் . பெங்காலி (8%), மராத்தி (6.9%), தெலுங்கு (6.7%), தமிழ் (5.7%), குஜராத்தி (4.6%) ஆகியவை டாப் 5 மொழிகளாக பட்டியலில் இடம்பிடித்துள்ளன . இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆங்கிலமொழியை தங்கள் முதல் மொழியாக கூறியுள்ளனர் . இதில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர் மகாராஷ்டிராவில் வசித்து வருகின்றனர் . மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் பிலி , கோண்டி உள்ளிட்ட மொழிகள் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றன .

நிலவில் வசிக்க முடியுமா?

எக்ஸோமூன் : மனிதர்கள் வசிக்க வாய்ப்புண்டா ? பெரும்பாலான கோள்களின் தன்மையில் அதனைச் சுற்றிவரும் நிலவுகளின் தன்மை அமையும் . தூசு அல்லது கற்களின் கூட்டமாக சுற்றிவரும் இவை கோள்களின் ஈர்ப்புவிசைக்குட்படும்போதுதான் மாற்றங்கள் நிகழுகின்றன . நெப்டியூனின் மையமாக சுற்றிவரும் ட்ரிடான் இதற்கு நல்ல உதாரணம் . " பூமியோடு ஒப்பிடும்போது நம்முடைய நிலவு பெரியதுதான் . பால்வெளியில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் பூமியும் , துணைக்கோளான நிலவும் சற்று வித்தியாசமான ஜோடி " என்கிறார் ஆராய்ச்சியாளர் கிப்பிங் . கோளை ஆதாரமாக கொண்டு சுற்றிவருவதால் இதன் அளவும் மக்கள் வசிப்பதற்கேற்ப இருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை . சூரியனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு வளிமண்டலத்தை முற்றாக அழிக்கும் தன்மை கொண்டது .  ஆராய்ச்சியாளர் கிப்பிங் தலைமையிலான குழும கெப்ளர் தொலைநோக்கி மூலம் கண்டறிந்த 1625b என்பதை எக்ஸோமூன் என்று உறுதிபடுத்தவில்லை . " எக்ஸோமூன் என்பதை நாம் திறந்த மனதோடு அணுகி ஆராய்ச்சி செய்வது அவசியம் " என்கிறார் பேராசிரியர் கியோவன்னா தினெட்டி . 

கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை தந்த கேடு!

படம்
கசக்கும் சர்க்கரை ! 2018 ஆம் ஆண்டு மே மாத நிலவரப்படி கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய நிலுவைத்தொகை 22 ஆயிரம் கோடி . சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாமிடம் வகிக்கிறது இந்தியா . 50 லட்சம் ஹெக்டேர்களில் கரும்பு பயிராகிறது . இக்கரும்பிலிருந்து சர்க்கரை எடுக்க 530 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன . 2017 ஆம் ஆண்டு கரும்பு பயிரிடும் எண்ணிக்கை 9 சதவிகிதம் உயர்ந்துள்ளது . இவ்வாண்டில் மட்டும் ஏழு மில்லியன் டன்கள் சர்க்கரை கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது . இந்தியாவில் சர்க்கரைக்கான தேவை 25 மில்லியன் டன்கள் (2018). உற்பத்தியான சர்க்கரையின் அளவு 32 மில்லியன் டன்கள் . தனியார் ஆலைகள் விவசாயிகளுக்கு தரும் சர்க்கரை விலை விவசாயிகளின் உற்பத்தி செலவைவிட மிக குறைவு .  கடந்தாண்டு சர்க்கரையின் தோராய விலை ( கி . கி ) ரூ .37(2017), இவ்வாண்டில் சர்க்கரையின் தோராய விலை ரூ .26(2018).     

"சமகாலத்தை விமர்சிப்பது எழுத்தாளனின் கடமை"

