இடுகைகள்

போரில் அடிபட்டு வீழ்ந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டெழும் மாவீரன்!

படம்
  வாரியர் ஃபிரம் ஸ்கை சீனமொழித் திரைப்படம் ஐக்யூயி ஆப்  பனி சூழ்ந்த பகுதி. அங்கு ஒருவர் தூண்டில் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அங்கிருந்து வீரன் ஒருவன் வெளியே வருகிறான். அவனுக்கு தான் யார், தன் பெயர் என ஏதும் நினைவில் இல்லை. அதை அறிய முயல்கிறான். அந்த முயற்சியில் தீய சக்தியை எதிர்கொண்டு வெல்கிறான். இதுதான் படத்தின் கதை.  சொர்க்கத்தில் போரிட்ட வீரன், எதிர்பாராதவிதமாக அடிபட்டு கீழே விழுந்துவிடுகிறான். ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் கழித்து விழிக்கிறான். அவனது சக்தி, பூட்டப்பட்டு உள்ளது. பயன்படுத்திய ஆயுதங்கள் காணவில்லை. தான் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறான்.  படத்தின் தொடக்கத்தில் துறவி ஒருவருடன் சண்டை போடுகிறான். அவர், அவனின் நான்கு பிறவிகளை தனது சக்தி மூலம் தெரிந்துகொண்டு விடைபெற்று போய்விடுகிறார். போகும்போது, அவனை பூமிக்கு தள்ளிவிட்டு செல்கிறார். நேரே அவன் குளம் ஒன்றில் விழுகிறான். அங்கு சூ நாட்டு  இளவரசி குளித்துக்கொண்டிருக்கிறாள். பிறகு என்ன, அவனைப் பிடித்து கட்டிவைத்து உதைக்கிறார்கள். ஆனால் சென் சான் எனும் அவனுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில...

எட்டு வஞ்சகர்களால் கொல்லப்பட்ட இரண்டு வாள் வீரர்களின் பிள்ளைகள் போடும் பழிக்குப்பழி திட்டம்!

படம்
 தி ஹைடன் ஃபாக்ஸ்  சீன திரைப்படம்  ஒன்றரை மணி நேரம் ஐக்யூயி ஆப் இரண்டு சிறந்த வாள் வீரர்கள், எட்டு எதிரிகளால் நயவஞ்சகமாக வாளில் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்கள். அவர்களின் இறப்பிற்கு, அவர்களது பிள்ளைகள் பழிவாங்குவதுதான் கதை.  இந்த திரைப்படத்தின் பலமே சண்டைக்காட்சிகளும். திடீரென நடக்கும் பல்வேறு திருப்பங்களும்தான்.  ஒரே வரியில் மேலே கதையை சொன்னாலும் படத்தை பார்ப்பவர்களுக்கு நாயகன் யார், எதனால் இப்படி துரோகியாக மாறி நடந்துகொள்கிறான் என்பது புரியாது. அதற்கெல்லாம் இறுதியாகத்தான் பதில் சொல்கிறார்கள். திரைப்படம் எடுத்த வகையிலும் நிறைய மெனக்கெடல் உள்ளது. இறுதிக்காட்சி முழுக்க பனிபோர்த்திய இடத்தில் நடக்கிறது. அதுவே ஒரு  சொல்ல முடியாத திகிலை, பயத்தை மனதில் ஏற்படுத்துகிறது.  ஹூ யிடாவோ என்ற வாள் வீரர் ஒரு பொக்கிஷத்திற்கான சாவியை வைத்திருக்கிறார். அதற்கான வரைபடமும் இருக்கிறது. அதைப் பெறவே எட்டு வில்லன்கள் அவரையும், இன்னொரு எதிராளியையும் திட்டமிட்டு மோதவிட்டு விஷம் வைத்து கொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியாத விஷயம், அந்த பொக்கிஷத்தை அவ்வளவு எளிதாக பெற முடியாது....

ஷி ஜின்பிங்கின் ஐரோப்பிய சுற்றுப்பயணம்!

