இடுகைகள்

சீனாவின் தொன்மைக்காலத்திற்கு சென்று மருத்துவராகி சாதனை புரியும் நவீனகால மருத்துவ மாணவன்!

படம்
  இன்கார்னேடட் லெஜண்டரி சர்ஜன்  சீன காமிக்ஸ்  104 அத்தியாயங்கள்  நவீன உலகில் மருத்துவராக உள்ளவர், தொன்மையான சீனாவின் காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். அதாவது அவரது ஆன்மா செல்கிறது. அங்கு குவா என்ற வாழ்ந்து கெட்ட குடும்ப கடைசிப்பிள்ளையின் உடலில் புகுகிறது.  குவாபு, வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றவர், ஊருக்கு வந்திருப்பார். அந்த நேரத்தில் கொள்ளையர்கள் அங்கு புகுந்து தாக்கி கிராமத்தினரை கொலை செய்து சென்றதில் குவாபு என்ற கடைசிப்பிள்ளையும் நெஞ்சில் வெட்டுபட்டு இறந்துபோயிருப்பார்.  படித்துவிட்டு வந்து அரசு தேர்வு எழுதினால் ஒரு வேலை கிடைக்கும் குவா குடும்பம் வறுமையில் வாடாது என்பதே அவர்களின் ஆசை.  வழி வழியாக அரசு அதிகாரிகளாக வாழ்ந்த குடும்பம், இப்போது வறுமையில் தத்தளிக்கிறது. சாப்பிட சோறே இல்லாத கொடுமை எல்லாம் கிடையாது. உணவில் இறைச்சி வாங்கி சேர்க்க முடியாத வறுமை. குவாபுக்கு இரண்டு அண்ணன்கள். ஒருவர், அரசு தேர்வை எழுதி லஞ்சம் கொடுத்து வேலைக்கு போகமாட்டேன் என உறுதியாக இருக்கிறார். அடுத்தவர், தற்காப்புக் கலை கற்று ராணுவத்தில் சேரவிருக்கிறார். மூன்றாவதாக உள்ள கு...

தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் செயற்கை நுண்ணறிவு!

படம்
  செயற்கை நுண்ணறிவு காலத்தில் பரவும் போலிச்செய்திகளும், நேர்மையான தேர்தலும் 2018ஆம்ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தோடு செய்த ஊழல் அனைவரும் அறிந்ததே. ஒருவர் எழுதும் பதிவுகளை வைத்து அவர் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறார் என அல்காரிதம் மூலம் கணித்தனர். இதைப் பற்றி மக்களுக்கு எந்த கவனமும் இல்லாமல் இரையாக மாட்டிக்கொண்டனர். இதில் பயன்பெற்றது, உலகம் முழுக்க உள்ள அரசியல் கட்சிகள்தான். இலவசம் என்ற பெயரில் ஃபேஸ்புக் உலகம் முழுக்க பரவலாகி அதில் இணைந்த பயனர்களாகிய மக்களையே நல்ல விலைக்கு விற்ற கதை அது.  செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலிச்செய்திகள், வீடியோக்களை ஒருவர் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்து தடுப்பது உண்மையில் கடினமான ஒன்று. அரசியல் கட்சிகளுக்கு எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாடல் உதவும் என்று தெரியவில்லை. ஓப்பன் ஏஐ, கூகுள், அமேஸான் ஆகிய பெருநிறுவனங்களே பந்தயத்தில் முன்னணியில் உள்ளன.  வெறுப்பு, பிரிவினைவாத கருத்துகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றன. இதன் அடிப்படையில் போலிச்செய்திகளை வைத்தே கூட ஒரு கட்சி தேர்தலில் வெல்லலாம். ...

அப்பாவியான பங்குச்சந்தை தரகன் தன்னை சைக்கோபாத் கொலைகாரனாக நினைத்துக்கொண்டால்....