நேர்காணல் "சமகாலத்தை விமர்சிப்பது எழுத்தாளனின் கடமை" பாஸ்கல் பிரெஸ்ஸன் , கிராபிக் எழுத்தாளர் . தமிழில் : ச . அன்பரசு 1927 ஆம் ஆண்டு பிறந்த சைமன் அன்னி வெய்ல் , ஜெர்மனின் ஆஷ்விட்ச் முகாமிலிருந்து தப்பி பிழைத்து வழக்குரைஞராக பணியாற்றியவர் . பின்னாளில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முதல் தலைவராக பணியாற்றியதோடு , பிரான்சின் அரசியலமைப்பு கவுன்சில் உறுப்பினராகவும் மனித உரிமைகளுக்காக போராடியவர் . அண்மையில் காலமான சைமன் வெய்லின் வாழ்க்கையை கிராபிக் நாவலாக்கியுள்ளார் பாஸ்கல் பிரெஸ்ஸன் . சைமன் வெய்ல் பற்றிய கிராபிக் நாவலை எழுத எப்படி உத்வேகம் பெற்றீர்கள் ? வெய்ல் குடும்பம் அங்கீகரித்த கிராபிக் நாவல் இதுவே . நாட்டிற்கு உழைத்த ஸோலா , ஜீன் ஜாரெஸ் , விக்டர் ஹியூகோ , மேரி க்யூரி , ஜீன் மௌலின் , அய்மே சீஸைரே ஆளுமைகள் மீது அக்கறை உண்டு . ஆஷ்விட்ச் முகாமிலிருந்து தப்பித்த சைமன் , கருக்கலைப்பு சட்டம் போன்றவற்றுக்கு எதிராக போராடியதோடு ஐரோப்பாவை ஒன்றாக்கிய தலைவர் அவர் . 176 பக்கங்களில் சைமன்ஜேக்கப் என்ற பெயரில் பிறந்த நம்காலத்தின் மிகச்சிறந்த தலைவர் வாழ்க்கையை மூன்றாண்டு உ...

அதிரடி விளையாட்டுகள்- எதிர்பாருங்கள்

அதிரடி விளையாட்டு ! Cyberpunk 2077 ஜிடிஏ கேம் போலவே புதுமையான எதிர்கால உலகில் அமைந்த உயிர்பிழைத்து ஓடும் விளையாட்டு . இரவு நேர நகரில் ஆறு பகுதிகளில் சாகசமாக மிஷன்களை எடுத்து உயிர்பிழைத்து உலகை வெல்வதே கேமின் தீம் . Fallout 76 இந்த சீரிசில் இது 9 வது கேம் . ஆன்லைனில் குழுவாக அல்லது தனியாக விளையாடலாம் . உயிர்பிழைக்க நியூக்ளியர் ஆயுதம் வரை ஏந்தலாம் என்பதால் போர்க்களம் திகுதிகு ஆக்‌ஷன் அதிரடியில் அதிரும் என்பது கேரண்டி .     Spider-Man உலகளவில் பிரபலமான பீட்டர் பார்க்கர் ( எ ) சிலந்திமனிதன் உலகைக் காப்பாற்றும் பிரம்ம பிரயத்தன அதிரடிகள் கேமின் விசுவல் உலகை கொண்டாட்டமாக மறக்கவைக்கின்றன . Super Smash Bros. Ultimate ஒருவர் அல்லது பலர் விளையாடும் ஆக்‌ஷன் கேம் . உயிர்பிழைக்கும் வாய்ப்பை செட் செய்துவிட்டு கேரக்டரை தேர்வு செய்து எதிரிகளை உதைத்து வதம் செய்யவேண்டியதுதான் ஸ்மாஷ் ப்ரோஸின் பாணி . நின்டெண்டோ கம்பெனியின் 5 ஆம் பாகம் இது .   

போதைப்பொருட்கள் அதிகரிப்பு- ஐ.நா கவலை

செம போதை உலகம் ! போதைப்பொருட்களின் தயாரிப்பு மருத்துவப்பயன்பாடு கடந்து கிடுகிடுவென அதிகரித்து வருவது குறித்த கவலையை ஐ . நா அமைப்பு தெரிவித்துள்ளது . " கோகைன் , ஓபியம் , மெதாம்பெட்டமைன் சந்தையானது முந்தைய ஆண்டுகளை விட விரிவாகியுள்ளது ." என்கிறார் ஐ . நா அமைப்பின் போதைப்பொருட்கள் மற்றும் குற்றத்துறையின் இயக்குநர் யூரி ஃஃபெடோடோவ் . 2000-2015 காலகட்டத்தில் போதைப்பொருட்களால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது . 2005-2013 ஆம் ஆண்டு குறைந்த கோகைன் தயாரிப்பு அளவு 2016 ஆம் ஆண்டு 1,140 டன்களாக உயர்ந்து அதிர்ச்சி தந்துள்ளது . கொலம்பியாவே போதைப்பொருட்களின் தயாரிப்பு தாயகம் . வட அமெரிக்காவில் ஃபெனடனியல் , ஆப்பிரிக்காவில் ட்ராமடால் உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது . மருத்துவப் பயன்பாடு கொண்ட ஓபியாய்டுகளும் , ஹெராயின்களை கடத்தும் குற்றங்களும் குறைவற நடைபெறுகின்றன . 2015 இல் மட்டும் 4 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் போதைப்பொருட்களுக்கு பலியாகியுள்ளனர் . ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் . சர...