படம்
  ஷி ஜின்பிங்கின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் சீன அதிபர் ஐரோப்பாவுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தருகிறார். அமெரிக்காவுடன் வணிகப்போர் நடந்துவருகிற நிலையில், அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது இதுவரையில் விட்டுப்போன உறவை மீண்டும் உருவாக்குவதற்காகவே என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  பிரான்ஸ், செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கு ஜின்பிங் செல்லவிருக்கிறார். அதிகாரப்பூர்வ பயணத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான முயற்சிகளும் இருக்கும் என்பது எதிர்பார்க்க கூடியதே. ஆசியாவில் சீன முக்கியமான வளர்ந்து வரும் சக்தி. பிற நாடுகள் சாதி,மதம், இனம் என பிரிவினைக்குள்ளாகி வரும் நிலையில் தனது செல்வாக்கை திட்டமிட்டு வளர்த்துக்கொள்ளும் விதத்தில் சீனா சாமர்த்தியசாலிதான். ஒரே கட்சியைக் கொண்ட தீவிர கண்காணிப்பு முறையைக் கொண்ட நாடு சீனா.  அமெரிக்காவைப் பொறுத்தவரை தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை சீனா பிரிக்க முயல்கிறதோ என நினைக்கலாம். 1999ஆம் ஆண்டு மே ஏழாம்தேதி பெல்கிரேட்டில் உள்ள சீன தூதரகத்தில் நேட்டோ படையின் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் மூன்று சீன பத்திரிகையாளர்கள் இறந்துபோன...

சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா?

படம்
 சாட் ஜிபிடி மூலம் பாடம் கற்கலாமா கூடாதா? கணினி, இணையம் ஆகிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையில் நுழைந்தபோது நிறைய மாற்றங்கள் நடந்தன. வேலையிழப்பு, பழைய தொழில்கள் அழிவு இதெல்லாம் நடந்தது. பழையன கழிதல் புதிது கிடையாது. இப்போது அந்த இடத்தை ஓப்பன் ஏஐயின் சாட்ஜிபிடி பிடித்திருக்கிறது.  கலிபோர்னியாவில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர், பீட்டர் பேக்கன், வகுப்பறையில் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி பாடங்களை நேர்த்தியாக நடத்தி வருகிறார். அதை அனுகூலமான வகையில் பயன்படுத்துவதோடு, அதைப்பற்றி ஜூம் மீட்டிங் கூட ஏற்பாடு செய்து பேசியுள்ளார். அனைத்து பாடங்களையும் ஆசிரியரே நடத்தாமல், சில எளிய விஷயங்களை சாட்ஜிபிடியிடம் ஒப்படைத்துவிடலாம் என்பது அவரது கருத்து. பாடங்களை முற்று முழுதாக ஆசிரியர் கற்றுத்தருவது அழுத்தங்கள் நிறைந்த பாடத்திட்டத்தில் இயலாத ஒன்று. அதை சாட்ஜிபிடி மூலம் சாத்தியப்படுத்திக்கொள்கிறார் பீட்டர்.  தான் நடத்திய ஜூம் சந்திப்பில் கல்வியில் சாட்ஜிபிடி ஏற்படுத்தும் சாத்தியம், அதை எப்படி பயன்படுத்துவது என நாற்பது சக ஆசிரியர்களிடம் விவாதித்திருக்கிறார் பீட்டர். மருத்துவம் தொடங்கி ராணுவ...

மக்களின் நோய் தீர்க்க மருந்து தேடி ஆபத்தான கல்லறையைத் திறக்க செல்லும் பொக்கிஷக் குழுவின் கதை!

படம்
  moutain porter சீன திரைப்படம் ஒன்றரை மணிநேரம் ஐக்யூயி ஆப் இதுவும் கொடூரமான குணம் கொண்ட ராணியின் கல்லறையைத் திறக்கும் கதைதான். ஆனால் அதை திறக்கும் காரணம், பொக்கிஷமல்ல.  கிராமத்து மக்களை பாதிக்கும் நோயைத் தீர்க்க மருந்து தேடி கல்லறைக்கு வருகிறார்கள்.இவர்களைக் கொல்ல பின்தொடர்ந்து கொள்ளைக்கூட்டம் ஒன்று வருகிறது. இறுதியில் அனைவரும் இறந்துவிட நாயகனும் நாயகியும் மட்டும் பிழைக்கிறார்கள். இறுதியாக கூட மருந்து கிடைப்பதில்லை. அதைத்தேடி அலைவதோடு கதை முடிகிறது.  இந்த கதை தொடங்கும்போது, நாயகன் ஒரு கண்ணாடி ஒன்றைத் தேடி வருகிறான். அதை இன்னொரு இளம்பெண் திருடிக்கொண்டு செல்கிறாள். அவள் ஒரு அடிமை. கடவுள் திருவிழாவில் பலியிடுவதற்காக அவளை கட்டிவைத்திருக்கிறார்கள். அந்தப் பெண்ணைத்தான் நாயகன் காப்பாற்றுகிறான். ஆனால் அவள் உண்மையில் யார் என்பது இறுதியாக தெரியும்.  இந்த படத்தில் சுவாரசியம், அவரின் அப்பா, அவரின் நண்பர் ஆகியோர் ராணியின் குகைக்கு சென்று மாட்டிக்கொள்கிறார்கள். அதில், நாயகனின் அப்பா காணாமல் போகிறார். நண்பர் எப்படியோ காயங்களோடு தப்பித்துக்கொள்கிறார். இதனால், நாயகனுக்கும் அவனது அப்...