படம்
சைக்கோபாத் டைரி  கே டிராமா பதினாறு எபிசோடுகள்  ராக்குட்டன் விக்கி ஆப்  பங்குச் சந்தை நிறுவனத்தில் வேலை செய்யும் நாயகன். இளகிய இதயம் கொண்ட அப்பாவி. எனவே, அவனை பலியாடாக்கி ஒரு நிறுவனத்தைப் பற்றிய அறிக்கையை தயார் செய்யச் சொல்கிறார்கள். அந்த வேலை கூட அவனது நண்பன் செய்யவேண்டியதுதான். ஆனால் அவன் நாயகனின் தலையில் கட்டிவிடுகிறான். அதை அவன் தயாரித்துக் கொடுத்த அந்த நேரத்தில் அதிலுள்ள தகவல்களால் அந்த நிறுவனம் சரிவைச் சந்திக்கிறது. இதை வைத்து அவனை வேலையை விட்டு நீக்க முயல்கிறார்கள். தனது நெருங்கிய நண்பனே இப்படி துரோகம் செய்கிறானே என நொந்துபோன நாயகன் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். அப்படி தற்கொலை செய்ய முயலும்போது, யாரோ ஒருவர் வலியில் முனகுவது போல சத்தம் கேட்க, கீழே வந்து எட்டிப்பார்த்தால் ஒருவன் வயதான ஒருவரைக் கொல்ல முயன்றுகொண்டிருக்கிறான். அதை நாயகன் மறைந்திருந்து பார்க்கிறான். அவன் கோழை, அப்பாவி. எனவே, அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறுகிறான். அப்போது முதியவர் கொலைகாரனது டைரியை தட்டிவிடுகிறார். அதை நாயகன் எடுத்துக்கொண்டு ஓடும்போது போலீஸ்காரில் அடிபட்டு ரெட்ரோகிராட...

வயதாவதை தடுக்கும் உடற்பயிற்சி!

படம்
  வயதாக கூடாது என நினைப்பது தவறு கிடையாது. அதற்கு என்ன செய்யலாம் என நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அதிக ஆயுள் கொண்டவர்களை ஆய்வு செய்து உணவு, வாழ்க்கைமுறையைக் கூட பதிவு செய்து வருகிறார்கள். உண்மையில் உணவு, லோஷன், காய்கறி, பழம் என ஏதுமே உதவாது என்பதே உண்மை. காரணம், வயதாவதை, உடல் பலவீனமாவதை தடுக்க முடியாது. ஆனால் அதன் வேகத்தை உடற்பயிற்சி மூலம் குறைக்கலாம். குறிப்பாக இதயநோய்கள், வாதத்தை உடற்பயிற்சிகள் செய்வது குறைக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.  செல்களில் உள்ள நச்சை நீக்கினால்தான் ஒருவர் வயதாவதைத் தீர்க்க முடியும். அந்த வகையில் உடற்பயிற்சியே உதவுகிற கருவியாக உள்ளது. உடற்பயிற்சி செய்யும்போது எண்டோர்பின் சுரக்கிறது. சோர்வை போக்குவதோடு, மூட்டுகளை இலகுவாக்குகிறது. உடல் முழுக்க ஆக்சிஜன் செல்வதை ஊக்கப்படுத்துகிறது. செல்களின் வயதை டிஎன்ஏவே தீர்மானிக்கிறது. இந்த செயல்பாட்டில் உடற்பயிற்சி தாக்கம் ஏற்படுத்துகிறதா என்று தெரியவில்லை.  இதுவரை உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் ஒரே நாளில் மாரத்தான் ஓடவேண்டியதில்லை. மெதுவாக பயிற்சிகளை ச...

மூன்றாவது பிறப்பில் எதிரிகளை நாயகன் எதிர்கொண்டு வெல்வானா?

படம்
  அகெய்ன்ஸ் காட்ஸ்  மாங்கா காமிக்ஸ்  மான்வா.காம்.  இதில் நாயகன் பலவீனமானவன். அவனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அந்த திருமணம் கூட ஒரு நன்றிக்கடனை கழிக்கவே செய்யப்படுகிறது. திருமணத்திற்கு மாப்பிள்ளை கழுதையில் உட்கார வைத்து அழைத்து வரப்படுகிறான். அவனது சொந்தக்காரர்கள் இப்படி அவமானப்படுத்துகிறார்கள். மாப்பிள்ளை பலவீனமான உதவாக்கரை என ஊருக்கே தெரிகிறது. அதாவது அவன் தற்காப்புக்கலை கற்க முடியாதபடி உடலில் பிரச்னை இருக்கிறது. மேலும் அவனது அண்ணணுக்கே, தம்பி கட்டிக்கொள்ளும் பெண் மீது பொறாமை உள்ளது. எனவே,  தம்பிக்கு விஷத்தை டானிக் என கொடுத்து குடிக்கச் செய்கிறான். அப்போது அவனது உடலில் வேறு ஆன்மா ஒன்று குடியேறுகிறது.  அந்த ஆன்மாவினுள்ளே பொக்கிஷமாக கருதப்படும் விஷம் உள்ளது. அந்த விஷம் டானிக்கிலுள்ள விஷத்தை முறிக்கிறது. புதிய உடலில் குடியேறிய ஆன்மாவுக்கு இது மூன்றாவது வாழ்க்கை. ஏற்கெனவே இரண்டு வாழ்க்கை வாழ்ந்து இரண்டிலும் தற்கொலை செய்துகொண்டு இறந்த வரலாறு கொண்டிருக்கிறது. இந்த பிறவியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களை கவனிக்கத் தொடங்குகிறது. இதில் ஆறுதல், அவனுக்கு அத்தை முறை வ...

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பெண்மணி!

படம்
  நாடியா முராத் nadia murad நாடியா முராத், ஈராக்கில் பிறந்தவர்.அவருக்கு இருந்த ஒரே கனவு பெண்கள், சிறுமிகளுக்கான அழகுக்கலை சலூன் ஒன்றைத் தொடங்கி நடத்தவேண்டும் என்பதுதான். ஆனால் அவர் பிறந்த இனத்தின் பெயரால் அவரது கனவுகள் நொறுக்கப்பட்டன. ஈராக்கின் வடக்குப் பகுதியில் இருந்த கோஜோ எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் நாடியா. யாஷிடி இனக்குழுவைச் சேர்ந்தவர். சலூனில் ஒன்றாக பெண்கள் சந்தித்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என நினைத்திருக்கிறார். ஆனால் அது நடக்கவில்லை.  2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் நாடியா உட்பட ஆறாயிரம் பெண்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தலின்போது, நாடியாவின் அம்மா, உறவினர்கள், தோழிகள் கொல்லப்பட்டனர். கடத்திவரப்பட்ட பெண்கள் தீவிரவாதிகளால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகினர். மூன்று மாதங்கள் சித்திரவதைகளை அனுபவித்த நாடியா, அங்கிருந்து தப்பி 2015ஆம் ஆண்டு ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தார். தன்னார்வ அமைப்பொன்றைத் தொடங்கியவர், பாலியல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் உதவிகளைப் பெற்றுக்கொடுத்து உதவத் தொடங்கினார்.  2017ஆம் ஆண்டு தனது வாழ்க்கையை நூலாக எழுதி வெளியிட்டார்....

கருப்பினத்தவருக்கான புரட்சிப்பாடலை பாடியவர் - ஆந்த்ரா டே

படம்
  ஆந்த்ரா டே  andra day சூப்பர் பௌல் போடியத்தில் கருப்பினத்தவரின் தேசியகீதத்தை பாடவேண்டும் என்பதுதான் டேவின் கனவு. ஏற்கெனவே பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பாடி புகழும், பெயரும் பெற்றவர், எதற்கு சூப்பர் பௌல் போடியத்தை முக்கியமாக நினைக்கவேண்டும்? 2015ஆம் ஆண்டு, டே ரைஸ் அப் என்ற பாடலைப் பாடி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த பாடல், இப்போதும் கருப்பினத்தவரின் போராட்டங்களில் ஒலித்து வருகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லி ஹாலிடே என்ற படத்தில் நடித்தார். அதை இயக்கியவர், லீ டேனியல்ஸ். அதில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர், கோல்டன் குளோப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டார். பாடல்களுக்கு கிராமி விருது பெற்றார். தி டெலிவரன்ஸ், எக்ஸிபிட்டிங் ஃபார்கிவ்னஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவை விரைவில் வெளிவரவிருக்கின்றன.  ரசிகர்கள் ரைஸ் அப் என்ற புரட்சி பாடலைப் போலவே அடுத்தடுத்த பாடல் இருக்கவேண்டுமென நினைக்கின்றனர். ஆனால் டே சற்று வேறுவிதமாக யோசிக்கிறார். அப்படி ரசிகர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வது தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் எனது பாடலை சுதந்திரமாக இருக்கவிரும்புகிறேன் என்றார...