கதைகள் சொல்லப்படாமல், கேட்காமல் வளர்வது குழந்தைகளுக்கு ஆபத்தானது - கஹானி சவாரி

படம்
  பாகிஸ்தான். கராச்சியில் உள்ள லையாரி டவுன். அங்கு இளைஞர் ஒருவர் நூலை விரித்து குழந்தைகளுக்கு ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் வேடிக்கையாக கூறுவதைக் கேட்டு குழந்தைகள் சிரித்துக்கொண்டிருக்கின்றன. அவர்கள் கேட்கும் கதை பலமுறை சொல்லப்பட்டதுதான். ஆனாலும் சலிக்காத ஒன்று.  பாகிஸ்தானில் உள்ள பொருளாதார சூழலில் கல்வி அனைவருக்கும் எட்டாத ஒன்று. நூல்களும் உடைகளும் வாங்கி அரசின் இலவசக் கல்வியைப் பெறுவது கூட அங்குள்ள குழந்தைகளுக்கு இயலாத ஒன்று. இதற்கு, அங்கு எரிபொருட்களின் விலை உயர்வும், அதன் விளைவாக ஏராளமான மக்கள் வேலை இழந்ததும் முக்கியமான காரணங்கள்.  பத்து வயதிலுள்ள குழந்தைகளில் 77 சதவீதம் பேருக்கு எளிமையாக வாக்கியத்தை புரிந்துகொண்டு வாசிக்கத் தெரியவில்லை. பத்திலிருந்து 16 வயது வரம்பு கொண்ட குழந்தைகளில் 44 சதவீதம் பேர் பள்ளியிலிருந்து விலகிக்கொண்டுவிடுகிறார்கள். இத்தனைக்கும் பாக்.கில் கல்வி இலவசம், கட்டாயமும் கூட. ஆனால் விலைவாசி பிரச்னையில் குழந்தைகளும் தப்பவில்லை.  லையாரி டவுனின் தெருக்களில் ஐஸ்பெட்டி வண்டியை தள்ளிக்கொண்டு வரும் இளைஞர் பெயர் முகமது நோமன். இவர் கஹானி சவாரி எனு...

டாய்ச்சி கல்லை அடைவதற்காக அழிக்கப்படும் இனக்குழு!

படம்
  டாய்சீஸ் பீஸ்ட் மவுண்ட் சீன திரைப்படம் ஒன்றரை மணிநேரம் ஐக்யூயி ஆப் டாய்ச்சி இனக்குழுவில் டாய்ச்சி கல் உள்ளது. அது சக்திவாய்ந்த ஒன்று. அதை கையகப்படுத்தினால் அவர் சகலகலா வல்லவன் ஆகிவிடலாம் என நம்பிக்கை, வதந்தி எல்லாம் இருக்கிறது. இதை யாரோ பரப்பிவிட பல்வேறு சக்தி வாய்ந்த இனக்குழுக்கள் டாய்ச்சி இனக்குழுவை ஓரிரவில் தாக்கி அழிக்கின்றன. அதில் மிஞ்சுவது, நாயகனும் அவனது தோழியும்தான். இருவரும் சிறு வேலைகளை செய்து பிழைத்து வருகிறார்கள். தங்கள் குடும்பத்தை அழித்த பகைவர்களை பழிவாங்க நாயகன் நினைக்கிறான். அதற்கான காலமும் வருகிறது. உண்மையில் அவனது இனக்குழுவைக் காட்டிக்கொடுத்த துரோகி யார்? அவன் அம்மா வயிற்றில் இருந்த பிறக்கும் தருவாயில் இருந்த குழந்தை எங்கே? டாய்ச்சி கல் சக்தி வாய்ந்த ஒன்றா என்பது பற்றிய கேள்விகளுக்கு படம் விடை தருகிறது.  பழிவாங்கும் வெறி நம்மை அழித்துவிடும் என சொல்லி படத்தை சோகமான முடிவுடன் முடித்திருக்கிறார்கள். சோகம் என்று சொல்வதா, விதி என்று சொல்வதா? நாயகன், அவனுடைய காதலியைக் காப்பாற்ற முடியாமல் போக அவள் எதிரியால் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துபோகிறாள். இவனும் கூட நினைவிழ...